17 July, 2006

சொந்த நாட்டை பாதுகாக்க முடியாத இந்தியா?

சொந்த நாட்டை பாதுகாக்க முடியாத இந்தியா இலங்கையரசை பாதுகாக்க உதவி வழங்குகிறது திருமாவளவன் விசனம். இலங்கை அரசுக்கு உதவுவதை விட்டுவிட்டு சொந்த நாட்டுப் பாதுகாப்பை இந்தியா கவனிக்கட்டும்" என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற "பொடா" எதிர்ப்பு மாநாட்டுக் கூட்டத்தில் தொல்.திருமாவளவன் மேலும் பேசியதாவது; "இந்தியாவில் தொடர்ச்சியாக தொடர் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தியாவின் பாராளுமன்றம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவின் இதயப்பகுதியான மும்பையில் ரயில் வண்டிகளிலே குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் உளவுத்துறையால் இக்குண்டுவெடிப்பை தடுக்க முடியவில்லை. சொந்த நாட்டுக்குரிய பாதுகாப்பைச் செய்ய முடியாத இந்தியா, இலங்கை அரசுக்கு ராடார் கருவிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் சிங்களவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். முதலில் தனது நாட்டின் பாதுகாப்பிலே இந்தியா கவனம் செலுத்தட்டும். ஈழம் என்றால் புலிகள் - புலிகள் என்றால் ஈழம் என்பதுதான் எமது நிலைப்பாடு. கூட்டணிக் கட்சிகளிலே இடம்பெறுவது என்பது தேர்தல் அரசியல் கூட்டு. கூட்டணிக் கட்சிகளிலே இடம்பெற்றிருக்கிறோம் என்பதற்காக எங்களை எவரும் கட்டுப்படுத்த முடியாது. "பொடா" சட்டம் கண்டு அஞ்சுகிறவர்கள் அல்ல நாம். பொடா சட்டத்திலே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட காலத்திலேயே புலித் தேசத்துக்குப் போய் வந்தவன் நான். தேர்தல் அரசியல் மாறுபாடுகளைக் கடந்து தமிழ்த் தேசிய பிரச்சினையில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.' மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் செந்திலதிபன் பேசுகையில், "ஈழத்திலே இருக்கிற எம் பிள்ளைகளுக்கு 5 ஆண்டுகாலமாக எதுவித ஊதியம் எதுவும்பெறாமல் கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்" என்றார். இக்கூட்டத்தில் "பொடா" வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில் 914 நாட்களுக்குப் பின்னர் முதல் முறையாக பொதுக்கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உரையாற்றினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் செயலாளர் வே.ஆனைமுத்து, பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை க.ராசேந்திரன், தமிழ் தமிழர் இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, பேராசிரியர்கள் சரசுவதி, கல்யாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இணைப்பு : newstamilnet.com

10 comments:

said...

நெத்தியடி

Anonymous said...

பாதுகாப்பில்லாத இந்திய தேசத்திற்க்கு ஏன்யா வர்றீங்க??

said...

//பாதுகாப்பில்லாத இந்திய தேசத்திற்க்கு ஏன்யா வர்றீங்க?? //
ம்ம்...அங்கே இருப்பதைவிட இங்கே பாதுகாப்பு அதிகம் என்பதனால்...

Anonymous said...

Thirumavalan pondra arasiyalvathigali pathukkakave policeku time sariya irukkirathu.Avarukku pathukuppu irupathinal thann avar intha mari karuthu kurkirar....

said...

தடி எடுத்தவர் எல்லாம் தண்டல் காரரா?

Anonymous said...

//இலங்கை அரசுக்கு உதவுவதை விட்டுவிட்டு சொந்த நாட்டுப் பாதுகாப்பை இந்தியா கவனிக்கட்டும்" என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.//

தனது சாதியை, மக்களை முன்னுக்கு கொண்டுவருவதற்கு துப்பில்லாத திருமா, இலங்கைதமிழர்களுக்கும், தமிழுக்கும் குரல் கொடுக்கிறாரே?.

said...

வணக்கம் ஜீன்,அனானி,சீனு,என்னர் வருகைக்கு நன்றி,

உண்மைதான் சீனு இலங்கையைவிட இந்தியா பாதுகாப்பனதுதான்,அதை மேம்படுத்த சொல்லுகிறார் திருமா.

அனானி யாரை கேக்கிறீர்கள்? வருகிறீர்கள் என்று. இதை சொன்னவர் திருமாவளவன்தானே? திருமாவளவன் இந்தியர்தானே.

அனானி இத்தனை கோடி பேர் இருக்கும் இந்தியாவில் திருமாவளவனுக்கு மட்டும் பாதுகாப்பு கொடுக்கத்தான் போலீஸ் இருக்கிறதா? தனது நாட்டு உறவுகள் வீண் மரணத்துக்கு இலாக்காககூடாது என்பதற்காக பாதுகாப்பை அதிகரிக்க சொல்கிறார் இது நாட்டுப்பற்றல்லவா? இலங்கை அரசுக்கு ஆயுத உதவிகள் செய்து அப்பவி தமிழரை கொல்ல துணைபோக வேண்டாமென்பது, இனப்பற்றல்லவா? அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதற்க்காக குரல் கொடுப்பது மனிதாபிமானம் அல்லவா? மீண்டும் இப்படி ஒரு அவலம் நடைபெறாது தடுக்க பாதுகாப்பை அதிகரிக்கச்சொல்வது தேசியப்பற்றல்லவா? தனது சமுதாயத்தை எவன் சரியாக பாதுகாக்கிறானோ அவனே தன் நாட்டையும் பாதுகாக்கிறான்.

எர்னர் யாரை குறிப்பிடுகிறீர்கள் புரியவில்லை திருமாவளவனையா? என்னையா?:-))

அனானி துப்பற்றவரிடம் தமது சமுதாயத்தின் தலைமையை எந்த சமுதாயமும் கொடுக்காது. இலங்கை தமிழருக்கு குரல் கொடுக்க தமிழன் என்ற ஒரு தகுதியே போதும்.

Anonymous said...

//அனானி துப்பற்றவரிடம் தமது சமுதாயத்தின் தலைமையை எந்த சமுதாயமும் கொடுக்காது. இலங்கை தமிழருக்கு குரல் கொடுக்க தமிழன் என்ற ஒரு தகுதியே போதும்.
//
கொண்ட கொள்கையில் உறுதியாக, விடுதலைச்சிறுத்தைகள் இயக்கம் எதற்காக தொடங்கப்பட்டதோ அதன் லட்சியத்தை நிறைவேற்றுவதைவிட்டுவிட்டு, இலங்கை , தமிழ் பாதுகாப்பு என அவரின் நோக்கம் திசை மாறிக்கொண்டிருக்கிறது. அவரால் யாருக்கும் எதுவும் செய்யமுடியாது. ரஜினி மாதிரி வெறும் வாய்ஸ் தான் கொடுக்கமுடியும்

said...

விடுதலைச்சிறுத்தையின் லட்சியம் தான் கொண்ட சட்சியத்துடன் மட்டும் நின்றுவிடாது, உண்மையான ஒரு லட்சிய வீரனின் விடுதலை, அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரானது, அதன் பரிமானங்கள் விரிந்து செல்லும்.

said...

//விடுதலைச்சிறுத்தையின் லட்சியம் தான் கொண்ட சட்சியத்துடன் மட்டும் நின்றுவிடாது, உண்மையான ஒரு லட்சிய வீரனின் விடுதலை, அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரானது, அதன் பரிமானங்கள் விரிந்து செல்லும். //
கட்டப்பஞ்சாயத்து பண்றவன் எல்லாம் கட்சி ஆரம்பிச்சிட்டு லட்சியம் பத்தி பேசுறான். நாட்டைப்பத்தி பேசுறான். கலிகாலம்டா. முதலில் கட்சியில் அடக்குமுறையை கைவிட்டு தேர்தல் நடத்தச்சொல்லுங்க அப்புறம் பாக்கலாம்.