28 July, 2006

விமானத் தாக்குதலுக்கு பாட்டாளி மக்கள் கட்சி கண்டனம்.

தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறும் சிறீலங்கா விமானத் தாக்குதலை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை திருமலை மற்றும் முல்லைத் தீவு பகுதிகளில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலை கண்டிக்கும் பொழுது மகிந்த ராஜபக்ச நடத்தும் நாடக வலையினுள் இந்தியா விழுந்துவிடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் அரங்கில் மகிந்த ராஜபச்ச சிறந்த நடிகர் எனவும் சுட்டிக்காட்டிய ராமதாஸ் நோர்வேயின் அனுசரணையின் கீழ் இனப்பிரச்சினைக்கு சிறீலங்கா அரசாங்கம் எந்தவொரு தீர்வையும் முன்வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். -பதிவு-

1 comments:

said...

இந்தியா இலங்கை விவகாரத்தில் தலையிடாமல் இருப்பதே உத்தமம்; பட்டது போதும் சிங்கல கப்பற்படை வீரன் ராஜீவை கொலை செய்ய முயன்றான் புலி கொன்றே விட்டான். போதுமய்ய பட்டது