31 July, 2006

புலிகளிடம் செஸ்னா ஸ்கை மாஸ்டர் ரக விமானங்கள்.-இந்தியா.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் செஸ்னா ஸ்கை மாஸ்டர் வகையைச் சேர்ந்த மேலும் இரண்டு இலகுரக விமானங்கள் இருப்பதாக இந்திய புலனாய்வுத்துறையின் ஊடாக சிறிலங்கா அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக கொழும்பு நாளேடொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு விமானங்களும் இரண்டு தடவை வானில் அவதானிக்கப்பட்டுள்ளதுடன் ஒருதடவை வவுனியா விமானப்படை தளத்தில் உள்ள ரேடாரில் பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட இந்திரா எனும் ரேடார் கருவிகள் வடமத்திய மாகாணத்தில் பொருத்தப்பட்டிருப்பதனால் விடுதலைப் புலிகளின் விமானப்படை பிரிவு பற்றிய தகவல்களை கண்டறியக் கூடியதாக உள்ளதாகவும் அந்த நாளேட்டின் செய்தி மேலும் தெரிவித்துள்ளது. இணைப்பு : newstamilnet.com Monday, 31 Jul 2006 USA

திருமலை மாவிலாற்றில், மும்முனைத் தாக்குதல் முறியடிப்பு.

திருமலை ஈச்சிலம்பற்று மாவிலாறு பகுதியைக் கைப்பற்றும் நோக்கத்துடன், இன்று சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்த மும்முனை படைநகர்வு முயற்சி, தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10:30 மணியளவில், கிபிர் மற்றும் மிக் ரக விமானங்கள் குண்டுகளைப் பொழிய, ஆட்லறி - பல்குழல் எறிகணை சூட்டாதரவுடன், கனரக யுத்த தளபாடங்கள் சகிதம் முன்னேற முற்பட்ட சிறீலங்கா படைகள் மீது, தமிழீழ விடுதலைப் புலிகளால் உக்கிர பதிலடி தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. திருமங்கலம் படை முகாமில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட அங்கோடை பகுதியை நோக்கி முன்னேற முயன்ற சிறீலங்கா படையணியொன்றை, வால்கொட்டுப் பகுதியில் எதிர்கொண்ட போராளிகள், உக்கிர பதிலடி தாக்குதல்களை தொடுத்து படையினரை விரட்டியடித்துள்ளனர். சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு மட்டும் முன்னேறிய சிறீலங்கா படையினர், தமிழீழ விடுதலைப் புலிகளின் பதிலடி தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாது தலைதெறிக்க தப்பியோடியுள்ளனர். ஏக காலத்தில், மாவிலாற்றில் இருந்து ஐந்து கிலோமீற்றர் தொலைவில் உள்ள கல்லாறு காட்டுப்புறம் ஊடாக, ஈச்சிலம்பற்று பிரதேசத்தை நோக்கி முன்னேற முற்பட்ட சிறீலங்கா படைகளை வழிமறித்து தாக்கிய தமிழீழ விடுதலைப் புலிகள், படையினருக்கு பலத்த சேதாரங்களை ஏற்படுத்தி விரட்டியடித்துள்ளனர். இதேபோன்று, காட்டுப் பாதையூடாக சிறீலங்கா படைகள் மேற்கொண்ட மூன்றாவது படைநகர்வு முயற்சியும், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. தப்பியோடிய சிறீலங்கா படைகளை இலக்கு வைத்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணி போராளிகளால், மூர்க்கத்தமான எறிகணை தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. திருமலை மாவட்ட கட்டளை தளபதி கேணல் சொர்ணம் அவர்களின் நேரடி வழிநடத்தலில் களமிறங்கியிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகள், சிறீலங்கா படைகளின் வலிந்த ஆக்கிரமிப்பு முயற்சியை வெற்றிகரமாக முறியடித்திருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். இன்றைய முறியடிப்பு சமரில், தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் மூன்று போராளிகள் வீரச்சாவைத் தழுவியதோடு மேலும் இருவர் காயத்துக்கு உள்ளாகியுள்ளனர். எதிரியுடன் களமாடி வீழ்ந்த இந்த மாவீரர்களுக்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொண்டுள்ளனர். திருமலை மாவிலாறு சமரில், சிறீலங்கா படையினர் தரப்பில் பலத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய சமரில், 6 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டு, மேலும் 6 படையினர் படுகாயமடைந்திருப்பதாக, படைத்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. எனினும் உண்மை நிலையை மூடி மறைத்து, போலியான பரப்புரைகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இணைப்பு 2 பிந்திக் கிடைத்த தகவலின் பலி சிறீலங்கா தரப்பில் இரு அதிகாரிகள் உட்பட 15 படையினர் பலியானதோடு மேலும் 50 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர். இதற்கிடையில் சிறீலங்கா படையினர் இழப்புக்களை மூடிமறைப்பதில் ஈடுபட்டு வருகின்றது. எனினும் பாரிய இழப்புக்கள் மத்தியில் படையினர் இன்று மாலையும் படை நடகர்வை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக திருமலை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரிவித்துள்ளார். இதன் அறிகுறியாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டப் பிரதேசங்கள் நோக்கி ஆட்லறி, பல்குழல் பீரங்கிகள், உலங்கு வானூர்த்தி தாக்குதல்களை படையினர் ஆரம்பித்துள்ளதாகவும் எழிலன் மேலும் தெரிவித்துள்ளார். நன்றி>புதினம்.

விமானத் தாக்குதல்கள், கண்காணிப்புப் பணி இடைநிறுத்தம்.

சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விமானத் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை தமது கண்காணிப்புப் பணியை இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு அறிவித்துள்ளது. விமானத் தாக்குதல்கள் மற்றும் ஏனைய படை நகர்வுகளுக்கும் தாக்குதல்களுக்கும் மத்தியில் கண்காணிப்பாளர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளமையினாலேயே இவ்வாறானதொரு முடிவை கண்காணிப்புக் குழு எடுத்துள்ளது என்று கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொஃப்பினூர் ஓமர்சன் கொழும்பு நாளேடு ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இருதரப்பிற்கும் இடையில் தாக்குதல்கள் நடைபெறும் போது அங்கு கண்காணிப்பாளர்கள் தமது பணியை முன்னெடுப்பது என்பது அவர்களுடைய உயிருக்கும் ஆபத்தானதாக அமையலாம். ஆகவே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் பாதுகாப்பு கருதி போர் நடக்கும் இடங்களில் குழு தனது பணியை முன்னெடுக்காது என்று அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை போர்நிறுத்த கண்காணிப்புக் குழு தமது கண்காணிப்புப் பணிகள் அனைத்தையும் நிறுத்தியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதேநேரம் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடான பின்லாந்து தனது கண்காணிப்பாளர்களை விடுதலைப் புலிகளின் நிபந்தனைக்கு அமைய பாதுகாப்பு காரணங்களுக்காக திருப்பி அழைத்துக் கொள்வதாக கடந்த புதன்கிழமை அறிவித்தது. அதேபோன்று இன்னொரு ஐரோப்பிய ஒன்றிய நாடான டென்மார்க் கடந்த வெள்ளிக்கிழமை, தனது கண்காணிப்பாளர்களையும் திருப்பி அழைக்கும் முடிவை குழுவின் தலைமைப்பீடத்திற்கு அறிவித்துள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் விதித்துள்ள காலக்கெடுவான செப்ரெம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் இந்த இரு நாட்டு கண்காணிப்பாளர்களும் திருப்பி அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றிய நாடான சுவீடன் இன்னமும் எந்த முடிவும் தனது வெளியேற்றம் குறித்து அறிவிக்கவில்லை. குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் சுவீடன் நாட்டைச் சேர்ந்தவராதலால் சுவீடன் அரசு தனது முடிவை வெளியிட சற்று காலதாமதமாகலாம் எனத் தெரியவருகிறது. நன்றி-புதினம்

30 July, 2006

சிறீலங்காப் படையினர் மனநோயாளிகளா?

ஸ்ரீ லங்காவின் படையில் கடமையாற்றுபவர்கள் மனநோயாளிகளா? கடந்த சித்தரை மாதம் யாழ்ப்பாணம் பலாலி வீதியில் சென்று கொண்டிருந்த யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரனிக் வாகணத்தைக் கலைத்துச் சென்று தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட முயன்ற படையினர் மூவரும் மன நோய் தாக்கத்திற்கு உட்பட்டு இருந்தார்களா என மன வையித்தியரிடம் காட்டி அறிக்கை சமர்ப்பிக்கும் படி யாழ் மாவட்ட நீதிமன்றம் பொலிசாருக்கு கட்டளையிட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கை குற்றமிழைத்த படையினரை காப்பாற்றவும் சட்டத்தை ஏமாற்றவும் எடுக்கப்படும் நடவடிக்கையென பலரும் அபிப்பிராயப்படுகின்றார்கள் இதுவே உண்மையாகும். இவர்கள் விடயத்திலேனும் சட்டம் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையும் அவசியமும் காணப்படுகின்றது. மன நோயாளர்கள் மூவர் ஒரே இடத்தில் ஒன்றாக ஒரே நேரத்தில் ஒரு நோக்கத்தை நிறைவேற்ற எப்படி ஒன்று சேர்ந்திருக்க முடியும்? இதிலும் பல ஆயிரக் கணக்கான வாகணங்கள் பிரயாணம் செய்யும் பலாலி வீதியில் பல நூற்றுக் கணக்கான இராணுவத்தினர் வீதிக்கடமையில் ஈடபட்டு இருக்கும் வேளையில் குறிப்பிட்ட மேலதிக நீதிபதியின் வாகணம் வரும் நேரத்தைக் கணக்கில் கொண்டு தாக்க முற்பட்டிருக்க முடியும். மனம் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு ஏனைய வாகணங்களை தவிர்த்து குறிப்பிட்ட நீதிபதியின் வாகணம் தம்மைக் கடந்து சென்ற பின்னர் வாகணத்தில் இருப்பவர்களை அடையாளம் கண்டு தாக்குவதற்கு வசதியாக ஆட்டோவில் கலைத்துச் சென்று தாக்க முற்பட்டிருக்க முடியும் ? இன்று குறிப்பாக தமிழர்களை தேடி கொலை செய்யும் கடத்தும் தாக்கும் ஒவ்வோரு இராணுவமும் மன நோயாளிகள் என்றே ஸ்ரீலங்காவின் சட்டம் குறித்து நிற்கின்றது. 1985ம் ஆண்டளவில் அனுராதபுரத்தில் ஏற்பட்ட வன் செயலின் போது பாதுகாப்புத் தேடி இராணுவ முகாமில் இருந்த சுமார் 28 அரச உத்தியோகத்தர்கள் இருந்த போது மக்கள் இராணுவத்தினால் படை முகாமில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதற்கு படைத்தரப்பும் அரசாங்கமும் கூறிய காரணம் குறிப்பிட்ட இராணுவம் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இத்தகைய நடவடிக்கையில் ஈடபட்டதாகக் கூறியதுடன் இராணுவமும் தண்டனையில் இருந்து தப்பி விடுதலை செய்யப்பட்டது. இதே போன்ற 1987 ம் ஆண்டு இலங்கை இந்திய ஒபபந்தத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு விஐயம் மேற் கொண்ட இந்தியப் பிரதம மந்திரி ரஜீவ் காந்தி மீது கடற்படை அணிவகுப்பை பார்த்துக் கொண்டிருந்த வேளையில் கடற் படை வீரனினால் துப்பாக்கிப் பிடியினால் தாக்கப்பட்டார். அன்று குறிப்பிட்ட சம்பவம் தற்செயலாக ஏற்பட்டது எனவும் சூரிய ஓளியினால் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்து விழும் வேளையில் தவறுதலாக துப்பாக்கி தட்டியதாக தெரிவிக்கப்பட்டு குறிப்பிட்ட கடற்படைவீரன் 1990ம் ஆண்டு விடுதலையும் செய்யப்பட்டான.; இன்று குறிப்பிட்ட கடற்படை வீரன் கடற்படையில் இருந்து ஓய்வூதியம் பெறுவதுடன் சிங்களப் பேரினவாதிகளிடத்தில் செல்வாக்குப் பெற்றவனாகவும் காணப்படுகின்றான். இந்த வகையில் கடந்த காலத்தில் இடம் பெற்ற சிங்கள உறுமய கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார். இவர் கடந்த வாரம் தான் நடத்திய ஊடகவியலாளர் மாநாடொன்றில் தான் இந்திய பிரதம மந்திரியை கொலை செய்யவேண்டும் என்ற நோக்கிலேயே தாக்கியதாகவும் அதில் இருந்து அவர் தப்பிவிட்டார் எனவும் தெரிவித்து இந்தியாவுக்கு சிங்களப் பேரினவாதத்தின் சார்பில் சவால் விட்டுள்ளதுடன் சர்வதேசத்தையும் முட்டாளாக்கியும் உள்ளார். இந்த வகையில் தற்போது யாழ் மாவட்டத்தில் படையினர் இராணுவப் புலனாய்வாளர்கள் ஒட்டுக்குழுக்கள் மேற்கொண்டு வரும் கொலைகள் ஆள் கடத்தல்கள் கொள்ளைகள் மற்றும் தாக்குதல்கள் என பல குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்தவும் சட்டத்தின் முன் நிறுத்தவும் வேண்டும் என்பதில் முழுமையான கவனம் எடுத்து நீதியை நிலை நாட்டுவதில் மனைப்பாக செயல்பட்டுக் கொண்டு வருகின்றார் இதனை சர்வதேச நீதியாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இதனை ஏற்றுக் கொள்ளாத படையினரும் இராணுவப் புலனாய்வாளர்களின் நன்கு திட்டமிட்ட செயல்பாடே குறிப்பி;ட்ட நீதிபதியின் வாகணத்தை துரத்திச் சென்று தாக்கமுற்பட்ட செயலாகும் என்பதே உண்மையாகும். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட கொலை முயற்சி சம்பந்தமாக விவாதிக்க அறிவித்தல் கொடுக்கப்பட்டு இருந்தது இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் நீதித்துறையினர் குறிப்பிட்டது தமக்கு இத்தகைய சம்பவம் இடம் பெற்றது சம்பந்தமாக எதுவும் தெரியாது என்பதாகும். அரசாங்கமும் கூட இந்தப் படு கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்துள்ளதாகவே கருத வேண்டியுள்ளது உண்மையும் ஆகும் குறிப்பிட்ட நீதிபதி தனது வாகனம் படையினரால் தாக்க நடவடிக்கையெடுக்கப்பட்டதாக பிரதம நீதியரசர் மற்றும் நீதி சேவைகள் ஆணைக் குழுவிற்க்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இத்தகைய சூழ் நிலையில் நீதித் துறை தமக்கு இது சம்பந்தமாக எதுவும் தெரியாது என கைவித்தமை எதனை எடுத்துக் காட்டுகின்றன என்றால் இந்த நடவடிக்கையில் படைத்தரப்பினருடன் அரசாங்கத்தினரும் இணைந்தே இந்த நடவடிக்கையை மேற் கொண்டார்கள் என்பதை இதற்கு கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களும் கூட சான்று பகிர்கின்றன. இத்துடன் குறிப்பிட்ட இராணுவத்தினர் நீதிமன்றினால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டால் உரிய படைத் தலைமை தம்மை பாதுகாக்க தவறிவிட்டார்கள.; என்ற ஆத்திரத்தில் உண்மைகளை நீதிமன்றத்தின் முன்னர் தெரிவித்து தம்மைக் காட்டிக் கொடுத்து விடுவார்கள் என்ற பயத்தின் காரணமே இன்று இப் படையினர் மனப்பாதிப்புக்கு உட்பட்டவர்கள் என அறிக்கை சமர்பிக்க எடுக்கப்படும் நடவடிக்கையாகும் என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த காலத்தில் செம்மணிப் புதை குழி விடயமும் இத்தகைய நிகழ்வு ஒன்றின் மூலம் தான் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரன் ஒருவனினால் வெளிக் கொண்டு வரப்பட்டது கடந்த கால அணுபவமே தற்போது குறிப்பிட்ட படையினர் விடயத்தில் மனநோயாளர் நாடகத்தை ஆரம்பித்து வைத்துள்ளது. இதுவும் கூட ஒரு சர்வதேச விவகாரமாக உருப் பெறும் நிலையில் தான் காணப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த இராணவத்தினரை காப்பாற்றாது விட்டால் இவர்களும் தமக்கு அறிவுறுத்தியவர்கள் செயல்பட கட்டளையிட்டவர்கள் எனப் பலரையும் காட்டிக் கொடுத்த விடலாம் என்ற பயமே இன்று இவர்களை மன நோயாளர்கள் என்ற போர்வையில் விடுதலை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையாகும். நன்றி<பதிவு.

திருமலையில் படைநகர்வு ஆரம்பம் உக்கிர மோதல்கள்.

திருமலையில் படைநகர்வு ஆரம்பம் உக்கிர மோதல்கள் புலிகளால் முறியடிப்பு. திருமலை ஈச்சிலம்பற்று மாவியாற்றைக் கைப்பற்றும் நோக்குடன் சிறீலங்காப் படையினர் பாரியளவிலான வலிந்த தாக்கும் படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இன்று பகல் வான்படையினரின் உதவியுடன் கிபீர் குண்டு வீச்சு விமானங்கள் குண்டுகளைப் போட கல்லாறுப் பகுதியிலிருந்து மாவிலாறு பகுதியை நோக்கி பாரிய படை நகர்வை சிறீலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர். எனினும் விடுதலைப் புலிகளால் படையினரின் நகர்வு நோக்கியும் இராணுவ முகாங்கள் நோக்கியும் மூர்க்கமான எறிகணைத் தாக்குதி படையினரின் படையினரின் படைநகர்வை சூனியப் பிரதேசத்தில் வைத்து விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். அத்துடன் சூனியப் பிரசேத்தில் விடுதலைப் புலிகளால் நிலக்கண்ணிகளும் பொறிவெடிகளும் வெடிக்க வைக்கப்பட்டுள்ளதை அடுத்து படையினரின் முன்னேற முடியாது திணறுகின்றனர். இதேவேளை சூனியப் பிரசேத்தின் ஊடாக முன்னேற முயற்சிக்கும் சிறீலங்கா படையினரை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகளால் துப்பாக்கி சூட்டுவலுவை வழங்குகின்றனர். விடுதலைப் புலிகளின் எறிகணை வியூகத்தை கடந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் செல்லாது முடியாது படையினர் திணறுகின்றனர். படையினரின் படைநகர்வை தடுத்து நிறுத்திய விடுதலைப் புலிகள் திருமலையில் உள்ள சிறீலங்கா இராணுவ முகாம்களை நோக்கி மூர்க்கமான எறிகணைத் தாக்குதல்களை நடத்துகின்றனர். நன்றி>பதிவு

29 July, 2006

படையினரின் வலிந்த தாக்குதல்கள் கொழும்புக்கு ஆபத்து.

படையினரின் வலிந்த தாக்குதல்கள் கொழும்பு நகரம் தாக்கப்பட வழிகோலும் - ஹென்றிக்சன் தமிழர் தாயகப் பகுதி மீது சிறீலங்கா படையினர் தொடுத்துள்ள வலிந்த தாக்குதல்கள் கொழும்பு நகரம் தாக்கப்படுவதற்கு வழிகோலும் என கண்காணிப்புக் குழு எச்சரித்துள்ளது. நேற்று ரொயிற்றர் செய்தி நிறுவனத்திற்கு கருத்துரைக்கும் போது உல்வ் கென்றிக்சன் இதனைத் தெரிவித்தார். மாவிலாற்றுப் பிரச்சினையை காரணம் காட்டி தரை, வான்வெளிகளில் சிறீலங்கா அரசாங்கம் தொடுத்துள்ள வலிந்த தாக்குதல்கள் தவறான அணுமுறை என கண்ணடம் வெளியிட்டுள்ளார். இரு தரப்பினரும் போர் நிறுத்த உடன்படிக்கை நடைமுறையில் முறித்துக்கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தியிருக்கும் கண்காணிப்புக் குழுத் தலைவர் தற்பொழுது பெயரளிவில் மட்டுமே போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இரு தரப்பினரும் அதிகாரபூர்வமாக விலகாததால் அதனை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் பேச்சை ஆரம்பிக்க முடியும். எனினும் தற்போதைய போர் நிறுத்தத்தில் இருந்து பலதூரத்திற்கு சென்றுவிட்டோம். நீரைப் பெறுவதாகக் கொண்டு வலிந்த தாக்குதலைத் தொடுத்துள்ளதன் மூலம் தவறான பாதையில் சிறீலங்கா அரசாங்கம் செல்கிறது. உண்மையில் நீரைப் பெறுவதில் சிறீலங்கா அரசாங்கம் விருப்பம் கொண்டிருந்தால் வலிந்த தாக்குதலைத் தொடுப்பது பொருத்தமற்ற செயலாகும். சிறீலங்கா அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர் வெருகல் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சந்திப்பை மேற்கொண்டோம். சிறீலங்கா அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு நாம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் வலியுறுத்தினோம். ஆனால் நாம் பேசிக்கொண்டிருந்த போது சிறீலங்கா வான்படை விமானங்கள் எமக்கு அருகில் குண்டுகளை வீசின. இது சரியான அறிகுறி இல்லை என்பதே எனது கருத்து. என்னைப் பொறுத்த வரை முழு அளவிலான யுத்தத்தை ஆரம்பிக்கும் வல்லமையை இரு தரப்பினரும் கொண்டிருக்கவில்லை. தற்போதைய வன்முறைகளை மட்டுமே இரு தரப்பினராலும் அதிகரிக்க முடியும். எனினும் நிலமையை சிறீலங்கா அரசாங்கம் கட்டுப்படுத்தத் தவறினால் கொழும்பில் தாக்குதல்கள் நடப்பதை தடுக்க முடியாது எனத் தெரிவித்தார். பின்லான்ட், டென்மார்க், ஆகிய நாடுகளைப் போன்று கண்காணிப்புக் குழுவிலிருந்து வெளியேறும் முடிவை சுவீடனும் எடுக்கும் பட்சத்தில் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் செயலிழந்து போகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். நன்றி>பதிவு

இலங்கையில் போர் நிறுத்தம் செத்துவிட்டது.

இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை. செத்துவிட்டது. ஆனால் பெயரளவிலும் உக்கிரமற்ற தணிவான போரும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் செத்துவிட்டது: உல்ப் ஹென்றிக்சன இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை. செத்துவிட்டது. ஆனால் பெயரளவிலும் உக்கிரமற்ற தணிவான போரும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு உல்ப் ஹென்றிக்சன் அளித்த நேகாணல்: தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கம் ஆகிய இருதரப்பினரது செயற்பாடுகளினாலுமே யுத்த நிறுத்த ஒப்பந்தமானது உண்மையில் அதிகபட்சமாகவோ குறைந்தபட்சமாகவோ முறிவடைந்துள்ளது. உண்மையான யுத்த நிறுத்தத்திலிருந்து தொலைவில்தான் நாம் உள்ளோம். சிறிலங்கா அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசிக் கொண்டிருந்தபோது எங்கள் முன்னாலேயே விமானத்திலிருந்து குண்டு வீசப்பட்டது. நிச்சயமாக இது சரியான சமிக்ஞை அல்ல. எந்த ஒருதரப்பும் முழு அளவிலான யுத்தத்துக்குத் தயாராக இருப்பதாக நான் கருதவில்லை. வன்முறைகள்தான் அதிகரிக்கும். வன்முறைகள் அதிகரிப்பது என்பது சிக்கலானது. நிலைமைகளை கவனத்தில் கொள்ளாவிடால் கொழும்புவுக்கும் வன்முறைகள் பரவும். பின்லாந்து, டென்மார்க்கைப் போல் சுவீடனும் வெளியேற முடிவு செய்தால் மூன்றில் ஒரு பங்கு கண்காணிப்புக் குழுவினர் வெளியேற நேரிடும். அனைத்து முறைப்பாடுகளையும் எம்மால் விசாரிக்க முடியாது. கண்காணிப்புக் குழு மூடப்பட்டுவிட்டால் இருதரப்புக்கும் இடையே செய்திகளை எடுத்துச் செல்கிற நபர்கள் இல்லை. அது அப்பாவி மக்களை பாதுகாப்பற்ற தன்மையை மேலும் அதிகரிக்கும் என்றார் உல்ப் ஹென்றிக்சன். நன்றி>புதினம்.

இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை.

ஈரானுக்கு அணுஆயுதம் செய்வதற்கு உதவி செய்த இரண்டு இந்திய நிறுவனங்கங்களுக்கு தடைவிதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது, ஆனால் அவற்றின் பெயர்களை அறிவிக்க மறுத்து விட்டது, இதேவேளை அப்துல் கலாம் காஸ்மீர் வருவதயிட்டு எதிப்பு தெரிவிக்கும் முகமாக கடைகள் அனைத்து மூடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தினரின் பாரிய தாக்குதல் முயற்சி முறியடிப்பு.

திருகோணமலையில் மாவிலாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட பாரிய தாக்குதல் முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. வெலிக்கந்தையிலிருந்து மாவிலாறு நோக்கி இன்று வெள்ளிக்கிழமை இராணுவத்தினர் மேற்கொண்ட இந்த நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்ட தாக்குதலில் இரு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் இன்று காலை முதல் இரண்டு முறை பாரிய தாக்குதல் முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் போது இராணுவத்தினருக்குத் துணையாக சிறிலங்கா விமானப்படை விமானங்களும் நடவடிக்கைகளை மேற்கொண்ட அதேநேரம் இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி எறிகணை வீச்சுத் தாக்குதலையும் மேற்கொண்டனர். இந்த நகர்வு முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதல் நடவடிக்கைகளால் முறியடிக்கப்பட்டன. இந்த முறியடிப்பு நடவடிக்கைகளின் போதே இரு போராளிகளும் வீரச்சாவடைந்துள்ளனர். இணைப்பு : newstamilnet.com Friday, 28 Jul 2006 USA

28 July, 2006

உங்கள் முன்னால் குண்டுகள் வீசப்படுகின்றன!!!

உங்கள் முன்னால் குண்டுகள் வீசப்படுகின்றன, இப்போது என்ன கூறப்போகின்றீர்கள்?: கண்காணிப்புக் குழுவிடம் புலிகள் கேள்வி [சனிக்கிழமை, 29 யூலை 2006, 05:51 ஈழம்] [கொழும்பு நிருபர்] உங்கள் கண்முன்னாலேயே குண்டுகள் வீசப்படுவதை பாருங்கள். இது தொடர்பாக என்ன கூறப் போகின்றீர்கள் என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக சி.எழிலன் கொழும்பு ஊடகமொன்றுக்கு கூறுகையில், இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைவர் உலப் ஹென்றிக்சனுடன் நேற்று மாலை 3.30 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தேன். எமது அலுவலகத்திற்கு 750 மீற்றர் தூரத்தில் விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசின. உங்கள் கண்முன்னாலேயே குண்டுகள் வீசப்படுவதை பாருங்கள். இது தொடர்பாக என்ன கூறப் போகின்றீர்கள் என்று உலப் ஹென்றிக்சனிடம் கேட்டேன். உண்மை நிலைகளை தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினேன். அரசாங்கத்துடன் பேசி முடிவெடுத்துவிட்டு வாருங்கள் என்று கூறி பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு அவரை வழியனுப்பிவிட்டேன் என்றார் எழிலன். உல்ப் ஹென்றிக்சனுடனான சந்திப்பில் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். நன்றி>புதினம்.

விமானத் தாக்குதலுக்கு பாட்டாளி மக்கள் கட்சி கண்டனம்.

தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறும் சிறீலங்கா விமானத் தாக்குதலை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை திருமலை மற்றும் முல்லைத் தீவு பகுதிகளில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலை கண்டிக்கும் பொழுது மகிந்த ராஜபக்ச நடத்தும் நாடக வலையினுள் இந்தியா விழுந்துவிடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் அரங்கில் மகிந்த ராஜபச்ச சிறந்த நடிகர் எனவும் சுட்டிக்காட்டிய ராமதாஸ் நோர்வேயின் அனுசரணையின் கீழ் இனப்பிரச்சினைக்கு சிறீலங்கா அரசாங்கம் எந்தவொரு தீர்வையும் முன்வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். -பதிவு-

சிறீலங்கா விமானத் தாக்குதலானது போர் நிறுத்த மீறலாகும்.

சிறீலங்கா விமானத் தாக்குதலானது போர் நிறுத்த மீறலாகும் - கண்காணிப்புக் குழு. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளுக்குள் நேற்று வியாழக்கிழமை சிறீலங்கா வான்படையினர் நடத்திய தாக்குதல்கள் யுத்த நிறுத்த மீறல் என கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. சிறீலங்கா வான்படையினரின் தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்து கண்காணிப்புக் குழு பேச்சாளர் ஒமர்சன் விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட முல்லைத்தீவு மற்றும் திருமலையிலும் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலானது போர் நிறுத்த உடன்படிக்கையின் சரத்துக்களின் படி அரசாங்கம் யுத்த நிறுத்த மீறலை செய்துள்ளதாக ஒமர்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழுமையான அறிக்கை ஒன்றை தாயாரித்துக்கொண்டிருப்பதாகவும் விமானத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் இதுவரை முறைப்பாடு எதனையும் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். -பதிவு-

27 July, 2006

4ம் கட்ட ஈழப்போர் எந்நேரமும் தொடங்கலாம்.

திருகோணமலை ஈச்சலம்பற்றுப் பகுதியில் சிறீலங்கா விமானப் படை விமானங்கள் இன்று மீண்டும் நடத்திய விமானக் குண்டு வீச்சில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். பொதுமக்கள் பலர் காயமடைந்ததுடன் பத்துக்கு மேற்பட்ட வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. பெருமளவு மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். தமிழர் தாயகத்தின் மீது மேற் கொள்ளப்படும் விமானத்தாக்குதலோ அல்லது தரைத் தாக்குதலோ யுத்தப் பிரகடனமா கருதப்படும் என விடுதலைப் புலிகள் எச்சரித்த நிலையில் நடைபெற்ற இத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து 4ம் கட்ட ஈழப்போர் எந் நேரமும் தொடங்கலாம் என செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை முல்லைத்தீவில் நடைபெற்ற விமானத் தாக்குதலில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. -புதினம்-

26 July, 2006

தமிழீழத்தில் கடற்படை, விமானத் தளங்கள் அமெரிக்கா திட்டம்.

தமிழீழத்தில் கடற்படை தளம் மற்றும் விமானத் தளத்தை அமைக்க அமெரிக்கா திட்டம் - கரேன் பாக்கர். தமிழீழ மக்களை பாதுகாப்பதற்கான சட்டபூர்வமான உரிமையினை, தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருப்பதாக, அமெரிக்காவின் முன்னணி சட்டவாளர் கரன் பார்க்கர் தெரிவித்துள்ளார். லண்டனில் கறுப்பு ஜுலையின் நினைவு சுமந்த எழுச்சிப் பேரணியில் சிறப்புரையாற்றிய அமெரிக்க சட்டவாளர் கரன் பார்க்கர், தேசிய இனம் என்ற வகையில், தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தமிழீழ தனியரசை நிறுவும் உரிமையை, தமிழீழ மக்கள் கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். தமிழீழ மக்களின் நலன்களில் அக்கறை கொள்ளாத போதும், தமிழீழ நிலப்பிரதேசங்களை அமெரிக்க அரசாங்கம் குறிவைப்பதாக குற்றம் சுமத்தியிருக்கும் சட்டவாளர் கரன் பார்க்கர், இது குறித்து தமிழ் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக தென்தமிழீழத்தில் கடற்படை தளம் ஒன்றையும், வடதமிழீழம் பலாலியில், விமானப் படைத்தளம் ஒன்றையும் உருவாக்கிப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவும், சட்டவாளர் கரன் பார்க்கர் சுட்டிக் காட்டியுள்ளார். இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோதுவதற்கு திராணியற்ற சிறீலங்கா அரச படைகள், அப்பாவித் தமிழ் மக்களை படுகொலை செய்து வருவதாக குறிப்பிட்டிருக்கும் சட்டவாளர் கரன் பார்க்கர், இவ்வாண்டு மிகவும் துயரம் நிறைந்த வருடமாக விளங்குகின்ற போதும், சில வேளைகளில் தமிழீழ தனியரசு உருவாகுவதற்கு இவ்வாண்டு வழிகோலலாம் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நன்றி>பதிவு

25 July, 2006

பல்லாயிரம் மக்களுடன் நடைபெற்ற சாவிலும் வாழ்வோம்.

சாவிலும் வாழ்வோம் நிகழ்வு புகைப்படங்கள், பல்லாயிரம் மக்களுடன் லண்டன் ஜேர்மனி கனடா மற்றும் நாடுகளில். நன்றி>புதினம்.

இரவில் தமிழர்களை புலிகள் கொன்றுவிடுவர்: மகிந்த

இந்தியாவுக்கு அகதிகளாகச் செல்லாவிட்டால் இரவு நேரங்களில் அவர்களை விடுதலைப் புலிகள் கொன்றுவிடுவர் என்று தன்னைச் சந்தித்த தமிழரல்லாத இந்தியப் பெண் ஊடகவியலாளர் குழுவிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச புளுகியுள்ளார். தமிழரல்லாத இந்தியப் பெண் ஊடகவியலாளர்களிடம் மகிந்த ராஜபக்ச பேசியுள்ளதாவது: அண்மைய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சியாம் சரணின் சிறிலங்கா பயணத்தின் போது கூட்டரசு போன்ற குறிப்பிட்ட சில யோசனைகளை முன்வைத்துள்ளார். அவற்றை நீங்கள் பரிசீலிக்கிறீர்களா? நாங்கள் நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். அனைத்து அரசு அமைப்பு முறைகளையும் குறிப்பாக இந்திய அரசு முறை குறித்து ஆராய கூறியுள்ளோம். அதனடிப்படையில் இலங்கைக்கான ஒரு அரசு முறை உருவாக்க உள்ளோம். ஏனெனில் இது சிறிய நாடு. அதிகாரப் பகிர்வு என்பது நடைமுறைச் சாத்தியமில்லை என்று கருதுகிறீர்களா? எந்த ஒரு தீர்வானாலும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகள், நிபுணர்களை நாம் அழைப்போம். வட்டமேசை மாநாடு நடத்தப்படும். அதன் பின்னர் ஓரிரு பரிந்துரைகள் தீர்மானிக்கப்பட்டு அதை விடுதலைப் புலிகளுக்கும் அனுப்புவோம். ஏனெனில் அவர்களினது கருத்தும் தேவை. பேச்சுக்கள் ஏன் முறிவடைந்தது என்பது இந்திய மக்களுக்கு புதிராக உள்ளதே? பிரபாகரன் ஜனநாயகத்தைப் புரிந்து கொள்ளாதவர். அவர் காடுகளில் தனது தரப்பினருடன் வசிக்கின்றனர். அவரை ஒரு சிலரைத் தவிர எவரும் சந்திக்க முடியாது. அவருடன் எப்படி பேச்சுக்கள் நடத்த முடியும்? அவர் தமிழர்களின் பிரதிநிதியாக கூறுகிறார். உண்மையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை அவர் பிரதிபலிக்கிறாரா? தமிழர் தரப்பில் பல அரசியல் தலைவர்கள் உள்ளனர். கொழும்பில் 39 விழுக்காடு தமிழர்கள் உள்ளனர். கொழும்பின் பிரதி மேயர் கூட ஒரு தமிழர்தான். இந்தியாவுக்கு மீண்டும் அகதிகள் வருகை தொடங்கியுள்ளதே? இந்தியாவுக்குச் செல்லுமாறு மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளே அனுப்புகின்றனர். அவர்களின் பயணத்துக்கு புலிகளே ஒழுங்கு செய்கின்றனர். இங்கே விடுதலைப் புலிகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளிலும் கூட எங்கள் அகதிகள் முகாம் உள்ளது. புலிகளின் கட்டளைக்கு அவர்கள் கீழ்படியாவிட்டால் இரவு நேரங்களில் சுட்டுக் கொன்றுவிட்டுவார்கள். பிரபாகரன் இலங்கையைச் சேர்ந்தவர். நான் அவரைச் சந்திக்கத் தயாராக உள்ளேன். அரசியலுக்கு வந்துவிட்டால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்னால் செய்ய முடியும் என்று. நாங்கள் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளோம். அவர் தயாராக இல்லை. பிரபாகரனை பேச்சு மேசைக்குக் கொண்டு வர இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். நான் போருக்கானவன் அல்ல என்றார் மகிந்த ராஜபக்ச. நன்றி>புதினம்.

