29 June, 2006

றோவின் திட்டம் வெற்றிபெறுமா ?

கடந்த இரண்டு நாட்களாக, கலாநிதி பாலசிங்கம் அவர்கள் மறைந்த இந்தியப் பிரதமர் குறித்து இந்திய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டி பலத்த சர்ச்சைகளை இந்திய - இலங்கை அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், விடுதலைப் புலிகளினால் 2002ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்களால் ராஜீவ் கொலை தொடர்பாக தெரிவிக்கப்பட்ட அதே விடயங்களையே மீண்டும் பாலசிங்கம் அவர்கள் இந்தியாவின் என்.டி.ரீ.வி ஊடகத்திற்குத் தெரிவித்திருந்தார். அன்றைய காலகட்டத்தில் இந்திய ஊடகங்களினால் தமது முன்னாள் பிரதமர் குறித்து எழுப்பப்படாத கரிசனை, பாலசிங்கம் அவர்களின் புதிய பேட்டியினை அடுத்து எழுந்துள்ளமை ஆச்சரியத்தை தருகின்றது. இதற்கு மேலாக, திட்டமிட்ட முறையில் பரப்புரை செய்யப்பட்டுள்ள இந்த செய்தியின் மூலம் இந்திய உளவு நிறுவனமான றோ, தமிழ்த் தேசியத்தினை முடக்குவதற்கும், விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் மக்களுக்கும் இடையில் இடைவெளியை அதிகரிப்பதற்கான ஒரு சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர் என்பதே உண்மை. இனி றோவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சதித் திட்டத்தினை சற்று உற்று நோக்குவோம். கடந்த வாரம் ரெகெல்கா இணையத் தளத்தில் வெளியாகிய செய்தியான “விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய உளவு நிறுவனம் றோ புதிய படை ஒன்றை உருவாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றது” என்ற செய்தி மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் வெளியிடப்பட்டமை கவனத்தில் கொள்ளப்படவேணடும். அடுத்து கவனிக்கப்பட வேண்டியது, இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் ஈழத் தமிழர்கள் மீது பெருகி வரும் ஆதரவு றோவுக்கு பெரும் சஞ்சலத்தை கொடுத்துள்ளது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு ராஜீவ் மரணத்தை மீண்டும் தூசி தட்டுவதைத் தவிர வேறுவழியில்லை எனவே தான் இந்தச் செய்தி விரைவுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டது. மேலும், ராஜீவ் காந்தியன் மனைவியின் தலைமையிலான ஆளும் கொங்கிரஸ் கட்சியும் ஈழத் தமிழர்கள் மீதான ஆதரவுப் பார்வையைச் செலுத்த ஆரம்பித்துள்ளமை றோவுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளமை மறுக்கப்பட முடியாத உண்மை. இவ்வளவு காலமும் தமது திட்டத்திற்கு அமைய இடம்பெற்ற சகல நடவடிக்கைகளும் தமது ஆளுகைக்கு அப்பால் சென்றுகொண்டிருப்பதை பொறுக்க முடியாத றோவினர் தமது நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர். இதன் முதல் வடிவம்தான் என்.டி.ரீ.வியின் ஜேர்மனிய நிருபர் மூலம் பாலசிங்கம் அவர்களைப் பேட்டிகான வைத்து, திட்டமிட்ட முறையில் - இந்திய மக்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்களிடையே விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்தினை பரப்பும் வகையிலான செய்தியை வெளியிட்டிருந்தனர். இந்தச் செய்தியை வெளியிட்டதன் மூலம் றோவினர் இந்திய அரசின் நிலைப்பாடு மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நிலை என்பவற்றினை கணித்து தமது சதித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தயாராகுகின்றனர். றோவின் திட்டம் என்ன? விடுதலைப் புலிகள் அமைப்பினை பிளவுபடுத்துவதற்கு நெடுங்காலமாக தமது முயற்சிகளை மேற்கொண்டுவரும் றோ பெரும் தோல்விகளையே கண்டுவந்துள்ளது. றோவினர் தமது கடந்த கால முயற்சிகளில், விடுதலைப் புலிகளின் முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரராசாவினை ஈடுபடுத்தி தோல்வியடைந்தனர். அதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் பிரதேசவாதத்தைக் கிளப்பி முரளீதரனை ஈடுபடுத்தினர். இதிலும் தோல்வியையே றோவினர் சந்தித்தனர். எனவே இவர்களின் புதிய முயற்சியினைச் சற்று நோக்குவோம், • இனிவரும் காலங்களில் தமது ஊடகங்களின் மூலம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுவர். குறிப்பு: இதற்கு உறுதுணையாகச் செயற்படுவதற்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் பத்தி எழுத்தாளர் கடந்த பல வாரங்களாக புலி ஆதரவுப் பத்திகளை எழுத ஆரம்பித்துள்ளமை கவனிக்கத்தக்கது. • இந்தியா தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தரும். ஆனால், விடுதலைப்புலிகளின் தற்போதைய தலைமை மாற்றப்பட வேண்டும். இந்தியா தமிழ் மக்களுக்குரிய தீர்வினை பெற்றுத்தரவள்ளது ஆனால் விடுதலைப்புலிகளின் தற்போதைய தலைமை மாற்றப்பட வேண்டும் என்ற செய்தியை பரப்புரை செய்வதன் மூலம் மக்களை விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட வைக்கலாம் என்பதே றோவின் புதிய திட்டம். • பாலசிங்கம் அவர்களின் பேட்டியினை தளமாக வைத்து செய்யப்படவுள்ள பரப்புரை… தீர்வு ஒன்று எட்டப்படுவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர்தான் தடையாகவுள்ளார் என்றும் மற்றவர்கள் தீர்விற்கு ஆதரவாகவுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் பிரிவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளது என்ற தொனியிலான செய்திகள். எனவே இறுதியாக, தமிழ் மக்கள் மற்றும் தமிழ்த்தேசிய ஊடகங்கள் இவ்வாறான விடயங்களை மிகவும் புத்திசாலித்தனமாக கையாளவேண்டிய ஒரு காலகட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். விழித்துக்கொள் தமிழா! இல்லையேல் விடிவு கிடைக்காது. உங்கள் விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களைப் பின்வரும் மின்னஞ்சலுக்குத் தெரியப்படுத்தவும். andrew.rasiah@gmail.com நன்றி>பதிவு.

ஈழத்திற்கான அமெரிக்க நாளேட்டின் தீர்வு.

ஈழத் தீவில் மீண்டும் யுத்தம் வெடிப்பதற்கான சூழல் மேலோங்கி வருவதாக குறிப்பிட்டு, ஆசிரியர் தலையங்கத்தை வரைந்திருக்கும், (Boston Globe)பொஸ்ரன் குளோப் எனப்படும் அமெரிக்க நாளேடு, சிங்களவர்கள் மேலாதிக்கம் செலுத்தும் சிறீலங்கா அரசாங்கத்தின் பிடியில் இருந்து, வடக்குக் கிழக்குப் பிரதேச தமிழ் மக்கள் விடுதலை பெற்று, புதிய அரசியலமைப்பின் கீழ், தன்னாட்சியுரிமையுடன் வாழும் சூழலை ஏற்படுத்துவதன் மூலமே, இனநெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என சுட்டிக் காட்டியுள்ளது. சிங்கள தேசம் கட்டவிழ்த்து விட்ட ஒடுக்குமுறைகளின் வடுக்கள், தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இருந்து நீங்காத நிலையில், தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கும், (Loose Confederation) லூஸ் கொன்பெடரேசன் எனப்படும் தளர்வான கூட்டு இணைப்பாட்சி மூலம் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், பொஸ்ரன் குளோப் நாளேடு அழைப்பு விடுத்துள்ளது. இவ்வாறான ஆட்சியமைப்பு, குறைந்த அளவிலான அதிகாரங்களைக் கொண்ட மத்திய அரசாங்கத்தையும், வலுவான அரசியல் அதிகாரங்களையும், தனியான ஆயுதப் படைகளையும் கொண்ட மாநில அரச அமைப்பையும் பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி>புதினம்.

ஈழத்தமிழர்களின் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.

இலங்கையின் வடக்கு - கிழக்கில் தமிழர்களின் தன்னாட்சியுடன் வாழ்வதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது என்று அமெரிக்காவின் "போஸ்டன் குளோப்" ஏடு தெரிவித்துள்ளது. போஸ்டன் குளோப் ஏட்டின் தலையங்கம்: இலங்கை இனப்பிரச்சனையானது இங்கு சிறிது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் 1983 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்துக்கும் சிறுபான்மைத் தமிழர்களுக்கும் இடையேயான வன்முறைகளால் மொத்தல் 70ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது சிறிங்கா இராணுவத்தின் துணை தளபதி கடந்த திங்கட்கிழமை தற்கொலை குண்டுவெடிப்பினால் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவமானது அரசாங்கத்துக்கும் போராளிகளான தமிழ்ப் புலிகளுக்கும் இடையே கடந்த 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டு ஏற்கனவே முறிவடையும் நிலைமையை மேலும் சீர்குலைத்து மற்றொரு இரத்தகளரிக்கு இட்டுச் செல்லக் கூடும். உலக நாடுகளுக்கு அப்பால் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கொபி அனான், இருதரப்பாரையும் நோர்வேயின் அனுசரணையின் கீழ் அமைதிப் பேச்சுக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். "நல்ல சூழ்நிலைகளிலும் மோசமான சூழ்நிலைகளிலும் இலங்கை விடயத்தில் நோர்வே உறுதியாக இருந்துள்ளது" என்று நோர்வே அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவர் தெரிவித்துள்ளார். ஆனால் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தமிழ் புலிகளின் தலைவர்கள் மீண்டும் போரைத் தொடங்காதவாறு தடுத்து பேச்சுக்கள் மூலம் தீர்வு காண்பதில் குறிப்பிட்ட அளவுக்கு சர்வதேச அனுசரணையாளர்கள் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் செயற்பட முடியும். பழையனவற்றை மறந்து அமைதியை உருவாக்குவதற்காக இருதரப்பினரும் சமரசங்களை ஒப்புக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. சிங்களப் பெரும்பான்மையினத்தவரின் ஒடுக்குமுறையால் தமிழ் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு நியாயப்பூர்வமான முறைமைகளைக் கொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுவெடிப்புகள், படுகொலைகளால் அரச அதிகாரிகள், பல சிங்களவர்கள் கொல்லப்பட்டனர். இத்தகைய தாக்குதல்களால் அது பயங்கரவாத வன்முறையாக்கப்பட்டு இலங்கையின் வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளானது புறக்கணிக்கப்படும் நிலை உருவானது. அரசியல் வழித் தீர்வு தேவையாக உள்ளது. சிங்களவர் பெரும்பான்மையாக உள்ள இலங்கை மத்திய அரசாங்கத்தின் கீழ்படிதலிலிருந்து வடக்கு - கிழக்கில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ வழிசெய்யக் கூடிய வகையிலான புதிய அரசியல் யாப்பை உள்ளடக்கியதாக இத்தீர்வு இருக்க வேண்டும். தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர் அண்மையில் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இந்தத் தீர்வு பற்றி மேலோட்டமாகக் கூறியிருந்தார். "தமிழ் புலிகள் பயன்படுத்துகிற வழிமுறைகளை நாம் நிராகரித்த போதிலும், தமிழ் இன மக்களால் எழுப்பப்படுகிற கோரிக்கைகள் நியாயப்பூர்வமானவை. எவர் ஒருவருவரும் தங்களது சொந்த பிரதேசங்களை ஆளுகின்ற உரிமை, தங்களது தாயகத்தை நிர்வகித்தல் என்பவை நியாயப்பூர்வமான கோரிக்கையாகும்" என்று தெரிவித்திருந்தார். தமிழர்கள் தங்களது சொந்தத் தாயகத்தில் தன்னாட்சியுடன் வாழும் உரிமையை ஒப்புக்கொண்டுள்ளமையானது அமெரிக்காவின் கொள்கையில் வரவேற்கத்தக்க ஒரு பரிணாம வளர்ச்சியாகும். இலங்கையின் ஐக்கியத்தைப் பாதுகாத்து- வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களின் தன்னாட்சிக்கு அனுமதித்து செயற்படும் வகையிலான நெகிழ்வான ஒரு கூட்டமைப்பை உருவாக்க நோர்வேயின் ஒஸ்லோவில் பேச்சுக்கள் நடத்த சிறிலங்கா அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி>புதினம்-

என்.டிவியின் செய்தி, ஒரு செய்தித்திரிப்பா?

விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் லண்டனில் வைத்து இந்தியத் தொலைக்காட்சி நிறுவனம் ஒன் றுக்கு வழங்கிய பேட்டி சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றது. ""ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் ஒரு பெரிய வரலாற் றில் மறக்கமுடியாத துன்பியல் நிகழ்வு. அதற்காக நமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.'' என்று அன்ரன் பாலசிங்கம் கூற, அதற்கு வேறு அர்த்தத்தைக் கொடுத்து, அவ ரது கூற்றைத் திரிபுபடுத்தி போட்டடித்திருக்கிறது சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனம். பாலசிங்கம் கூறிய மேற்படி கருத்துக்களை வைத்துக்கொண்டு ராஜீவ் கொலைக்கான பொறுப்பை, இப்போது பதினைந்து ஆண்டு கள் கழித்து புலிகள் முதல் தடவையாக ஏற்றுக் கொண்டுள்ளனர், அதற்காகத் தங்களை மன்னிக்கும்படி இந்தியாவிடமும், இந்திய மக்களிடமும் புலிகள் மன்றாடுகின்றார்கள் என்றெல்லாம் சாரப் பட தனது கருத்தை மதியுரைஞர் பாலாவின் கருத்தாகக் குறிப் பிட்டு பிரசாரம் செய்தது அந்தத் தொலைக்காட்சி நிறுவனம். ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக மதியுரைஞர் பாலா தெரி வித்த முக்கிய கருத்தை அந்த நிறுவனம் ஒளிபரப்பவில்லை. ""ராஜீவ் கொலையை ஒரு தனி மனித கொலைச் சம்பவமாக அணுகுவது அல்லது பார்ப்பது தவறு. ஈழத் தமிழரின் தேசிய இனப் பிரச்சினையில் இந்தியா இராணுவ ரீதியில் தலையிட்ட அரசியல் வரலாற்றுப் பின்புலத்தின் அடிப்படையில்தான் இச் சம்பவத்தை தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டும்.'' என்று பாலா குறிப்பிட்டதை அமுக்கிவிட்ட அந்த நிறுவனம், பாலா தெரி விக்காத கூற்றுக்கு பதில் கருத்துக்களை புலிகளுக்கு எதிரான பிரமுகர்களைத் தேடிப்பிடித்து அவர்கள் மூலம் வெளிப்படுத் தித் தனது திருகுதாள வேலையை கனகச்சிதமாக முன்னெடுத் திருக்கின்றது. ""கடந்த கால சம்பவங்களை மறந்து, விடயங்களைத் தாராள மனப்பான்மையோடு புதிய போக்கில் அணுகுமாறு இந்திய அரசையும், இந்திய மக்களையும் நாம் வேண்டுகின்றோம்.'' என்று ஈழத்தில் அல்லல்படும் தமிழர்களின் சார்பில், ஈழத் தமி ழர்களின் ஏக அதிகாரபூர்வ பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக நின்று மதியுரைஞர் பாலசிங்கம் அழைப்பு விடுக்க அதற்குப் பதிலடி கொடுப்பதற்கு புலிகள் மீது பகையுறவும், விரோதப் போக்கும் கொண்ட இந்தியப் பத்திரிகையாளர் ராம் மற்றும் புலனாய்வாளர் கார்த்திகேயன் போன்றோரைத் தேடிப் பிடித்து அந்த சமரச முயற்சிக்கு முளையிலேயே ஆப்பு வைக் கும் திருவிளையா டலை நிறைவேற்றியிருக்கிறது இந்தியத் தரப்பின் ஊதுகுழல் நிறுவனம். மதியுரைஞர் பாலா வழங்கிய சுமார் ஒரு மணி நேரப் பேட்டியில் சில நிமிடங்களை மட்டும் "முண்டத்தை' மட்டும் ஒளிபரப் பிய அந்த நிறுவனம் அதை முழுமையாக ஒளிபரப்புமானால் அது நிச்சயம் ஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து இந்திய அரசினதும், இந்திய மக்களினதும் நெஞ்சை ஆழமாகச் சென்று தைக்கும் தொடும் என்ற நம்பிக்கை தமிழர் தரப்புக்கு உண்டு. மதியுரைஞர் பாலாவின் கருத்தை எடுத்தெறியும் விதத்தில் அந்தச் செவ்வியை ஒட்டி கருத்து வெளியிட்ட இந்திய வெளி விவகார அமைச்சர் ஆனந்த் சர்மாவின் பதில்கள் குறித்து அழு வதா, சிரிப்பதா என்பது தெரியாமல் சஞ்சலப்படுகின்றார்கள் ஈழத் தமிழர்கள். ""இந்தியாவைப் பொறுத்தவரை அது இலங்கையில் அமைதி, ஸ்திரம், ஐக்கியம் ஆகியவற்றையே விரும்புகின்றது.'' என்று வலியுறுத்திக் கோரிய இந்திய இணை அமைச்சரிடம் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடைசியாக ஒரு கேள்வி கேட்கப் பட்டது. ""இலங்கைப் பிரச்சினை இவ்வளவு மோசமான வடிவம் எடுக்க முன்னர் ஆரம்பத்தில் புலிகளுக்கு இந்தியாவே பயிற்சியளித் தது என்ற சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதை பாலசிங்கமும் மீண்டும் சுட்டிக்காட்டியிருக்கின்றாரே?'' என்ற கேள்விக்கு இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் அளித்த பதில் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளும், ஆச்சரியத்துக்குள் ளும் மூழ்கடித்தது. முதலாவதாக ""இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்துபவர் யார்? அவர் புலி களின் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியா என்பது எங்களுக்குத் தெரியாது.'' என்று இந்தியத் தரப்பில், அதுவும் வெளிவிவ காரத்துக்குப் பொறுப்பான இணை அமைச்சர் பதவியிலிருக் கும் ஒருவர் கூறியிருப்பது வியப்புக் குரியது. அன்ரன் பாலசிங்கம் புலிகளின் தத்துவாசிரியர். மதியுரை ஞர், பேச்சாளர். அமைதி முயற்சிகளுக்கான புலிகளின் பேச்சுக் குழுவின் தலைவர். இந்தியா உட்பட சர்வதேச ரீதியிலும், தேசிய ரீதியிலும் புலிகளின் சார்பில் பல மட்டங்களில் தொடர்பு கொண்டு பங்காற்றியவர். தலைவர் பிரபாகரன் முன்பாகப் பத் திரிகையாளர்கள் திரண்டிருந்த சமயம் தலைவரையும் வைத் துக்கொண்டு ""தலைவர் பிரபாகரன் கூறினாலும் நான் கூறி னாலும் ஒன்றுதான்'' எனத் தலைவரின் குரலாகப் பகிரங்கமாக ஒலித்தவர்; ஒலிப்பவர். அவரைப் பார்த்து ""அவர் யார்? புலிகளின் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியா அவர் என்பது தெரியாது.'' என இந்திய அமைச் சர் கூறுவது அவரது பதவிக்குப் பொருத்தமற்ற வகையில் கேலிக் கூத்தானது. எண்பதுகளின் நடுப்பகுதியில் புலிகள் உட்பட அனைத்து ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கும், போராளிகள் அமைப்புகளுக் கும் இந்தியா தனது மண்ணில் ஆயுதப் பயிற்சி கொடுத்துத் தூண்டி விட்டது என்பது சர்வதேசம் அறிந்த பரகசியம். அந்தப் பயிற்சி வழங்கப்பட்ட காலத்திலேயே புலிகளின் மதியுரைஞ ராகவும், பேச்சாளராகவும் இருந்தவர் பாலசிங்கம். அவர் யார் என்று இப்போது கேட்கும் இணை அமைச்சர் ஆனந்த் சர்மா அப்போது இந்திய அரசியலிலேயே ஒரு பிரமுகராக இருந் திருப்பாரோ என்பது தெரியவில்லை. அந்தக் கேள்வியில் கேட்கப்பட்டது போல ஈழத் தமிழ்ப் போரா ளிகளுக்குப் பயிற்சி கொடுத்துத் தூண்டிவிட்டு இலங்கைத் தீவு, இரத்தத் தீவாக மாறுவதற்குக் காரணமாக இருந்த மூல சக்திகளில் இந்தியாவும் ஒன்று. அந்தப் பொறுப்பை அப்படியே பொய் என்று மறுத்திருக் கிறார் இந்திய அமைச்சர் ஆனந்த் சர்மா. இந்தியா ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கு ஆயுதங்களும், பயிற் சியும் வழங்கியது சரியா, தவறா என்பது வேறு விடயம். ஆனால், அப்படிச் செய்துவிட்டு, அதை மறந்து, இப்போது மறுத்து, ""இலங்கையில் அமைதி,ஸ்திரம், ஐக்கியம் ஆகிய வற்றையே இந்தியா விரும்புகின்றது.'' என்று உருத்திராட்சப் பூனை போல இந்தியத் தரப்பு பேச முடியுமானால் ""கடந்த காலத்தை ஒதுக்கிவிட்டு இந்தியாவுடன் புதிய போக் கில் நல்லுறுவு பேண ஈழத் தமிழர்களும், புலிகளும் விரும்புகின்றார்கள்'' என்று புலிகளின் பிரதிநிதி கூறுவதில் தவறே தும் இல்லை. அப்படி எதிர்பார்ப்பது நியாயமானதும் கூட. நன்றி>உதயன்.

27 June, 2006

கருணாநிதிக்கு நட்புக்கரம் நீட்ட புலிகள் தயார்.

ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நட்புக்கரம் நீட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் "தமிழ்முரசு" நாளேட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் சிங்களப் படைகள் முன்னைய காலம் போல குழந்தைகள் பெண்கள் பாரபட்சம் பாராது பொதுமக்களைக் கொன்று அழிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உலககெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் குறிப்பாகத் தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்களிடம் அனுதாப உணர்வு எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடும் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. "தனிப்பட்ட நலன்கள் அடிப்படையில் பார்த்தால் விடுதலைப் புலிகளுக்கும் திமுக அரசுக்கும் உறவுகள் நெருக்கமாக இருக்காது. ஆனால் மக்கள் நலனை வலுவாகக் கட்டியெழுப்பப்படும் போது நிச்சயமாக நாங்கள் நட்புக்கரம் நீட்டுவோம்" என்று தெரிவித்தார். அமைதிப் பேச்சை நடத்த இந்தியா செல்லவும் தயார் என விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டத்தைப் பற்றிக் கேட்டபோது இந்தியா விடுதலைப் புலிகளுக்குத் தடை விதித்திருக்கும் பட்சத்தில் நாங்கள் அங்கு செல்ல வாய்ப்பில்லை. ஆனால் நிலைமைகள் மாறும் வாய்ப்புள்ளது என்றார் அவர். "சிங்கள அரசுக்கு ஆதரவு அளிப்பதை இந்தியா நிறுத்த வேண்டும். தங்களது அடிப்படை உரிமைக்காகப் போராடும் தமிழர்களின் கோரிக்கையைத் தார்மீக ரீதியாக இந்தியா ஆதரிக்க முடியாது என்று சொல்ல முடியாது. பல சந்தர்ப்பங்களில் இந்தியா உதவியுள்ளது. குறிப்பாக பங்ளாதேஷ் போராட்டத்தை ஆதரித்து உதவியும் உள்ளது. "இலங்கை அரசாங்கம் இந்தியாவின் ஆதரவை வைத்துக்கொண்டுதான் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது போல சிங்களப் பத்திரிகைகள் அறிக்கைகளை விடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்" என்பதையும் தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார். இந்திய அரசாங்கம் எங்கள் விடுதலைப் போராட்டத்தை ஏற்று அங்கீகரிப்பதுடன் எங்களுக்கு அதன் தார்மீக ஆதரவையும் வழங்க வேண்டும். இலங்கை அரசின் அட்டூழியங்களைக் கண்டிக்க வேண்டும். இதுவே விடுதலைப் புலிகளின் நிலைப்பாடும் தமிழ் மக்களின் விருப்பமுமாகும். இலங்கை அரசாங்கத்தின் நயவஞ்சகச் செயலை இந்தியா உள்ளிட்ட அனைத்துலக சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். அந்த நாள் வந்தே தீரும். ஈழத் தமிழ் மக்களுக்கு கூடிய விரைவில் நல்ல வழி பிறக்கும் என்று சு.ப.தமிழ்ச்செல்வன் உறுதியோடு தெரிவித்துள்ளார். நன்றி>பதிவு.

பிரபாகரன் இயக்குனர் மகேந்திரனுடன் சந்திப்பு.

துப்பாக்கிகளுக்கும், கண்ணி வெடிகளுக்கும் இடையே ஒரு அதிரடி சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இயக்குநர் மகேந்திரன் தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துத் திரும்பியிருக்கிறார். திடீரென்றுதான் அழைப்பு. ரொம்ப நாளாக நின்றுபோயிருந்த சாசனத்தின்இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தேன். தமிழீழத்தில் சினிமா பற்றி ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சினிமா பற்றிச் சொல்லி, ஒரு படமும் தயாரித்துத் தரவேண்டும். வரமுடியுமா? என்று கேட்டார்கள். மறுவார்த்தையாக மறுப்புச்சொல்லாமல் சம்மதித்தேன். அருமையான மூன்று மாதங்கள். அங்கேயிருந்து 1996என்ற அவர்களின் வாழ்க்கை சார்ந்த சினிமாவை எடுத்துக் கொடுத்தேன். யாருமே முறைப்படி அனுபவம் பெற்ற நடிகர்கள் கிடையாது. 1996ன் இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தபோதுதான், திடீரென்று எடிட்டிங் அறையின் வெளியே கார் வந்து நின்றது. சினிமா, கலைப் பிரிவுக்குத் தலைமை வகிக்கும் சேரா என்னை அணுகினார். நீங்கள் அவசியம் அவரைச் சந்திக்க வேண்டும். அவரும் உங்களோடு கதைக்க விரும்புகிறார். இப்போதே நீங்கள் புறப்பட வேண்டும் என்றார்கள். அதற்கான ஏற்பாடுகள், விவரணைகள், பாதுகாப்பு, சிறிய பதட்டம், பரபரப்பு, ஆர்வம். நாம் சந்திக்கப்போகிறவர் யார் என்று புரிந்துவிட்டது. வேகம் பற்றிக்கொண்டது. சூழ்நிலை கெடுபிடி ஆகிவிட்டது. வழியெங்கும் தம்பியின் படை. பிரமாதமான கட்டுக்கோப்பு. உங்களில் யாராலும் யூகிக்க முடியாத இடத்தை நோக்கிய பயணம். சேரா என்னிடம் மெல்லிய சிரிப்போடு, பேசிக் கொண்டே வந்தார். தலைவர் உங்களின் உழைப்பைப் பற்றி விசாரித்தார். சந்தோஷப்பட்டார். பார்க்க வேண்டும் என்று விரும்பினார். இந்த விருப்பம் சாதாரணமானதல்ல என்று பேசிக்கொண்டே வந்தார். எனக்கு ஒன்றுமே நிலை கொள்ளாமல் தவித்தேன். உலகத்தையே தன் பக்கம் பார்க்க வைக்கிற மாபெரும் தலைவன். அவரையே சந்தித்துப் பேசப் போகிற பேரனுபவம். அதை எப்படி நாம் உள்வாங்கப்போகிறோம் என்றெல்லாம் சிந்தனைகள். திடீரென்று அடுக்கடுக்கான விசாரணைகள். பாதுகாப்பு குளறுபடி இல்லாத கம்பீரமான விசாரணை. இருப்பிடம் நெருங்கப்போகிறோம் என்று தெரிந்துவிட்டது. சேராவிடம், நான் அவரை எப்படிக் கூப்பிடுவது. சார் என்றா, அல்லது வேறு முறையிலா? என்று, போட்டோக்களில் பார்த்திருந்த அவரின் கம்பீரத்தை நினைவுபடுத்திக் கேட்டேன். நீங்கள் அவரைத் தம்பி என்று அழைத்தால் பிரியப்படுவார். நாங்கள் எல்லோருமே அவரை எங்களுக்குள் அழைக்கும் விதம் அதுதான். ஒன்றும் பயப்பட வேண்டாம் என்றார். நான் பயப்படவில்லை. பெருமிதப்பட்டேன். அந்த இடமும் வந்தது. அரசியல் பிரிவுத்தலைவர் தமிழ்ச்செல்வன் வெள்ளைச் சிரிப்போடு எங்கிருந்தோ பிரசன்னமானார். என்னை வரவேற்று, அவர் இருக்கிற அறைக்கு அழைத்துப்போனார். நான் எப்படி அந்தக் கதவைத் திறப்பது என்று கணநேரம் திகைத்தபோது, மெல்லத் திறந்தது கதவு. வர்ணிக்க முடியாத கம்பீரத்தில் என்னை வணங்கினார் பிரபாகரன். என்னால் அவரை ஐயா என்றுதான் அழைக்க முடிந்தது. என்னை இருக்கையில் அமர்த்திய பிறகே உட்கார்ந்தார். என் மனக்கதவுகளையெல்லாம் திறந்து உள்ளே போய்க்கொண்டேயிருந்தார் தலைவர். உருகிக்கரைந்து உள்ளே போய்க்கொண்டேயிருந்தேன். அன்போடு பேசத்தொடங்கினார் தம்பி. நாங்கள் உறக்கம் இல்லாமல், சதா விழித்துக்கொண்டேயிருக்கிறோம் என்றால், நீங்களும் ஏன் அப்படி இருக்கவேண்டும்?. உழைக்கிற நேரத்திற்குத் தகுதியாக நீங்கள் ஓய்வெடுக்கலாம் என்ற கரிசனத்தோடு ஆரம்பமானது பேச்சு. இரண்டு பேருமே ஐயா என்று விளித்துக் கொண்டோம். ராணுவம் எங்கள் நாட்டில் இளம்பெண்களைக் கற்பழித்தது. அப்படிக் கேவலப்படுத்தியதைவிட, தமிழ் சினிமா பெண்களை இழிவுபடுத்துகிறது என்று வருத்தத்தோடு பேசினார். கன்னத்தில் முத்தமிட்டால் எங்களைச் சரியாக முன்னெடுத்து வைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். பாரதிராஜா ஆய்த எழுத்து படத்தில் நடித்திருக்க வேண்டியது அவசியம்தானா? என்று கேள்வி எழுப்பினார். தமிழ் சினிமாவின் மீது அக்கறைப்பட்ட பேச்சை அப்படியே ஹாலிவுட் பக்கம் திருப்பினார் தம்பி. எனக்கு ஆச்சர்யம்... யார் இவர்! இவரின் பார்வைகள் என்ன? இப்படி ஒரு சின்ன தேசத்திலிருந்து உலகமே திரும்பிப் பார்க்க புறப்பட்டு வந்தது எப்படி? என்றெல்லாம் மனம் அலை பாய்ந்தது. ஹாலிவுட் படங்களும் திசை திரும்பியதைக் குறிப்பிட்டார். உங்களுக்கு ஹாரிசன் போர்டை பிடிக்குமா? என்று எனக்குப் பிடித்த அவரையே குறிப்பிட்டார். படக்காட்சிகளைத் தனித்தனியாகப் பிரித்துப்பேசினார். எனக்கு 200 ஹாலிவுட் சி.டிகளைப் பரிசாகத் தந்தார். அரைமணி நேரத்திற்கு இருக்கும் என்று நினைத்திருந்த பேச்சு மூன்றரை மணி நேரத்திற்கு விரிந்தது. என்னோடு உணவருந்தினார். என்னை முழுமையாக விசாரித்தார் முள்ளும் மலரும் க்ளைமேக்ஸ் தன்னைப் பாதித்ததைக் குறிப்பிட்டார். உதிரிப்பூக்கள் அனுபவத்தைப் பகிர்ந்தார். நாங்கள் விடைபெறுகிற அந்தத் தருணம் வந்தேவிட்டது. வாசல் வரைக்கும் வந்து வழியனுப்பினார். கடைசியாகப் பேசிக்கொள்கிற நிமிடங்கள் உன்னதமாக அமைய, கூடியிருந்த பாதுகாப்புகளை விலகியிருக்கச் சொன்னார். நீங்கள் அடுத்த முறையும் வருவீர்கள். ஆனாலும் யுத்தம் அப்போதும் நடக்கும். இருந்தாலும் உங்களைச் சந்திப்பேன். என்றார். அவரது பேரன்பின் அடையாளமாகச் சிறிய தங்கப்பதக்கத்தைக் கொடுத்தார். அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்கிற விருப்பம் உடனே நிறைவேற்றப்பட்டது. திரும்பி வண்டியில் உட்கார்ந்தபோது சீருடை, துப்பாக்கிகளோடு தலைவரின் அனுபவ சாந்தமும் மனசுக்குள் வந்தது. கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்தேன். என்னுடைய கைப்பையை வாங்கி, ஒரு சிங்கள அதிகாரி சோதனையிட்டார். அந்தப் பதக்கத்தைப் பார்த்த மறு விநாடி என்னை நிமிர்ந்து பார்த்து, புன்னகைத்து, உடனே கைப்பையை மூடி என்னை விமானத்தின் வாசல் வரைக்கும் வழி நடத்தினார். விமானத்தில் வந்து உட்கார்ந்து யோசித்தபோது, சந்தித்த மூன்றரை மணி நேரமும் ஒரு வார்த்தை கூட பிரபாகரன் அரசியல் பேசவில்லை என்பது ஞாபகத்திற்கு வந்தது. அவருக்கு எரிக் சோல்ஹம்மிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. தமிழ்ச்செல்வனிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. இந்த மகேந்திரனிடமும் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. நா. கதிர்வேலன் நன்றி - குமுதம்: 28.06.2006

26 June, 2006

விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் இரணை மடுவில் அமைந்த, விமான ஓடுதளம். படத்தை பெரிதாக பார்க்க படத்தின்மீது அழுத்தவும். படங்கள்>கூகிள்,சசி.

சிறிலங்கா அரசுடன் நேரடிப் பேச்சுக்கே இடமில்லை!!!

சர்வதேச சமாதான அனுசரணையாளர்களைப் புறந்தள்ளி, சிறிலங்கா அரசுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடாத்தும் எண்ணமெதுவும் விடுதலைப் புலிகள் அமைப்பிடம் தற்போது இல்லை என்று விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். லண்டன் பிபிசி வானொலியின் சிங்கள சேவையான சந்தேசியவிற்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவிக்கையில், நோர்வே அனுசரணையை ஓரம்கட்டி விட்டு, நேரடிப் பேச்சுக்கு வரும்படி சிறிலங்கா அரசிடமிருந்து அழைப்பு வந்ததா என்று கேட்கப்பட்டபோது, அதை ஆமோதித்த புலித்தேவன், விடுதலைப் புலிகள் உடனடியாகவே அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டதை உறுதி செய்தார். அத்துடன், நோர்வே அனுசரணையாளர்களுக்கும் இது தொடர்பான விபரங்களை விடுதலைப் புலிகள் அனுப்பியுள்ளதுடன், தொடர்ந்தும் நோர்வே அனுசரணையை விடுதலைப் புலிகள் விரும்புவதாகவும் அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். சிறிலங்கா சமாதான முன்னெடுப்புக்களின் கடந்த கால வரலாறுகளின் படி, இருதரப்புகளும் ஒன்றையொன்று நம்புவதற்கான வாய்ப்புக்கள் முற்றாக இல்லாதிருப்பதைப் பார்க்க முடிகிறது என்று விளக்கமளித்த அவர், சிறிலங்கா ஊடகமொன்றுக்கு வெளியிட்ட தகவலின்படி, அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், மகிந்தவிற்கு சாதகமான பதிலை வழங்கியிருப்பதாக வெளியான செய்தியை மறுத்தார். எந்த சந்தர்ப்பத்திலும், நேரடிப் பேச்சுக்களை நடத்துவது குறித்து விடுதலைப் புலிகளிடமிருந்து சாதகமான பதில் முன்வைக்கப்படவில்லை என்பதுடன், நோர்வே அனுசரணையுடன் சமாதானப் பேச்சுக்களைத் தொடர்வதற்கு விடுதலைப் புலிகள் மிகுந்த விருப்புடன் உள்ளார்கள் என்பதை, அரச தலைவர் செயலகத்திற்கும், நோர்வே பிரதிநிதிகளுக்கும் நேரடியாக அறிவித்து விட்டதாகவும் கூறினார். நன்றி>புதினம்.

தமிழகத்தில் துணைப்படைக்கு ஆள்திரட்ட "றோ' உதவி?

தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகள் மத்தியில் இருந்து துணைப்படைக்கு ஆள்களைத் திரட்டும் முயற்சிகளுக்கு இந்தியாவின் உளவு அமைப்பான "றோ' உதவுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இலங்கையில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணைப்படை களும், ஒட்டுப் படைகளும் தற்போது தமது அணிகளுக்கு ஆள்திரட்டும் முயற்சிகளை இந்தியாவில் ஆரம்பித்திருக்கின்றன என்றும் இந்திய செய்தி ஏஜென்ஸிகளை ஆதாரம் காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைத் துணைப்படைகளின் இந்த முயற்சிக்கு இந்தியாவின் உளவு அமைப்பான "றோ'வின் மறைமுக உதவி கிடைப்பதாகவும், இந்திய இணையத்தளம் ஒன்றை ஆதாரம் காட்டி "தமிழ்நெற்' இணையத்தளம் தகவல் வெளியிட்டிருக்கின்றது. தற்போது கருணா குழுவுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான அணியாகச் செயற்பட்டுவரும் பரந்தன் ராஜன் தலைமையிலான ஈழத் தேசிய ஜனநாயக முன்னணியே (ஈ.என்.டி.எல்.எவ்) இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஈழ அகதிகள் மத்தியில் இருந்து தமது அணிக்கு இளைஞர்களை கூலிக்கு சேர்த்துக்கொள்ள முயன்று வருகின்றது. தமிழகத்தில் உள்ள ஈழ அகதி முகாம்களில் தங்கியுள்ள இளைஞர்களை அணுகி அவர்களுக்குப் பணம் வழங்கி அவர்களை கருணா அணியில் சேர்ப்பதற்கு ஈ.என்.டி.எல்.எவ். முயன்று வருகின்றது என்று உள்ளூர் பத்திரிகைத் தகவல்களை ஆதாரம் காட்டி அந்த இந்திய இணையத்தளம் தெரிவித்திருக்கிறது. இவ்வாறு ஒட்டுப்படைக்கு ஆட்சேர்க்கப்படும் ஒருவருக்கு ஆரம்பத்தில் பத்தாயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும், அவர்கள் பின்னர் இலங்கையில் சென்று செயற்படும்போது மேலும் கூலிப்பணம் அதிக தொகையில் வழங்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2004ஆம் ஆண்டு ஏப்ரலில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்து சென்றபின்னர் புலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட கூட்டுத்துணைப்படை அணியில் ஈ.என்.டி.எல்.எவ். அமைப்பு இணைந்து செயற்பட்டு வருகிறது என்றும் புலிகளுக்கு எதிரான பலமான அணி ஒன்றை உருவாக்குவதற்கு ஈ.என்.டி.எல்.எவ். அணியை "றோ' அமைப்பு பயன்படுத்துகின்றது என்றும் அறிக்கைகள் குறிப்பிடுவதாக அந்தச் செய்தி கூறுகின்றது. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் மறைவாகச் செயற்பட்ட பரந்தன் ராஜன் கடந்த மே மாதம் அங்கு தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கு சில வாரங்கள் முன்பாக பெங்களூர் சென்றடைந்தார். தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பது பொலிஸாருக்குத் தெரியவில்லை. ஆனால், வேறு சில இநதிய அதிகாரிகளின் தகவலின்படி ராஜன் இப்போது இலங்கையின் மட்டக்களப்பில் கருணா அணியினர் செயற்படுகின்ற பிரதான பகுதியில் தங்கியுள்ளார் என்று தெரிகிறது. இப்படி அந்த இந்திய இணையத்தள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி>பதிவு.

25 June, 2006

சிறீலங்கா ஆயுதப்படை=ராஜபக்சா, வேறுபடுத்தமுடியாது.

சிறீலங்கா ஆயுதப் படைகளையும் அதிபர் ராஜபக்சவையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது என, தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விளக்கமளித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகரும், தத்துவாசிரியருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கம், சிறீலங்கா ஆயுதப் படைகளின் தளகர்த்தாவாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவாறு, சகோதரர் கோட்டபாய ராஜபக்சவை பாதுகாப்புத்துறை செயலாளராகவும் கொண்டுள்ள அதிபர் ராஜபக்சவை, ஆயுதப் படைகளில் இருந்து வேறுபடுத்திப் பார்ப்பது நகைப்புக்கிடமானது என சுட்டிக் காட்டியுள்ளார். சமாதான முன்னெடுப்புக்களில் இருந்து நோர்வேயை வெளியேற்றும் சதி நோக்கத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான திரைமறைவு முயற்சிகளில், சிறீலங்கா அதிபர் ராஜபக்ச ஈடுபட்டுள்ளார்.கடந்த செவ்வாய்க்கிழமை, உதயன் - சுடரொளி நாளேடுகளின் ஆசிரியர் வித்தியாதரன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடிய சிறீலங்கா அதிபர், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடாத்த விரும்புவதாகவும், இதற்கு மாற்றீடாக, கருணா ஒட்டுக்குழுவின் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், உறுதியளித்திருந்தார். இதற்கு முன்னோடியாக, தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறீலங்கா அரசாங்கமும் இரண்டு வார காலத்திற்கு வன்முறைகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது எனவும், அதன் பின்னர் ஏற்படக் கூடிய நல்லெண்ண சூழலை அடிப்படையாகக் கொண்டு, இரு தரப்பும் சமாதானத்தை முன்னகர்த்திச் செல்வது என்றும், புதிய திட்டமொன்றை சிறீலங்கா அதிபர் முன்வைத்திருந்தார். மேலும், சிறீலங்கா படைகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தான் சிக்கியிருப்பதாகவும், இதில் இருந்து விடுபட்டு சமாதானத்தை முன்னகர்த்திச் செல்வதற்கு விரும்புவதாகவும், உதயன் நாளேட்டின் ஆசிரியரிடம், அதிபர் ராஜபக்~ கூறியிருந்தார். சிறீலங்கா அதிபரின் இந்தக் கூற்றிற்கு விளக்கமளித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகரும் தத்துவாசிரியருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கம், அதிபர் ராஜபக்வை ஆயுதப் படைகளில் இருந்து வேறுபடுத்;திப் பார்க்க முடியாது என்றும், இவ்வாறான நிலையில், அதிபர் ராஜபக்வின் கூற்று, நகைப்புக்கிடமானது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.இதேவேளை, சிறீலங்கா அதிபரின் திட்டத்திற்கான தமிழீழ விடுதலைப் புலிகளின் பதில், நாளை உதயன் நாளேட்டின் ஆசிரியர் வித்தியாதரன் அவர்களின் ஊடாக கையளிக்கப்பட இருப்பதாக தெரிய வருகின்றது இணைப்பு : newstamilnet.com

இலங்கைத்தீவை இனி ஒருபோதும் ஒன்றாக்க முடியாது.

சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யூ இலங்கைத்தீவை இனி ஒருபோதும் ஒன்றாக்க முடியாது. அந்த ஆட்சியமைப்பை மாற்றும்படி அல்லது நெகிழ்ச்சித்தன்மையைக் கைக்கொள்ளும்படி அல்லது பிரித்து வழங்கும்படி யாராவது அவர்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும் - என சிங்கப்ப10ரின் சிற்பியான லீ குவான் யூ தெரிவித்துள்ளார். லீ குவான் யூ பற்றி வெளியிடப்பட்டுள்ள லீ குவான் யூ என்ற மனிதரும் அவரது எண்ணங்களும் என்ற நூலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.லீ குவான் யூ என்ற மனிதரும் அவரது எண்ணங்களும்” என்பது சிங்கப்பூரில் அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு நூலின் தலைப்பாகும். "ஸ்றெய்ற் ரைம்ஸ்" சஞ்சிகையைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களான ஹவான் ப10க் குவாஸ் வாரன பெர்னாண்டஸ் மற்றும் சுமிகேரான் ஆகியோரால் எழுதப்பட்ட இந்த நூலின் லீ குவான் யூவின் வாழ்வை வழிப்படுத்திய நிகழ்வுகள் பற்றியும் அவர் சிங்கப்பூரை ஆண்ட விதம் பற்றியும் அவர் அளித்த செவ்விகள் அடங்கியுள்ளன. அந்த நூலில் சிறிலங்காவைப்பற்றி இப்படித்தான் லீ குவான் யூ கூறியிருக்கிறார்:எமது செயற்பாடுகளின் பின்விளைவுகளை நாம் எதிர்கொண்டுதான்; ஆகவேண்டும். நாங்கள் எங்கள் மக்களுக்குப் பதில்சொல்ல வேண்டியவர்கள். அவர்களுக்காக சரியான முடிவுகளை நாங்கள்தான் எடுக்கின்றோம். பழைய பிலிப்பைன்ஸ்ää பழைய இலங்கைää பழைய கிழக்குப் பாகிஸ்தான் மற்றும் பலநாடுகளைப் பாருங்கள். இந்த நாடுகளுக்கும் இடங்களுக்கும் நான் போயிருக்கிறேன். 1956ம் ஆண்டில் முதன்முதலாக கொழும்புக்குச் சென்றிருந்தபோது அது சிங்கப்பூரை விடச்சிறப்பான நகரமாக இருந்தது. சிங்கப்பூர் மூன்றரை வருடகாலம் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குக்கீழ் இருந்ததும் கொழும்பானது மவுண்ட் பேட்டனுடைய தென்கிழக்காசிய கட்டளைப்பீடத்தின் மையமாக அல்லது தலைமையகமாக இருந்ததும்தான் அதற்குக் காரணமாகும். அவர்களிடம் ஸ்ரேலிங் பவுண்களில் சேமிப்புகள் இருந்தன. அவர்களிடம் இரண்டு பல்கலைக்கழகங்கள் இருந்தன. கல்வியூட்டப்பட்ட திறமைசாலிகள் இருந்தனர். அமெரிக்க மிதவாதிகளும் பிரித்தானிய மிதவாதிகளும் சொல்வதை நீங்கள் நம்புவதானால் அவர்கள் செழித்தோங்கியிருக்கவேண்டும். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. ஒரு ஆளுக்கு ஒரு வாக்கு என்பது தமிழ் சிறுபான்மையினருக்கு மேல் சிங்களப் பெரும்பான்மையினர் மேலாதிக்கம் கொள்ளவே உதவியது. செயல்முனைப்பும்ää புத்திசாலித்தனமும் கொண்ட இந்த தமிழ் சிறுபான்மையினர் கடுமையாக உழைத்தார்கள். ஆதற்காகவே தண்டிக்கவும் பட்டார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டார்கள். சிங்களம் ஆட்சி மொழியாகியது இரண்டு பல்கலைக்கழகங்களிலும் அவர்களுக்கு கோட்டா வழங்கப்பட்டது. இப்போது அவர்கள் வெறிகொண்ட புலிகளாகிவிட்டார்கள். இப்போது நினைத்துப் பார்க்கும் பொழுது துங்கு புத்திசாலித்தனமாக நடந்துகொண்டார். என்றுதான் தோன்றுகிறது. (துங்கு என்பது மலேசியப் பிரதமராக இருந்த துங்கு அப்துல் ரஹ்மானைக் குறிக்கிறது. இவரது ஆட்சியின் கீழ்தான் சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்தது ஆட்சியமைப்பை நெகிழ்ச்சியுள்ளதாக்கும் யோசனையை நான் முன்வைத்தேன். “இல்லை வெட்டொன்று துண்டு இரண்டாக செல்வோம். நீங்கள் உங்கள் வழியில் போங்கள்” என்று அவர் சொன்னார். பலவீனமான தலைவர்களையும் தவறான தலைவர்களையும் கொண்டிருந்ததாலயே அவர்கள் (சிறிலங்கா மக்கள்) வெற்றிபெறத்தவறிவிட்டார்கள். இணைப்பு : newstamilnet.com

