24 August, 2006

யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதை எவராலும் தடுக்கமுடியாது.

""விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியே தீருவார்கள். அதனை எவராலும் தடுக்க முடியாது ""என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். தர்மபுரியில் இடம்பெற்ற மாவட்ட ம.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு வைகோ மேலும் தெரிவிக்கையில்: கடந்த 1989ம் ஆண்டு இலங்கையில் உள்ள நிலவரங்களை கண்டறிய நான் என் உயிரையும் பொருட்படுத்தாமல் சென்றேன். அங்கே என்னையும், என்னுடன் வந்தவர்களையும் சிங்கள இராணுவம் பிடித்து விட்டதாக இலங்கை பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதை தெரிந்து கொண்ட கருணாநிதி விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புடைய சுப்பிரமணியம் என்பவரை தொடர்பு கொண்டு எங்கள் நிலை குறித்து கேட்டார். "எங்களை இராணுவம் சுற்றி வளைத்த செய்தியை தெரிந்துகொண்ட கருணாநிதி நான் உயிரோடு திரும்ப மாட்டேன் என முடிவு செய்து கொண்டார். அதன் பின்னர் தான் நான் எழுதிய கடிதத்தை வெளியிட்டார். அந்தக்கடிதத்தில் நான் சிங்கள, இந்திய இராணுவத்திடம் பிடிபட்டால், கடுகளவும் தி.மு.க.,வுக்கு களங்கம் விளைவிக்காமல் என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என தெரிவித்து இருந்தேன். தற்போது 17 ஆண்டுக்கு பின் பொய்யான தகவல்களை கருணாநிதி தெரிவித்துள்ளார். கடந்த 1989ஆம் ஆண்டு இலங்கை பிரச்சினைக்கு பிரதமர் தீர்வு காண முடிவு செய்திருப்பதை நான் கெடுத்து விட்டதாக கருணாநிதி பொய் சொல்லி வருகிறார். இதற்கு மேல் நான் எதுவும் பேச விரும்பவில்லை. எதிர்வரும் 30 ஆம் திகதி சென்னையில் இலங்கை துõதரகம் முன்ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். செப்டெம்பர் 1 ஆம் திகதி இலங்øகத்தமிழர்களுக்கு பாதுகாப்புக்கோரி சென்னையில் பேரணி நடத்தவுள்ளோம். இவ்வளவும் ஈழத்தமிழர்களுக்காகத் தான். சிங்கள இராணுவத்தை விரட்டியடித்து விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்றார். நன்றி>நிதர்சனம்.

0 comments: