17 August, 2006

படுகொலைக்கு சமாதானம் சொல்வது சண்டாளத்தனம்,-கருனாநிதி.

இனவெறி மற்றும் இதயமற்றோர் நடத்திய முல்லைத்தீவு படுகொலைக்கு சமாதானம் சொல்வது போன்ற சண்டாளத்தனம் கொடுமையானது என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்து கலைஞர் மு. கருணாநிதி கூறியுள்ளதாவது: கேள்வி: இனவெறி- இதயமற்றோர் நடத்திய கொடுமை இவற்றுக்கு உதாரணமாக அண்மையில் நடந்த நிகழ்ச்சி எது? பதில்: அண்மையில் என்ன, மிக அருகில் நடந்த நிகழ்ச்சியே உள்ளதே! இலங்கையில் குழந்தைகள் காப்பகத்தின் மீது இராணுவ விமானங்கள் குண்டுகள் பொழிந்து தாக்குதல் நடத்தியதும், அந்த நாச காரியத்தையும் நடத்திவிட்டு, அதற்கு சமாதானமும் சொல்வது போன்ற சண்டாளத்தனமும்தான் அந்த நிகழ்ச்சி என்றார் கருணாநிதி. நன்றி>புதினம்.

0 comments: