04 August, 2006

மூதூரில் முக்கிய முகாமை விட்டு படையினர் தப்பினர்.

விடுதலைப் புலிகளின் தொடர் தாக்குதலால் மூதூரின் கிழக்குப் பிரதேசம் மற்றும் இதர விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீதான பீரங்கித் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக முகாமை கைவிட்டு படையினர் தப்பியோடியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து நான்காவது நாட்களாக நடந்து வரும் மோதலில் நேற்று வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல் காரணமாகவே கட்டைப்பறிச்சான் முகாமை முற்றாகக் கைவிட்டுப் படையினர் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜீ.பி.எஸ் முகாம் என்று சிறப்பாக அழைக்கப்படும் இந்த முகாமிலிருந்தே செய்மதி வழிகாட்டலுடனான தூரம் கணிக்கும் கருவியின் உதவியுடன் எறிகணை வீச்சுக்கள் நடத்தப்பட்டு வந்தன. கடந்த மூன்று நாட்களில் இதர முகாம்கள் விடுதலைப் புலிகள் வசமானதையடுத்தும், மூதூர் இறங்குதுறையைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்தும் நேற்றைய இரவுத் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமலே இராணுவத்தினர் தப்பிச் சென்றுள்ளனர் என்று அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர். மூதூரில் கடந்த சில நாட்களாக தமது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வந்த பகுதிகளிலிருந்து விடுதலைப் புலிகள் சிறிலங்கா படையினருக்கு எதிரான தாக்குதல்களை தொடர்ந்து நடத்திய வண்ணம் உள்ளனர். நன்றி>புதினம்.

1 comments:

Anonymous said...

write more. tamilnadu readers must know about our war.

thank u

trinco tamilan