24 June, 2006

கருணா குழுவை அடக்கினால் தாக்குதல்களை நிறுத்துவீர்களா?

இரு வாரங்களுக்கான தற்காலிக பயிற்சித் திட்டமாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னெடுத்துள்ள அந்தரங்க முன்னெடுப்புக்கள், சிறிலங்கா அரசியல் உலகை அதிர வைத்துள்ளன. சண்டே லீடர் வெளியிட்டுள்ள அதிர்ச்சிதரும் செய்தியின் படி, துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் தாக்குதல்களை முற்றுமுழுதாக நிறுத்திக் கொண்டால், விடுதலைப் புலிகளும் இராணுவத்தின் மீதான தாக்குதல்களை முற்றாக நிறுத்த முன்வருவார்களா என்று இரகசிய ஒப்பந்த ரீதியாக வினவியுள்ளார் என்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழிலிருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் ஆசிரியர் என்.வித்யாதரன் மற்றும் அதன் வெளியீட்டாளர் ஈ.சரவணபவன் ஆகியோரிடம், கடந்த செவ்வாய்க்கிழமை (20.06.06) மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டதன்படி, இராணுவமும், விடுதலைப் புலிகளும் போரை ஆரம்பிக்கும் நிலையில் உள்ளதால், இதை நிறுத்த ஒரு மாற்று உத்தியை தான் முன்னெடுக்க யோசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரையும் கடந்த செவ்வாய்க்கிழமை மகிந்தவின் உத்தியோகபூர் வாசஸ்தலத்தில் சந்தித்த மகிந்த, இதற்கான இணக்கப்பாட்டை விடுதலைப் புலிகளிடமிருந்து கண்டறிந்து தனக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். போரொன்று ஆரம்பிக்கும் பட்சத்தில், சிறிலங்காவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிப்படையலாம் என்று குறிப்பிட்ட மகிந்த, சிறிலங்காவின் அனைத்து சமூகங்களும் இதனால் பாதிப்படைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்ததுடன், நோர்வேயின் அனுசரணையில் தங்கியிருக்காது, அவர்களை விலக்கிவிட்டு, நேரடிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அவசியம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தகைய நேரடிப் பேச்சுவார்த்தைகளில் காணப்படும் இணக்கப்பாட்டை அமுல்படுத்த இரு வாரங்களுக்கு முயற்சித்துப் பார்த்து, அதில் வெற்றி காணும் பட்சத்தில் அந்த வெற்றியைத் தொடர்ந்து செயற்படுத்த இருதரப்பும் முயலலாம் என்றும் அவர் விளக்கியுள்ளார். இந்த இருவார காலப்பகுதியில், விடுதலைப் புலிகள் மீதோ அல்லது பொதுமக்கள் மீதோ, கருணா குழுவினர் எதுவித தாக்குதல்களையும் தொடுக்காது இருக்க தான் பொறுப்பெடுக்க முடியும் என்று தெரிவித்த மகிந்த, இத்தகைய இருவார நேரடி போர் நிறுத்தத்திற்கு விடுதலைப் புலிகள் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர்களிடம் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் இந்தக் கோரிக்கையை, உதயன் நாளேட்டைச் சேர்ந்த இவ்விருவரும் கடந்த புதன்கிழமை கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வனிடம் விளக்கியதாகவும், அதற்கான பதிலை விடுதலைப் புலிகள் பின்னர் தெரிவிப்பதாக அவர்களிடம் கூறிவிட்டதாகவும், சண்டே லீடர் மேலும் தெரிவித்துள்ளது. நன்றி>புதினம்.

யாழ். குடாநாட்டில் மாவீரர் துயிலுமில்லம் தாக்குதல்.

யாழ். குடாநாட்டில் மாவீரர் துயிலுமில்ல தாக்குதல்களை கண்டித்து மக்கள் போராட்டம். யாழ். குடாநாட்டில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை அரச படையினரும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணைப்படையினரும் சேதப்படுத்தியமையைக் கண்டித்து இன்று சனிக்கிழமை குடாநாடு தழுவியபூரண ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய விழிப்புணர்வு கழகம் அழைப்பு விடுத்துள்ளது. இன்று வீடுகளை விட்டு மக்கள் வெளியில் வரமால் வர்த்தக நிலையங்கள் முடியும் போக்குவரத்தை நிறுத்தியும் தமது எதிர்பை மக்கள் தெரிவிக்க வேண்டும் என தேசிய விழிப்புக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நன்றி>புதினம்.

23 June, 2006

பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு என்று இந்திய எழுத்தாளரான கேரளத்தைச் சேர்ந்த கமலாதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஆனந்த விகடன் இதழுக்கு அவர் அளித்த நேர்காணலில் இது தொடர்பில் இடம்பெற்றுள்ளதாவது: உங்களுக்குப் பிடித்த தமிழர் என்று யாரைச் சொல்வீர்கள்? அதிர்ச்சி அடையாதீர்கள். எனக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை மிகவும் பிடிக்கும். இலங்கையில் நான் தங்கியிருந்தபோது அந்த அமைப்புடன் எனக்கு நிறைய பழக்கம் இருந்தது. பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு. விடுதலைப் போராளிகளுக்கும் சுயநலங்களுக்காகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. வன்முறையை விடுதலைப் புலிகள் கையில் எடுத்திருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டுவதை விட ஏன் எடுத்தார்கள் என்ற கார்ணத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதுதான் தீர்வுக்கான ஒரே வழி என்றார் கமலாதாஸ். நன்றி>புதினம்.

சுயமாகத் தீர்மானிக்கக் கூடிய ஆளுமை ஏதுமற்றவர் ராஜபக்ச.

எந்த ஒரு பிரச்சனையிலும் சுயமாகத் தீர்மானிக்கக் கூடிய ஆளுமை ஏதுமற்றவர் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச என்று தமிழீழத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு சாடியுள்ளார். விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிய கருத்துப் பகிர்வு நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.06.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்: ராஜ்பக்சவின் கதிரை இப்போது ஆடத் தொடங்கிவிட்டது. யார் ராஜபக்சவை கதிரையில் உட்கார வைத்தார்களோ அவர்களே கதிரையை ஆட்டவும் தொடங்கிவிட்டனர். உண்மையான செயல்பூர்வ அர்த்தத்தில் ராஜபக்சவை கதிரையில் அமர்த்திய முதலாவது அணியினர் தமிழீழ விடுதலைப் புலிகள்தான். இரண்டாவது அணியினர்தான் ஜே.வி.பி.யினர். ஜே.வி.பி.யினர் ராஜபக்சவோடு தோளோடு தோள் கை கோர்த்து நின்று கதிரைக்கு அழைத்து வந்தனர். ஆனால் ராஜபக்சவை விடுதலைப் புலிகள் கதிரைக்கு அழைத்து வந்த விதமோ மிகவும் விநோதமனது. உண்மையிலேயே அவர்கள்தான் அதனை சாத்தியமாக்கியவர்கள் கூட. ராஜபக்சவை கதிரையில் ஏற்றிய இருவருமே உண்மையில் அவரது பரம எதிரிகளாவர். ராஜபக்சவுடன் சேர்ந்து அவரை கவிழ்ப்பதற்காக கூட்டுச் சேர்ந்தவர்கள் ஜே.வி.பி.யினர். ராஜபக்சவுடன் சேர்ந்து அவருக்கு மேலாக வளர முற்பட்ட சக்தியினர். விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் அவர்களது நோக்குநிலையும் தந்திரோபாயமும் வேறானதாக இருந்தது. மனதால் எதிரியாக இருந்தாலும் செயலால் ராஜபக்சவை கதிரையில் அவர்கள் அமர்த்தினர். இப்போது இந்த இரு எதிரிகளும் கதிரையை ஆட்டத் தொடங்கிவிட்டனர். அதாவது முற்பகுதியில் நண்பர்கள்- பிற்பகுதியில் எதிரிகள். நண்பர்களும் எதிரிகளுமாக இருந்த இரு அணியினரும் ராஜபக்சவின் கதிரையை உலுக்கத் தொடங்கியிருப்பதிலிருந்துதான் இலங்கையின் உள்நாட்டு அரசியலை எடைபோட வேண்டியுள்ளது. கதிரையில் அமர்ந்திருக்கும் ராஜபக்சவின் சுயமான ஆளுமையானது கதிரையில் அவரை எவ்வளவு காலத்துக்குத் தாக்குப் பிடித்திருக்க வைத்திருக்கும் என்பது ஒரு கேள்வி. சிறிலங்காவில் சீர்கெட்டிருக்கும் அரசியல் பின்னணியில் ராஜபக்சவின் ஆளுமையானது எத்தகைய பாத்திரத்தை வகிக்க வல்லவது என்பதை எடைபோடுவது அவசியமாகும். ஏனெனில், அவருக்கு ஊடாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அவரே அந்தக் கதிரையில் இருந்து தீர்மானங்களுக்கு பொறுப்பானவராக உள்ளார். தான் கதிரையில் அமர்வதற்கு செய்யக்கூடிய எல்லா உத்திகளையும் அவர் செய்யத் தொடங்கினார். அதில் ஒன்றுதான் அவரது மகிந்த சிந்தனை என்கிற தேர்தல் விஞ்ஞாபனமாகும். உண்மையில் மகிந்த சிந்தனை என்பது கால கட்டத் தேவைகளுக்கு சற்றுப் பொருத்தமில்லாத ஒன்று. அது வெற்று வேச கோசமாகும். அந்த வெற்று வேச கோசமானது செயல்பூர்வ அர்த்தத்தில் எத்தகைய பாத்திரத்தையும் வகிக்க முடியாது. மகிந்த சிந்தனை என்கிற அதனடிப்படையில்தான் தான் கதிரையில் அமருவதற்கான அடித்தளத்தை சிங்கள மக்கள் மத்தியில் அவர் உருவாக்கினார். ராஜபக்ச பதவிக்கு வந்தபோது அவரது பிறந்தநாள் பரிசாக அரச தலைவர் பதவி கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்த பிறந்தநாள் பரிசை உண்மையில் விடுதலைப் புலிகள்தான் கொடுத்தனர். ஆனால் இப்போது அந்த பிறந்தநாள் பரிசையும் இலகுவில் தட்டிப் பறிக்கக் கூடிய வித்தைகளைக் கொண்டவர்களாக அவர்கள் இருக்கின்றனர். இதுதான் வரலாற்றில் மிகவும் சுவராசியமான எதிர்முரணாகும். ஒரு அரசைப் பொறுத்தவரையில் அதிகாரப்பூர்வமான வார்த்தைகளில் பார்ப்பதானால் அந்த நாட்டின் தலைவராக காணப்படுகிற அரச தலைவர் அல்லது தீர்க்கமான தலைவராகக் காணப்படுகிற பிரதமர் என்பவர்தான் முக்கியமானபாத்திரம் உள்ளவர்களாகக் காணப்படுவர். அரச தலைவரையும் பிரதமரையும் விட இராணுவத் தளபதிதான் அந்நாட்டின் பாதுகாப்புக்கும் பாதுகாப்பின் பேராலான மிடுக்குக்கும் பொறுப்பானவர். அரச தலைவர் பதவியேற்கும் போது முப்படை மற்றும் காவல்துறையினரால் அரணமைக்கப்பட்ட நிலையில்தான் பதவியேற்கிறார். அப்படியென்றால் ஆயுதப் படையினர் மிகவும் முக்கிய சக்தியானவர்கள். சிறிலங்காவில் மிகவும் பிரதானமாக இருப்பது இராணுவமாகும். அந்த இராணுவத் தளபதியினது மிடுக்கும் ஓர்மமும் அரசியலில் ஒரு காத்திரமன பாத்திரத்தை வகிக்க வல்லது. இப்பின்னணியில்தான் அரச தலைவரும் தனது மிடுக்கை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். இப்போது அந்த தளபதியினது வீழ்ச்சியானது- தாக்குதல் மூலம் அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியானது அரச தலைவரை ஓரளவு செயலற்ற நிலைக்கே தள்ளியுள்ளது. அந்த இராணுவ தளபதியின் வீழ்ச்சியை குறியீட்டு அர்த்தத்தில் எடுத்துக் கொள்வோம். அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் தன்னுடன் உரையாடிய பலரிடமும் அரச தலைவர் ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார். முதலாவதாக பதவிக்கு வருவதுதான் பிரச்சனை என்றும் பதவிக்கு வந்தால் தன்னால் பிரச்சனையைக் கையாள முடியும் என்றும் நம்பிக்கையை வெளியிட்டிருந்தார். ஒருவகையில் அவரிடம் கற்பனை இருக்கவே செய்தது. பதவிக்கு வந்த பின்பு ஜே.வி.பி.யினரையும் விடுதலைப் புலிகளையும் தன்னால் இலகுவாகக் கையாண்டுவிட முடியும் என்று அவர் நம்பினார். ஆனால் யதார்த்தம் அதற்கு நேர் முரணாகவே இருக்கிறது. ராஜபக்ச பதவிக்கு வந்தபோது இருந்த கற்பனை நடைமுறையில் சாத்தியமற்றதாகவே காட்சியளிக்கிறது. அவரது மகிந்த சிந்தனை என்பது எவ்விதமான திட்டமுமில்லாத முழு நீளமான கற்பனாவாதமாகக் காணப்படுகிறது. அவர் இப்போது எதுவித அரசியல் பொருளாதாரத் திட்டத்தை கொண்டிருக்கவில்லை. அதற்கான நடைமுறையையும் கொண்டிருக்கவுமில்லை. இப்படியான ஒரு தலைவன் நாட்டுக்கு இருக்க முடியாது. ராஜபக்சவிடம் இலங்கைத் தீவு பற்றிய எதுவிதமான பார்வையும் இல்லை. அவர் பதவிக்கு வந்தபோது அவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் படர்ந்திருந்தது உண்மைதான். ஆனால் அந்த ஒளிவட்டம் மிக விரைவில் கரைந்து போய்விட்டது. அவர் தன்னைச் சூழ்ந்திருக்கக் கூடிய ஒளிவட்டத்தைக் காப்பாற்றக் கூடிய திட்டத்தையும் ஆளுமையையும் அவர் கொண்டிருக்கவில்லை. இனப்பிரச்சனைக்கான தீர்வு காண்பதில் தீர்க்கமான போக்குகளை அவர் கொண்டிருக்கவில்லை என்பதும் அவர் இயல்பில் சுயமாகத் தீர்மானம் எடுக்கக் கூடிய திறமையற்றவராகவே அவர் எப்போதும் காணப்பட்டிருக்கிறார். அவர் வாழ்நாளில் சுயமாகத் தீர்மானமெடுத்து அரசியல் ரீதியாக திட்டங்களை நிறைவேற்றியவராக இல்லை. இனியும் அவரால் சுயமாக ஒரு திட்டத்தைத் தீர்மானித்து சுயமாக நிறைவேற்ற முடியும் என்பது முடியாதது. எதிர்காலப் பார்வை ஏதுமற்ற ஒரு தலைவனாகவே ராஜபக்ச எம்முன் காட்சியளிக்கிறார். எந்த ஒரு பிரச்சனையையும் கையாளக் கூடியவராக அவர் இல்லை என்பதை அவரைச் சூழ்ந்திருப்பவர்கள் கண்டுகொள்கிறார்கள். உண்மையிலே அவரின் அடிப்படை எதிரிகளாக ஐக்கிய தேசியக் கட்சியினரும் சந்திரிகா அணியினரும் ஜே.வி.பியினரும் கட்டங்களைப் பயன்படுத்தி தம்மை முன்நிறுத்தத் தொடங்கிவிட்டனர். ராஜபக்சவைப் பொறுத்தவரை நான்கு முனைகளிலும் அவருக்கு எதிரிகள் உள்ளன. நண்பர்கள் எவரும் இல்லை. ஒரு புறம் புலிகள்- மாற்றுக் கருத்துக்கு இடமற்ற- விட்டுக்கொடுக்கப்பட முடியாத உரிமைகளின் பொருட்டு அவர்களின் நிலைப்பாடு உறுதியான தளத்தில் செயற்படத் தொடங்கியிருக்கிறது மறுபக்கம் ஜே.வி.பியினர் சூழலைப் பயன்படுத்தி பிரச்சனைகளைக் கிளறி அவற்றின் மூலம் தம்மை வளப்படுத்துவதற்கான வாய்ப்புகளைத் தேடுகின்றனர். இந்தப் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியினரும் தீர்வுத் திட்டம் தொடர்பிலான செயற்பாடுகளில் பங்கேற்பதில்லை என்று தெரிவித்துவிட்டனர். மறுபக்கமாக அரசாங்கத்தின் மீதான தாக்குதலை புரிந்துள்ளனர். சுதந்திரக் கட்சியில் தலைமைக்காகப் போராடுவதற்காக பண்டாரநாயக்க குடும்பம் புறப்பட்டுவிட்டது. சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை சந்திரிகா இன்னமும் விட்டுவிடவில்லை. சந்திரிகா இப்போது ஒரு பதவியிலும் இல்லாமல் இருக்கலாம். அதாவது அரசியலில் தீர்மானம் எடுக்கக் கூடிய அமைச்சுப் பதவியோ நாடாளுமன்ரப் பதவியோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரை இன்றும் சிங்கள மக்கள் தேசிய சின்னமாகக் கருதுகின்றனர். ராஜபக்சவின் செயற்பாடுகள் காத்திரமானதாக இல்லாதபோது- இலங்கைத் தீவு நெருக்கடிக்குள்ளாகிறபோது தங்கள் கட்சிக்குள் இன்னொரு காத்திரமான தலைவராகக் காணக்கூடிய சந்திரிகா தொடர்ந்தும் இருக்கிறார். அப்படியென்றால் ராஜபக்சவை பொறுத்தவரையில் முடிவடையாத உட்கட்சிப் போராட்டத்தில் இழுத்துவிடப்பட்டுள்ளார். உள்நாட்டு- வெளிநாட்டு சிக்கல்களுக்குள்ளும் மாட்டுப்பட்டுள்ளார். இப்பின்னணியில் இலங்கைத் தீவின் அரசியல் மேலும் மேலும் சீரழிந்து- குழப்பகரமானதாகவே இருக்கக் கூடியதாகவும் உள்ளது என்றார் திருநாவுக்கரசு. ´ நன்றி>புதினம்.

22 June, 2006

கண்காணிப்புக் குழுவினரை வெளியேற்ற சிறிலங்கா எதிர்ப்பு

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடையை விதித்திருப்பதன் மூலம் ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்கள் நடுநிலையோடு செயற்பட மாட்டார்கள் என்பதால் அவர்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வலியுறுத்தினர். கிளிநொச்சியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நோர்வேத் தூதுவருடனான சந்திப்பின் போதும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் இதனை வலியுறுத்தினார். ஆனால் விடுதலைப் புலிகளின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் இன்று வியாழக்கிழமை நிராகரித்திருப்பதாக அசோசியேட் பிறஸ் நிறுவன செய்தி தெரிவித்துள்ளது. நன்றி>புதினம்.

தமிழீழஅரசை புலிகள் இயங்குகின்றனர் - AP செய்தி நிறுவனம்.

சிந்தனையையும், யதார்த்தத்தையும் அடிப்படையாகக் கொண்ட தமிழீழ அரசை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கி வருவதாக AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் வன்னிப் பெருநிலப்பரப்பில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட செய்தியாளர் ஒருவரின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கும் AP செய்தி நிறுவனம், தென்னிலங்கையில் பயன்படுத்தப்படும் சிறீலங்காவின் வரைபடம், உண்மை நிலையை பிரதிபலிபக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. தமிழீழ நடைமுறை அரசு என்பது வெறும் கற்பனை என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள போதும், கள யதார்த்தம் வடக்குக் கிழக்கில் தமிழீழ தனியரசு இயங்குவதை உணர்த்தி நிற்பதாகவும், AP செய்தி நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. கிளிநொச்சியை தலைநகராகக் கொண்;டு, எல்லையில் குடிவரவு - குடியகல்வு - சுங்க நிர்வாகத்தையும், உள்ளே காவல்துறை, கல்விக் கட்டமைப்பு, வரியிறுப்பாளர்கள், விளையாட்டுத்துறை போன்ற அரசுக்கு உரித்தான சகல கட்டமைப்புக்களையும், விடுதலைப் புலிகள் கொண்டிருப்பதாகவும், AP செய்தி நிறுவனம் குறிப்பிட்டள்ளது. நன்றி>புதினம்.

21 June, 2006

எச்சரிக்கை!!! படங்கள் கோரமானவை.

வங்காலை படுகொலைகள் காட்சிவடிவில், சிறுவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும். http://www.sankathi.org/vankaalai.html நன்றி<சங்கதி ஏதுமறியாத எம் பிள்ளைகளை அமுக்கிநித்திரையிற் கொல். நிலத்திற் காலுரசத் தூக்கிலிடு. உரித்துச் சதையாக்கிப் பங்கிடு. உறிஞ்சிய இரத்தம் கலந்து கறியாக்கிஎச்சமின்றி சுவைத்துச் சாப்பிட்டு ஏப்பமிடு. பின்னர் பிள்ளைகளின் தாயைப்பிடி. அவள் கணவன் முன்னே கவுணைத்தூக்கிபிணத்தைப் புணருதலுக்கு ஒப்பாகவெறி தீரும் வரையும் முயங்கு. முடிந்ததும் பாதியுயிர் போயிருக்கும்மீதியையும் வெளியேற்றி வீசிப்போ. கணவனை மட்டும் ஏன் விடவேண்டும்?பிடித்து மடக்கி முறி. வதையின் வலியோலம் வெளியேறாதவாறுசோறளித்த உளியாலேயேதோண்டிசுவரோரம் எறிந்து செல். ஏனென்று கேட்கமுடியுமா உன்னையெவரும்?உன் கனத்த சப்பாத்தின்கீழே கசங்குவது தானேஎம் அடிமை ஜீவிதம்? நேற்று நிலவெறித்த இரவில்உன்னைப் பிடித்துலக்கிய உடற்பசி வடிந்திருக்கும். எங்கள் நெஞ்சில் கொதிப்புறும் நெருப்புக்குவடிகால் ஏது? வெசாக் நாளில் மாடுரித்த ஒருவனுக்குபத்தாண்டு ஒறுப்பளித்த பௌத்த பூமியே!என்ன தீர்ப்பு வழங்குவாய் இதற்கு? நாளை நாடாளுமன்றம் கூடும்போதுகண்டனத் தீர்மானம் கொண்டு வருவர் சிலர். செங்கோலேந்திய சேவகன் முன்னேவரசபாநாயகர் சபைக்கு வருவர்வங்காலைக்கு மட்டும் பதில் வரமாட்டாது. பனிஉறையும் தேசத்து குளிர் மலைச்சாரலுக்குபேசலாம் வருகவென அழைத்துச் சென்றவர்களுக்கும்வங்காலையின் வலிக்குரல் கேட்டிருக்காது. தங்கள் கதவுகளைச் சாத்திகாற்றின் வழிகளை அடைக்கும் ஒன்றியமும்இந்த உயிர் வதையைக் கணக்கிலெடுக்கப்போவதில்லை. எங்களை என்ன செய்யச் சொல்லுகின்றனர்எல்லோரும்? கண்காணிக்க வந்துள்ளமுன்னைய களமுனை அதிகாரிகளே!பிணத்தின் முன்னே தொப்பி கழற்றவும்மணக்கும் பிணக்குழி தோண்டி எடுக்கவும்காய்ந்து கிடக்கும் கசங்கிய மலர்களைகணக்கிலெடுக்கவும் தானாநீங்கள் இங்கே காத்திருப்பது? கதிர்காம அழகி “மன்னம்பெரி”யைதென்னிலங்கைப் பேய்கள் குதறியபோதுஎதிர்ப்புக்குரல் முதலில்எங்களிடம் இருந்துதான் வந்தது.“சூரியகந்த” புதைகுழிகளைதோண்டியெடுத்து விசாரணையை தொடக்கு என்றுமுதற்குரல் இங்கிருந்துதான் எழுந்தது. மனிதம் சாகாது கொஞ்சமாயினும் எஞ்சியிருக்கும்சிங்களத் தோழர்களே!தோழியரே!பதிலுக்கு எதிர்பார்க்கின்றோம் உங்களிடமிருந்துஒரு பதிலை. தொடரும் எல்லாக் குற்றங்களுக்கும்இங்கொரு சித்திரபுத்திரன் கணக்கெழுதுகிறான். எழுதும் குறிப்பேடு நிறைந்து வழிகிறதுகுற்றங்களாக வங்காலை வரை. நாளை கைகட்டிக்கொண்டுதரும சபையிற் தலைகுனிந்து நிற்பீர்வழங்கும் தண்டனைகளுக்காக. ஒன்று மட்டும் உறுதிதீர்ப்பெழுதும் கணம் வரைஉம்மைத் திருத்தவே முடியாது. - தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை-

20 June, 2006

புலம்பெயர் துணைஇராணுவக் குழுவினரை வெளியேற்றுவோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை என்பது அவர்கள் பேச்சுவார்த்தை மேசையில் தொடர்ந்து இருப்பதற்காகத்தான் என்று பல இராஜதந்திரிகள் இப்போது நேரடியாகவே தெரிவித்து வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தலைமைப் பொறுப்பு வகிக்கும் நெதர்லாந்து நாட்டின் தூதுவர் விடுதலைப் புலிகளைப் பட்டியலிலிட்டதானது அமெரிக்காவின் நடவடிக்கை போன்று காட்டமானது அல்ல என்றும் விடுதலைப் புலிகளைப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காகவே இப் பட்டியலிலிடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறியுள்ளார். அமெரிக்கா பட்டியலிலிட்டதன் மூலம் விடுதலைப் புலிகளிற்கு "யுத்தத்திற்காக" நேரடியாக நிதி சேர்ப்பதைத் தடை செய்துள்ளதுடன், விடுதலைப் புலிகளுடன் இராஜதந்திரத் தொடர்பைப் பேணுவதில்லை என்பதுமாகவே இருக்கிறது. அதனைத் தவிர அமெரிக்காவில் எந்தவித நடவடிக்கைகளிற்குமே தடை விதிக்கப்படவில்லை. தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் மாவீரர் விழா நிகழ்வுகள் உட்பட அனைத்து நிகழ்வுகளுமே அங்கே அனுமதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் நிர்வாகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கும் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை வழங்கி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கான அன்பளிப்புக்களுக்கு வரிவிலக்கு அளித்துள்ளது. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் பட்டியலிலிடுதல் அமெரிக்காவைப் போன்று வலியது ஒன்றல்ல என்ற கூற்று தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பான நிலைகளில் பெரிதான மாற்றங்கள் எதனையும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வரப்போவதில்லை என்பதே ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரின் வாய்வழி வந்த உண்மையாக இருக்கலாம். ஆனாலும் அந்நாடுகளுக்கு விடுதலைப் புலிகள் பயணம் செய்வதென்பது பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் நீக்கப்படும் வரை தடைப்பட்டதாக இருக்கும். கனடாவும் விடுதலைப் புலிகளைப் பட்டியலிட்ட போதும், இதற்குத் தான் விதிவிலக்கு என்று தெரிவிக்கும் விதமாக பேச்சுவார்த்தையை கனடாவில் நடத்த ஒத்துழைப்பதாகவும் இது தொடர்பிலான தமது விருப்பை நோர்வேயிடம் தெரிவித்துள்ளதாகவும் அது கூறியிருந்தது. இந்நாடுகள் என்ன வியாக்கியானங்களைத் தெரிவித்தாலும் இப்பட்டியலிடுதல் என்பது ஒரு பக்கச்சார்பான நடவடிக்கையாகவே தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறது. இந்நாடுகளின் குடியுரிமை பெற்ற மக்களாக வாழும் புலம்பெயர் தமிழ்மக்களான எமக்கு இந்நடவடிக்கை ஏற்புடையதல்ல என்பது அந்நாடுகளுக்கு விளக்கும் பணி இப்போது நடைபெறுகிறது. அதனைக்கூட அந்நாடுகளின் அரசுகளுடன், இராஜதந்திரிகளுடன் நட்பான பாங்குடன் நயமாகவே எமது மக்கள் விளக்கி வருகிறார்கள். இப்பட்டியலிடுதல் என்கிற சாட்டை வைத்து தமிழர்களை அவர்கள் வாழும் நாடுகளில் ஆட்சியாளர்களிடமிருந்து அந்நியப்படுத்தலாம் என்கிற எதிரியின் ஆசையைத் தவிடு பொடியாக்கும் அளவிற்கு அரசு மற்றும் உயரதிகாரிகளுடனான நட்பான தொடர்பையே புலம்பெயர் சமூகம் தற்போது பேணி வருகிறது. இதற்கு மேலாக பல மேற்குலகப் பிரமுகர்களே இத்தடை தேவையற்ற, ஓரு பக்கச்சார்பான நடவடிக்கையென்றும், இருதரப்பினர் மீதும் அழுத்தம் கொடுப்பதே யதார்த்தம் என்றும் தெரிவித்துள்ளனர். இவையெல்லாம் ஒரு புறமாக இருந்த போதும், தற்போதைய முறுகல் நிலைக்கான பூரண காரணகர்த்தாக்கள் துணை இராணுவக் குழுக்களே. அவைகளின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்கள் வடக்கு-கிழக்கில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று புரிந்துணர்வு ஒப்பந்த விதிக்கு முரணான இந்தத் துணை ஆயுதக்குழுக்களின் கொலை வெறியாட்டச் செயல்களே இன்றைய இந்நிலைக்கான காரணமாகும். இந்நிலையில் மீண்டும் சமாதான முயற்சிகள் துளிர்க்க வேண்டும் என்றால் துணை இராணுவக் குழுக்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு மேற்குலகு அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டிய சூழ்நிலையைப் புலம்பெயர் தமிழர்கள் மேலும் அதிகரிக்க வேண்டும். மேற்குலக நாடுகள் மனிதாபிமானத்தை பெரிய அளவில் மதிப்பவர்கள். அதற்காக எப்போதுமே உரத்துக் குரல் கொடுப்பவர்கள் என்ற காரணத்தை முன்வைத்தே, "பயங்கரவாதப்" போர்வையில் அவர்கள் மீதான சேறுபூசலை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வந்தது. இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்ட அரசானது தனது படைகளினூடாகவும், துணை இராணுவக் குழுக்களினூடாகவும் மிகவும் மிலேச்சத்தனமான மனிதவுரிமை மீறல்களை மேற்கொண்டு வருகிறது. சிறிலங்கா அரசாங்கப் படைகள் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களின் நடவடிக்கைகள் தற்சமயம் சர்வதேசத்தின் அவதானத்திற்கு பூரணமாக உள்ளாகிவிட்டன. இக்கொடூரச் செயல்களுக்குக் காரணகர்த்தாக்கள் என்று சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட பல சர்வதேச அமைப்புக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளன. இருப்பினும் இத்தகைய கொடூரச் செயல்களை மேற்கொள்கிற சிறிலங்கா அரசாங்கப் படை மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களின் நபர்கள் மேற்குலகுக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வருகை தந்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது பாராமுகமாக இருக்கும் அல்லது இந்த விடயத்தை பாரதூரமாக எடுத்துக் கொள்ளாத மேற்குலக நாடுகளுக்கு நாங்கள் இப்போது அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் பயணத்திற்கே அனுமதிக்காத நாடுகளுக்கு அல்லைப்பிட்டியில் ஒன்பது பேர் உட்பட பல அப்பாவிகளின் படுகொலைகளில் நேரடியாக தொடர்புடைய ஈ.பி.டி.பி. துணைக்குழுவானது சிறிலங்கா அரசின் தயவில் பயணம் மேற்கொள்வதை அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். விடுதலைப் புலிகளின் மீதான இப்போதைய தடைகளுக்கு முன்னேற்பாடாக வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளால் தமிழ் மக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றனர் என்ற கோதாவில் அறிக்கை தயாரித்து வெளியிட்ட மனிதவுரிமை கண்காணிப்பு அமைப்பிற்கு இராணுவத் துணைக்குழுவின் பிரதிநிதிகளே உதவினார்கள் என்பதையும் வெளிக்கொணர வேண்டும். அந்த அறிக்கை தயாரிப்பிற்கான இங்கிலாந்தின் நெருங்கிய தொடர்பாளராக அடையாளப்படுத்தப்பட்டவரான ராமராஐன் என்பவர் ஒரு மோசமான குற்றவாளியாக சுவிசில் சிறைவாசம் அனுபவிப்பதையும், கனடாவில் தொடர்பாளரான டேவிட்சன், டென்சில் ஆகியோர் ஈ.பி.டி.பியின் முக்கிய பிரமுகர்கள் என்பதையும் வெளிக்கொணர்ந்து அந்த அறிக்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்க வேண்டும். இது போன்றே மற்றைய ஐரோப்பிய நாடுகளிலும் அந்த அமைப்பால் பயன்படுத்தப்பட்ட நபர்கள் குற்றங்களின் குறிப்புக்களாக, தமிழ்ச் சமூகத்திலிருந்து விடுபட்டு அந்நியப்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள் என்பதையும், துணை இராணுவக் குழுவின் பிரதிநிதிகள் என்பதையும் ஆதாரப்படுத்த வேண்டும். சிறிலங்காவின் ஜனநாயகத்திற்குள் தாங்கள் இரண்டறக் கலந்து விட்டதாக அவர்கள் வெளிப்போக்கிற்குக் கூறினாலும், துணை இராணுவத்திற்கான சம்பளப்பட்டியலில் இருந்து கொண்டு சொந்த இனத்தையே அழிக்கின்றவர்கள் என்பதையும், படை முகாம்களிலேயே, படையினரின் பாதுகாப்புடனேயே அவர்கள் தங்கியிருக்கிறார்கள் என்பதையும் முக்கியப்படுத்த வேண்டும். அதேபோன்று இக்குழுக்களின் வெளிநாடுகளிலுள்ள பிரதிநிதிகள் தங்களை மனிதநேய அமைப்புக்களின் போர்வைக்குள் புகுத்த முயன்றாலும், அவர்கள் மீதான குற்றப்பட்டியல்களானது அவர்கள் கொடூர கொலைஞர்கள், பயங்கர அமெரிக்க எதிர்ப்பாளர்கள் என்ற உண்மைகளைப் புடம் போட்டுக் காட்டிவிடும். எனவே சில உயிரற்றுப் போன அமைப்புக்களின் போர்வையில் விடுதலைப் புலிகள் மீதான காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்யப் புறப்பட்டிருக்கும் இக் காலகட்டத்தில், இவர்கள் பற்றிய பயங்கரப் பக்கங்களை வெளிக்கொணர்ந்து இவர்களது நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவை இரண்டுமே காலந்தாழ்த்தாது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளாகும். குறிப்பாக இங்கிலாந்திலும் கனடாவிலும் இந்நபர்கள் பற்றிய விடயங்களை அரசு மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன், ஏனைய நாடுகளிலும் இவை படிப்படியாக மக்களால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும். எமது இந்தப் பரப்புரை மூலமாக, மேற்குலகு இக்குழுக்களின் மீது எடுக்கும் நடவடிக்கையே சமாதானத்திற்கான சூழ்நிலையை, தடைப்பட்ட பேச்சுவார்த்தை மீண்டும் உயிர் பெறுவதற்கு வழியேற்படுத்துவோம். நன்றி>புதினம்.

விமானக் குண்டுவீச்சு: சர்வதேச மன்னிப்புச் சபை கவலை.

தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்கா விமானப் படையினர் நடத்தும் விமானக் குண்டு வீச்சுக்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கவலை தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கை: கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவத்தைத் தொடர்ந்து பதில் விமானத் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை கவலை அளிக்கிறது. சம்பூர், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி அருகில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சர்வதேச மனித உரிமைகளை மீறி பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையிலான தாக்குதல் இது. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரும் இந்த விமானத் தாக்குதல்கள் யுத்த நிறுத்த மீறல் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் தேசிய பாதுகாப்புக்கு இந்த நடவடிக்கை அவசியமானது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்தப் பதில் குறித்து நாம் கவலை கொள்கிறோம். சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதலையடுத்து ஏப்ரல் மாதமும் இத்தகைய தாக்குதல்களை திருகோணமலை சம்பூரில் சிறிலங்கா அரசாங்கம் நடத்தியது. அத்தாக்குதலில் 15 பொதுமக்கள் உயிரிழந்ததாக கண்காணிப்புக் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது. ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையிலான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அதிகரிக்கும் வன்முறைகளில் சிக்கிக் கொள்ளும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது நீடித்து வரும் உக்கிரமற்ற போரினால் இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் நடைபெறக் கூடும் என்று நாம் கவலைகொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்த அறிக்கைக்கு பதிலளித்து சிறிலங்கா பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது: பொதுமக்களைத் தாக்குகிற திட்டத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர். அதைத் தடுக்க இந்த நடவடிக்கை ஒரு வழிதான் இந்தத் தாக்குதல். தேசியப் பாதுகாப்பு மிக முக்கியமானது. அனைத்து இன மக்களின் பாதுகாப்புக்குமான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். எமது தேசியப் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து எவரும் எழுப்பி கேள்வி எழுப்ப வேண்டியதில்லை. இத்தகைய கேள்விகள் எழுப்புவோர் ஏன் நாட்டின் பிரதேச ஒற்றுமைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்படுகிறார்கள் என்று கேள்வி எழுப்ப வேண்டும். இத்தகைய பதில் நடவடிக்கைகளின் போது பொதுமக்களின் பாதுகாப்பை நாம் கூடுமானவரை உறுதி செய்து கொள்கிறோம். ஆனால் விடுதலைப் புலிகள்தான் பேசாலையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்றார் கேகலிய ரம்புக்வெல. நன்றி>புதினம்.

19 June, 2006

தி.மு.க. கூட்டணி தலைவர்கள் இன்று அவசர கூட்டம்.

கருணாநிதி தலைமையில் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் இன்று அவசர கூட்டம்: இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து முக்கிய முடிவு முதல்-அமைச்சர் கரு ணாநிதி கடந்த வாரம் பெங் களூர் சென்றார். அங்கு சாப்ட்வேர் நிறுவனங்களை பார்வையிட்டார். பெங்களூரில் 10 நாட்கள் ஓய்வு எடுக்க அவர் முடிவு செய்தார். ஆனால் இலங்கை யில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள் ளதை தொடர்ந்து கருணாநிதி அவசரமாக இன்று சென்னை திரும்பினார். தி.மு.க. கூட்டணித் தலை வர்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. கருணாநிதி இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கு கிறார். காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்டு கம்ïனிஸ்டு, இந்திய கம்ïனிஸ்டு உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் மோதல் குறித்து ஆலோசிக்கப்படுகி றது. தமிழகத்துக்கு ஈழத் தமிழர்கள் அகதிகளாக வருவது குறித்தும் விவாதிக்கப்படு கிறது. பின்னர் இலங்கை பிரச்சினை குறித்து கூட்டத் தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. நன்றி>லங்காசிறீ

போர் தொடங்கினால் : சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை.

மீண்டும் இன்று வன்னியில் விமானத்தாக்குதல் தொடருகிறது. போர் தொடங்கினால் அனைத்து உத்திகளையும் கையாள்வோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு மின் அஞ்சல் ஊடாக அவர் அளித்த நேர்காணல்: தமிழ் மக்கள் மீது மற்றொரு கொடூர யுத்தத்தை சிறிலங்கா அரசாங்கம் திணிக்குமானால் இலங்கைத் தீவு முழுமைக்கும் அது விளைவுகளை ஏற்படுத்தும். தமிழ் மக்கள் மீது அத்தகைய கொடூரமான போரைத் திணித்தால் தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்காக எந்த ஒரு உத்தியையும் பயன்படுத்துவோம். தமிழர் தாயகத்திலிருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேறி மற்ற மக்களைப் போல் எமது மக்களும் இயல்பு வாழ்க்கை வாழ்ந்திருந்தால் இராணுவத்துடனான எமது மக்களினது அல்லது எங்களின் மோதல்கள் நடைபெற்றிருக்காது. இதனை சிங்களத் தரப்பு உணர்ந்திருந்தால் இந்தத் தீவில் அமைதி உருவாகி இருக்கும். தமிழ் மக்களினது உரிமைகள் நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வரும் நிலையில் இந்தத் தீவில் அமைதி ஏற்படாது. தமிழ் மக்கள் படுகொலைகளை நிறுத்துவதுதான் பதற்றத்தை தணிக்க ஒரே வழி. சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக்கொண்டபடி துணை இராணுவக் குழுக்களினது ஆயுதங்கள் களையப்பட வேண்டும். சிறிலங்கா அரசாங்கம் மற்றும் சிங்களத் தரப்புடன் பேச்சுக்களை நடத்தி தமிழ் மக்களின் அபிலாசைகளையும் உரிமைகளையும் வென்றெடுக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால் இவை நிராகரிக்கப்படுட்டு தமிழ் மக்கள் மீது மற்றொரு போர் திணிக்கப்பட்டால் நாம் ஒரு உறுதியான நிலைப்பாட்டுக்கு செல்ல நேரிடும் என்றா சு.ப.தமிழ்ச்செல்வன். நன்றி>புதினம்.

18 June, 2006

வரலாற்றின் வழிகாட்டுதலில் "கிளைமோர் முறியடிப்பு"

வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கிளைமோர்த் தாக்குதல்கள் என இப்போது தினசரி செய்திகள் வெளிவருகின்றன. சிறிலங்கா அரசின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவினரே இவ்வாறு விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவிச் சென்று இந்த தாக்குதல்களை நடத்துகின்றார்கள். இதற்கு துணை இராணுவக் குழுக்களின் உதவியும் தாராளமாகக் கிடைக்கின்றது. இருந்த போதிலும், அண்மையில் ஆழ ஊடுருவும் படையணிகளைச் சேர்ந்த பலர் விடுதலைப் புலிகள் விரித்த வலையில் அகப்பட்டுள்ளார்கள். இதில் படையினர் சிலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த முறியடிப்பானது பல உண்மைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. ஆழ ஊடுருவும் படையைப் பயன்படுத்தி எதிர்த்தரப்பினரது பகுதியில் தாக்குதலை நடத்துவது என்பது அமெரிக்காவின் தோற்றுப்போன ஒரு உத்தியாகும். வியட்நாம் போராளிகள் இறுதிக்கட்டமாக பிரான்ஸ் சமரசப் பேச்சுக்கள் இழுபறிப்பட்டு அமெரிக்கப் படைகளை விரட்டியடிக்க தயாரானபோது அதனை சிதைக்க ஆழ ஊடுருவும் படையணியை போராளிகளின் பகுதிகளுக்குள் தரை வழியிலும் இரகசியமாக உலங்குவானூர்திகளின் மூலமாகவும் கொண்டு சென்று ஊடுருவ விட்டு தாக்குதல்களை மேற்கொண்ட போதும் கடைசியில் அமெரிக்கப் படைகள் அவலப்பட்டே தப்பியோடின. அமெரிக்கப் படைகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக வியட்நாமில் வியட்கொங் போராளிகள் போராட்டம் நடத்தினர். போராளிகளின் கெரில்லா உத்திகள் அமெரிக்கப் படைகளை ஆட்டுவித்தன. 1960 ஆம் ஆண்டு காலப்பகுதிகளின் கடைசியில் பேச்சுவார்த்தை மூலம் போராட்டத்தை சிதைக்க நர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பிரான்ஸ் தலைநகரில் பேச்சுக்கள் நடந்தன. பேச்சுக்கள் இழுபறிப்பட்டன. பேச்சு-மோதல், பேச்சு-மோதல் என்று நாட்கள் நகர்ந்தன. இந்த நிலையில் பேச்சுக்களில் நம்பிக்கை இழந்த போராளிகள் போருக்குத் தயாராகினர். அமெரிக்கப் படைகளுக்கு எதிராக டெட் வலிந்த தாக்குதல் என்ற நடவடிக்கையை போராளிகள் தொடங்கினர். 1968 ஆம் ஆண்டில் தொடங்கிய டெட் நடவடிக்கை கட்டம் கட்டமாக நகர்த்தப்பட்டது. இதற்கிடையில் 1964 ஆம் ஆண்டில் காட்டுப்போர் முறையாக ஆழ ஊடுருவும் படையணி அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. 6 பேர் கொண்ட பட்டாலியன், 12 பேர் கொண்ட பிரிக்கேட் என்று பெரும் படையணிகளுக்கு இணையான 6 பேர், 12 பேர் கொண்ட இராணுவத்தினர் என்று அவை உருவாக்கப்பட்டன. டெட் நடவடிக்கை காலத்தில்தான் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனாலும் கட்டம், கட்டமாக டெட் தொடர்ந்தது. டெட் நடவடிக்கையில் இறுதிக் கட்டமாக அமெரிக்கப் படைகளை விரட்ட தயார்படுத்தல்களை போராளிகள் மேற்கொண்டனர். அதனை முறியடிக்க ஆழ ஊடுருவும் படைப்பிரிவு களம் இறக்கப்பட்டது. பல ஆயிரம் கிலோ மீற்றர்கள் தொலைவிலான போராளிகளின் நிலைகளையும் அவர்களின் உயர்மட்டத் தளபதிகளையும் அழிக்க உலங்குவானூர்திகளில் இரகசியமான முறையில் காடுகளுக்குள் இந்த அணிகள் இறக்கி விடப்பட்டன. இதில் அமெரிக்கர்களும் வியட்நாமிய துணை இராணுவக் குழுவினரும் இருந்தனர். அத்துடன் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த வியட்நாமியர்களை மக்களுக்குள் ஊடுருவ விட்டனர். அவர்கள் மக்களோடு மக்களாக விவசாயக் கூலிகளாவும், தொழிலாளர்களாவும் ஊடுருவினர். மக்களிடம் பேசி போராளிகளின் நிலைகள் பற்றி அறிய இந்த ஊடுருவல் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களைப் பொறுத்த வரை தமக்குத் தெரிந்ததை தன் சகோதரனுக்கோ, பிள்ளைகளுக்கோ கூட சொல்லாத இரகசியம் காத்தலின் மூலம் அங்கு போராளிகள் பற்றிய தகவல் ஆழ ஊடுருவும் அணிக்கு அந்த வகையில் கிடைக்கவில்லை. அமெரிக்க ஹொலிவூட் படங்களில் வருவது போல இந்த ஆழ ஊடுருவும் அணியினரால் பெரிய அழிவைப் போராளிளுக்கு ஏற்படுத்த முடியவில்லை. பல, பல அணிகளாக அமெரி;க்காவின் ஆழ ஊடுருவும் அணிகள் வியட்நாம் போராளிகளின் பகுதிளுக்குள் தீவிரமாக ஊடுருவ விடப்பட்டன. துணை இராணுவக் குழு, வியட்நாமியர்கள் புலனாய்வுத் தகவல்களுக்கு ஊடுருவ விடப்பட்டனர். உலகில் இந்த அணிக்கு அமெரிக்கா பெரும் பரப்புரை செய்து வியட்நாம் மக்களை பீதியுற வைக்கும் உளவியல் போரும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வியட்நாம் தளபதி ஜெனரல் கியாப்பின் முறியடிப்பு உத்திகள் அவர்களை கதிகலங்க வைத்தன. காடுகளை கரைத்துக் குடித்த போரளிகளுக்கு அமெரிக்கப் படைகளுக்கு கலக்கத்தை கொடுத்தது ஆச்சரியமான விடயம் அல்ல. கெரில்லாப் போராளிகளுக்கு இடையில் கெரில்லாப் போர் முறையினை ஒரு மரபாக கொண்டு வந்தபோது தொடக்கத்தில் திகைத்த போராட்ட அணியினர் ஒரு குறிப்பிட்ட காலத்தை அமெரிக்க உத்திகளை பகுப்பாய்வு செய்ய செலவிட்டனர். இதன் பின் அவர்களின் உத்திகளை கற்றுக்கொண்டு அவர்கள் முறியடிப்பை தொடங்கினர். இதன் விளைவாக அமெரிக்கத் தளங்களில் ஊடுருவி தாக்குதல்களை நடத்தி பெரும் போர்மூலம் அமெரிக்கப் படைகளை ஓட, ஓட விரட்டின. வல்லரசுப்படைகள் ஓடின. கடைசியில் கப்பலில் இருந்த உலங்குவானூர்திகள் மற்றும் பெரும் போர்க்கலங்களை கடலில் தள்ளி விட்டு தப்பியோடியதுதான் பெரும் அவலம். உலக விடுதலை வரலாறில் மிப்பெரும் வரலாறறுச் சாதனை அது. அதே அமெரிக்கச் சூத்திரத்தை சிறிலங்காப் படைகள் இங்கு மேற்கொள்கின்றன. தமிழரின் இறுதிப்போரை சிதைக்கும் நோக்கில் அமெரிக்கப் பாணி ஆழ ஊடுருவும் அணிளை கொண்டு தீவிரமாக தாக்குகின்றனர். அதன் பாணியை பகுப்பாய்வு செய்யும் காலம் முடிவடைந்து முறியடிப்புக்கான காலம் நகர்கின்றது. எதிரிகள் எதைச் செய்கின்றார்களோ அதுவே அவர்களின் அழிவுக்கு காரணமாகும் என்ற வரலாற்றின் முன்னோடியான வியட்நாம் தமிழீழ மக்களுக்கு படிப்பினையான ஒன்று. அமெரிக்கப் படைகளைப் போல சிறிலங்காவின் யாழ்ப்பாண இராணுவத்துக்கும் மன்னார் மற்றும் மட்டக்களப்பு இராணுவத்துக்கும் அவலம் காத்திருக்கின்றது. ஏனைய மாவட்டங்களில் காடுகள் வழி படையினர் சிங்கள தேசத்துக்கு தப்பியோடி விடுவர். அமெரிக்கா, வியட்நாமில் பொறியில் சிக்கியது போல இப்போது யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் படைகளும், மன்னாரில் 8 ஆயிரம் படைகளும், மட்டக்களப்பில் 10 ஆயிரம் படைகளும் இருக்கின்றன. இவர்களை பொறிக்குள் சிக்க வைத்து விடுதலையை வென்றெடுக்கும் காலம் நெருங்கின்றது. வரலாறு நமக்கு வழிகாட்டியாக இருக்கின்றது. -புதினம்

சிறிலங்காவிற்கான ஐப்பான் உதவிகள் நிறுத்தப்படலாம்.

இலங்கையில் சமாதானமுற்சிகள் தேய்வடைந்து போருக்கான சூழ்நிலை அதிகரித்து வரும் நிலையில் சிறிலங்காவிற்கான ஐப்பானின் நிதி உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன. ஐப்பான் உதவிகள் நிறுத்தப்பட்டால் சிறி லங்காவிற்கான ஐக்கிய நாடுகளின் உதவிகளும் நிறுத்தப்படலாம் என மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கான அபிவிருத்தி உதவிகளை நிறுத்துவது தொடர்பாக ஜப்பான் பரிசீலித்து வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து ஒரு முழு அளவிலான யுத்தம் தொடங்கும் நிலை இருப்பதால் தனது உதவிகளை நிறுத்த ஜப்பான் முடிவு செய்திருப்பதாக கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பில் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஜப்பான் தெரிவித்திருப்பதாகவும் ஜப்பான் தனது உதவிகளை நிறுத்தினால் ஐக்கிய நாடுகள் சபை உதவியும் நிறுத்தப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது. தமிழ் மக்களினது சட்டப்பூர்வமான முறைமைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று டோக்கியோ இணைத் தலைமை நாடுகள் வலியுறுத்தியிருந்தது. ஆனால் அதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. மேலும் துணை இராணுவக் குழுவினருக்கும் அரசாங்கப் படைகளுக்கும் தொடர்பில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறுவதை நம்பவும் ஜப்பான் மறுத்து ட்டது. இந்த நிலையில் வன்முறைகளும் அதிகரித்து யுத்தம் தொடங்கக் கூடிய சூழலில் அபிவிருத்திக்கான உதவிகளை நிறுத்த ஜப்பான் பரிசீலிப்பதாக ஜப்பான் தூதரக வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும்பில் உள்ள சிறிலங்காவுக்கான சுவீடன் தூதுவரும் கடந்த வாரம், அமைதி முயற்சிகளை உண்மையா ஈடுபாட்டுடன் அரசாங்கம் முன்னெடுக்காத வரை அனைத்து அபிவிருத்திப் பணிகளுக்கான உதவிகளை இடைநிறுத்தப்படும் என்று பகிரங்கமாக எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி>புதினம்.

17 June, 2006

தடை அநாகரிகமானது: டென்மார்க் அமைதிச்சபை கண்டனம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடை அநாகரிகமானது என்று டென்மார்க் நாட்டின் அமைதிச் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. டென்மார்க் அமைதிச் சபையின் பிரதித் தலைவர் லெவி கே. ப்ரவுச் இது குறித்து கூறியுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடையானது அமைதியை உருவாக்காது. அமைதியின் பக்கத்தைத் தவிர எந்த ஒரு பக்கச் சார்பு நிலையையும் நாம் மேற்கொள்ளமாட்டோம். இந்தப் பிரச்சனையில் தொடர்புடைய இருதரப்பினருமே வன்முறையை கையாளுகின்றனர். அனைத்து வகையிலான வன்முறைகளையும் நாம் கடுமையாக எதிர்க்கிறோம். இருதரப்பினரையும் ஒரே பாதையில்தான் சர்வதேச சமூகம் அணுக வேண்டும். வன்முறையை யார் உருவாக்குகிறார்கள் என்பது குறித்து உரிய விசாரணை நடத்திய அதற்குப் பொறுப்பான நபர்களை அடையாளப்படுத்த வேண்டியது அவசியமானது. தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்திவிட்ட பின்னர் அமைதிப் பேச்சுக்களை நடத்துவது என்பது கடினமானது. இதனால் அப்பாவித் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவர். ஏனெனில் இலங்கைத் தீவிலும் சிறிலங்காவின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் வாழுகிற தமிழர்களுக்காக குரல் கொடுக்கிற பிரதான அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர். நாம் நோர்வேயின் வழியைத்தான் பின்பற்றுவோம். ஐரோப்பிய ஒன்றியத்தை பின்பற்றமாட்டோம். நோர்ட்டிக் அமைதி குழுவின் அங்கமாகவே நாங்கள் உள்ளோம். ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதிக்கிற முடிவுகளுக்கு அப்பால் அமைதிக்கான ஆதரவைத் தர வேண்டும். ஐரோப்பியத் தடைய அநாகரிகமானதாகவே நாம் பார்க்கிறோம். அமைதியை உருவாக்குவதில் ஸ்காண்டிநேவிய நாடுகள் நடுநிலையுடன் செயற்பட வேண்டியதை உலகுக்கு காட்ட வேண்டிய சூழ்நிலை இப்போது உள்ளது என்றார் அவர். நன்றி>புதினம்.

ஈழத்தில் போர் வெடிக்குமா?

பதிலடி கொடுக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை சிறிலங்காவுக்கு எமது தலைமைப்பீடம் அனுப்பியுள்ளது: சு.ப.தமிழ்ச்செல்வன் சிறிலங்கா இராணுவத்தின் வான் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க நேரிடும் என்று சிறிலங்காவுக்கு எமது தலைமைப்பீடம் எச்சரிக்கையை அனுப்பியுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்த எச்சரிக்கையை சிறிலங்காவுக்குத் தெரிவிக்குமாறு இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் அனுசரணையாளராகிய நோர்வேயின் சிறிலங்காத் தூதுவர் ஆகியோரை தமிழீழ விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்றும் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இது தொடர்பாக சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளதாவது: இலங்கையில் உள்ள கள நிலைமைகளைப் புரிந்து கொள்ளாமல் கெப்பிட்டிக்கொல்லாவ தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளை குற்றம்சாட்டி சில நாடுகள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அத்தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளும் கண்டனம் செய்துள்ளனர். கெப்பிட்டிக்கொல்லாவ பயணிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கவில்லை என்றும் அக்கிளைமோர்த் தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளோம். இத்தகைய கொடூரமான தாக்குதலுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என்று மீண்டும் கூறுகிறோம். தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்துகிற சக்திகள் குறித்து நாம் அவதானமாக உள்ளோம். அமைதி முயற்சிகளை எதிர்க்கும் அந்த சக்திகளே பொதுமக்கள் மீதான தாக்குதலை நடத்தி நிலைமையை மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்துள்ளனர். ஒரு முழு அளவிலான யுத்தத்தை தூண்டியுள்ளனர். ஓஸ்லோவில் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புடன் நடந்து கொள்ளாமை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தடைக்குப் பின்னைய சூழ்நிலையால் இருதரப்பு சமநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அது இலங்கையில் ஒரு யுத்தத்தை நோக்கியுள்ளது. விமானக் குண்டு வீச்சுக்கள் மூலம் பொதுமக்கள் குடியிருப்பை பொறுப்பற்ற முறையில் தாக்கியமைக்கு சிறிலங்கா அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்த நேரிடும் என்ற தமிழர் தலைமைப்பீடத்தின் கடும் எச்சரிக்கையை சிறிலங்காவுக்கு தெரியப்படுத்தி உள்ளோம் என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன். நன்றி: புதினம்

படையினரின் வெறியாட்டம் ஐவர் பலி! 44 பேர் காயம்.

மன்னாரில் பொதுமக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருந்த பேசாலை தேவாலய முன்றலில் இன்று காலை சிறீலங்கா கடற்படையினர் மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லபட்டதுடன் 44 பேர் காயமடைந்துள்ளனர் அத்துடன் பேசாலைக் கடலில் வைத்து நான்கு மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 6.45 மணியளவில் மன்னார் கடற்பரபில் இடம்பெற்ற மோதலை அடுத்தே கரையோரக் கிராமங்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளார்கள். இதன் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலை மற்றும் தேவாலயங்களில் தஞ்சம் புகுந்திருந்தனர். இவ்வாறு தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த மக்கள் மீது சிறீலங்கா படையினர் இந்த கொலை வெறியாட்டத்தை நடாத்தியுள்ளனர். இதில் பெண்னொருவர் சம்பவம் இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். மேலும் 44 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். நன்றி>பதிவு.

16 June, 2006

ஈழத்தமிழருக்காக தமிழகத்தில் எழுச்சி ஆர்ப்பாட்டம்.

