18 August, 2006
படம்காட்டியது சிறீலங்கா: நிராகாரிக்கப்பட்டது.
சிறிலங்கா அரசாங்கத்தின் முல்லைத்தீவு வீடியோப் படம்: கண்காணிப்புக் குழுத் தலைவர் நிராகரிப்பு
முல்லைத்தீவில் விமானக் குண்டு வீசப்பட்ட இடத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்ததாகக் கூறி சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டிருந்த வீடியோ படக் காட்சிகளில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
சிறிலங்காவின் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறுவதைப் போல் நாங்கள் தவறான இடத்தைச் சென்று பார்வையிடவில்லை. இது தொடர்பாக எமக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. அந்த ஆதாரங்களை அரசாங்கத்துக்கும் நாம் அனுப்பி வைத்துள்ளோம். குறைந்தபட்சம் 12 குண்டுகள் அங்கே வீசப்பட்டுள்ளன. வெடிக்காத குண்டு ஒன்றை எமது கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் கண்டுபிடித்துள்ளனர். அத்தகைய குண்டுகளை சிறிலங்கா விமானப்படையினர்தான் பயன்படுத்துகின்றனர்.
விமானக் குண்டு வீச்சு நடத்தப்பட்ட இடத்தில் அரசாங்கம் கூறுவதைப் போல் எந்த ஒரு ஆயுத பயிற்சி முகாமும் இருக்கவில்லை. ஆயுதப் பயிற்சி முகாம் இருந்ததாகக் கூறி சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டிருக்கும் வீடியோ படத்தில் கூட அவர்கள் கூறுவதற்கான போதுமான ஆதாரம் ஏதும் இல்லை என்றார் ஹென்றிக்சன்.
ஆனால் வழக்கம் போல் இதனை சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல மறுத்துள்ளார். அங்கே ஆயுதப் பயிற்சி கொடுக்கப்பட்டதாக தொடர்ந்து பொய் கூறி வருகிறார்.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஒரு முடிவு கட்டித்தானே அத்தனை பிஞ்சுகளுக்கு முடிவு கட்டியிருக்கிறார்கள் கருணையற்றவர்கள். அவர்கள் வேறென்ன சொல்வார்கள்!
சர்வதேச சமுதாயம் இதை கண்டிக்காமல் வாய்மூடி இருப்பதன் மர்மம் என்ன ?
Post a Comment