02 August, 2006

புலிகள் தொடங்கினர் பாய்ச்சல் 17 மினி முகாம்கள் வீழ்ந்தன.

இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் திருமலை ஈச்சலம்பற்று மற்றும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படையினர் தாக்குதலை நடத்தியதை அடுத்து பதில் தாக்குதலை புலிகள் தொடுத்த வண்ணம் முன்னேறத் தொடங்கினர். தாக்குதல் தொடங்கிய சிறிது நேரத்தில் சம்பூரில் உள்ள கட்டைபறிச்சன் இராணுவ முகாம் புலிகளிடம் வீழ்ந்தது. இதை அடுத்து தொடர்ந்து முன்னேறிய புலிகள் கடற்படைத்தளமான மூதூர் இறங்கு துறையைக் கைப்பற்றினர். இதை அடுத்து சிங்கள இராணுவமும் சிறிலங்கா கடற்படையினரும் ஆயுதங்களை போட்டு விட்டு ஓடிக் கொண்டிருக்கின்றனர். புலிகள் தாக்குதலைத் தொடுத்தவாறு முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். 2 ம் இணைப்பு தற்போது கல்லடி இராணுவ முகாமிற்கு அருகில் சண்டைகள் நடைபெற்று வருவதாக பிந்தி கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 4 நாட்களாக இந்த முகாமில் இருந்தே மாவிலாறு பகுதியைக் கைப் பற்றுவதற்கு பெரும் எடுப்பிலான இராணுவ நடவடிக்கையை சிறிலங்கா படையினர் மேற் கொண்டு வந்தனர். கட்டைப்பறிச்சான், பலாத்தோப்பு, செவ்வநகர் ஆகிய படை முகாம்கள் விடுதலைப் புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன, மூதூர்,செல்வநகர்,தோப்பூர்,காந்திநகர் ஆகிய பகுதிகள் விடுதலைப்புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளன. இன்றை தாக்குதலில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக முதல்கட்டச் செய்திகள் தெரிவிக்கின்றன. இணைப்பு 3 திருமலையில் இன்று அதிகாலை தொடங்கிய சிறீலங்கா படைகள் மீதான தற்காப்பு தாக்குதலில் விடுதலைப் புலிகள் 17 இராணுவ மினி முகாம்களைக் கைப்பற்றியுள்ளனர்.பெருமளவு இராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.சமர் தொடர்கிறது மேலதிக விபரம் விரைவில் நன்றி>பதிவு

1 comments:

Anonymous said...

may be this is wat all we were expecting from LTTE