18 August, 2006

சிங்களத்திற்காக பாடுபடும் பிபிசி தமிழ்சேவை.

தமிழக சட்டசபை தீர்மானத்திற்கு இலங்கை அரசின் மறுப்பறிக்கை இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள செஞ்சோலை குழந்தைகள் காப்பகத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 61 மாணவிகள் கொல்லப்பட்டது தொடர்பில், இலங்கை இராணுவத்தை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட கண்டனத்தீர்மானத்திற்கு இலங்கை அரசின் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை மறுப்பறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தின் தீர்மானம் ஊகங்களின் அடிப்படையில் திரித்து கூறப்பட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது என்று இலங்கை அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. தமிழக தலைநகர் சென்னையில் இருக்கும் இலங்கை துணைத் தூதரகத்தின் சார்பில் தமிழ் நாட்டிலுள்ள ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட ஒருபக்க அறிக்கையில், தமிழ்நாட்டின் சட்டசபை தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள விடுதலை புலிகளால் அநாதை காப்பகம் என்று கூறப்பட்டுள்ள இடம் உண்மையில் இராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக ஆட்களை சேர்த்து பயிற்சி அளிக்கும் விடுதலைப் புலிகளின் முகாம் என்றும், இவற்றைப்பற்றிய ஒளிநாடா இலங்கை அரசாங்கத்தினால் ராஜதந்திர சமூகத்துடனும் பத்திரிகையாளர்களுடனும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி பகிர்ந்துகொண்டும் வெளியிடப்பட்டும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் குறைந்த வயதுடைய போராளிகளை பலவந்த ஆட்சேகரிப்பு மூலம் பயிற்சியளிப்பது பலகாலமாக நடைபெறுவதாகவும், அந்த அடிப்படையில் இராணுவ விமான தாக்குதலின்போது விடுதலைப்புலிகளால் குறைந்த வயதில் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட நபர்களும் இருந்திருக்கலாம் என்பதற்கான தகுந்த ஆதாரங்கள் உள்ளதாகவும் இலங்கை அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முல்லைத்தீவு இழப்பு உட்பட இச்சண்டையின் மூலம் ஏற்பட்டுள்ள சகல மனித இழப்புகளுக்கும் இலங்கை அரசு தனது முழுமையான கவலையை தெரிவிப்பதாகவும், விடுதலைப்புலிகளின் உந்துதலினால்தான் அரசாங்கம் தற்காப்புக்காகவே ஒரு வகை நிர்ப்பந்தத்தினால் நடத்திய தாக்குதலில் தான் இந்த மனித இழப்பு நேர்ந்தது என்பதை வலியுறுத்துவதாகவும் இலங்கை அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் தமது கொடூர செயல்களால் ஏற்படும் மனித துயரங்களை தமக்கு சாதகமாக விளம்பரத்திற்காக பயன்படுத்தி வருவதாகவும், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் விடுதலைப்புலிகள் தமது சுய லாபத்திற்காக பயன்படுத்துவர் என்பதில் ஐயமில்லை என்றும் இலங்கை அரசின் அறிக்கை கூறுகிறது. நன்றி>பிபிசி http://www.bbc.co.uk/tamil/news/story/2004/05/040528_tamil_currentaffairs.shtml

2 comments:

Anonymous said...

Ca nu post this. I dont have blog on my name to post his. if u can do this that will be great. if u can post it in tamil, that will be more great

Dear friends,
>
>All these times the Sri Lankan Tamil expatriates whom are living all
around
>the world have been being contributed enormously towards the Indian Tamil
>film industry to sustain in their difficult time and also to grow in
crores
>worth of payments are being earned by those top actors.
>
>Even though none of the top actors, except a very few, have never given a
>single thought or voiced against Sri Lankan governments genocide and
>atrocities to the innocent Tamils who are living in Tamil Eelam.
>
>In this circumstances if we all expatriates get together and boycott the
>film called Sivaji acted by Rajni Kanth directed by Shanker and produced
by
>AVM Saravanan (these 3 people are super star, super director and super
>producer respectively) costing them over 100 crores to produce and
>believing
>themselves most of the money can be recovered from Sri Lankan expatriates
>living all around the world.
>
>We should all aware that by boycotting this film will give them a chance
to
>realise to open their blind eyes towards our grievances.
>
>Dont you all think that by seeing that film can be thrilled only for a few
>hours, but in the meantime by boycotting this film will give a real chance
>for the whole Tamil cinema industry to open their blind eyes and to lead
>their millions of fans to support our cause.
>
>Please, please, please send this email to every one of your Tamil contacts
>all around the world and get some printouts and distribute to the people
as
>maximum as you can.
>
>If we dont seize this great opportunity at this very difficult time then
>we
>may not have the same again. And the history wont ever forgive us. Once
>again please act as fast as you can.
>
>Tamil Expatriates Association

Anonymous said...

dear friends!

BBC Tamil (E.Anparasan) works against to srilanaka tamils.
we must boycot them.


chennai thamilan