22 July, 2006
தமிழ்த் தேசிய ஆன்மாவில் என்றும் ஆறாத வடு கருப்பு ஜூலை83.
தமிழ்த் தேசிய ஆன்மாவில் என்றும் ஆறாத வடுவை மாறாத புண்ணை ஆழமாக ஏற்படுத்திய துன்பியல் நிகழ்வு என வர்ணிக்கப்படுவது 83 ஆடிக் கலவரம்.
காருண்ய சீலரான புத்தரின் உயர்ந்த நெறி பிரவகித்த இலங்கைத் தீவில், மனிதத்துவமற்ற மிருகத்தனமும், நாகரிகமற்ற கொடூரமும், முரட்டுத்தனம் மிக்க மிலேச்சத்தனமும் நிறைந்த இரத்தவெறி இப்படிக் கட்டவிழ்த்து விடப்பட்டது எங்ஙனம் சாத்தியமாயிற்று என்று புரியாமல் உலகத்தின் மனச்சாட்சி கலங்கி நின்றவேளை அது.
1983 ஜூலையில் இடம்பெற்றது இந்த இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான முதலாவது இனக் கலவரமல்ல. இதற்கு முன்னரும் இத்தீவில் 1956, 1958, 1974, 1977,1979, 1981 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாகப் பல கலவரங்கள் தமிழர்களுக்கு எதிராகத் தாண்டவம் எடுத்து ஆடின.
அவ்வப்போது, தமிழர்களுக்கு எதிராக வெடித்த இந்த இனக் கலவரங்களை தமிழர், சிங்களவர் ஆகிய இரு இனத்தவருக்கும் இடையே நிலவிய வெறும் இனப்பகை உணர்வின் வெளிப்பாடாகத் தானாகவே கிளர்ந்து வெடித்த வன்செயல்கள் என்று மட் டும் கருதிவிடவோ, அடையாளப்படுத்தி விடவோ முடியாது.
தமிழ் மக்களுக்கு எதிரான மிகக் கொடூர வன்முறைப் புயல்களும், வெறியாட்டங்களும் பெரும்பாலும் பௌத்த சிங்களப் பேரினவாதப் போக்குடைய ஆட்சியாளர்களால் இன அழிப்பு இலக்கின் அங்கமாகத் திட்டமிட்டு ஏவப்பட்டவையாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. 1983 ஆடிக் கலவர மும் இதற்கு விதி விலக்கல்ல.
1983 ஜூலை கலவரம் வெடிக்க முன்னரே அதற்கு முந் திய ஜூன் மாதத்திலேயே வவுனியா, திருகோணமலை போன்ற தமிழர் தாயகப் பகுதிகளிலும், மலையகத் தமிழர்களின் வாழி டங்களிலும் தமிழர்களுக்கு எதிரான வெறியாட்டங்கள் ஆரம் பித்துவிட்டன. டசின் கணக்கான தமிழர்கள் வெட்டிச் சாய்க் கப்பட்டனர். நூற்றுக் கணக்கில் வீடுகள், வாசல்கள், கடைகள், ஆலயங்கள் எரித்துச் சாம்பராக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் பல தமிழ் இளைஞர்கள் சீருடையினரால் கொன்றொழிக்கப் பட்டனர். தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட இனப் படுகொலை நடவடிக்கை அக்காலகட்டத்தில், 83 ஜூனி லேயே ஆரம்பமாகி விட்டது. அது 83 ஜூலையில் உச்சம் பெற்று ஆறு நாள்கள் இலங்கைத் தீவு எங்கும் தலைவிரித்தாடியது.
யாழ்., திருநெல்வேலியில் ஜூலை 23இல் புலிகளின் தாக்கு தலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து திருநெல்வேலியிலும், கந்தர்மடத்திலும் இனவெறிச் சன்னதம் ஆடியது சிங்கள இராணுவம். அறுபது பொதுமக்கள் அங்கு சீருடை யினரால் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டனர்.
அதன் பின்னர், முன்னெப்போதும் இடம்பெற்றிராத குரூர மாக கொடூர இனவன்முறையாக இலங்கைத் தீவு எங்கும் கலவரம் விஸ்வரூபம் எடுத்து இரத்தப் பிரளயமாக வெடித்தது. தட்டிக் கேட்பாரின்றி இனவெறியாட்டம் தலைநகர் கொழும்பி லும், ஏனைய தென்னிலங்கைப் பிரதேசங்களிலும் அலை அலையாகச் சீறிப் பரவியது. தமிழரின் குருதி ஆறாய்ப் பெருக் கெடுத்தோட அவர்களின் சொத்துகளும், உடைமைகளும், உடலங்களும் தீயில் கருகின.
பல தமிழ்க் குடும்பங்கள் உயிரோடு எரிக்கப்பட்டன. தமிழ ருக்குச் சொந்தமான பல்லாயிரக் கணக்கான வீடுகள், கட்டடங் கள், மண்டபங்கள், எரிபொருள் நிலையங்கள், வர்த்தக மையங் கள் என்பன சூறையாடப்பட்டு பின்னர் எரித்து கரிமேடுகள் ஆக்கப்பட்டன.
இந்த இனக் கலவரத்தில் பேரினவாத ஆட்சியாளர்களின தும், அரசியல் பிரமுகர்களினதும், அரச அதிகாரிகளினதும் கறை பட்ட கரங்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தமையைச் சரித் திரம் பகர்கின்றது.
தமிழர்களின் இன அடையாளத்தைக் குறிவைத்து தமிழர் களின் உயிர்கள், உடைமைகள், பொருளாதார வாழ்வு ஆகிய வற்றை அழிப்பதோடு சிங்களக் காடைத்தனம் அடங்கி விட வில்லை.
தமிழரின் இருள் படிந்த வரலாற்றுக் காலத்தின் அருவருக் கத் தக்க மிகப்பெரும் கொடூரம் இதே காலத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலையிலும் அரங்கேறியது. சிங்களக் கைதிகளும், சிங் களச் சிறைக்காவலர்களும் கூட்டுச் சேர்ந்து சிறைக் கூண்டு களை உடைத்து, நிராயுதபாணிகளான 35 தமிழ் அரசியல் கைதி களைக் கண்டதுண்ட மாக வெட்டி, குரூரமாக அவர்களது உட லங்களைக் குத்திக் கிழித்துச் சிதைத்துச் சரித்து அட்டூழியம் புரிந்து தமது மிருகத்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.
தமிழினத்துக்கு இவ்வளவு மோசமான கெடுதியை ஏற் படுத்திய கறுப்பு ஜூலை கலவரம் "பேரழிவிலும் ஒரு நன்மை' என்பது போல தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற் றில் புதிய திருப்பு முனையை ஏற்படுத்தி, கௌரவமான வாழ் வுரிமை குறித்து அவர்களுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றையும் பெற்றுத் தரவும் தவறவில்லை.
தமிழர்களுக்குப் பேரழிவைத் தருகிறோம் என்ற முனைப்போடு பௌத்தசிங்களம் கறுப்பு ஜூலையில் விதைத்த வினையின் விளைவை இன்றும் அது அறுத்துக் கொண்டிருக் கின்றது.
இனக் கலவரம் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிராக சிங் களம் புரிந்த பல் பரிமாண ஒடுக்கு முறையின் ஒட்டுமொத்தப் பாதிப்பு பாரதூரமான பல விளைவுகளை ஏற்படுத்தியது. இலங் கைத் தீவில் இன முரண்பாட்டை அது மேலும் கூர்மையடைய வைத்தது. இரு தேசியங்களின் மையமான இலங்கைத் தீவில் தமிழர் தேசம், சிங்கள தேசம் ஆகிய இரு தேசங்கள் மத்தியில் நல்லிணக்கமும், சமரச சகவாழ்வும் ஏற்படுவதை இது அசாத் தியமாக்கியது. தமிழ் மக்களிடையே விடுதலை நோக்கிய தீவி ரப் போக்கையும், போராட்ட உணர்வையும் அது வலுப்படுத்தியது. தமிழர்களின் உரிமைக்காகப் போராடும் ஆயுதம் தரித்த எதிர்ப்பு இயக்கம் முழு அளவில் தோற்றம் கொள்வதற்கான ஒரு புற நிலையை இது உருவாக்கியது.
சுருங்கக் கூறுவதானால் அரச ஒடுக்குமுறையின் உச்சக் கட்ட வடிவமாக உருப்பெற்ற ஆடிக் கலவரம், பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட் டத்தை பிறப்பெடுக்க வைத்து உருக்கொடுக்கக் காலாயிற்று.
இந்த இனக்கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம், சிங்கள இனவாத சக்திகள் தமிழ்த் தேசிய மறுமலர்ச்சியை உருப்பெற வைத்த துடன் தனியரசுப் போராட்டம் வீறுகொண்டு எழுவதற் கான அக, புறச் சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தன. இந்த இனக் கலவரம் தமிழ் மக்களது அரசியல் வரலாற்று செல் நெறியை மாற்றி, திருத்தமான உகந்த தடத்தில் அதைத் தூக்கி நிறுத் தியதும் கவனிக்கத்தக்கது.
இணைப்பு : newstamilnet.com
Saturday, 22 Jul 2006 USA
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment