26 August, 2006

யாழிலிருந்து வெளிநாட்டு பணியாளர்கள் வெளியேறினர்.

யாழ்ப்பாணத்திலிருந்து பல சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் வெளிநாட்டுப் பணியாளர்கள் இன்று வெளியேறினர். நோர்வே அகதிகள் சபை, வேர்ல்ட் விசன், கரித்தாஸ், பார்க், டெனிஸ் மிதிவெடிகள் அகற்றும் அமைப்பு மற்றும் சேவா லங்கா ஆகியவற்றின் வெளிநாட்டுப் பணியாளர்கள் இன்று சனிக்கிழமை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொடிகள் தாங்கிய படகு மூலமாக வெளியேறியுள்ளதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களும் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இயங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை துறைமுகத்தைச் சென்றடையும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவர். மேலும் அவசர மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகோரும் நிலையில் உள்ள 150 பொதுமக்களையும் யாழிலிருந்து படகுகள் மூலம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் வெளியேற்றியுள்ளனர். நன்ரி>புதினம்.

0 comments: