25 July, 2006
இரவில் தமிழர்களை புலிகள் கொன்றுவிடுவர்: மகிந்த
இந்தியாவுக்கு அகதிகளாகச் செல்லாவிட்டால் இரவு நேரங்களில் அவர்களை விடுதலைப் புலிகள் கொன்றுவிடுவர் என்று தன்னைச் சந்தித்த தமிழரல்லாத இந்தியப் பெண் ஊடகவியலாளர் குழுவிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச புளுகியுள்ளார்.
தமிழரல்லாத இந்தியப் பெண் ஊடகவியலாளர்களிடம் மகிந்த ராஜபக்ச பேசியுள்ளதாவது:
அண்மைய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சியாம் சரணின் சிறிலங்கா பயணத்தின் போது கூட்டரசு போன்ற குறிப்பிட்ட சில யோசனைகளை முன்வைத்துள்ளார். அவற்றை நீங்கள் பரிசீலிக்கிறீர்களா?
நாங்கள் நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். அனைத்து அரசு அமைப்பு முறைகளையும் குறிப்பாக இந்திய அரசு முறை குறித்து ஆராய கூறியுள்ளோம். அதனடிப்படையில் இலங்கைக்கான ஒரு அரசு முறை உருவாக்க உள்ளோம். ஏனெனில் இது சிறிய நாடு.
அதிகாரப் பகிர்வு என்பது நடைமுறைச் சாத்தியமில்லை என்று கருதுகிறீர்களா?
எந்த ஒரு தீர்வானாலும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகள், நிபுணர்களை நாம் அழைப்போம். வட்டமேசை மாநாடு நடத்தப்படும். அதன் பின்னர் ஓரிரு பரிந்துரைகள் தீர்மானிக்கப்பட்டு அதை விடுதலைப் புலிகளுக்கும் அனுப்புவோம். ஏனெனில் அவர்களினது கருத்தும் தேவை.
பேச்சுக்கள் ஏன் முறிவடைந்தது என்பது இந்திய மக்களுக்கு புதிராக உள்ளதே?
பிரபாகரன் ஜனநாயகத்தைப் புரிந்து கொள்ளாதவர். அவர் காடுகளில் தனது தரப்பினருடன் வசிக்கின்றனர். அவரை ஒரு சிலரைத் தவிர எவரும் சந்திக்க முடியாது. அவருடன் எப்படி பேச்சுக்கள் நடத்த முடியும்? அவர் தமிழர்களின் பிரதிநிதியாக
கூறுகிறார். உண்மையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை அவர் பிரதிபலிக்கிறாரா? தமிழர் தரப்பில் பல அரசியல் தலைவர்கள் உள்ளனர்.
கொழும்பில் 39 விழுக்காடு தமிழர்கள் உள்ளனர். கொழும்பின் பிரதி மேயர் கூட ஒரு தமிழர்தான்.
இந்தியாவுக்கு மீண்டும் அகதிகள் வருகை தொடங்கியுள்ளதே?
இந்தியாவுக்குச் செல்லுமாறு மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளே அனுப்புகின்றனர். அவர்களின் பயணத்துக்கு புலிகளே ஒழுங்கு செய்கின்றனர்.
இங்கே விடுதலைப் புலிகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளிலும் கூட எங்கள் அகதிகள் முகாம் உள்ளது. புலிகளின் கட்டளைக்கு அவர்கள் கீழ்படியாவிட்டால் இரவு நேரங்களில் சுட்டுக் கொன்றுவிட்டுவார்கள்.
பிரபாகரன் இலங்கையைச் சேர்ந்தவர். நான் அவரைச் சந்திக்கத் தயாராக உள்ளேன். அரசியலுக்கு வந்துவிட்டால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்னால் செய்ய முடியும் என்று. நாங்கள் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளோம். அவர் தயாராக இல்லை.
பிரபாகரனை பேச்சு மேசைக்குக் கொண்டு வர இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். நான் போருக்கானவன் அல்ல என்றார் மகிந்த ராஜபக்ச.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம் பிற நாய்களிடம்...
வேறென்னத்த சொல்லுவது...
Post a Comment