04 August, 2006

தாக்குதல் தொடுக்கும் காலம் வந்துள்ளது: மகிந்த

பேச்சுக்களை நிறுத்தி, செயலில் இறங்கும் காலம் வந்துவிட்டது என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மகிந்தவின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் நடந்த வைபவத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கடந்த காலங்களில் நாம் நிறையப் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். இப்போது நாம் செயலில் இறங்கி, எமது இமாலய சக்திகளை வெளிக்காட்டுவதற்கும், நாட்டை கட்டியெழுப்புவதற்கும் காலம் வந்துள்ளது. நாட்டில் மறுமலர்ச்சிக்கும் எழுச்சிக்கும், நாட்டு மக்கள் நேரடியாக பங்களிப்பது அவர்களது கடமை. புதிதாக தங்கள் விசேட பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு, கல்வி நிலைய நிர்வாகப் பணியாளர் பயிற்சிக்கான நிறைவுப் பட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் பொதுச்சேவை ஊழியர்களுக்கு மகிந்த சான்றிதழ்களை வழங்கினார். நன்றி>புதினம்.

2 comments:

Anonymous said...

ஆமாம். காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றுமாக மாற்றி மாற்றிச் சொல்லி கேவல அரசியல் செய்யும் அரசியல்வாதிகளின் சாதாரண பேச்சே இது என நினைக்கிறேன். இவரே தான் அடுத்த நாள், "அரசாங்கம் பேச்சுவார்த்தை மூலமான இனப்பிரச்சனை தீர்வினையே ஆதரிக்கும்." எனவும் கூறியவர். ஆகவே........ஹீ.ஹீ..ஹீ...

Anonymous said...

Your posts are good. You can follow http://thakaval.wordpress.com for your news updates and articles.