24 July, 2006

மகிந்தவுக்கு இதயம் இருக்கிறது- மூளை இல்லை: விமல் வீரவன்ச.

தயா மாஸ்டருக்கு சிகிச்சை அளித்திருப்பதன் மூலம் தனக்கு இதயம் இருக்கிறது என்பதை மகிந்த வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் மூளை இல்லை என்று ஜே.வி.பி.யின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்ச சாடியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டருக்கு கொழும்பில் சிகிச்சை அளிப்பதன் மூலம் தனக்கு இதயம் ஒன்று இருப்பதாக வெளிப்படுத்த மகிந்த ராஜபக்ச முயற்சித்துள்ளார். ஆனால் உண்மையில் அரசாங்கத்துக்கு மூளை இல்லை என்பதைத்தான் அது வெளிப்படுத்தியிருக்கிறது. தங்களது இதயத்தை வெளிப்படுத்துகிறவர்களுக்கு மூளையும் நன்றாக இருக்க வேண்டும். இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான கொலை முயற்சி, பாரமி குலதுங்க கொலை, கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவத்தின் போது இதைச் செய்திருக்க வேண்டும். அன்ரன் பாலசிங்கத்தின் சிறுநீரக சிகிச்சையின் போது இந்தியா எப்படி நடந்து கொண்டது? அவர்கள் பாலசிங்கத்தின் பயணத்துக்கு அனுமதிக்கவில்லை. ஆனால் இங்கே பிரச்சனையே நல்ல இதயம் இருக்கிறது. மூளை இல்லை. இத்தகைய முட்டாள்தனமான சிந்தனைகள் இனிவரும் காலத்தில் இருக்கக் கூடாது என்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம் என்றார் விமல் வீரவன்ச. நன்றி>புதினம்.

23 July, 2006

ராஜீவின் தலைக்குத்தான் இலக்கு வைத்தேன்.

ராஜீவின் தலைக்குத்தான் இலக்கு வைத்தேன்: கொழும்பில் தாக்குதல் நடத்திய ரோகன விஜயமுனி பகிரங்க வாக்குமூலம் . இந்தியாவை அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த தாக்குதலை நடத்திய விஜித ரோகன விஜயமுனிக்கு 1990 ஆம் ஆண்டு சிறிலங்கா அரச தலைவரால் மன்னிப்பு அளிக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர் விஜித ரோகன விஜயமுனி சிஹல உறுமய சார்பில் தேர்தலில் போட்டியிட்டு அரசியல் முகத்தையும் வெளிப்படுத்திக் கொண்டு இப்போது வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். 19 ஆண்டுகளுக்குப் பின்னர் ராஜீவை தான் தாக்கியது குறித்து கொஞ்சமும் குறையாத பேரினவாத வெறித்தனத்துடன் விஜித ரோகன விஜயமுனி கொழும்பு ஊடகத்துக்கு அளித்துள்ள நேர்காணல்: 1985 ஆம் ஆண்டு சிறிலங்கா கடற்படையில் இணைந்தேன். கடற்படைக் கப்பல் எண்: 526 இல் றேடியோ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றினேன். அப்போது நடைபெற்று வந்த வடமராட்சி போர் நடவடிக்கையில் பங்கேற்றிருந்தேன். பெருந்தொகையான விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டு காலி துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டிருந்த நேரம். அப்போது அரச தலைவராக இருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தனவுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக யூலை 29 ஆம் நாள் ராஜீவ் சிறிலங்கா வந்திறங்கினார். அப்போது நாடு பதற்றத்தில் இருந்தது. அனைத்து மக்களும் அதிர்ச்சியில் இருந்தனர். எனக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்தியாவின் 26 ஆவது மாநிலமாக சிறிலங்காவை இணைத்துவிட்டார்கள் என்று நினைத்தேன். எமது போரை நிர்மூலமாக்கி எங்களை எளிதில் வெற்றி கொண்டுவிட்டார் ராஜீவ். அவருக்கு வரவேற்பளிக்கப்பட்ட சம்பவத்தை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தேன். என் இரத்தம் கொதித்தது. என்னால் அந்த தொலைக்காட்சிப் பதிவுகளை தொடர்ச்சியாகப் பார்க்க முடியவில்லை. ராஜீவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்போது ரட்மகம நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சோமரட்ண தனது பதவியிலிருந்து விலகியும் இருந்தார். யூலை 30 ஆம் நாள்- நான் விரைவாக தயாராகிக் கொண்டிருந்தேன். காலையில் மீன் உணவை சாப்பிட்டேன். அதன் பின்னர் பேரூந்தில் ஏறி அரச தலைவர் மாளிகைக்குச் சென்றேன். அணிவகுப்பு மரியாதைக் குழுவில் இணைந்து கொண்டேன். இப்போது அணிவகுப்பு மரியாதை தொடங்க உள்ளது. மணி முற்பகல் 10 இருக்கும்... அரை மணிநேரம் கடந்தது..... ராஜீவ் வந்துசேரவில்லை.. நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அப்போது ராஜீவ் மட்டும் அதைச் செய்யாது இருந்திருந்தால் இந்தத் தீவிலிருந்து பயங்கரவாதத்தை அப்போதே நாம் அழித்திருப்போம்- என்ன கொடுமை- ராஜீவ் காந்திக்கு வணக்கம் செலுத்தி அந்தப் பாவச் செயலில் என்னையும் இணைத்துக் கொள்ள வேண்டுமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இரு நாட்டு தேசியப் பண்களும் இசைக்கப்பட்டன. ராஜீவ் காந்தி வந்திருந்தார். கடற்படை தளபதி ஆனந்த டி சில்வா ராஜீவுக்கு பின்னால் இருந்தார். நான் இடதுபுறத்திலிருந்து 3 ஆம் நபராக நின்றிருந்தேன். என்னால் நீண்ட நேரம் பொறுமை காத்திருக்க முடியவில்லை. ராஜீவ் காந்தியை கொன்றுவிட்டால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிடும். நான் முன்நகர்ந்து ராஜீவை கடுமையாகத் தாக்கினேன். அது பலமான தாக்குதல். ஆனால் அத்தாக்குதல் விலகிச் சென்றுவிட்டது. நான் ராஜீவ் காந்தியின் தலைக்குத்தான் இலக்கு வைத்தேன்- அது மரணத்தை ஏற்படுத்தும் தாக்குதல்- அதுதான் என் நோக்கம். ஆனால் அவர் மற்றொரு பக்கம் திரும்பியதால் மயிரிழையில் உயிர்தப்பிவிட்டார். ராஜீவ் பாதுகாவலர்கள் என்னை அங்கேயே தாக்கினர். மைதானத்தில் விழுந்துவிட்டேன். அதன் பின்னர் கடற்படையால் சோதனையிடப்பட்டு கடற்படை தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்ப்ட்டேன். அதன் பின்னர் கடற்படை தளபதி லெப். மெண்டிஸ் அங்கு வந்தார். "உனக்கு என்ன நடந்திருக்கிறது என்று தெரியுமா?" என்று கேட்டார். "நான் செய்வது என்ன என்பது குறித்து எனக்குத் தெரியும். நான் எதற்கும் முகம் கொடுக்கத் தயார்" என்றேன். அதன் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு 4 ஆம் மாடியில் 3 மாதங்கள் வைக்கப்பட்டிருந்தேன். அப்போது காவல்துறை அதிகாரி சந்திர ஜயவர்த்தன என்னிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். ஒருநாள் பிரதி காவல்துறை மா அதிபர் ஹென்றி பெரேரா 20 அல்லது 25 அறைகள் என்னை அறைந்திருப்பார். அது குறித்து சந்திர ஜயவர்த்தனவிடம் முறைப்பாடு செய்தேன். ஆனால் அவர் உயர் அதிகாரி என்பதால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார். அதேபோல் இந்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் என்னிடம் கேள்வி கேட்டனர். ஆனால் அவர்களுக்கு நான் பதில் அளிக்க முடியாது என்று மறுத்துவிட்டேன். அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். நீதிமன்றில் நிறுத்தப்பட்டேன். 1987 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் நாள் இராணுவச் சட்டத்தின்படி 6 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. எனக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது மிகக் கேவலமாக உணர்ந்தேன். ஏனெனில் எனக்கு தண்டனை விதித்த குழுவில் வடமராட்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தளபதிகளும் இருந்தனர். அவர் கேணல் விஜய விமலரட்ண. அவரும் காலியைச் சேர்ந்தவர்தான். தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் வெலிக்கடை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். கைதிகள் என்னை உற்சாகமாக வரவேற்றனர். அதன் பின்னர் இந்திய இராணுவம் வெளியேறக் கோரி சிறைக்குள் போராட்டம் நடத்தினோம். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காயமடைந்தேன். கொழும்பு தேசிய மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட போது என்னைச் சுற்றி ஒவ்வொரு நாளும் 500 பேர் இருப்பர். மருத்துவர்களும் தாதியரும் என்னை மிக மிக நன்றாக கவனித்து அன்பு செலுத்தினர். என்மீது ஒருபோதும் பரிதாபப்படவில்லை. இன்றைவிட நாளை நல்ல நாளாக இருக்கும் என்றார் விஜித ரோகன விஜயமுனி. நன்றி>புதினம்.

முல்லைத்தீவு அருகே மேலும் ஒரு விமானத்தளம்.

முல்லைத்தீவு அருகே மேலும் ஒரு விமானத்தளம் அமைக்க விடுதலைப் புலிகள் திட்டம்?: கொழும்பு ஊடகம் முல்லைத்தீவு அருகே மேலும் ஒரு விமானத் தளத்தை விடுதலைப் புலிகள் அமைக்க திட்டமிடுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகத்தின் செய்தி: கடந்த புதன்கிழமை சிறிலங்கா விமானப் படையினர் வவுனியாவில் அடையாளம் தெரியாத விமானம் ஒன்று இரவு 8.30 மணியளவில் பறப்பதை ராடார் மூலம் அவதானித்துள்ளனர். சிறிலங்கா காவல்துறையினரும் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியியின் மேலாக அடையாளம் தெரியாத விமானம் பறந்த சத்தத்தைக் கேட்டதாகக் கூறியுள்ளனர். முன்னதாக இரவு நேரங்களில் புலிகளின் விமானிகள் இலகு ரக விமான பயிற்சிகளை மேற்கொள்வதாக புலனாய்வுத்துறையினர் தெரிவித்திருந்தனர். தற்போது கெரில்லாப் போராளிகள் பரசூட்டுக்களை இரவு நேரங்களில் பயன்படுத்தி பயிற்சி எடுப்பதாகவும் புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். விமானத் தாக்குதல்களை நடத்துவதற்காக இப்பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அண்மைய விமானத் தாக்குதலில் சேதமடைந்திருந்த புலிகளின் இரணைமடு விமானத்தளம் சீரமைக்கப்பட்டுவிட்டது. 1.4 கிலோ மீற்றர் நீளமுள்ள அந்த விமான தளத்தில் சி-130 ஹெர்குலிஸ் உள்ளிட்ட நடுத்தர விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இருப்பினும் விமான தளத்தின் ஓடுபாதைக்கு அருகாமையில் இருந்த கட்டிடம் பாரிய சேதத்துக்குள்ளானது. அக்கட்டடம் சீரமைக்கப்படவில்லை. மேலும் முல்லைத்தீவு அருகே புதுகுடியிருப்பிருந்து தென்பகுதியில் 10 கிலோ மீற்றர் தொலைவில் பாரிய அளவிலான இடத்தை விடுதலைப் புலிகள் தூய்மைப்படுத்தி வருவதாக ஆளில்லா வேவு விமானங்கள் மூலம் விமானப்படையினர் அறிந்துள்ளனர். அனேகமாக அங்கேயும் ஒரு விமான தளத்தை விடுதலைப் புலிகள் அமைக்கக் கூடும் என்ற சந்தேகத்தை அது எழுப்பியுள்ளது. இரணைமடுக்கு மிக அருகாமையில் தென்கிழக்கில் மற்றொரு விமான தளத்தை விடுதலைப் புலிகள் ஏன் அமைக்கின்றனர் என்பது குறித்து சிறிலங்கா விமானப் படையினர் ஆச்சரியமடைந்துள்ளனர். பாரிய அளவிலான பிரதேசத்தை துப்பரவு செய்தமை விமானத்தளத்துக்காக இல்லையெனில் அது எதற்காக என்பது குறித்து விமானப் படையினரால் கண்டறிய இயலாமல் போகும் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி>புதினம்.

22 July, 2006

தமிழ்த் தேசிய ஆன்மாவில் என்றும் ஆறாத வடு கருப்பு ஜூலை83.

தமிழ்த் தேசிய ஆன்மாவில் என்றும் ஆறாத வடுவை மாறாத புண்ணை ஆழமாக ஏற்படுத்திய துன்பியல் நிகழ்வு என வர்ணிக்கப்படுவது 83 ஆடிக் கலவரம். காருண்ய சீலரான புத்தரின் உயர்ந்த நெறி பிரவகித்த இலங்கைத் தீவில், மனிதத்துவமற்ற மிருகத்தனமும், நாகரிகமற்ற கொடூரமும், முரட்டுத்தனம் மிக்க மிலேச்சத்தனமும் நிறைந்த இரத்தவெறி இப்படிக் கட்டவிழ்த்து விடப்பட்டது எங்ஙனம் சாத்தியமாயிற்று என்று புரியாமல் உலகத்தின் மனச்சாட்சி கலங்கி நின்றவேளை அது. 1983 ஜூலையில் இடம்பெற்றது இந்த இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான முதலாவது இனக் கலவரமல்ல. இதற்கு முன்னரும் இத்தீவில் 1956, 1958, 1974, 1977,1979, 1981 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாகப் பல கலவரங்கள் தமிழர்களுக்கு எதிராகத் தாண்டவம் எடுத்து ஆடின. அவ்வப்போது, தமிழர்களுக்கு எதிராக வெடித்த இந்த இனக் கலவரங்களை தமிழர், சிங்களவர் ஆகிய இரு இனத்தவருக்கும் இடையே நிலவிய வெறும் இனப்பகை உணர்வின் வெளிப்பாடாகத் தானாகவே கிளர்ந்து வெடித்த வன்செயல்கள் என்று மட் டும் கருதிவிடவோ, அடையாளப்படுத்தி விடவோ முடியாது. தமிழ் மக்களுக்கு எதிரான மிகக் கொடூர வன்முறைப் புயல்களும், வெறியாட்டங்களும் பெரும்பாலும் பௌத்த சிங்களப் பேரினவாதப் போக்குடைய ஆட்சியாளர்களால் இன அழிப்பு இலக்கின் அங்கமாகத் திட்டமிட்டு ஏவப்பட்டவையாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. 1983 ஆடிக் கலவர மும் இதற்கு விதி விலக்கல்ல. 1983 ஜூலை கலவரம் வெடிக்க முன்னரே அதற்கு முந் திய ஜூன் மாதத்திலேயே வவுனியா, திருகோணமலை போன்ற தமிழர் தாயகப் பகுதிகளிலும், மலையகத் தமிழர்களின் வாழி டங்களிலும் தமிழர்களுக்கு எதிரான வெறியாட்டங்கள் ஆரம் பித்துவிட்டன. டசின் கணக்கான தமிழர்கள் வெட்டிச் சாய்க் கப்பட்டனர். நூற்றுக் கணக்கில் வீடுகள், வாசல்கள், கடைகள், ஆலயங்கள் எரித்துச் சாம்பராக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் பல தமிழ் இளைஞர்கள் சீருடையினரால் கொன்றொழிக்கப் பட்டனர். தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட இனப் படுகொலை நடவடிக்கை அக்காலகட்டத்தில், 83 ஜூனி லேயே ஆரம்பமாகி விட்டது. அது 83 ஜூலையில் உச்சம் பெற்று ஆறு நாள்கள் இலங்கைத் தீவு எங்கும் தலைவிரித்தாடியது. யாழ்., திருநெல்வேலியில் ஜூலை 23இல் புலிகளின் தாக்கு தலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து திருநெல்வேலியிலும், கந்தர்மடத்திலும் இனவெறிச் சன்னதம் ஆடியது சிங்கள இராணுவம். அறுபது பொதுமக்கள் அங்கு சீருடை யினரால் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டனர். அதன் பின்னர், முன்னெப்போதும் இடம்பெற்றிராத குரூர மாக கொடூர இனவன்முறையாக இலங்கைத் தீவு எங்கும் கலவரம் விஸ்வரூபம் எடுத்து இரத்தப் பிரளயமாக வெடித்தது. தட்டிக் கேட்பாரின்றி இனவெறியாட்டம் தலைநகர் கொழும்பி லும், ஏனைய தென்னிலங்கைப் பிரதேசங்களிலும் அலை அலையாகச் சீறிப் பரவியது. தமிழரின் குருதி ஆறாய்ப் பெருக் கெடுத்தோட அவர்களின் சொத்துகளும், உடைமைகளும், உடலங்களும் தீயில் கருகின. பல தமிழ்க் குடும்பங்கள் உயிரோடு எரிக்கப்பட்டன. தமிழ ருக்குச் சொந்தமான பல்லாயிரக் கணக்கான வீடுகள், கட்டடங் கள், மண்டபங்கள், எரிபொருள் நிலையங்கள், வர்த்தக மையங் கள் என்பன சூறையாடப்பட்டு பின்னர் எரித்து கரிமேடுகள் ஆக்கப்பட்டன. இந்த இனக் கலவரத்தில் பேரினவாத ஆட்சியாளர்களின தும், அரசியல் பிரமுகர்களினதும், அரச அதிகாரிகளினதும் கறை பட்ட கரங்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தமையைச் சரித் திரம் பகர்கின்றது. தமிழர்களின் இன அடையாளத்தைக் குறிவைத்து தமிழர் களின் உயிர்கள், உடைமைகள், பொருளாதார வாழ்வு ஆகிய வற்றை அழிப்பதோடு சிங்களக் காடைத்தனம் அடங்கி விட வில்லை. தமிழரின் இருள் படிந்த வரலாற்றுக் காலத்தின் அருவருக் கத் தக்க மிகப்பெரும் கொடூரம் இதே காலத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலையிலும் அரங்கேறியது. சிங்களக் கைதிகளும், சிங் களச் சிறைக்காவலர்களும் கூட்டுச் சேர்ந்து சிறைக் கூண்டு களை உடைத்து, நிராயுதபாணிகளான 35 தமிழ் அரசியல் கைதி களைக் கண்டதுண்ட மாக வெட்டி, குரூரமாக அவர்களது உட லங்களைக் குத்திக் கிழித்துச் சிதைத்துச் சரித்து அட்டூழியம் புரிந்து தமது மிருகத்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். தமிழினத்துக்கு இவ்வளவு மோசமான கெடுதியை ஏற் படுத்திய கறுப்பு ஜூலை கலவரம் "பேரழிவிலும் ஒரு நன்மை' என்பது போல தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற் றில் புதிய திருப்பு முனையை ஏற்படுத்தி, கௌரவமான வாழ் வுரிமை குறித்து அவர்களுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றையும் பெற்றுத் தரவும் தவறவில்லை. தமிழர்களுக்குப் பேரழிவைத் தருகிறோம் என்ற முனைப்போடு பௌத்தசிங்களம் கறுப்பு ஜூலையில் விதைத்த வினையின் விளைவை இன்றும் அது அறுத்துக் கொண்டிருக் கின்றது. இனக் கலவரம் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிராக சிங் களம் புரிந்த பல் பரிமாண ஒடுக்கு முறையின் ஒட்டுமொத்தப் பாதிப்பு பாரதூரமான பல விளைவுகளை ஏற்படுத்தியது. இலங் கைத் தீவில் இன முரண்பாட்டை அது மேலும் கூர்மையடைய வைத்தது. இரு தேசியங்களின் மையமான இலங்கைத் தீவில் தமிழர் தேசம், சிங்கள தேசம் ஆகிய இரு தேசங்கள் மத்தியில் நல்லிணக்கமும், சமரச சகவாழ்வும் ஏற்படுவதை இது அசாத் தியமாக்கியது. தமிழ் மக்களிடையே விடுதலை நோக்கிய தீவி ரப் போக்கையும், போராட்ட உணர்வையும் அது வலுப்படுத்தியது. தமிழர்களின் உரிமைக்காகப் போராடும் ஆயுதம் தரித்த எதிர்ப்பு இயக்கம் முழு அளவில் தோற்றம் கொள்வதற்கான ஒரு புற நிலையை இது உருவாக்கியது. சுருங்கக் கூறுவதானால் அரச ஒடுக்குமுறையின் உச்சக் கட்ட வடிவமாக உருப்பெற்ற ஆடிக் கலவரம், பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட் டத்தை பிறப்பெடுக்க வைத்து உருக்கொடுக்கக் காலாயிற்று. இந்த இனக்கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம், சிங்கள இனவாத சக்திகள் தமிழ்த் தேசிய மறுமலர்ச்சியை உருப்பெற வைத்த துடன் தனியரசுப் போராட்டம் வீறுகொண்டு எழுவதற் கான அக, புறச் சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தன. இந்த இனக் கலவரம் தமிழ் மக்களது அரசியல் வரலாற்று செல் நெறியை மாற்றி, திருத்தமான உகந்த தடத்தில் அதைத் தூக்கி நிறுத் தியதும் கவனிக்கத்தக்கது. இணைப்பு : newstamilnet.com Saturday, 22 Jul 2006 USA

