24 August, 2006
சிங்களபெளத்த, தமிழ்இந்துமத மோதலாக பார்க்கவேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்து அமைப்புகள் ஊர்வலம்
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும், இந்து மக்கள் கட்சி, பாரதீய பார்வார்ட் பிளாக் மற்றும் தனித்தமிழர்சேனை ஆகிய மூன்று இந்து இயக்கங்கள், இன்று வியாழக்கிழமை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருக்கும் இலங்கை துணைத்தூதரகத்தை நோக்கி எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள்.
இலங்கையில் பெரும்பான்மை சிங்களர்களுக்கும், சிறுபான்மை தமிழர்களுக்கும் இடையிலான மோதல், வெறும் இனப்பிரச்ச்சினை மட்டுமல்ல என்றும், சிங்கள பௌத்த மதத்திற்கும், தமிழ் இந்துக்களுக்கும் இடையிலான மதமோதலாகவும் இதை அணுகவேண்டும் என்றும் கூறினார், தமிழ்நாட்டின் இந்து இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளரான இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்.
சுமார் 80 கோடி இந்துக்கள் வசிக்கும் இந்தியா, தனது அண்டை நாடான இலங்கையில் இந்து தமிழர்கள் பாதிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கக்கூடாது என்று கூறும் அர்ஜூன் சம்பத், தமிழர்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசுக்கு எதிராகவும், ராணுவரீதியாக இந்தியா இதில் தலையிடவேண்டும் என்று கோருவதற்காகவே இன்றைய ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதன் முதல் கட்டமாக, சென்னையில் இருக்கும் இலங்கையின் துணைத்தூதரகம் மூடப்படவேண்டும் என்றும், இலங்கையுடனான தனது ராஜீய உறவுகளை இந்தியா துண்டித்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இன்று தாங்கள் சென்னையில் இருக்கும் இலங்கையின் துணைத்தூதரகத்தை நோக்கி ஊர்வலமாக செல்வதாகவும் அவர் கூறினார்.
சுமார் 50 பேர் கலந்துகொண்ட இந்த ஆர்பாட்ட ஊர்வலக்காரர்களை, இலங்கை துணைத்தூதரகத்திற்கு மிகத்தொலைவிலேயே இடைமறித்த காவல்துறையினர், அவர்கள் அனைவரையும் தங்கள் காவலில் எடுத்துச்சென்றனர். இவர்கள் அனைவரும் இன்று மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
நன்றி>பிபிசி.
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
இது நல்ல ரவுசு.
இது உண்மைதான். இது புத்த மதத்திற்கும் சைவ சித்தாந்தத்திற்குமான சண்டையே. இந்த சண்டைக்காகத்தான் ஒரு புத்த பிக்ஷு பண்டாரனாயகாவை சுட்டுக்கொன்றார். வேறு சில புத்த பிக்ஷுக்கள் துறவையே துறந்து இலங்கை ராணுவத்தில் சேருகின்றனர். தற்போதைய ஆளும் கூட்டணிக்கு புத்தபெருமானின் சிங்கள ஆஸிகள் கிடைக்கின்றன.
Yes. Sinhala- Budhist started a war against to Hindu tamils. they destroyed many Hindu Temples.
Indians must understand it.
பிரபாகரன் இந்துவா?
பிரபாகரனும் அவன் left right கைகளாகியவர்கள் எல்லோரும் கிறுத்தவர்கள்..
சிங்கள பௌத்தர்கள் என்று சொல்லிகொள்ளும் லங்கைப் பிரதமர் யார் பௌத்தர்கள்? அவர்கள் பாதி கிருத்தவர்கள்..!
மொத்தத்தில் இந்த இனச்சண்டையில் மதமாற்ற industry வெயிட்டாக ஆன்மா அறுவடை செய்துகொண்டது...! அவர்கள் தொடர்ந்து செய்ய இவர்கள் சண்டை போட்டுக் கொண்டே இருக்கவேண்டும்...
sensible protest by the hindu makkal katchi.
நான் அறிந்த வரைக்கும் பிரபாகரன் ஒரு இந்து அவருக்கு சொந்தமாக ஒரு அம்மன் கோவிலும் இருக்கிறது, சூசையும் ஒரு இந்துதான் பிரபாகரனின் தூரத்து உறவினர், பொட்டும் ஒரு இந்துதான்.
முஸ்லீம்களுக்கு வங்காளத்தை பெற்றுக்கொடுத்த இந்தியா? ஏன் இலங்கை இந்துசிறுபான்மையினருக்கு ஈழத்தை பெற்றுக்கொடுக்க தயங்குகிறது? இந்து ஆட்சி மத்தியில் இல்லாததுதான் காரணமா?
இந்தியா பாகிஸ்தான் மாதிரி இலங்கை ஈழமா? அழிவில் தான் முடிவு ஏற்படப் போகுது
no doubt that its a sensible protest by Hindu Makkal katchi. But, the angle of Missionaries playing one against another just to ensure that the whole country converts have been played in several places.
Rwanda -Hutu Tutsi ethnic conflict. (both are christians)
பிரபாகரனின் மகன் பெயர் ஒரு கிருத்தவப் பெயர் என்று குறிப்பிடுகின்றது விக்கிபீடியா!
அது ஏதோ ஒரு Leutinent ன் நினைவாக அவர் வைத்த பெயராகவும் குறிப்பிடுகின்றது.
Sinhala Buddhist have fear of christian missionary. And many srilankan tamils are half or full converts of christianity.
And the church activly supports LTTE. (atleast the "tamil church")
Prabhakaran may want a secular tamil society, but the whole tamil society of Elam is getting converted in the bloddy conflict for self determination.
In other words, the church is having a field day in fishing in troubled waters. And its a pity that gullible srilankan tamil hindus are their main target. (they also copiously apply the Aryan sinhala and dravidian tamil theory here).
வஜ்ரா ஷங்கர்,
உங்களைப் போன்றோர்களால், எங்களின் மகத்தான தலைவரைப் புரிந்து கொள்ள முடியாது.
"முஸ்லீம்களுக்கு வங்காளத்தை பெற்றுக்கொடுத்த இந்தியா? ஏன் இலங்கை இந்துசிறுபான்மையினருக்கு ஈழத்தை பெற்றுக்கொடுக்க தயங்குகிறது? இந்து ஆட்சி மத்தியில் இல்லாததுதான் காரணமா?"
YES. WE NEED A REAL HINDU PARTY AT STATE & CENTRE.
WE SHOULD HELP EELAM.
வணக்கம் ஐயா,
என்ன குட்டையை குழப்பி மீன் பி;டிக்கும் எண்ணமாக்கும்!
வாழ்க உங்கள் தமிழ் தொண்டு!
//
வஜ்ரா ஷங்கர்,
உங்களைப் போன்றோர்களால், எங்களின் மகத்தான தலைவரைப் புரிந்து கொள்ள முடியாது.
//
There is no doubt that Prabhakaran is working for Tamil self determination. I have no question about that. But the end do not justify the means.
http://1paarvai.wordpress.com/2006/06/11/naathiyarra-eelam-tamils-naam-3/
அ) இந்தியாவிலும், வட ஆபிரிக்காவிலும் நடந்தது பெரும்பான்மை இனத்தோர் சிறுபான்மை இனத்துக்கு எதிரானது. தமிழீழத்தில் மாறானது.
ஆ) தமிழீழம் தனி நாடாக வேண்டுமா வேணாமா என்று மொண்டனீக்கிறோவில் நடந்தது போல் ஒரு தேர்தலை வைக்க சிங்கள அரசு என்றைக்கும் விட்டதில்லை. அப்படி ஒரு முறை ஏனும் தேர்தல், இப்போதில்லை, 10 வருடம் முன்பு வைத்திருந்து தோல்வியுற்றிருந்தாலும், நாங்கள் ஆயுதமேந்தி இருக்க மாட்டோம்.
இ) தாய், தந்தை, உற்றார், உறவினர் எல்லோரும் இறக்க தனியனாய் நிற்கும் சிறுவன் இராணுவத்தைக் கண்டால் கல்லால் எறிவான். வலிமை தேவையில்லை. தானாகவே வரும். சிறுவரை படையில் சேர்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டுபவர்கள், சிறுவர்கள் ஏன் படையில் சேர முயற்சிக்கிறார்கள் என்று சிந்திக்க தவறுகிறார்கள்.
ஈ) “உலகம் அடி வாங்குபனுக்கே அனுதாம் செலுத்தும்.” ஆமாம் அது சரி தான். தமிழீழம், எப்போது எத்தியோப்பியா, சோமாலியா போல் வருகிறதோ அப்போது தான் உலக நாடுகள் ஏதோ தாங்கள் பெரும் உதவி செய்வதாக வருவார்கள். UN படை சோமாலியாவிலிருந்து திருப்பி அனுப்பப் பட்டமை அந்நாட்டு மக்களுக்கு இருந்த வெறுப்பே காரணம்.
உ) கொலை செய்யப் போகிறார்கள், காப்பாற்றுங்கள் என்னும்போது கணக்கெடுக்காமல், பிணமான பின், வருத்தமடைகிறோம், துக்கப்படுகிறோம் என்று சொல்லத் தான் உலக நாடுகள். கிட்டடியில், இந்தியாவும் இவ்வாறு ஒரு அறிக்கை விட்டிருந்தது.
ஊ) தமிழர்களுக்கு என்று ஒரு பிரதிநிதியே இருத்தல் வேண்டும். பலர் இருந்தால், பாலஸ்தீனம் போல் தான், பல இயக்கங்களின் ஒற்றுமை இன்மையால் தோல்வியுறும். இருக்கும் ஒரு பிரதிநிதியும் கட்டுக்கோப்பான, வலிமை மிக்கதாக இருக்க வேண்டும்.
எ) ஈழ விடதலை 1950 இல் இருந்தே காந்தி வழி, அறவழிப் போராட்டமகத் தான் தொடங்கியது. 1983 இக்குப் பிற்பாடே ஆயுதவழிப் போராட்டமாக மாறியது.
http://1paarvai.wordpress.com/2006/06/11/naathiyarra-eelam-tamils-naam-3/
At 2:35 AM, நாசமறுப்பான் said...
வணக்கம் ஐயா,
என்ன குட்டையை குழப்பி மீன் பி;டிக்கும் எண்ணமாக்கும்!
வாழ்க உங்கள் தமிழ் தொண்டு!
எப்பொருள் யார் வழி கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.
-குறுகத்தறித்த குறள்-
Post a Comment