30 August, 2006

மீண்டும் எம்ஜிஆர்சிலைக்கு தார்பூசி கை உடைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பாசையூரில் சிறிலங்கா இராணுவ உயர்பாதுகாப்பு வலய எல்லையில் இருந்த எம்ஜிஆர் சிலை நேற்று தார்பூசி கை உடைக்கப்பட்டுள்ளது. யாழ். வல்வெட்டித்துறை, குருநகர் ஆகிய இடங்களைத் தொடர்ந்து பாசையூரிலும் இந்த காட்டுமிராண்டிச் செயலை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து எம்.ஜி.ஆர். சிலைகள் சேதப்படுத்துவது குறித்து தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான ஜெ. ஜெயலலிதா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி>புதினம்.

1 comments:

Anonymous said...

பெரியாருக்கு பட்டை, சீடரின் சீடருக்கு கை உடைப்பா? திராவிடருக்கு போறாத காலம்.