இந்திய நிறுவனத்திடமிருந்து எண்ணெய்க்குதங்கள் பறிப்பு!!

சிறிலங்காவில் செயற்பட்டு வரும் இந்திய எண்ணெய் நிறுவனத்திடமிருந்த திருகோணமலை எண்ணெய்க் குதங்களை பறிக்க சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க உத்தரவிட்டுள்ளார். இந்திய பெற்றோலிய நிறுவனத்திடம் திருகோணமலை சீனன்குடா எண்ணெய்க்குதங்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இந்த எண்ணெய்க்குதங்களை பொறுப்பேற்குமாறு தற்போது சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜாலிய மெதகமவிற்கு சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க உத்தரவிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தின் போது கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரினால் எழுத்து மூலம் இந்த எண்ணெய்க்குதங்கள் இந்திய நிறுவனத்திற்குப் பொறுப்பளிக்கப்பட்டிருந்தன. அண்மையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபன நிறுவனத்துக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. மேலும் ஜே.வி.பி. ஆதரவிலான தொழிற்சங்கங்களும் இந்தியாவை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கூட்டுத் தொழிற்சங்க பிரதிநிதிகள் சிலர் சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சிறிலங்காவின் எண்ணெய் வர்த்தகத்துறையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஏகாதிபத்தியத்தை தவிர்ப்பது, வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களை தேசிய எண்ணெய் சந்தையிலிருந்து நீக்குதல், நாட்டிற்குள் எண்ணெய் வர்த்தகத்தின் ஏகாதிபத்தியத்தை மீண்டும் கூட்டுத்தாபனத்தின் வசம் கொண்டு வருதல் மற்றும் தேசிய சந்தையில் எரிபொருளின் விலையைக் குறைத்தல் ஆகியவை குறித்து இப்பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது. இப்பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்திய நிறுவனத்திடமிருந்து எண்ணெய்க்குதங்களை பறிக்குமாறு ரட்ணசிறீ விக்கிரமநாயக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் சிறிலங்கா திறைசேரியின் கீழ் இருக்கும் 107 எரிபொருள் நிலையங்களின் பொறுப்பு, நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வசம் ஒப்படைப்பதற்கும் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார். இராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் பெற்ற திருகோணமலை எண்ணெய்க்குதங்கள் இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்து நாட்டினால் திருகோணமலை சீனன்குடாவில் பாரிய எண்ணெய்க்குதங்கள் அமைக்கப்பட்டன. திருகோணமலை துறைமுகத்திலிருந்து இங்கிலாந்து நிர்வாகத்தில் இருந்த கிழக்கு கடற்படையினருக்காக இந்த எண்ணெய்க்குதங்கள் உருவாக்கப்பட்டன. இலங்கையிலிருந்து இங்கிலாந்து வெளியேறிய பின்னர் இந்த எண்ணெய் குதங்களில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாமல் இருந்தன. திருகோணமலையில் உள்ள இந்த எண்ணெய் குதங்களை பயன்பாட்டுக்குப் பெறுவதன் மூலமாக திருகோணமலையில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்கா, இந்தியாவும் 1980-களின் தொடக்கத்திலே போட்டியிட்டன. ஆனால் 1980-களின் தொடக்கத்தில் திருகோணமலையில் அமெரிக்காவின் நிறுவனங்கள் கால்பதிக்க சிறிலங்கா அரசாங்கம் அனுமதித்திருந்தது. அப்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இத்தகவலை தமிழ்நாடு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். அந்நாளைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார், இந்திய நாடாளுமன்றில் பகிரங்கமாகவே சிறிலங்காவின் இந்த அனுமதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன் பின்னர் 1987 ஆம் ஆண்டு ராஜீவ் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவின் அனுமதியின்றி வேறு எந்த ஒரு நாட்டினது பயன்பாட்டுக்கும் அனுமதிக்கக் கூடாது என்பதை இடம்பெற வைத்தது இந்தியா. சிறிலங்காவும் ஒப்புக்கொண்டது. ஆனால் 1997 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நிறுவனம் ஒன்றுக்கு திருகோணமலையில் 300 ஏக்கர் நிலத்தை கொடுக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்தது. அதனால் இந்தியா-சிறிலங்கா இடையே முறுகல்நிலை ஏற்பட்டது. திருமலைக்காக அமெரிக்கா- இந்தியா மோதல் தொடர்ச்சியான யுத்தத்துக்குப் பின்னால் 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டு சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகின்ற நிலையிலேயே இந்தியாவும் அமெரிக்காவும் திருகோணமலையைக் கைப்பற்றும் முயற்சிகளில் முனைப்பு காட்டின. அமெரிக்கா நடத்தி வந்த ஆப்கான் யுத்தத்துக்கு உதவியாகவும் தெற்காசிய பிராந்தியத்தில் தலையிடவும் திருகோணமலையில் தனது இராணுவத் தளத்தை அமைக்க அமெரிக்கா விரும்பியது. மத்திய கிழக்குக்கும் ஆசியாவுக்கும் இடையேயான கடல்வழிப் போக்குவரவுக்கு திருகோணமலை துறைமுகம் பயன்படும் என்றும் அமெரிக்கா கருதியது. திருகோணமலை எண்ணெய்க்குதங்களை இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்று 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் நாள் இருநூறுக்கும் மேற்பட்ட சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபன பணியாளர்களான சிங்களவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். இருதரப்பு பேச்சுக்களின் பின்னர் 2002 ஆம் ஆண்டு யூன் 11 ஆம் நாள் இந்திய-சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனங்கள் இது தொடர்பிலான புரிந்துணர்வு ஓப்பந்தத்தை ஏற்படுத்தின. 2003 ஆம் ஆண்டு பெப்ரவரியில் சிறிலங்கா அரசாங்கம்- சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம்- இந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இடையேயான முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாதானது. ஜே.வி.பி. போன்ற சிங்களப் பேரினவாத கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த எதிர்ப்புகளிடையே 2003 ஆம் ஆண்டு மே 28 ஆம் நாள் லங்கா-இந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபனப் பணிகளை முறைப்படி அந்நாளைய இந்திய பெற்றோலிய அமைச்சர் ராம் நாயக் கொழும்பில் தொடங்கிவைத்தார். மகிந்தவும் இந்தியாவும் இந்த நிலையில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் கூடிய கூட்டரசாங்கம் இந்தியாவில் ஆட்சி அமைத்தது. அதேபோல் கடந்த 2005 ஆம் ஆண்டு சிறிலங்கா அரச தலைவராக பேரினவாதி மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றார். சிறிலங்காவுக்குச் சார்பான நிலைப்பாட்டை இந்திய அரசாங்கம் எடுக்கக் கூடாது என்று தமிழ்நாட்டிலிருந்து பாரிய அழுத்தம் இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்டது. அதன் விளைவாக தான் பதவியேற்ற நிலையில் மேற்கொண்ட மகிந்தவின் முதலாவது இந்தியப் பயணம் படுதோல்வியில் அடைந்தது. ஐக்கிய இலங்கை எனும் கோட்பாட்டை வலியுறுத்தி பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு மகிந்தவுக்கு இந்தியா அறிவுறுத்தியது. இராணுவ உதவியை செய்யவும் மறுத்தது. இதனால் வழமைபோல் இந்தியாவை அச்சுறுத்த பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் ஆயுத உதவிகளைக் கோர சிறிலங்கா முடிவு செய்தது. அரசியல் ரீதியாக சிங்களப் பேரினவாதத்துக்குச் சார்பாக இல்லாத இந்தியாவை வெளியேற்றும் நடவடிக்கையானது மகிந்த ராஜபக்ச பதவியேற்ற 3 ஆவது மாதத்திலேயே தொடங்கப்பட்டு விட்டது. 2006 ஜனவரி 29 ஆம் நாள் ஊடகவியலாளர்களிடம் பேசிய மகிந்தவின் பெற்றோலியத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, திருகோணமலையில் சிறிலங்கா - இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்துக்கு கொடுக்கப்பட்ட எண்ணெய் சேமிப்புக்குதங்களை சிறிலங்கா அரசாங்கம் மீள தன்வசம் வைத்துக் கொள்ளவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான நிலையில் இந்திய நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட வேண்டிய மானியத் தொகையான 78 மில்லியன் டொலரை மகிந்த ராஜபக்ச நிறுத்தினார். இதனால் சிறிலங்காவின் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் முடங்கும் நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் கடந்த யூன் மாதம் இருதரப்பு பேச்சுக்கள் நடத்தப்பட்டு சமரச ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் இந்த மாதம் தொடக்கத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தைக் கைப்பற்றுவோம் என்று சிறிலங்கா பெற்றோலியத்துறை அமைச்சர் பௌசி பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார். அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கம் இந்தியாவை வெளியேற்றக் கோரி மகிந்தவுக்கு கெடு விதித்தது. இந்தியாவை வெளியேற்றா விட்டால் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது. தங்களது தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் மகிந்த ராஜபக்ச ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து தொழிற்சங்கத்தினரை பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க பேச்சுக்கு அழைத்தார். இந்திய நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் மீண்டும் வலியுறுத்திய நிலையில் இந்தியாவிடமிருந்து எண்ணெயக்குதங்களை பொறுப்பேற்குமாறு சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜாலிய மெதகமவிற்கு அதிரடியாக ரட்ணசிறீ உத்தரவு பிறப்பித்துள்ளார். சிங்களத்துக்குச் சார்பாக இல்லாமல்- ஆனால் தனக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்த இந்தியாவின் செயற்பாட்டை முறியடிக்கும் வகையில் இந்தியாவை முன்னிறுத்தி வந்த ரணில் விக்கிரமசிங்கவை பேச்சுக்கு அழைப்பதுபோல் அழைத்து கடைசிநேர நாடகத்தால் இந்தியாவின் தலையீட்டை தான் விரும்பவில்லை என்பதை அண்மையில் மகிந்த ராஜபக்ச வெளிப்படுத்தியிருந்தார். மகிந்த அரசாங்கத்தின் எண்ணெய் நிறுவனம் தொடர்பான தற்போதைய முடிவானது இந்தியாவை தொடர்ந்து நிராகரிக்கும் வகையில் இருப்பதாக கொழும்பு கொள்கை வகுப்பாளர் வட்டாரங்கள் தெரிவித்தன. சிங்களவர்கள் எப்போதும் இந்தியாவுக்குச் சார்பானவர்கள் இல்லை என்பதை இனியேனும் இந்தியா புரிந்து கொண்டு இந்தியாவை தாய்நாடு என்று கருதி இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு செயற்பாட்டையும் எந்த நிலையிலும் மேற்கொள்ள மாட்டோம் என்று தொடர்ந்து அறிவித்து வரும் தமிழர் தரப்பின் பக்கம் உள்ள உண்மைகளை உணர்ந்து கொண்டு தனது வெளிவிவகாரக் கொள்கையை மாற்றிக் கொள்வதுதான் பிராந்திய ரீதியாக இந்தியாவுக்கு பயனளிக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். நன்றி>புதினம்.

21 July, 2006

சாவிலும் வாழ்வோம்!!! கறுப்பு ஜூலை83.

கறுப்பு ஜூலை 83, நினைவு நாள். கனடா,பிரான்ஸ்,ஜேர்மனி,சுவிஸ்,நெதர்லாண்ட்,இத்தாலி,பின்லாண்ட் நாடுகளில் நினவுகூரப்படுகின்றன. நன்றி>பதிவு.

20 July, 2006

புலிகள் ஆதரவு தமிழகத்தில், பல அமைப்புகள் மும்முரம்.

இலங்கையில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், விடுதலைப்புலி ஆதரவு அமைப்புகளின் செயல்பாடுகள் தமிழகத்தில் உத்வேகம் பெற்றுள்ளன. உள்ளரங்கு கூட்டங்கள் நடத்தி வந்த புலி ஆதரவு அமைப்புகள் தற்போது ஊர்வலம், கருத்தரங்குகள் என மக்களிடம் பிரசாரத்தை தொடக்கியுள்ளன. இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பொது மக்களிடமிருந்தே பணம் வசூலிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி வரும் `புரட்சிகர இளைஞர் முன்னணி' என்ற அமைப்பு தற்போது புலி ஆதரவு கோஷத்தை தீவிரப்படுத்தியுள்ளது. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த அமைப்பு தமிழகம் முழுவதும் பிரசார இயக்கத்தை தொடக்கியுள்ளது. கடந்த ஜூலை 10 ஆம் திகதி சென்னையிலும், ஜூலை 16 ஆம் திகதி திருப்பூரிலும் பிரசார இயக்கத்தை நடத்தி முடிந்துள்ளது. ஜூலை 23 திகதி மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் ஊர்வலம், கருத்தரங்கு நடத்தவுள்ளது. இதேபோல திருநெல்வேலி, ஈரோடு, காங்கேயம், திருப்பத்தூர், ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களிலும் பிரசார இயக்கம் நடத்தப்படவுள்ளது. இங்கு நடக்கும் கருத்தரங்குகளில் நெடுமாறன், சுப.வீரபாண்டியன், புதுக்கோட்டை பாவாணன், பரந்தாமன் உட்பட விடுதலைப்புலி ஆதரவாளர்கள் பலர் பங்கேற்கின்றனர். இணைப்பு : newstamilnet.com

19 July, 2006

கொலைகார டக்ளஸ் தேவானந்தாவை அனுமதிக்கக் கூடாது: வைகோ.

