01 August, 2006

போர் மூண்டால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு: வைகோ

இலங்கையில் போர் மூண்டால் விடுதலைப் புலிகளுக்கு பக்க பலமாக இருப்போம் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் ம.தி.மு.க கட்சி விழா ஒன்றில் நேற்று திங்கட்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது: இலங்கையில் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக விடுதலைப் புலிகள் போராடி வருகிற நிலையில், தற்போது அங்கும் மீண்டும் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. போர் மூண்டால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தாய்த் தமிழகத்தையே திரட்டுவோம் என்றார் வைகோ. நன்றி>புதினம்.

0 comments: