19 August, 2006
யாழ். சமரில் 485 படையினர் பலி- 1,250 பேர் காயம்.
யாழ். தென்மராட்சி முகமாலைப் பகுதியிலிருந்து சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதலை முறியடித்து விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 485 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
களமுனையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
485 படையினர் கொல்லப்பட்டும் 1,250 படையினர் காயமடைந்தும் களமுனையிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல்களில் 88 போராளிகள் வீரச்சாவைத் தழுவியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (11.08.06) படையினர் தமது வலிந்த தாக்குதலை பெருமெடுப்பில் மேற்கொண்டனர்.
இந்த வலிந்த தாக்குதல்களில் சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதல் டிவிசன்களான 53 ஆம் டிவிசன் கொமாண்டோக்களும் 55 ஆம் டிவிசன் தாக்குதல் படையணிகளும் பயன்படுத்தப்பட்டன.
விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதல்களில் இந்த டிவிசன்கள் கடும் சேதங்களை சந்தித்தன.
வலிந்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு கடும் சேதங்களை சந்தித்த இந்த டிவிசன் படையணிகள் களமுனையிலிருந்து பின் நகர்த்தப்பட்டன.
முன்னரங்கில் ஏனைய படைப்பிரிவுகளின் பட்டாலியன்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஏ - 09 சாலை வழியே நேற்று வெள்ளிக்கிழமை முன்னகர்வை படையினர் மேற்கொண்ட போது விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் கடும் சேதங்களை சந்தித்து தமது நிலைகளுக்குப் பின்வாங்கினர்.
இந்த தாக்குதலில் புதிததாக கஜபா றெஜிமன்ட் படையணியை சிறிலங்காப் படை இறக்கியது. இந்த அணி நேற்றைய சமரில் கடும் இழப்புகளைச் சந்தித்தது.
கடந்த வெள்ளிமுதல் இதுவரையான வலிந்த தாக்குதல்களில் கடும் சேதங்களை சந்தித்துள்ள 53 ஆம் 55 ஆம் டிவிசன்கள்தான் சிறிலங்காப் படையின் களமுனையில் ஈடுபடுத்தப்பட்ட வலிந்த தாக்குதல் படையணிகளாகும்.
நன்றி<புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment