03 August, 2006

தற்காப்பு மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தாக்குதல்கள்.

திருமலையில் சிறீலங்காப் படையினர் மீது பரவலாக நடத்தப்படும் வலிந்த தாக்குதல்கள் தற்காப்பு நிமிர்த்தமும் மனிதாபிமான அடிப்படையிலும் நடத்தப்படுவதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். சிறீலங்காப் படையினரின் வலிந்த படையெடுப்புக்களை நிறுத்துவற்கு தற்காப்பு நிமிர்த்தம் தாக்குதலைப் போராளிகள் தொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் சிறீலங்கா அரசாங்கம் தொடுத்துள்ள கண்மூடித்தனமான வான்வெளி , ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களிருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் மனிதாபிமான நோக்கத்துடன் சிறீலங்கா படையினர் மீது தாக்குதல்களைப் போராளிகள் தொடுத்துள்ளதாவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார். மாவிலாறு நோக்கிய படையினரின் தாக்குலுக்கு திருமலைதுறைமுக கடற்படைத் தலைமைய கத்திலிருந்து பின்தள ஆட்லறி எறிகணை சூட்டுவலு வழங்கப்பட்டுள்ளது என்றும் இதனாலேயே கடற்படை தலைமையகம் மீது தாக்குதல்கள் தொடுத்ததாகவும் இளந்திரையன் சுட்டிக்காட்டினார். சிறீலங்கா படையினரின் படையெடுப்புக்கான வழங்கல் பாதையையும் செயற்பாடுகளையும் சீர்குலைத்து முடக்கும் நோக்குடன் திருமலைத் துறைமுகம் மற்றும் புல்மோட்டைத் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படை கலன்கள் மீது கடற்புலிகள் தாக்குதலைத் தொடுத்ததாகவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார். ஏ15 நெடுஞ்சாலையில் உள்ள படைமுகாம் மீது போராளிகள் நடத்திவரும் தாக்குதல்கள் தற்காப்பு மற்றம் மனிதாபிமான நோக்கம் கொண்டது எனவும் இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார். இணைப்பு : newstamilnet.com Wednesday, 02 Aug 2006 USA

0 comments: