18 July, 2006
ஈழத்தமிருக்கு ஆதரவாக சென்னையில் ஆர்ப்பாட்டம்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று சென்னையில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு மாணவர்கள் நடத்தும் இப் பேரணியில் தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்பேரணி நடத்தப்படுகின்றது.
விடுதலைப் புலிகள் மீது இந்தியா விதித்துள்ள தடையை விலக்கக்கோரியும் சிறீலங்காவுக்கான ஆயுத விநியோகத்தை தடுத்து நிறுத்துவது போன்ற காரணத்தை காரணம் காட்டி தீர்மானங்கள் நடத்தப்படும் பேரணியில் எடுக்கப்படவுள்ளது.
நன்றி>பதிவு
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
i never miss ur writings. thanks. write more.
we must use all CHANCE to give our information to TN tamils.
kulakkodan
germany
வருகைக்கு நன்றி குளக்காட்டான்,
எமக்காக குரல் கொடுக்கு இந்திய சகோதர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.
பதிவுக்கு நன்றி.
//ஈழத்தமிருக்கு ஆதரவாக சென்னையில் ஆர்ப்பாட்டம்.//
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்றால் அது புலிகளுக்கு ஆதரவு மாதிரிதான். இந்தியாவை அடுத்த நூற்றாண்டுக்கு எடுத்துச்செல்லக்க்கூடிய தலைவர் என்று எல்லோராலும் கருதப்பட்ட தலைவர் ராஜிவ் காந்தியை கொலை செய்த விடுதலைப்புலிகளை ஆதரிப்பது, தாய்நாட்டுக்கு அவர்கள் செய்யும் துரோகம் ஆகும்.
அனானி நல்லா உழுது ஓடி நிறுவிறீங்கள். ஆனால் பிளாக்கர் பெயரில் சொல்லி, ஈழத்தமிழரின் இறப்பிற்க்கு ஆதரவு தெரிவித்துக்கொள்ள உங்கள் மனச்சாட்சி இடம் தரவில்லை அது வரைக்கும் நீங்கள் உசந்தவர்தான்.
வணக்கம் சுந்தரவடிவேல் வரவுக்கு நன்றி.
ராஜீவ் காந்தி அடுத்த நூற்றாண்டுக்கு கூப்புட்டாரா? ரொம்பத்தான் 'கிச்சு முச்சு' விளையாட்டு காட்டுறாங்கப்பா!
//ராஜீவ் காந்தி அடுத்த நூற்றாண்டுக்கு கூப்புட்டாரா? ரொம்பத்தான் 'கிச்சு முச்சு' விளையாட்டு காட்டுறாங்கப்பா!//
ராஜீவ் காந்தி இறந்தது சென்ற நூற்றாண்டு என்பது பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்குக் கூட தெரியும்.
20ஆம் நூற்றாண்டில் இருந்து 21ஆம் நூற்றாண்டுக்கு நம் இந்தியாவை சிறப்பான முறையில் எடுத்துச்செல்லக்கூடிய தலைவராக கருதப்பட்டவர் தான் ராஜிவ். இதற்கு பல உதாரணங்களை நாம் இங்கு குறிப்பிடலாம். உதாரணமாக இந்தியாவில் கணிப்பொறி அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டவர் அவர்தான்.
நீங்கள் இங்கு தமிழன் என்ற முறையில் பார்க்காதீர்கள், இந்தியன் என்ற முறையில் பாருங்கள். அப்போதுதான் இலங்கைத்தமிழர்களால் இந்தியாவுக்கு எந்த நன்மையும் இல்லை, மாறாக பாதகமே என்பது உங்களுக்கும் புரியும்.
பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள இலங்கைத்தமிழர்கள், அங்கு உள்ள இந்திய தமிழர்களை, தமிழர்களாகவே மதிப்பதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?. அவர்களின் தொலைக்காட்சிகளிலும், அவர்கள் வெளியிடும் பத்திரிக்கைகள், நூல்கள் அனைத்திலும் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளே அதிகம் இடம் பெறுகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?
//இந்தியாவில் கணிப்பொறி அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டவர் அவர்தான்//
தப்புக்கணக்கு போடவேண்டாம். கணிப்பொறி அறிவியல் வளர்ச்சி/தேவைகள் அவர் தலைதூக்கும் முன்பே பரவத்துவங்கி விட்டது. அவர் ஒன்றும் வித்திடவில்லை, அவருக்கு காவடி தூக்கும் வருடிகள் விட்ட மகா'பூ'சுத்தல் அது.
//பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள இலங்கைத்தமிழர்கள், அங்கு உள்ள இந்திய தமிழர்களை, தமிழர்களாகவே மதிப்பதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?. அவர்களின் தொலைக்காட்சிகளிலும், அவர்கள் வெளியிடும் பத்திரிக்கைகள், நூல்கள் அனைத்திலும் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளே அதிகம் இடம் பெறுகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?//
இந்தியத் தமிழர்கள் சுயமாக சிந்திக்காமல், இந்திக்காரனுக்கு காவடி தூக்கினால், பின்னே மாற்றுக்கருத்துகள்/விமர்சனம் வரத்தானே செய்யும்? இதைக்கூட அவர்கள் சொல்லக்கூடாதாயென்ன? நாம் ஈழத்தமிழர்களை கேவலமாக விமர்சிக்கவில்லையென்று அறுதியிட்டு கூறமுடியுமா?
Post a Comment