தமிழ்நாட்டில் தேடப்படுகிற குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தாவை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மறுமலர்ச்சி பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். மன்மோகன் சிங்கை இன்று புதன்கிழமை காலை புதுடில்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைகோ சந்தித்தார். சுமார் 25 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்து பிரதமரிடம் வைகோ விரிவாக எடுத்துச் சொன்னார். மன்மோகனிடம் அவர் அளித்த கோரிக்கை மனுவில், சிறிலங்கை விமானப்படைக்கு இந்தியா ரேடார்களை வழங்கி இருப்பதை சுட்டிக்காட்டி அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அப்பாவித் தமிழர்கள் மீது தொடர்ந்து இராணுவத் தாக்குதல் நடத்திவரும் சிறிலங்காவுக்கு இந்தியா எந்தவித இராணுவ உதவியையும் செய்யக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். சிறிலங்காவுக்கு இராணுவ உதவியையோ இராணுவ தளவாட விற்பனையையோ செய்வதில்லை என்று 1999ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை இந்திய அரசு உறுதியாகவும் உண்மையாகவும் செயல்படுத்த வேண்டும் என்று அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். நளினி - முருகன் தம்பதியினரின் மகள் அரித்ரா தமிழகத்திற்கு வந்து கல்வி பயில விசா வழங்கவேண்டும் என்று பிரதமரிடம் நேரில் பேசிய போது வைகோ கேட்டுக் கொண்டார். சிறிலங்காவின் அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தா சென்னை சூளைமேடு கொலை வழக்கில் தேடப்படுகிற நபர். அவர் இந்தியாவுக்கு வந்து இந்தியப் பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து அறிக்கைகள் வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்குரியது என்று மன்மோகனிடம் சுட்டிக்காட்டிய வைகோ, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்க அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். கொலையாளி டக்ள்ஸ் தேவானாந்தா குறித்து சென்னையிலிருந்து பழ. நெடுமாறன் வெளியிட்டு வரும் தென் செய்தி இதழில் இடம்பெற்றுள்ள செய்தி விவரம்: தமிழ்நாட்டுத் தமிழர் ஒருவரை படுகொலை செய்த குற்றவாளியும், ஆட்களைக் கடத்தி மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டுக்கு ஆளானவரும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவருமான சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்து 15-04-06 நாளிட்ட தென்செய்தியில் விரிவானச் செய்தி வெளி யிட்டிருந்தது. இவர் மீதுள்ள வழக்குகள் இன்னமும் தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. தேடப்படும் குற்றவாளியாக இவர் சென்னை நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அடிக்கடி இவர் தமிழ்நாட்டுக்கு வந்து செய்தியாளர் கூட்டங்களில் பேசுவதும் அரசியல் தலைவர்களைச் சந்திப்பதும் போன்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி இவரைப் பொறுத்தவரையில் சட்டம் செத்துவிட்டதா? ஏன் இவர் இன்னும் கைது செய்யப்படவில்லை? தமிழகக் காவல்துறை தூங்குகிறதா? என்பது போன்ற கேள்விகளைக் எழுப்பியிருந்தோம். . 13-07-06 அன்று தினமணியில் டக்ளஸ் தேவானந்தாவின் சிறப்புப் பேட்டி வெளியிடப்பட்டுள்ளது. புதுடில்லியில் வெளியுறவுத் துறைச் செயலாளர் சியாம் சரண் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் உள்ளிட்ட பல அதிகாரிகளையும் தலைவர்களையும் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துப் பேசினார். தினமணிக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில், "இலங்கையின் தற்போதைய சூழ்நிலை அங்குள்ள தமிழர்களின் நிலைக் குறித்து இந்திய அதிகாரிகள் மற்றும் தலைவர்களிடம் எடுத்துரைத்தேன். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடைமுறைச் சாத்தியமான மூன்று அம்சத் திட்டங்களை இந்திய அரசிடம் அளித்துள்ளேன். சிறிலங்கா அரசின் சார்பில் நான் அளித்தத் திட்டம் குறித்து தீவிரமாக ஆலோசிப்பதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.' மேலே கண்டச் செய்தி ஒரு உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. தேடப்படும் குற்றவாளியாக சென்னை செசன்சு நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா 1986 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 20 ஆண்டுகாலமாக கைது செய்யப்படவில்லை. அவரைத் தேடும் முயற்சியிலும் தமிழகக் காவல்துறை ஈடுபடவில்லை. அப்படியானால் இந்த நாட்டுச் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவராக அவர் விளங்குகிறார் என்பது அம்பலமாகியுள்ளது. தமிழ்நாட்டுக் காவல்துறை அவரை கைது செய்ய முடியாதபடி டில்லி தடுக்கிறது என்பதும் தெரிகிறது. தேடப்படும் கொலைக் குற்றவாளி ஒருவர் பகிரங்கமாக டில்லிக்கு வந்து பிரதமரின் ஆலோசகர் மற்றும் வெளியுறவுத்துறைச் செயலாளர் உட்பட உயரதிகாரிகளை சந்திக்கக்கூடிய நிலைமையில் இருக்கிறார் என்று சொன்னால் இதைவிடக் கேலிக் கூத்து எதுவும் இல்லை. தமிழ்நாட்டுத் தமிழன் படுகொலையானாலும் கவலையில்லை. டக்ளஸ் தேவானந்தாவைப் பாதுகாக்க வேண்டும் என்று டில்லி நினைக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களைத் தொடர்ந்து சிறிலங்கா கடற்படை சுட்டுத் தள்ளியபோதும் பதில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், குறைந்தபட்சம் சிறிலங்கா கடற்படைக்கு எச்சரிக்கை கூடவிடுக்காமல் டில்லி மௌனம் சாதிக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் டில்லியின் உண்மை உருவத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று தென்செய்தி இதழின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி>புதினம்.

இந்தியாவில் சில இணையத்தளங்களுக்கு தடை.

இந்தியாவில் 50 மில்லியன் பேர் இணையங்களைப் பயன்படுத்துகின்றனர் இந்தியாவின் மும்பாய் நகரத்தில் கடந்த வாரத்தில் நடத்தபட்ட குண்டு தாக்குதலை அடுத்து, பல்வேறு வெப்சைட் எனப்படும் இணையங்களுக்கு மக்கள் சென்று பார்ப்பதினை தடுக்க, இந்திய அரசு நடவடிக்கை எடுத்து இருப்பதினை இந்தியாவில் இருக்கின்ற இணையத்தளப் பயன்பாட்டாளர்கள் குறை கூறியுள்ளனர். மும்பாய் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தலைப்பு தொடர்பாக, பல்வேறு இணைய பயன்பாட்டாளர்கள், தங்களுடைய கருத்துகளை வெளியிடும் ‘வெப்லாக்ஸ்’ அல்லது ‘ப்லாக்ஸ்’ என்று கூறப்படும் இணையங்களை எதற்காக தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டது என்பதினை அரசாங்கம் கூறவில்லை. ஆனால் வெறுப்பு உணர்வினை ஏற்படுத்தும் செய்திகள் பரவுவதினை தடுக்கவே அரசாங்கம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக, அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தினால் தற்போது தடுக்கப்பட்டுள்ள இணையங்களில், இந்து தேசியத்துவம் மற்றும் கம்யூனிஸத்திற்கு ஆதரவான இணையங்களும் அடங்கும். அரசாங்கத்தின் இந்த முடிவானது, பேச்சு சுதந்திரத்தின் மீது விடுக்கப்பட்டுள்ள தாக்குதல் என இத்தகைய இணையங்களை பயன்படுத்துபவர்கள் கூறுகின்றனர். நன்றி பி பி சி தமிழ்ச்சேவை http://www.eelabarathi.com

உண்மையை உலகுக்கு வெளியிடுவதே ஊடக தர்மம்!

உண்மையை உலகுக்கு வெளியிடுவதே ஊடக தர்மம்! - தமிழன்பன் (சென்னை) கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டு ஊடகங்கள் குறித்தும் தென்னிலங்கை ஊடகங்கள் குறித்தும் ஈழத்தமிழர் நடத்துகின்ற ஊடகங்கள் பலவற்றில் பலவிதமான வாதப்பிரதிவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதில் என்னுடைய கருத்தையும் பதிவு செய்கின்றேன். பெரும்பாலான தென்னிலங்கை ஊடகங்கள் சிங்கள இனவாதிகளால் நடத்தப்படுபவைகள். இலங்கையில் ஊடகத்துறையினர் பலர் உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார்கள் என்பதால் சிங்கள இனவாத சக்திகளால் முதலில் கொலை பயமுறுத்தலுக்கு உள்ளாகி, அதையும் மீறிச் செயற்பட்டதால் படுகொலை செய்யப்பட்டதும், பல ஊடக அலுவலகங்கள் மிக மோசமாக தாக்கி சேதப்படுத்தப்பட்டதும் செய்திகள் வாயிலாக அனைவரும் அறிந்ததே. சிங்கள அரசும் அதன் புலனாய்வுப்பிரிவினரும் தேவையேற்பட்டால் தமது கொள்கைகளை எதிர்க்கும் தம்மினத்தவரையே கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள் என்பதை அண்மையில் உண்மை செய்திகளை துணிச்சலுடன் எழுதிய சிங்கள செய்தியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டதன் மூலம் நிரூபித்துள்ளது. இந்நிலையில் இலங்கை சிங்கள அரசின் நெருக்குதலுக்கும் கொலை பயமுறுத்தலுக்கும் உள்ளாகியிருக்கும் சில தென்னிலங்கை நடு நிலை ஊடகத்துறையினரும் ஊடகங்களும் உண்மையை வெளியிட அஞ்சுகின்றன. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தென்னிலங்கை ஊடகங்கள் உண்மைகளை வெளியிட முடியாமல் இருப்பது என்பது ஒரு துர்ப்;பாக்கியமான நிலைதான். ஆனால் நம் தமிழ் நாட்டில் தமிழர்களிடமே கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் பெரிய சிறிய பத்திரிகைகள் எல்லாம் நடுநிலையுடன் ஈழச் செய்திகளை வெளியிடுவதில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியதும், வெட்கப்பட வேண்டியதுமான விடயமாகும். உள்நாட்டுச் செய்திகளைத்தான் பற்பல காரணங்களுக்காக ஒரு பக்கச்சார்பாக வெளியிடுகின்றன என்றால் ஈழத்து செய்திகளையும் கூட ஒரு பக்கச்சார்பாக சிங்கள அரசுக்கு சாதகமாக வெளியிடுவதும், உண்மைக்கு புறம்பாக திரித்து வெளியிடுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். எங்கோ தொலை தூரத்தில் லெபனான் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பிஞ்சுக்குழந்தை ஒன்று தாக்கப்பட்டுள்ளதை படத்துடன் நேற்று (17.07.06) வெளியிட்டு என்ன செய்தது இந்தக்குழந்தை? ஏன் இந்த ரத்த வெறி? என்று கேள்வி எழுப்பியுள்ள தினமலர் நாளேட்டுக்கும் மற்றைய நாளேடுகளுக்கும் சில மைல்களுக்கு அப்பாலுள்ள தமிழீழத்தில் நடப்பது நெஞ்சை உறுத்தவில்லையா? சிங்கள இன வெறி அரசின் முப்படைகளாலும் அதன் துணை படைகளான தமிழின துரோகக் குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்ட பல பச்சிளங் குழந்தைகளும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் பெண்களையும் பல அப்பாவிக் குடும்பங்களையும் அண்மையில் நடந்த வங்காலை படு கொலைகளும் பேசாலை தேவாலய படு கொலைகளும் தமிழ் மீனவர்கள் மீதான கொடூர படு கொலைகளும் ஏன் தெரியாமல் போய்விட்டன? ஈழத்தமிழர்களும் அவர்கள் குழந்தைகளும் பெண்களும் மனிதர்களாக இங்குள்ள தமிழ் ஊடகங்களுக்கு தெரியவில்லையா? அவர்கள் என்ன தமிழ் நாட்டின் விரோதிகளா? அல்லது இங்கும் ஊடகங்களுக்கும் நிருபர்களுக்கும் இலங்கை அரசால் கொலை மிரட்டல்கள் விடப்பட்டுள்ளனவா? அல்லது மத்திய மாநில அரசுகள் ஈழச்செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட வேண்டாம் என்று தணிக்கை செய்துள்ளனவா? பின்பு ஏன் இந்த ஒரு பக்கச்சார்பான நிலை? இனத்தால் மொழியால் கலாச்சாரத்தால் எம்முடன் ஒன்றுபட்ட ஈழத்தமிழர்களின் அவலத்தை அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை இனியும் மூடிமறைக்காமல் உள்ளது உள்ளபடி உண்மை செய்திகளை தமிழக பத்திரிகைகள் எல்லாம் அவ்வப்போது வெளியிடவேண்டும் என்பதே என் பணிவான வேண்டுகோளாகும். ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொள்பவர்களின் பத்திரிகைகள் கூட ஈழத்தமிழர்களுக்கு சிங்கள இனவெறி அரசினால் இழைக்கப்படும் அநீதிகளை செய்யப்படும் படு கொலைகளை வெளியிடவேண்டும் என்பதில் அக்கறையோ அல்லது ஆர்வமோ இருப்பதாக தெரியவில்லை. மேலும் ஈழத்தமிழர்களின் இன்னலை போக்க தற்போது ஈழத்தமிழர் ஆதரவு இயக்கங்கள் தமிழகத்தில் பேரணிகள், பட்டினிப்போராட்டங்கள், கண்டன கூட்டங்கள் என்று நாள் தோறும் நடத்திக்கொண்டிருக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் பெரும்பாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு விடுகின்றன என்பது தமிழர்களாகிய நாம் மிகவும் வெட்கி வேதனைப்பட வேண்டிய விடயங்களாகும். நானே பல செய்திகளை சேகரித்து, அவை எந்தெந்த இணயத்தில் வெளியானது என்னும் குறிப்புகளுடன் தமிழக முன்னணி தமிழ் நாளேடுகளுக்கு அவ்வப்போது அனுப்பியிருந்தேன். ஆனால் எந்த நாளேடும் அதனை கண்டு கொள்ளவே இல்லை. மாறாக ஒரு இராணுவ அதிகாரி கொல்லப்பட்டாலோ அல்லது சில இராணுவ அதிகாரிகள் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டோ அல்லது படு காயமுற்றாலோ அதனை முக்கிய செய்தியாக இங்குள்ள நாளேடுகளும் தொலைக்காட்சிகளும் உடனுக்குடன் பரபரப்பாக வெளியிடுகின்றன. சிங்கள இனவெறி அரசால் திட்டமிட்டு நடத்தப்படும் தமிழின படுகொலைகளை செய்யும் அரச முப்படையினர் தமிழர் படைகளினால் அல்லது விடுதலை புலிகளால் தாக்கி அழிக்கப்படுவது ஒன்றும் ஆச்சரியப்படக் கூடியதோ அல்லது ஆதங்கப்படக் கூடிய செய்தியோ அல்ல. ஆனால் ஈழத்தில் அப்பாவி தமிழ் பிஞ்சுக் குழந்தைகளும், இளம் பெண்களும், பல்கலைக்கழக மாணவர்களும், தமிழ் பற்றாளர்களும், பாராளுமன்ற உறுப்பினரும், உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர துணை புரிந்த ஊடகவியலாளர்களும் இனவெறி பிடித்த சிங்கள அரசின் முப்படை களாலும் அவற்றிற்கு துணை புரியும் தமிழின துரோக குழுக்களினாலும் மிருகத்தனமாக தாக்கி கொன்று அழிக்கப்பட்டால் அவை இந்திய ஊடகவியலாளர்களால் குறிப்பாக தமிழ் நாட்டின் பத்திரிகைகளாலும் தொலை காட்சிகளாலும் ஏன் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன? இச்செய்திகளை வெளியிடுவதால் இந்திய தமிழ் நாட்டு ஊடகங்கள் ஒன்றும் விடுதலை புலிகளுக்கு துணை போவதாக அர்த்;தமாகிவிடாது. விடுதலை (திராவிடர் கழகம்) மற்றும் தமிழ் ஓசை (பாட்டாளி மக்கள் கட்சி) போன்ற நாளேடுகள் கூட குறைவாகவே ஈழச் செய்திகளையும் அவை சார்ந்த தலையங்கம் மற்றும் கட்டுரைகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன. ஆயினும் மற்றைய இதழ்களோடு ஒப்பிடுகின்ற பொழுது இவைகள் செய்வது அதிகமே. ஊடகத்துறை என்பது செய்திகளை உள்ளதை உள்ளபடி கூட்டாமல் குறைக்காமல் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். உண்மைகளை எடுத்துக் கூறுவதற்கு எவருக்கும் அஞ்சாமல் துணிவுடன் செயற்படவேண்டும். அதுதான் நேர்மையான ஊடகத்துறைக்கு இருக்கவேண்டிய முதல் குறிக்கோளும் கடமையுமாகும். அதன்பின்பு தான் மற்றையவை அனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இதனை எல்லா ஊடகங்களும் ஒரு தர்மமாக கடைப்பிடிக்கவேண்டும். அதுதான் ஊடகங்களுக்கு பெருமையும் கௌரவமும் ஆகும். இதை இனியாவது தமிழ் நாட்டிலுள்ள அனைத்து ஊடகங்களும் செய்யும் என்று நம்புவோம். ஈழத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட்டு பற்பல அகிம்சை போராட்டங்களின் மூலமாக போராடி பலவாறு ஏமாற்றப்பட்டு முடிவில் ஆயுதப்போராட்டம் ஒன்றுதான் ஒரே வழி என்று சிலரால் ஆரம்பிக்கப்பட்டது தான் ஈழத்தமிழர்களின் ஆயத போராட்டம். அது இன்று ஈழத்தமிழர்களின் ஆதரவை பெற்ற மிகப் பெரிய தமிழீழ விடுதலை புலிகளின் இராணுவமாக வடிவெடுத்துள்ளது என்பதே உண்மை. ஈழத்தமிழ் மக்களின் மிக குறைந்த வேண்டுகோள்கள் கூட புறக்கணிக்கப்பட்டன. அன்றைய சிங்கள அரசு தமிழர்களின் பிரதிநிதியான தந்தை செல்வாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பின்னர் சிங்கள இனவாதிகளின் எதிர்பினால் திரு. பண்டாரநாயக்கா கிழித்து வீசினார். இதைத்தான் மீண்டும் இன்றைய சிங்கள அரசும் செய்யப்போகிறது என்பதே உண்மை. இதை சர்வதேசம் வேண்டுமானால் நம்பி ஏமாந்து போகலாம். ஆனால் நிச்சயமாக ஈழத்தமிழர்களும் தமிழீழ விடுதலை புலிகளும் சிறு துளியும் நம்பமாட்டார்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். சிங்கள அரசோ அல்லது எதிர் கட்சியினரோ எவருமே ஈழத்தில் நிரந்தர அமைதி ஏற்படுவதை எப்போதும் விரும்பியதுமில்லை அப்படியே விரும்பினாலும் அதை அவர்கள் நிறைவேற்றுவதற்கு பெரும்பாண்மை சிங்களவர்கள் ஒரு போதும் அனுமதிக்கப்போவதுமில்லை. இது காலம் காலமாக பல சிங்கள அரசுகளின் ஆட்சியின் போது சரித்திரம் கண்ட உண்மை. அண்மையில் நடந்து முடிந்த ஜெனீவா பேச்சு வார்த்தை இதற்கு ஒரு உதாரணம். ஒப்புக்கொண்டபடி இலங்கை சிங்கள அரசு நடந்து கொண்டதா? துணை இராணுவத்தின் ஆயதங்களை கைப்பற்றி அவர்களை வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றியதா? தமது வாழ்விடங்களை விட்டு இராணுவ ஆக்கிரமிப்பினால் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்ப முடிந்ததா? வழிபாட்டுத்தலங்கள் கல்விக் கூடங்களில் நிலை கொண்டுள்ள முப்படைகளும் வெளியேறினார்களா? இவற்றையெல்லாம் செய்வதாக ஒப்புக்கொண்டு இலங்கை சிங்கள அரசு சர்வதேசத்தின் முன்னால் கைச்சாத்திட்ட ஜெனீவா ஒப்பந்தத்துக்கு என்ன ஆயிற்று? இது ஒன்று போதாதா சிங்கள இன வெறி அரசின் உண்மையான முகத்தை புரிந்து கொள்வதற்கு? இன்னமும் அதன் பொய்யான நாடகத்தை நம்புவதற்கு ஈழத்தமிழர்கள் எவரும் தயாராக இல்லை. தமிழ் நாட்டிலுள்ள இன மானத் தமிழர்களும் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கவில்லை என்பதை நிரூபிக்கவேண்டிய காலம் வந்து விட்டது. தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும், தமிழீழத்தில் வாழ்ந்தாலும் நாம் தமிழர்கள். ஈழத்தில் தமிழினம் அநியாயமாக கொன்று அழிக்கப்படுவதை இனியும் வெறுமனே பார்த்து வாளாவிருக்காமல் தமிழினம் என்ற ஒரே உணர்வுடன் அரசியல், சாதி மத வேறுபாடுகளை ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு தமிழன் என்னும் இன உணர்வோடு ஒன்றுபடுவோம். ஈழத்தில் நம் இனத்தை சிங்கள இனவெறி அரசின் கொலைவெறி தாக்குதலில் இருந்து காத்திட மாநில அரசு விரைந்து செயல்பட்டு நடுவணரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென ஒருமித்து குரல் கொடுப்போம். நம் ஈழத்தமிழ் சொந்தங்களை காத்திடுவோம். ||ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவர்க்கும் தாழ்வு|| என்பதை நினைவில் கொண்டு விரைந்து செயல்படுவோமாக. நன்றி>வெப்பீளம்

18 July, 2006

கலைஞரின் அறிவுறுத்தலும், தொண்டமானின் திடீர் மறுப்பும்.

கலைஞரின் அறிவுறுத்தலால் அமைச்சரவையில் சேர தொண்டமான் திடீர் மறுப்பு? தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியின் அறிவுறுத்தலால் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இணைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் தொடர்பாக மகிந்த ராஜபக்ச தீவிர நகர்வுகளை மேற்கொண்டு வந்த நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் அமைச்சரவையில் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போதிருக்கும் சிக்கலான நிலையில் நடுநிலையை பேணுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமானுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி அறிவுறுத்தியதாகவும் அதனால் அரசாங்கத்தில் இணைவதற்கான சந்தர்ப்பம் இப்போது உருவாகவில்லை என்றும் மகிந்தவிடம் தொண்டமான் கூறியுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைய உள்ளதாக கூறப்பட்டதன் அடிப்படையில் அத்தகைய நிகழ்வுகளும் நடைபெறவில்லை. அதேபோல் அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என்று மகிந்தவிடம் ஜே.வி.பி.யினர் கடந்த யூலை 14 ஆம் நாள் தெரிவித்துள்ளது. அதேபோல் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் அரசாங்கத்தில் இணைவதற்கான சூழ்நிலை என்று மறுத்துவிட்டது. இதையடுத்து அமைச்சரவை மாற்றத்தை மகிந்த ராஜபக்ச ஒத்திவைத்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே அமைச்சரவை விரிவாக்கத்தை ஐக்கிய தேசியக் கட்சி விமர்சனம் செய்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இது குறித்து கூறுகையில், மக்களின் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு நிலைமைகளோ மோசமடைந்து போரை நோக்கி நகர்கிறது. இந்த நிலையில் அரசாங்கம் தன்னைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளிலேயே கவனம் செலுத்துகிறது. தற்போது சிறிலங்காவில் 100 அமைச்சர்கள் உள்ளனர். அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்றார். நன்றி>புதினம்.

ஈழத்தமிருக்கு ஆதரவாக சென்னையில் ஆர்ப்பாட்டம்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று சென்னையில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு மாணவர்கள் நடத்தும் இப் பேரணியில் தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்பேரணி நடத்தப்படுகின்றது. விடுதலைப் புலிகள் மீது இந்தியா விதித்துள்ள தடையை விலக்கக்கோரியும் சிறீலங்காவுக்கான ஆயுத விநியோகத்தை தடுத்து நிறுத்துவது போன்ற காரணத்தை காரணம் காட்டி தீர்மானங்கள் நடத்தப்படும் பேரணியில் எடுக்கப்படவுள்ளது. நன்றி>பதிவு

17 July, 2006

சொந்த நாட்டை பாதுகாக்க முடியாத இந்தியா?

சொந்த நாட்டை பாதுகாக்க முடியாத இந்தியா இலங்கையரசை பாதுகாக்க உதவி வழங்குகிறது திருமாவளவன் விசனம். இலங்கை அரசுக்கு உதவுவதை விட்டுவிட்டு சொந்த நாட்டுப் பாதுகாப்பை இந்தியா கவனிக்கட்டும்" என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற "பொடா" எதிர்ப்பு மாநாட்டுக் கூட்டத்தில் தொல்.திருமாவளவன் மேலும் பேசியதாவது; "இந்தியாவில் தொடர்ச்சியாக தொடர் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தியாவின் பாராளுமன்றம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவின் இதயப்பகுதியான மும்பையில் ரயில் வண்டிகளிலே குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் உளவுத்துறையால் இக்குண்டுவெடிப்பை தடுக்க முடியவில்லை. சொந்த நாட்டுக்குரிய பாதுகாப்பைச் செய்ய முடியாத இந்தியா, இலங்கை அரசுக்கு ராடார் கருவிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் சிங்களவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். முதலில் தனது நாட்டின் பாதுகாப்பிலே இந்தியா கவனம் செலுத்தட்டும். ஈழம் என்றால் புலிகள் - புலிகள் என்றால் ஈழம் என்பதுதான் எமது நிலைப்பாடு. கூட்டணிக் கட்சிகளிலே இடம்பெறுவது என்பது தேர்தல் அரசியல் கூட்டு. கூட்டணிக் கட்சிகளிலே இடம்பெற்றிருக்கிறோம் என்பதற்காக எங்களை எவரும் கட்டுப்படுத்த முடியாது. "பொடா" சட்டம் கண்டு அஞ்சுகிறவர்கள் அல்ல நாம். பொடா சட்டத்திலே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட காலத்திலேயே புலித் தேசத்துக்குப் போய் வந்தவன் நான். தேர்தல் அரசியல் மாறுபாடுகளைக் கடந்து தமிழ்த் தேசிய பிரச்சினையில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.' மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் செந்திலதிபன் பேசுகையில், "ஈழத்திலே இருக்கிற எம் பிள்ளைகளுக்கு 5 ஆண்டுகாலமாக எதுவித ஊதியம் எதுவும்பெறாமல் கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்" என்றார். இக்கூட்டத்தில் "பொடா" வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில் 914 நாட்களுக்குப் பின்னர் முதல் முறையாக பொதுக்கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உரையாற்றினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் செயலாளர் வே.ஆனைமுத்து, பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை க.ராசேந்திரன், தமிழ் தமிழர் இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, பேராசிரியர்கள் சரசுவதி, கல்யாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இணைப்பு : newstamilnet.com

இந்தியாவில் எழுத்து உரிமைக்கு தடை விதிக்கப்படுகிறது.

இந்தியாவில் எழுத்து உரிமைக்கு தடை விதிக்கப்படுகிறது, ஒரு ஜனநாயக நாட்டில் நடப்பதென்ன? இது எழுத்துரிமையை மதிக்கும் அனைவரையும் சீண்டிப்பார்கும் ஒரு நடவடிக்கை. சில வலைபூக்கள் பிரச்சினையானவை என்றால் அவற்றை தெரிந்தெடுத்து தடை செய்வதை விட்டு விட்டு, ஒட்டுமொத்தமாக அனைத்து புளக்கர்களையும் இழுத்துப்பூட்டுவது என்பது எந்த விதத்தில் நியாயம்? எழுத்துரிமையை மறுக்கும் இந்தியா உண்மையிலேயே இது ஜனநாயக நாடுதானா? அல்லது இதுதான் ஜனநாயகமா? ஆண்டுக்கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி சேர்த்து வைத்தவற்றை ஒரு நிமுடத்தில் இழப்பதென்பது எவ்வளவு பெரிய சோகம், மகரந்தம் என்னும் ஒரு வலைப்பதிவர் கூறுகிறார் இனி எனது எழுத்துக்களை என்னாலேயே பார்க்கமுடியாது என்று. இதற்கு என்னதான் தீர்வு. பாதிக்கப்பட்டவர்களின் உரல்கள் http://madippakkam.blogspot.com/2006/07/blogspot.html http://icarus1972us.blogspot.com/2006/07/blogspotcom-ban-next-in-chennai.html http://gragavan.blogspot.com/2006/07/blog-post_115314839163033283.html http://icarus1972us.blogspot.com/2006/07/blog-post.html மேலதிக விவரத்துக்கு தொடர்ந்து வரும்>http://www.eelabarathi.com

ஈழம் என்றால் புலிகள்; புலிகள் என்றால் ஈழம் -திருமாவளவன்

ஈழம் என்றால் புலிகள்; புலிகள் என்றால் ஈழம் என்பதே எமது நிலைப்பாடு. இவ்வாறு தெரிவித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன். சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ""பொடா'' எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். திருமாவளவன் தமது உரையில் மேலும் தெரிவித்ததாவது: இந்தியாவில் தொடர்ச்சியாக தொடர் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தியாவின் நாடாளுமன்றம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவின் இதயப் பகுதியான மும்பையில் தொடர் வண்டிகளிலே குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் உளவுத்துறையால் இக் குண்டுவெடிப்பை தடுக்க முடியவில்லை. சொந்த நாட்டுக்குரிய பாதுகாப்பைச் செய்ய முடியாத இந்தியா, சிங்கள தேசத்துக்குப் போய் ராடர் கருவிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் சிங்களவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். முதலில் தனது நாட்டின் பாதுகாப்பிலே இந்தியா கவனம் செலுத்தட்டும். "பொடா" சட்டம் கண்டு அஞ்சுகிறவர்கள் அல்ல நாம். பொடா சட்டத்திலே கைது நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்ட காலத்திலேயே புலித் தேசத்துக்குப் போய் வந்தவன் நான். தேர்தல் அரசியல் மாறுபாடுகளைக் கடந்து தமிழ்த் தேசிய பிரச்சனையில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் - என்றார். நன்றி>பதிவு

16 July, 2006

பிரித்தானியாவின் காலம் கடந்த ஞானம்.

இலங்கைக்கு பிரித்தானிய அளித்த யாப்பின் மூலம் தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை: பிரித்தானிய தூதுவர் இலங்கைக்கு பிரித்தானிய அளித்த யாப்பின் மூலம் தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை- அந்த ஏற்பாடு போதுமானதும் வலுவானதும் அல்ல என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்கொட் தெரிவித்துள்ளார். வீரகேசரி வார வெளியீட்டுக்காக அவர் அளித்த நேர்காணலில் கூறப்பட்டுள்ளதாவது: பிரித்தானியா புலிகள் நேரடி பேச்சுக்கு தடையில்லை கேள்வி: பிரித்தானியா விடுதலைப் புலிகளைத் தடை செய்துள்ளமையானது விடுதலைப் புலிகளுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக இருக்குமா? பதில்: அப்படி ஒரு முட்டுக்கட்டை இருப்பதாக நாம் பார்க்கவில்லை. சமாதான முன்னெடுப்புகளில் விடுதலைப் புலிகளை முன்னோக்கி நகர்த்துவதற்கு அவர்களுடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென்ற கொள்கையை பிரித்தானியா கொண்டுள்ளது. கேள்வி: விடுதலைப் புலிகளைப் பிரித்தானியா தடை செய்துள்ளபோதும் பிரித்தானியாவுடன் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் கொண்டுள்ள உறவு தொடருமா? பதில்: அன்ரன் பாலசிங்கம் பிரித்தானியப் பிரஜை. அவர் பிரித்தானியாவில் வாழ்வதற்கான உரிமை உண்டு. பிரித்தானியா விடுதலைப் புலிகளை 2001 ஆம் ஆண்டிலேயே தடைசெய்து விட்டது. புலிகளுக்கு எதிரான தடைகொண்டு வரப்பட்டு ஐந்து வருடங்கள் கழிந்துவிட்டன. அந்த வகையில் புலிகளுக்கு எதிரான தடை பிரித்தானியாவில் அன்ரன் பாலசிங்கம் விடயத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. அன்ரன் பாலசிங்கம் குறித்து பிரித்தானியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. அதேபோல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகூட இந்த விடயத்தில் பெரியளவில் மாற்றத்தைக் கொண்டுவரும் நிலையில் இல்லை. பிரித்தானியா இலங்கைக்கு வழங்கிய அரசியலமைப்பு தமிழரை பாதுகாக்கத் தவறிவிட்டது கேள்வி: இலங்கை பிரித்தானியாவின் காலணியாக 150 வருடங்களுக்கு மேல் இருந்தது. இன்று இலங்கையில் நிலவுகின்ற இன முரண்பாடுகளுக்கு பிரித்தானிய ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த பிரித்தாளும் கொள்கையே காரணமெனக் கூறப்படுகின்றது. இது பற்றி தாங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்? பதில்: நான் அரசியல்வாதியல்ல என்பதை முதலில் கூறிக்கொள்கிறேன். இலங்கையில் பிரித்தானியரின் பிரித்தாளும் கொள்கை தொடர்பாக சிறிது காலத்திற்கு முன் சில அரசியல்வாதிகளுடன் நான் கலந்துரையாடினேன். பிரித்தானியா விட்ட மாபெரும் தவறு இலங்கையை ஒன்றாக்கியமையே என அவர்கள் கூறினார்கள். பிரித்தானியர் 1796 இல் இலங்கைக்கு வந்தபோது இங்கு மூன்று அரசுகள் இருந்தன. பொதுவான நிர்வாக முறைக்கு வசதியாக பிரித்தானியர் இலங்கையை ஒரே நாடாக்கினர். 1832 கோல்புறுக் சீர்த்திருத்தத்தையடுத்து இலங்கையின் அனைத்து பகுதிகளும் ஒரு நிர்வாக அமைப்பின்கீழ் கொண்டு வரப்பட்டது. பிரித்தானிய ஆட்சியின் கீழ் உலகின் பாதிக்கு மேற்பட்ட நாடுகளில் பிரித்தாளும் கொள்கையே கடைப்பிடிக்கப்பட்டது. அந்த வகையில் இலங்கைக்கென மட்டும் விஷேடமான கொள்கையாக பின்பற்றப்படவில்லை. உண்மையில் பிரித்தானியாவை விமர்சிப்பதாயின் ஒரு விடயத்தை முக்கியப்படுத்தி விமர்சிக்கலாம். அது பிரித்தானியா விட்டுச் சென்ற அரசியலமைப்பாகவே இருக்கும். அதாவது பிரித்தானியா இலங்கையை விட்டு வெளியேறும் போது சோல்பரி அரசியலமைப்பை விட்டுச் சென்றது. இந்த அரசியலமைப்பில் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கென தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவே பிரித்தானியா கருதியது. குறிப்பாக தமிழர்களின் உரிமைகள் இதன்மூலம் பாதுகாக்கப்படும் என்றே பிரித்தானியா எண்ணியது. ஆனால் அந்த ஏற்பாடு போதுமானதல்லஇ வலுவானதல்ல என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. பிரித்தானியாவின் தாராளக் கொள்கை இவ்வளவு தூரம் பிரச்சினைகளுக்குக் காரணமாகிவிட்டன. இதற்காக நான் மனவருத்தமடைகின்றேன். பிரித்தானிய மண்ணில் புலிகள் பயங்கரவாதத்தில் ஈடுபடவில்லை கேள்வி: விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை பிரித்தானியா கொண்டு வருவதற்கு ஏதுவாக பிரித்தானிய மண்ணில் விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனரா? பதில்: பிரித்தானிய மண்ணில் விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அவ்வாறு செய்வதென்பது முட்டாள்தனமான விடயமாகவே அமையும். ஆனால் பிரித்தானிய பிரைஜைகள் இலங்கை மண்ணில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளிலும் சிக்குப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் பிரித்தானியப் பிரைஜைகள் என்ற வகையில் பிரித்தானியாவின் கவனமும்இ கவலையையும்இ அக்கறையையும் எமது பிரஜைகள் மீது நேரடியாகவே மேற்கொள்ள வேண்டியுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்புகூட தொண்டர் நிறுவனமொன்றில் பணிபுரியும் பிரித்தானிய பிரஜைகள் இருவர் திருகோணமலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் சிக்கியுள்ளனர். எனவே பிரித்தானியப் பிரஜைகள் பாதிக்கப்படுவதை எம்மால் கண்களை மூடிக்கொண்டு பேசாமல் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. பலாத்காரமாக நிதி சேகரிப்பு இது மாத்திரமல்ல பிரித்தானியாவில் வாழும் தமிழ்ச் சமூகம் நிதி சேகரிக்கும் விடுதலைப்புலி உறுப்பினர்களால் நிதி வழங்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். பயமுறுத்தவும் படுகின்றனர். சட்டத்துக்கு முரணான இத்தகைய நடவடிக்கைகளின் பின்னணியில் விடுதலைப் புலிகள் இருப்பதாக பிரித்தானியா சந்தேகிக்கின்றது. விடுதலைப் புலிகள் பிரித்தானிய மண்ணில் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடாவிட்டாலும் கூட பிரித்தானியாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தினரிடையே பயமுறுத்தல் மற்றும் நிர்ப்பந்தம் மூலம் நிதி சேகரிப்பது போன்ற சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளை எம்மால் அனுமதிக்க இயலாது. அரசு என்ற வகையில் இவ்வாறான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய தேவை பிரித்தானியாவுக்கு உள்ளது. அரசுக்கான செய்தி கேள்வி: விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடைமூலம் இலங்கை அரசாங்கத்துக்கு பிரித்தானியா எத்தகைய செய்தியைத் தெரிவிக்க விரும்புகின்றது. பதில்: விடுதலைப் புலிகள் உட்பட இலங்கையின் சகல மக்களினதும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்காக பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்பதே அரசாங்கத்திற்கான செய்தியாகும். இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவுடன் பிரிட்டன் இணைந்துள்ளது கேள்வி: பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் அதேவேளையில் அமெரிக்காவுடன் மிக நெருக்கமான உறவையும் கொண்டுள்ளது. இலங்கையின் இனவிவகாரத்தில் பிரித்தானியா ஐரோப்பிய யூனியனின் நிலைப்பாட்டிலா அல்லது அமெரிக்காவின் நிலைப்பாட்டுடனா ஒத்துப்போகின்றது? பதில்: இந்தக் கேள்வியை பிரித்தானியாவின் வெளிநாட்டுக் கொள்கை வகுப்பாளரிடம் பலர் வினவுகின்றனர். பிரித்தானியா ஐரோப்பிய யூனியனின் அங்கத்துவ நாடு என்ற வகையில் ஐரோப்பிய யூனியனுடனா அல்லது அமெரிக்காவுடனா சார்ந்து நிற்கின்றது என்பதே அந்தக் கேள்வியாகும். பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் ஒரு நாடு அதன் காரணமாக ஐரோப்பிய யூனியன் எடுக்கும் தீர்மானங்களுக்கு பிரித்தானியா ஆதரவாகவேயுள்ளது. அமெரிக்கா உலகளாவிய ரீதியில் காலத்துக்குக் காலம் பிரித்தானியாவை விட மாறுபாடான கொள்கைகளைக் கொண்டுள்ளது. எனினும் இலங்கையின் இனவிவகாரத்தில் பிரித்தானியா அமெரிக்காவின் கொள்கைகளுடன் ஒத்துப்போவதாகவே உள்ளது. ஒஸ்லோப் பிரகடனம் சமஷ்டி பற்றி கூறுகின்றது கேள்வி: தமிழர்களுக்கு எவ்வாறான அரசியல் தீர்வினை பிரித்தானியா முன்வைக்க விரும்புகின்றது? பதில்: வெளியார் என்ற வகையில் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. எவ்வகையான தீர்வுக்கு வரவேண்டுமென இலங்கை மக்களுக்கு நாம் கூறும் நிலையிலும் இல்லை. ஆனால் இரு பகுதியினரும் இனவிவகாரத்துக்கான தீர்வு குறித்து பேச்சுவார்த்தை மூலம் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முயற்சிக்க வேண்டும் என்றே எம்மால் இலங்கை மக்களையும் விடுதலைப் புலிகளையும் கேட்டுக்கொள்ள முடியும். இரு பகுதியினரும் இறுதியில் திருப்திப்படும் நிலை உருவாக வேண்டும். இன்றைய இந்த நிலைமை தொடர இரு பகுதியினருமே அனுமதிக்கக்கூடாது. இலங்கை அரசும் புலிகளும் சமாதானத்துக்காகத் தம்மை அர்ப்பணித்துச் செயற்பட முன்வரவேண்டும். ஏதோ ஒரு வழயில் இரு பகுதியினருமே அமைதிக்கும் சமாதானத்துக்கும் திரும்பியாக வேண்டும். அதைத் தவிர வேறு வழியில்லை. அந்த வகையில் அரசியலமைப்பு ரீதியாக மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இது குறித்து எம்மால் அதிகமாகக் கூறமுடியாவிட்டாலும் கூட 2002 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒஸ்லோ பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வை நோக்கி முன்னேற வேண்டுமென்பதே பிரித்தானியாவின் நிலைப்பாடாகும். ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமஷ்டி முறை குறித்த தீர்வு பற்றிக் கூறுவதாக ஒஸ்லோ உடன்படிக்கை அமைந்துள்ளது. இலங்கை விவகாரம் இந்தியாவை பாதிக்கின்றது கேள்வி: இலங்கையின் இன விவகாரங்களில் இந்தியாவின் ஈடுபாடு அண்மைக் காலமாக அதிகரித்துச் செல்கின்றது. இது பற்றிய தங்களது கருத்தென்ன? பதில்: இந்தியாவின் ஈடுபாடு அண்மைக் காலமாக அதிகரித்து வருவது உண்மையே. இலங்கையின் இனவிவகாரம் குறித்தும் இலங்கையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்தும் இந்தியா அதிக கவனம் செலுத்துவது பற்றியும் ஈடுபாடு காட்டுவது பற்றியும் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் இலங்கையின் இனவிவகாரமும் அதனை ஒட்டிய சம்பவங்களும் இலங்கையில் மாத்திரமல்ல இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இலங்கையில் இருந்து அகதிகளாக மக்கள் தமிழ்நாட்டுக்குச் செல்கின்றனர். இது தமிழக அரசியலிலும் இந்தியாவின் மத்திய அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இந்தியாவின் நலன்களையும் அது பாதிக்கின்றது. அதனால் மனிதாபிமானம்இ மனித உரிமை மீறல் போன்ற பல் வேறு விடயங்களில் இலங்கையில் வாழ்கின்ற சகல மக்களினதும் விடயங்களில் இந்தியா அக்கறை கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் குறித்து இந்தியாவின் கவனம் கூடுதலாக ஈர்க்கப்படுகின்றது. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இனரீதியில் தமிழகத்துடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இலங்கையின் இனவிவகாரம் இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அவ்வகையில் இலங்கையின் விவகாரங்களில் இந்தியாவின் அக்கறைஇ கவனம்இ ஈடுபாடு என்பன தவிர்க்க முடியாததாகும். கடந்த வாரம் இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். அந்த விஜயம் கூட இலங்கையின் சமகால அரசியல் நிலவரத்தின் தாக்கம் காரணமாகவும்இ இலங்கை விவகாரங்களில் இந்தியா கொண்டுள்ள கரிசனை காரணமாகவுமே இடம்பெற்றதாகும். இலங்கையில் இன விவகாரத் தீர்வு குறித்த சமாதான நடவடிக்கைகளில் இந்தியா முற்று முழுதாகவே சாதகமான போக்கி னைக் கொண்டதாகவே உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ஐ.ஆர்.ஏ. அனுபவம்: பகிர்ந்துகொள்ள தயார் கேள்வி: ஐரிஸ் விடுதலை இராணுவத்தின் (ஐ.ஆர்.ஏ) கொரில்லாப் போராட்டத்துடுனான 30 வருடகால அனுபவத்தை பிரித்தானியா கொண்டுள்ளது. இந்தப் போராட்ட வரலாற்றில் சமாதானம் குறித்த அனுபவங்களை இலங்கை அரசாங்கத்துடனும்இ விடுதலைப் புலிகளுடனும் பகிர்ந்து கொள்ள பிரித்தானியா முன்வருமா? பதில்: ஆம்இ பிரித்தானியா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கின்றது. வட அயர்லாந்து விடயம் குறித்து அதில் உள்ள முக்கியமான ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். வட அயர்லாந்தில் சிறுபான்மை இனச் சமூகம் பெரும்பான்மை இனச் சமூகத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் போன்ற சம்பவங்களினால் பாதிக்கப்பட்டனர். இதற்கெதிராக சிவில் அமைப்புகள் ஜனநாயக வழிமுறைகளில் போராடிய போதும் அத்தகைய போராட்டங்கள் அடக்கி ஒடுக்கி நசுக்கப்பட்டன. இந்த நிலைமையானது ஐ.ஆர்.ஏ அமைப்பு உருவாகுவதற்கும்இ பயங்கரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கும் காரணமாகின. சுமார் இருபது முப்பது வருடகால பயங்கரவாத நடவடிக்கைகள் ஐ.ஆர்.ஏ. இயக்கத்துடன் இணைந்திருந்த மக்களும்இ அரசாங்கத்துக்குச் சார்பான மக்களும்இ வட அயர்லாந்தின் பெரும்பான்மை இனச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் என அனைவரையும் சிந்திக்க வைத்தது. இழப்புக்கள்இ அழிவுகள் அனைத்தும் போதும் போதும் என்ற நிலைக்கு அனைத்து தரப்பினரையும் தள்ளியது. அத்துடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வைக் கண்டாக வேண்டுமென்ற நிர்ப்பந்தத்திற்கும் அனைத்து தரப்பினரும் உள்ளாகினர். அதன் விளைவு பேச்சுவார்த்தை மூலம் அமைதி பிறந்தது. இலங்கையின் தற்போதைய சூழ்நிலையும் அதைப் போன்றதே. அழிவுகளும்இ இழப்புக்களும் போதும்இ இனியும் வேண்டாம் என்ற நிலையில் இருக்கின்ற இலங்கையின் இன்றைய யதார்த்த நிலையைக் கவனத்தில் எடுத்து விடுதலைப் புலிகள் மாத்திரமல்ல அரசாங்கமும் பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு முன்வரவேண்டும். இன்னும் பத்து வருடங்களுக்குப் பிறகு தவறவிட்ட சந்தர்ப்பங்களுக்காக வருத்தமடைவதை விடுத்து கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முன்வரவேண்டும். கேள்வி: ஐ.ஆர்.ஏ. பிரதிநிதி அண்மையில் கிளிநொச்சிக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது விடுதலைப் புலிகளை ஐரோப்பிய யூனியன் தடைசெய்ததை விமர்சனம் செய்திருந்தார்இ ஐரோப்பிய யூனியன் அங்கத்துவ நாடு என்ற வகையில் இந்த விமர்சனம் குறித்து தங்களது கருத்து என்ன? பதில்: கிளிநொச்சிக்கு சென்றிருந்த மாட்டின் மெக்கின்னஸ் மேற்படி கருத்தினை வெளியிட்டிருந்தார். ஒரு பயங்கரவாத அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரும்இ ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்த மூத்த அரசியல்வாதியுமான ஒரு முக்கியஸ்தர் கிளிநொச்சிக்கு மேற்கொண்ட விஜயம் இது. அவரது கருத்துக்கள் அவரின் பார்வையில் முக்கியமானதும்இ விளங்கிக் கொள்ளக் கூடியதுமாகும். விடுதலைப் புலிகள் ஜெனிவாவில் இருந்து இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு திரும்புவதாகக் கூறியே இலங்கை வந்தனர். ஆனால் இரண்டாம் கட்ட ஜெனிவாப் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஐ.ஆர்.ஏ. செய்தது போலவே விடுதலைப் புலிகளும் ஒருபுறம் வெளிப்படையான வன்முறைகளில் ஈடுபட்டுக்கொண்டும் மறுபுறம் பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொண்டனர். விடுதலைப் புலிகளின் இந்தகைய போக்கினை ஐரோப்பிய யூனியன் ஒருபோதும் கருத்தில் கொள்ளவில்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இறுதியில் விடுதலைப் புலிகளை ஐரோப்பிய யூனியன் தடைசெய்து விட்டது. ஐ.ஆர்.ஏ. போன்று பேச்சுவார்த்தை மூலமான தீர்வு குறித்த பாதைக்கு முற்று முழுதாகத் திரும்புவதற்கு விடுதலைப் புலிகளுக்கு இன்னும் சந்தர்ப்பம் உள்ளது. அவ்வாறு திரும்பினால் புலிகள் மீதான தடையை நீக்குமாறு அல்லது மீள்பரிசீலனை செய்யுமாறு ஐரோப்பிய யூனியனை பிரிட்டனால் கேட்க முடியும். வன்முறை கலந்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே தடை கேள்வி: பிரித்தானியா விடுதலைப் புலிகளை ஏற்கனவே தடைசெய்துள்ளது. தற்போது ஐரோப்பிய யூனியனும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையைக் கொண்டு வந்துள்ளது. மேற்படி தடை மூலம் பிரித்தானியா விடுதலைப் புலிகளுக்கு கூறவிழையும் செய்தி என்ன? பதில்: பிரித்தானியா விடுதலைப் புலிகளை ஐந்து வருடங்களுக்கு முன்பே அதாவது 2001 ஆம் ஆண்டிலேயே தடை செய்துவிட்டது. ஐரோப்பிய யூனியன் தற்போதே விடுதலைப் புலிகளுக்கெதிரான தடையைக் கொண்டுவந்துள்ளது. தடைமூலம் பிரித்தானியா கூற வரும் செய்தி எளிமையானது. அந்தச் செய்தி இதுதான். விடுதலைப் புலிகள் தமது அரசியல் அபிலாஷைகளையும் குறிக்கோளையும் அடைந்துகொள்வதற்கெனத் தேர்ந்தெடுத்துள்ள வழிமுறைஇ நடைமுறைச் செயற்பாடுகள் என்பன வன்முறை கலந்த பயங்காரவாத நடவடிக்கையாக உள்ளன. இதனை பிரித்தானியாவாலும் ஐரோப்பிய யூனியனாலும் ஏன் பரவலாக சர்வதேச சமூகத்தினாலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். நவீன இன்றைய யுகத்தில் மேற்கூறிய வாறான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கின்ற இயக்கத்திற்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். தமிழர்களுக்கான சுயாட்சி இரு பகுதியினரதும் இணக்கப்பாட்டில் தங்கியுள்ளது கேள்வி: ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கான சுயாட்சிக்கான உரிமையை பிரித்தானியா அங்கீகரிக்கின்றதா? பதில்: நீங்கள் சுதந்திர அரசு பற்றியா கேள்வி எழுப்புகின்றீர்கள்? இல்லை சுயாட்சி பற்றிய உரிமை பற்றியே கேட்கின்றேன் பதில்: சுயாட்சி அரசு என்பது குறித்து பல கேள்விகள் எழும்புகின்றன. இது குறித்து வெளியாரான நான் திட்டவட்டமாக எதனையும் கூற இயலாது. சம்பந்தப்பட்ட இரு பகுதியினரும் பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களுக்கான சுயாட்சி குறித்த இணக்கப்பாட்டுக்கு வருவார்களாயின் வரவேற்கத்தக்கது. சுயாட்சி குறித்து பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். பிரித்தானியாவில் அகதிகளின் விண்ணப்பங்கள் தனித்தனியாகவே பரிசீலிக்கப்படுகின்றன கேள்வி: பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்து கோரி விண்ணப்பித்துள்ள 35 ஆயிரம் பேரினது விண்ணப்பங்களை நிராகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களது எதிர்காலம் என்ன? இலங்கையின் இன்றைய மோசமான சூழ்நிலைக்குள் அவர்கள் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்களா? பதில்: அகதிகள் அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்துள்ளவர்களின் விண்ணப்பங்கள் தனித்தனியாக ஆராயப்படுகின்றன. அது ஒரு நீண்ட நீதிமன்ற நடவடிக்கைக்குட்பட்டது. எவராவது இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்களாயின் அவ்வாறானவர்களின் விண்ணப்பத்தில் திருப்தி இல்லை என்பதுதான் அர்த்தம். கேள்வி: 35 ஆயிரம் பேர் திருப்பி அனுப்பப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளனவே. பதில்: அவ்வாறு எண்ணிக்கையில் பெரிதளவாக இருக்காது. ஒரு சிறிய தொகையினர்களே இதற்குட்பட்டவர்கள். மலையகத் தமிழரின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு இலங்கை அரசே பொறுப்பு கேள்வி: மலையகத் தமிழ் மக்கள் பிரித்தானிய காலணி ஆதிக்கத்தின் கீழ் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டவர்களாகும். இம் மக்களது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற பிரித்தானியா திட்டம் எதனையும் கொண்டுள்ளதா? பதில்: இலங்கை சுதந்திரம் அடைந்து 60 வருடங்களுக்குப் பிறகு மலையகத் தமிழர்கள் குறித்து நேரடியாகத் தலையிடும் பொறுப்பு பிரித்தானியாவுக்கு இல்லை. ஆனால் அம் மக்களின் வாழ்க்கை முறை மேம்பாடடைய வேண்டுமென விரும்புகின்றோம். இந்த மக்களின் மேம்பாடுஇ அபிவிருத்தி குறித்து எம்மிடம் மாறுபாடான கருத்துக்கள் இல்லை. உண்மையில் இதற்கான பொறுப்பை இலங்கை அரசாங்கமே ஏற்கவேண்டும். எனினும் மலையகத் தமிழ் மக்களின் மேம்பாடு குறித்து அரசாங்கத்துடன் பேசுவதற்கு நாம் பின்நிற்கவில்லை. கேள்வி: மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பிரித்தானியாவில் கல்வியைத் தொடர்வதற்கு ஏதுவாக விஷேட புலமைப்பரிசில் திட்டம் முன்னெடுக்கப்படுமா? பதில்: இது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய கேள்வி. இதற்கு நேர்மையான பதில் இதுவே. தற்போது இலங்கையர்களுக்கென ஒரு குறைந்தளவிலான புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தையே நாம் கொண்டுள்ளோம். புலமைப்பரிசில் மிகவும் செலவு கூடியதொன்று. கஷ்டப்படுகின்ற சமூகத்தினர் உயர்கல்வி பெறுவதற்கான பிரத்தியேகமாக எதாவது செய்ய வேண்டுமா என்பது குறித்து நாம் சிந்திக்கலாம். (சிந்திப்போம்) கேள்வி: இராணுவம் கட்டுப்பாட்டுடன் ஒழுக்கத்தைப் பேண வேண்டுமென அண்மையில் கூறியிருந்தீர்கள். அதன் பொருள் என்ன? பதில்: இது ஒரு புரட்சிகரமான அறிக்கையாக நான் நினைக்கவில்லை. அரச படைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சிவிலியன்கள் சம்பந்தப்பட்டதாகும். குறிப்பாக தமிழ் மக்களுடன் தொடர்புபட்டவைகளாகும். இன்றைய உலகில் மீறல்களே இருக்கக் கூடாது என அரசாங்கத்திடம் நாம் எதிர்பார்க்கவில்லை. அது முழுமையாக நடைமுறைச் சாத்தியமற்றது. ஆனால்இ மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் ஒழுங்கான முறையில் முறையாக சட்டத்திற்கமைய விசாரிக்கப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தண்டனை வழங்கப்பட வேண்டும். இதனையே நாம் எமது நாட்டில் இராணுவம் மற்றும் பொலிஸார் குறித்து மேற்கொள்கின்றோம். எவராக இருந்தாலும் சட்டத்தின்முன் சமமாகும். இல்லையேல் நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிடும். இதனையே செய்தியாக அரசுக்கு நாம் கூறுகின்றோம். கேள்வி: நீங்கள் விஷேடமாக ஏதும் கூற விரும்புகின்றீர்களா? பதில்: ஆம் எனது இளமைக் காலத்தில் இரண்டு விடயங்கள் குறித்துப் பெரிதாகப் பேசப்பட்டது. 1. பனிப்போர் 2. ஐரிஸ் பயங்கரவாதம் இந்த இரு விடயங்களும் என்றுமே முடிவுக்கு வராது என்று அப்போது நாம் நினைத்திருந்தோம். இந்த இரு பிரச்சினைகளையும் எவ்வாறு தீர்க்கலாம் என்பது குறித்த எந்த யோசனையும் அப்போது இருக்கவில்லை. அவ்வேளையில் திடீரென பேர்லின் பெருஞ்சுவர் வீழ்ந்து எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதேபோல் ஐரிஸ் விடுதலை இராணுவம் யுத்த நிறுத்தத்தைப் பிரகடனப்படுத்தி தேசிய நீரோட்டத்தில் இணைந்து அரசியல் கட்சியாக உருமாற்றிக்கொண்டது. பனிப்போர் மற்றும் ஐரிஸ் பயங்கரவாதம் ஆகிய இரு விடயங்கள் குறித்த அனுபவங்கள் நம்பிக்கையை என்றும் இழக்கக் கூடாது என்ற படிப்பினையை எனக்குத் தந்தது. நாம் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கும் போது அது எவ்விதம் முடிவுக்கு வரும் என்று எண்ணிப்பார்ப்பது கடினமாக இருக்கும். ஆனால் முடிவு என்று ஒன்று வரும். எதுவுமே நிலைத்து நீடிப்பதில்லை. இதுவே இலங்கையின் நிலைமையுமாகும். ஒரு நிலையில் வன்முறைகள் முடிவுக்கு வரும் வகையிலான ஒரு அரசியல் தீர்வு இலங்கையிலும் வரும். இலங்கையில் விவகாரத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் முன்னால் உள்ள கேள்வி யாதெனில் மேற்கூறிய நிலைக்கு இன்றே வந்துவிட்டோம் என்று சொல்வதற்கு அவர்கள் தயாராகிவிட்டனரா? அல்லது மேலும் சில வருடங்களுக்கு இதே வன்முறைப் பாதையில் சம்பந்தப்பட்ட இரு பகுதியினரும் தொடர்ந்தும் சென்று அதன் பின்னர் ஒரு அரசியல் தீர்வை அடையப்போகின்றனரா என்பதே அந்தக் கேள்வியாகும். சம்பந்தப்பட்ட இரு பகுதியினரும் குறிப்பாக விடுதலைப் புலிகள் வன்முறைகள் மூலம் அடையக்கூடியதை விட பேச்சுவார்த்தை மூலம் அடைந்து கொள்வது அதிகமானது என்ற நிலையை எட்டிவிட்டனர் என்பதையும் அடைந்துவிட்டார்கள் என்பதையும் உணர்ந்துகொள்வார்கள். அத்துடன் பிரச்சினையை முடிவுக்குக்கொண்டு வருமுகமாக சரியானதொரு பேரத்தைப் பேசுவதற்கான தருணம் தற்போது வந்துள்ளதென்பதை இரு பகுதியினரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

15 July, 2006

என்னைப் பற்றி வீண் புரளி: வைகோ எரிச்சல்.

என்னை விடுதலைப் புலிகள் அமைப்பினர் வந்து சந்தித்ததாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு புரளி கிளப்பியுள்ளனர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சமீபத்தில் வைகோ கேரளாவுக்குச் சென்றிருந்தார். அங்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அவர் சென்றிருந்ததாக கூறப்பட்டது. ஆனால் வைகோவை விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் வந்து சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை மதிமுக மறுத்தது. இந்த நிலையில், வைகோ அளித்துள்ள ஒரு பேட்டியில், நான் விடுதலைப் புலிகளை ரகசியமாக சந்திக்க மாட்டேன். சந்திக்க நினைத்தால் வெளிப்படையாகவே செய்வேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து வைகோ கூறுகையில், உற்சாகம், புதுப்பொலிவும் பெற, மூலிகை சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலைக்கு சென்றிருந்தேன். அப்போது என்னை விடுதலைப் புலிகள் சந்தித்தாகவும், உளவுத்துறை விசாரித்து வருவதாகவும் திட்டமிட்டே புரளி கிளப்பினர். இதுகுறித்து போலீஸார் என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார்கள். என்னிடம் வந்து போலீஸ் பாதுகாப்பு வேண்டுமா என்றார்கள். ஆனால் வேண்டாம் என்று நான் கூறி விட்டேன். நான் ஆண்டன் பாலசிங்கத்தைச் சந்தித்தபோது அதை வெளிப்படையாக சொன்னேன். அதேபோல, புலிகளை நான் சந்திக்க நினைத்தால் அதை வெளிப்படையாகவே செய்வேன். மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஈழத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சினை உள்ளது. அங்கு தமிழர்களுடைய உரிமை பறிக்கப்படுகிறது. தமிழினத்தை ஆயுதப் போராட்டம்தான் காத்து வருகிறது. அவர்களது போராட்டத்தில் நியாயம் இருக்கிறது. அதனால் தான் புலிகளை நாங்கள் ஆதரிக்கிறோம். என் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக வீண் புரளியை சிலர் கிளப்பி விடுகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக எங்களுக்கும், அதிமுகவுக்கும் இடையே எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படவில்லை. இது மகிழ்ச்சிக் கூட்டணி என்றார் வைகோ. நன்றி>தற்ஸ்தமிழ்

மட்டு. வாகனேரி படையினர்அத்துமீறி உள்நுழைவு.

மட்டு. வாகனேரி படையினர் அத்துமீறி உள்நுழைவு விடுதலைப்புலிகள் பதில் தாக்குதல் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இன்று காலை மட்டக்களப்பு மாவட்டம் வாகனேரியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து படைநடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா படையினரை தமிழீழ விடுதலைப் புலிகள் பதில்தாக்குதல் நிகழ்த்திப் பின்வாங்கச் செய்துள்ளார்கள். அதைத்தொடந்து நடைபெறும் தேடுதல்களின்போது இதுவரை சிறிலங்காப் படையினரின் ஒன்பது உடல்களும் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். களத்திலிருந்து மேலதிக விபரங்கள் வரவிருக்கின்றன. இந்நடவடிக்கையின்போது நான்கு போராளிகள் வீரச்சாவடைந்திருக்கிறார்கள். இத்தாக்குதலின்போது விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுத தளபாடங்களின் விபரம் வருமாறு: ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி - 01 ரி-56 - 01 எல்.எம்.ஜி - 02 40மி.மீ எறிகுண்டு செலுத்தி - 01 ரி-56 ரக துப்பாக்கிகள் - 08 தொலைத்தொடர்பு சாதனம் - 01 தோள் பைகள் - 10 குண்டு துழையா மேலாடை - 07 நன்றி: மட்டு.ஈழநாதம்

14 July, 2006

நெடுமாறன், சுப.வீ மீதான பொடா வழக்குகளை திரும்பப் பெற்றது.

தமிழக அரசு உங்கள் ஐவர் மீதான பொடா வழக்குகளைத் திரும்பப் பெற்றிருக்கிறது. அதற்கான மனுவை உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது என்று மகிழ்ச்சியோடு கூறினார். இது தவிர வேறு எந்த ஊடகத்திலும் தொலைக்காட்சியிலும் அந்த செய்தி வரவில்லை. ஒருவேளை தமிழ்நாட்டில் இனித்தான் அந்தச் செய்தி வெளியாகும். ஐயா பழ. நெடுமாறன், நான், புதுகை பாவாணன், தமிழ் முழக்கம் சாகுல் ஹமீட், மருத்துவர் தாயப்பன் ஆகிய ஐவர் மீது போடப்பட்டிருந்த வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெற்றுக் கொள்வதாக அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக எங்கள் வழக்குரைஞர் தெரிவித்த தகவல். அதற்குப் பிறகு வேறு சில நடைமுறைகள் இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் உயர்நீதிமன்றில் திரும்பப் பெற்றால் மொத்த வழக்குகளும் முடிந்து போகுமா? அடிப்படையாக எங்கள் மீது வழக்கு தொடரப்பட்ட பூவிருந்தல்லி பொடா நீதிமன்றுக்கு வந்து இன்னும் ஒரு முறை வழக்கை திரும்பப் பெற வேண்டுமா? என்பது போன்ற சட்ட நடைமுறைகள் பற்றி விரிவாகத் தெரியவில்லை. என்ன இருந்தாலும் அது நாட்களைப் பொறுத்தவரையான செய்தி. பொடா வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற்றுவிட்டது என்பது உறுதியாகத் தெரிந்துள்ள மகிழ்ச்சியான நேரத்தில் உங்கள் அழைப்பு கிடைத்துள்ளது. 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் உலகம் முழுமையும் உள்ள பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டி குறித்து தமிழக மக்களுக்கு விளக்குவதற்காக 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் நாள் தமிழ் முழக்கத்தின் சார்பில் சென்னையிலே கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டு அந்தப் பேட்டி பற்றியும் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றியும் பேசியதற்காக எங்களின் மீது பொடா வழக்கு தொடரப்பட்டது. 2002 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1 ஆம் நாள் ஐயா பழ. நெடுமாறனும் 16 ஆம் நாள் நானும் கைது செய்யப்பட்டோம். அதே கூட்டத்தில் வரவேற்புரை நிகழ்த்தியமைக்காக மருத்துவர் தாயப்பன் ஒக்டோபர் மாதமும் ஏற்பாடுகளைச் செய்த தமிழ் முழக்கம் சாகுல் ஹமீட் 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதமும் கைது செய்யப்பட்டார்கள். ஏற்கனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த புதுக்கோட்டை பாவணனை இந்த வழக்கிலும் சேர்த்து 2002 ஆம் ஆண்டு யூலையிலிருந்தே பொடா வழக்கு தொடரப்பட்டது. 2003 டிசம்பரிலிருந்து ஒவ்வொருவராக பிணையில் வெளி வந்தோம். 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏறத்தாழ ஐவரும் பிணையில் வெளிவந்துவிட்டோம். 2003 டிசம்பரில் பிணையில் வந்தேன். ஆனாலும் அய்யா நெடுமாறன் அவர்களுக்கும் எனக்கும் புதுகை பாவாணனுக்கும் சில கடுமையான முன்நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. மருத்துவர் தாயப்பனுக்கும் அது பொருந்தும். - நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து வெளியூருக்கு எந்த இடத்துக்குச் சென்றாலும் கியூ பிராஞ்ச்சுக்கு சொல்லாமல் செல்லக் கூடாத - அரங்கக்கூட்டமோ பொதுக்கூட்டமோ எந்தக் கூட்டத்திலும் இலக்கியக் கூட்டமோ இரங்கல் கூட்டமோ எந்தக் கூட்டத்திலும் பேசக் கூடாத - எந்த ஊடகத்துக்கும் பேட்டியளிக்கக் கூடாத - எந்த ஒரு கருத்தையும் அறிக்கையாக அளிக்கக் கூடாத இப்படி மிகக் கடுமையான நிபந்தனைகளுடன் வெளியே வந்தோம். ஆனால் தேர்தல் காலத்தில் மட்டும் அந்த நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன. 2003 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தற்போது வரை தேர்தலின் போது பேச அனுமதிக்கப்பட்டோம். மற்ற அனைத்து நேரங்களிலும் தடை நீடித்தன. கைது செய்யப்பட்ட நாளின் போது நான் ஊடகவியலாளர்களிடம் எனது மனநிலை என்னவாக இருக்கிறது என்று கூறியிருந்தேன். அதனை நினைவுகூர்ந்து அப்படியே கூறுகிறேன். "ஈழத்திலே இப்போது அமைதி ஒப்பந்தம் உருவாகியுள்ளது. அங்கு கடுமையான போர் எதுவும் நடைபெறவில்லை. இங்கும் கலவரம் ஏதும் நிகழவில்லை. ஆனாலும் வாய்மொழி ஆதரவு கொடுத்தது மிகப்பெரிய குற்றம் என்று கூறி கைது செய்திருக்கிறார்கள். பொடாவிலே அடைத்திருக்கிறார்கள். இந்தத் தமிழ்நாட்டிலே நடப்பது ஜெயலலிதாவின் ஆட்சியா? சந்திரிகாவின் ஆட்சியா? என்று எனக்குத் தெரியவில்லை. என்ன இருந்தாலும் சிறை கண்டு நாங்கள் அஞ்சவில்லை. காலமும் வரலாறும் எங்களை விடுதலை செய்யும்" என்று கூறியிருந்தேன். இன்று நான் சொல்லுகிறேன்... "கலைஞரின் கனிவுமிகுந்த அரசு இன்றைக்கு பொடா வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளது. அடக்குமுறைகள் ஒருநாளும் வென்றதில்லை என்பதை இன்றைய நிலை எடுத்துக்காட்டுகிறது". மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ மீதான வழக்கு புதுடில்லி உச்சநீதிமன்றில் நிலுவையில் உள்ளது. பொடா மறு ஆய்வுக் குழு தொடர்பான விடயத்தில் முன்னைய தமிழ்நாடு அரசு எங்கள் ஐவர் மீது ஒரு நிலைப்பாட்டையும் வைகோ வழக்கில் வேறு ஒருநிலைப்பாட்டையும் எடுத்திருந்தது. தமிழ்நாடு உயர்நீதிமன்றில் தமிழக அரசு தொடுத்த வழக்கு என்பதால் எங்கள் மீதான வழக்கு திரும்பப்பெறப்பட்டுள்ளதாக கருதுகிறேன். வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான வழக்கு உச்சநீதிமன்றில் உள்ளது. ஆகையால் தாமதமாகலாம் என்று கருதுகிறேன். இன்று உள்ள தமிழக அரசும் மத்திய அரசும் ஈழத் தமிழர் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களில் நானும் ஒருவன். ஆனால் யதார்த்தத்தில் இந்த அரசுகள் அப்படியான ஆதரவை அளிக்கின்ற என்று கூறமாட்டேன். குறைந்தபட்சம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆதரவாக நின்று ஈழத் தமிழ் மக்களின் படுகொலைகளுக்கு துணை போய்விடக் கூடாது என்கிற அளவிலாது ஒரு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்று கருதுகிறோம். இன்று தகவல்கள் வருகின்றன. ராடார் போன்ற கருவிகளை மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிரான எங்களின் கடுமையான கருத்துகளை பதிவு செய்து போராட்டங்களை முன்னெடுகிறோம். ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்க வேண்டும் என்று தமிழர்கள் அனைவரும் கருதுகிறோம். அப்படி மத்திய அரசு நிலைப்பாடு எடுப்பதற்கான அழுத்தத்தை தமிழ்நாடு அரசு கொடுக்க வேண்டும் என்று கோருகிறோம். எங்கள் கருத்துகளை தமிழ்நாடு அரசிடம் தெரிவித்துள்ளோம். முழுமையாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு வந்துவிடும் என்று நாங்கள் கருதவில்லை என்றாலும்கூட சென்ற அரசைப் போல் கடுமையாகவும் கொடுமையாகவும் ஒருநாளும் நடந்துகொள்ளாது என்று நம்புகிறோம். நம்முடைய தொடர்புகள்- உறவுகள் மூலமாக மத்திய அரசை- தமிழ்நாடு அரசை நம் ஆதரவு நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக இருக்கிறது என்றார் சுப.வீரபாண்டியன். நன்றி>புதினம்.

13 July, 2006

சிறீலங்கா வங்கிகளிலுள்ள சொத்துக்களை மீளப்பெறுங்கள்!

ஜெனீவா 15.07.06 அன்பார்ந்த புலம்பெயர் தமிழீழ மக்களே, சிறீலங்கா வங்கிகளிலுள்ள உங்கள் சொத்துக்களை மீளப்பெறுங்கள்! புலம்பெயர்ந்தும் - இடம்பெயர்ந்தும் வாழும் தமிழீழ மக்கள் சிறீலங்கா வர்த்தக வங்கிகளில் பாதுகாப்பதற்கென கையளித்த சொத்துக்களை அபகரிக்க சிறிலங்கா புதிய முயற்சிகளினை மேற்கொள்கிறது. 1995-2005 வரை செயற்படாதிருந்த வங்கிக் கணக்குகளின் மீதிகளையும், பாதுகாப்புப் பெட்டகங்களிலுள்ள சொத்துக்களையுமே இவ்வாறு சிறிலங்கா மத்திய வங்கி பறிமுதல் செய்யவுள்ளது.. இதற்காக மத்திய வங்கியின், வங்கிச்சட்ட 72,73ம் பிரிவின் கீழ் 1995-2005 வரை நடைமுறைப்படுத்தப்படாத வங்கிக்கணக்கு, பாதுகாப்புப் பெட்டகச் சொத்துக்களின் விபரங்களை ஒப்படைக்கும்படி வர்த்தக வங்கிகள் அனைத்தையும் மத்தியவங்கி கேட்டுள்ளது. இவ்வாறு மேற்படி கணக்கு மீதிகளும், பாதுகாப்புப் பெட்டகங்களும் சிறிலங்காவின் அரசுடமையாக்கப்பட்டால், அதிலே மிகப்பெருமளவுக்குத் தமிழ் மக்களின் பணமும் சொத்துக்களுமே இழக்கப்படவுள்ளன. தொடர்யுத்தம், இடப்பெயர்வு, புலம்பெயர்வு காரணமாகத் நாம் சிறுகச் சிறுகச் சேமித்து வைப்பிலிட்ட வங்கிக் கணக்குகளையும் பாதுகாப்புப் பெட்டகங்களையும் நடைமுறைப்படுத்தும் வாய்ப்பினைப் பெருமளவு தமிழ் மக்கள் இழந்திருந்தனர். சிறிலங்கா அரசிற்கு தமிழர்களின் மீதான வன்முறையை தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார சுமையை ஈடுசெய்வதற்கு இவ்வாறான ஒரு கைங்கரியத்தினை செய்ய அரசு முனைந்துள்ளது. இவ்வாறு அரசுடமையாக்கப்படும் தமிழ் மக்களினது பணமும் சொத்துக்களும் நிதியாதாரம் தேடியலையும் சிறிலங்காவின் போர் இயந்திரத்துக்கான தீனியாகவே போய்ச் சேரவுள்ளன. தமிழர்களின் நிதித்தேட்டத்தை வைத்தே தமிழர்களை அழிக்கும் இந்தப் புதிய நாசகாரத்திட்டத்தை மகிந்த ராஐபக்ச அரசு புதிய தந்திரோபாயமாக கைகொள்ளுகின்றது. எனவே, இந்தப் பேரபாயத்தைத் தவிர்ப்பதற்காக இடம்பெயர்ந்தும் புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ்மக்கள் அனைவரும், சிறிலங்காவின் வங்கிகளில் தங்களுக்கு உள்ள கணக்கு மீதிகளையும் பாதுகாப்புப் பெட்டகங்களில் உள்ள சொத்துக்களையும் மீளப் பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்துலகத் தமிழர் கூட்டமைப்பு வேண்டிக்கொள்கின்றது. நன்றி.