இந்திய நாடாளுமன்றக் குழுவை ஈழத்துக்கு அனுப்ப வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பேரெழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் . ஆர்ப்பாட்ட நிகழ்வில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் பேசியதாவது: ஈழத் தமிழரைப் பாதுகாக்கிற- தன்னுடைய கடமையை ஆற்ற தமிழ்நாடு இன்று கிளர்ந்து எழுந்துள்ளது. கடந்த இரு மாதங்களில் மட்டுமே 200-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் மிகக் கொடூரமாக பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். இணையத்தளங்களிலே வெளியாகியுள்ள அந்தப் படங்களை பார்க்கவே முடியாத அளவுக்கு மிகக் கொடூரமாகக் கோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இணையத் தளங்களிலே அந்த படங்கள் வெளியாகி உள்ளபோதும் கூட இங்கே உள்ள ஊடகங்கள் அவற்றை இருட்டடிப்புச் செய்துவிட்டன. இலங்கைப் பிரச்சனையில் இந்திய அரசு ஒருசார்பாக நிலைப்பாடு எடுத்துவிட முடியாது. உண்மை நிலையை அறிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு உதவாமல் சிங்கள அரசை இந்திய அரசாங்கம் ஆதரிப்பது என்பது இந்தியக் கட்டமைப்பிலே தமிழ்நாடு ஒரு தேசிய இனமாக உள்ளது. இந்தியக் கட்டமைப்பின் குடிமக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தேசிய இனமாக வாழ்கின்ற இந்தத் தமிழர்களின் உணர்வுகளை அவமதிப்பதாகவும். ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டமானது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட போராட்டம். ஈழத் தமிழர்களே! தமிழகத்தில் உள்ள தமிழர்கள் கட்சிகளை-இயகங்களை கடந்து இன்று உங்களுக்காக இணைந்து நிற்கிறோம் என்றார் விடுதலை இராசேந்திரன். இங்குள்ள தமிழக அரசும் பொறுப்பில்லை என்று சும்மா இருந்துவிட முடியாது. இந்தக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசும் வலியுறுத்த வேண்டும் என்றார் ரவிக்குமார். இடையே எழுப்பப்பட்ட முழக்கங்கள்: ஈழத் தமிழர் துயர்துடைக்க இன்று நடக்கும் ஆர்ப்பாட்டம் வெல்கவே!வெல்கவே! வெல்கவே! வெல்கவே! வெல்லட்டும் வெல்லட்டும் ஈழத் தமிழர் வெல்லட்டும்! வீழட்டும் வீழட்டும் சிங்கள இனவெறி வீழட்டும் ஈழத் தமிழர் எங்கள் இரத்தம் ஈழத் தமிழர் எங்கள் சொந்தம் ஈழத் துயரயம் எங்கள் துயரம் ஈழத் துயரம் எங்கள் துயரம் சிங்களவன் போடுறான் வெறியாட்டம் செத்து மடியுது தமிழ்க் கூட்டம் செத்து மடியுது தமிழ்க் கூட்டம் வேடிக்கை பார்க்குது இந்திய அரசு இந்திய அரசே! இந்திய அரசே! தட்டிக் கேள் தட்டிக் கேள்! இலங்கை தமிழ் எம்பிக்கள் இந்திய பிரதமரை சந்திக்க அனுமதி இல்லையா அனுமதி இல்லையா சிங்களவரென்றால் இனிக்குதா? தமிழரென்றால் கசக்குதா? ஏமாளி தமிழனே இளிச்சவாய் தமிழனே இன்னுமா உறக்கம் இன்னுமா உறக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா: ஈழத் தமிழர்கள் நாதியற்றவர்கள் அல்ல என்பதற்காக தமிழர் நலன் காப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. ஆர்ப்பாட்டத்தின் மூலமாக இந்திய அரசாங்கம் மற்றும் தமிழ்நாடு அரசாங்கங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கருதாமல் எங்கள் தொப்புள் கொடிக்குச் சொந்தக்காரர்கள் என்பதை மனதில் கொண்டு இந்திய அரசங்கம் செயற்பட வேண்டும். அவர்களுக்கு இழப்பு ஏற்பட்டால் தாய் தமிழகத்தினர் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். தமிழர்கள் 60 நாடுகளுக்கும் மேற்பட்ட இடங்களிலே வாழ்கின்றனர். 2 நாடுகளில்தான் தமிழ்நாட்டிலும் ஈழத்திலும்தான் தேசிய இனமாக உள்ளனர். எமது தேசிய இனத்துக்கு ஆபத்து ஏற்படுகிற போது தட்டிக்கேட்டால் நமக்கு ஊறு வரும் என்று இந்திய அரசு கருதுகிறத சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்திப்பதைக் காட்டிலும் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியப் பிரதமர் சந்திக்க வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிற அரசாங்கம் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் இருப்பது வேதனையான செய்தி. மொழி வேறு- மொழி பேசுகிற மக்கள் வேறு என்ற மனப்பான்மையில் தமிழகத் தலைவர்கள் உள்ளனர். இரண்டையும் ஒன்றாக வைத்துப் பார்த்து ஈழத்தமிழர் விடியலை உருவாக்க ஒருங்கிணைய வேண்டும். சிறிய தீவில் இருக்கிற சிங்கள ஆதிக்கவாதிகள் மிகக் கொடூரமாக நடத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் சீற்றம் கொண்டால்.... எரிமலை வெடிப்பதற்கு முன்னால் எச்சரிக்காது. எங்கள் கடலை பார்க்கிறபோது மீன் முத்து ஆகிய சொத்துகள் மட்டுமல்ல கடலுக்கு அப்பாலே உள்ள எங்கள் சொந்தங்களும் அவர்களின் கண்ணீரும்தான் நினைவுக்கு வரும். ஈழத் தமிழர் பிரச்சனையில் பாரபட்சமற்ற முறையில் செயற்பட தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். தமிழக நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்களை அல்லது தமிழகத் தலைவர்களை ஈழத்துக்கு அனுப்பி நிலைமையை பார்க்கவேண்டும் என்றார் மல்லை சத்யா. இதைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட முழக்கங்கள்: வெல்லட்டும் வெல்லட்டும் ஈழத் தமிழர் வெல்லட்டும் வீழட்டும் வீழட்டும் சிங்கள இனவெறி வீழட்டும் தடுத்து நிறுத்த நாதியில்லை வேடிக்கை பார்க்குது வெறியாட்சி கூலிகள் கொடுக்குது சிங்கள நரிக்க இந்தி பேசும் இனத்தாருக்கு இப்படி கொடுமை செய்திருந்தால் இப்படி கொடுமை நிகழ்ந்திருந்தால் இந்திய அரசு கொஞ்சுமா இந்திய அரசு கொஞ்சுமா சிங்களன் தலைதான் மிஞ்சுமா நேபாள நாட்டின் துயர் துடைக்க நீட்டுது டில்லி 1,000 கோடி யாழ்ப்பாண நாட்டின் துயர் துடைக்க என்னே செய்யதது இந்திய ஆட்சி ஈழத் தமிழரை இன்னும் கொல்ல சிங்கள சேனைக்கு ராடார் கருவி பலாலி விமானத்தளத்தை பழுது பார்க்க போர்முற இந்தியா செய்யுது இந்தியா செய்யுது ஏமாளித் தமிழா இளிச்ச வாய்த் தமிழா இன்னுமா உறக்கம் இன்னுமா உறக்கம் ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் வே.ஆனைமுத்து: சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பா என்பவர் சமாதான காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மொத்தம் 5 ஆயிரம் முறைக்கு மேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறுகிறார். புதுடில்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் ஜயசிங்கவோ 72 முறை என்கிறார். சென்னையில் உள்ள துணைத் தூதுவரோ மூவாயிரம் முறை என்கிறார். ஆகையால் இதில் எதுவுமே உண்மை இல்லை என்று தெரிகிறது. இலங்கையின் அனுராதபுரத்தில் கண்ணிவெடித் தாக்குதல் நேற்று நடந்தது. அது சிறிலங்கா இராணுவத்தின் பகுதி. அங்கே எப்படி புலிகள் நுழைந்து தாக்கியிருக்க முடியும்? எல்லாமே பொய்யாகவே பரப்புகின்றனர் சிங்களவர். இந்த உண்மையை நம்நாட்டு ஊடகங்களும் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன்: இலங்கைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்ப வேண்டும ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுபினர்கள் அங்குள்ள நிலைமையை இந்தியத் தலைவர்களிடத்தில் விளக்குவதற்கு அனுமதிக்க வேண்டும். கடந்த சில மாதங்களாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொந்தங்கள் இங்கே வந்திருப்பதன் மூலம் ஈழத்திலே வன்முறைகள் எந்த அளவுக்கு நடந்திருக்கிறது என்பதை அறியலாம். 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையில் போது அணிதிரண்டு தாய் தமிழகத்தை நோக்கி கதறி அழுதவாறு வந்தது போல் இரண்டு மூன்று மாதங்களில் ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் வந்துள்ளனர். சிங்களப் பேரினவாத அரசுக்கு இந்திய அரசு மறைமுகமாக பல்வேறு உதவிகளை வழங்குகிறது. இங்கே எழுப்பப்பட்ட முழக்கங்களில் கூட அது கூறப்பட்டது. தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக- ஈழத் தமிழர்களுக்கு எதிராக- சிங்களப் பேரினவாதத்துக்கு ஆதரவாக- உறுதுணையாக இந்திய அரசு செயற்பட்டு வருகிறத இந்தப் போக்குகள் கைவிடப்பட்டு தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள்- ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து கூறுகிற போது "இந்திய அரசின் நிலைப்பாடுதான் எங்கள் நிலைப்பாடு" என்று கூறியுள்ளார். இந்திய அரசின் நிலைப்பாடு என்ன? - சிங்கள அரசுக்கு ராடார் கருவி கொடுப்பத இந்திய அரசின் நிலைப்பாடு என்ன? - பலாலி விமானத் தளத்தை சீர்படுத்தித் தருவத இந்திய அரசின் நிலைப்பாடு என்ன? - சிங்களப் பேரினவாதத்துக்கு உறுதுணையாக இருப்பத இந்திய அரசின் நிலைப்பாடு என்ன? - ரணில் விக்கிரமசிங்க வந்தாலும்- ராஜபக்ச வந்தாலும் சந்திரிகா வந்தாலும் அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பத இதுதான் இந்திய அரசின் நிலைப்பாடு. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே! தமிழினத் தலைவர் அவர்களே! இந்த நிலைப்பாடுதான் உங்கள் நிலைப்பாடா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மகிந்த ராஜபக்சவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறீர்களா- சிங்களப் பேரினவாதிகளுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்கப் போகிறீர்களா? அல்லத தமிழர்களுக்கு குரல் கொடுக்கப் போகிறீர்களா? தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். எமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டப்பேரவையிலே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் முதல்வர் தனது பதில் உரையில் இது பற்றி குறிப்பிடவில்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை கைதுசெய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது பேரவையிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் வெளிநடப்பு செய்தது. ஆனால் தி.மு.க.வோ ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்தது. இன்றும் நாங்கள் சுட்டிக்காட்டவும் கண்டனம் செய்யவும் கடமைப்பட்டுள்ளோம். சிங்களப் பேரினவாத அரசுக்கு உறுதுணையாக இருக்கிற இந்திய அரசின் நிலைப்பாடுதான் உங்களின் நிலைப்பாடா? அகதிகளுக்கான ஐ.நா. ஆவணத்திலே இந்திய அரசு இதுவரை கையெழுத்திடவில்லை. தமிழ்நாட்டின் 13 அமைச்சர்கள் மத்தியிலே உள்ளனர். அவர்களின் அமைச்சுப் பொறுப்புகளுக்கு நெருக்கடி கொடுக்கிற தமிழக முதல்வர், ஈழத் தமிழர்களுக்காக ஏன் அதைச் செய்யக் கூடாது? என்றார் திருமாவளவன். இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், தமிழ்நாடு அன்னையர் முன்னணியின் தலைவர் பேராசிரியர் சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்பின் பிரதிநிதிகளும் தமிழின உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர். நன்றி>புதினம்.

15 June, 2006

விமான குண்டு வீச்சுக்கு ஆழிப்பேரலை அகதிமுகாம் தப்பியது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளான கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை மாலை சிறிலங்கா விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இதில் 300 பேர் தங்கியிருந்த ஆழிப்பேரலை அகதிகள் முகாம் தப்பியது. சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான நான்கு கிபீர் விமானங்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அடங்கிய வன்னி வான்பரப்பில் இன்று மாலை 6.25 மணிக்கு மீண்டும் நுழைந்தன. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மாலை 6.25 மணி முதல் 6.35 வரை நான்கு தடவை நான்கு குண்டுகளை வீசி விட்டுச் சென்றன. இக்குண்டு வீச்சுத் தாக்குதலை 10 நிமிட நேரம் தொடர்ச்சியாக நடத்தினர். அதன் பின்னர் மீண்டும் 6.45 மணிக்கு இரு கிபீர் விமானங்கள் குண்டுகளை வீசிச் சென்றன. அதைத் தொடர்ந்து 6.55 மணிக்கு இரு கிபீர் விமானங்கள் மீளவும் குண்டுகளை வீசின. ஒவ்வொரு விமானமும் ஒவ்வொரு குண்டை வீசின. வானில் மிக உயரத்தில் பறந்தவாறு ஏவுகணை எதிர்ப்பு சாதனத்தை இயக்கியபடியே விமானங்கள் குண்டுகளை வீசின என்று கிளிநொச்சியிலிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். அதேபோல் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளான தரவை மற்றும் புலிப்பாய்ந்தகல் பகுதிகளில் மாலை 3.15 மணியளவில் கிபீர் விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியதாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயா மோகன் கூறியுள்ளார். மேலும் வவுணதீவு சிறிலங்கா இராணுவ முகாமிலிருந்து விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி மோர்ட்டார் எறிகணைகள் மூலம் இன்று காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி வரை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. முன்னதாக இன்று காலையில் முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதலை நடத்தின. இரு கிபீர் விமானங்கள் இன்று முற்பகல் 11.45 மணிக்கு முல்லைத்தீவு வான்பரப்பில் நுழைந்து செல்வபுரம் வட்டுவாகல் மக்கள் குடியிருப்புகளையும் ஆழிப்பேரலை அகதிகள் முகாமையும் இலக்குவைத்து இரு குண்டுகளை வீசின. இதில் மக்கள் 5 பேர் காயமடைந்தனர். குடியிருப்புக்கள் சேதமாகின. மேலும் கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன. மீண்டும் முற்பகல் 11.57 மணிக்கு இரண்டாவது முறையாக கிபீர் விமானங்கள் குண்டுகளை வீசின. இந்தத் தாக்குதலில் 300 பேர் தங்கியிருந்த ஆழிப்பேரலை அகதிகள் முகாம் தப்பியது. இதையடுத்து அங்கிருந்து ஆழிப்பேரலையால் இடம்பெயர்ந்த அகதிகள் வெளியேறியுள்ளனர். கடற்பரப்பிலிருந்து மூன்ற கடல்மைல் தொலைவில் சிறிலங்காவின் டோரா அதிவேகத் தாக்குதல் படகுகள் விமானக் குண்டு வீச்சை அவதானித்துள்ளன. ஆழிப்பேரலை அகதிகள் முகாம் அருகே ஆறு குண்டுகள் விழுந்துள்ளன. இரு குண்டுகள் வெடிக்க்கவில்லை. இன்று முற்பகல் 11.30 மணி தொடக்கம் 10 நிமிட இடைவேளையில் இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் தற்போதும் திடீரென தொடர் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களை சிறிலங்கா இராணுவம் நடத்தி வருகிறது. நன்றி>புதினம்

100க்கு மேற்பட்ட இளைஞர்கள் கருணா குழுவால் கடத்தல்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல கிராமங்களின் கருணா குழுவினர் இளைஞர்களை கடத்திலுள்ளார்கள். இன்று அதிகாலை முதல் பிற்பகல் வரை நூற்றுக்கும் அதிகமானவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள். சந்திவெளி கிரான் வாழைச்சேனை கல்குடா பேத்தாழை பட்டியடிச்சேனை போன்ற பகுதிகள் இராணுவத்தினர் சுற்றிவளைக்க கருணா குழுவினர் இளைஞர்களை பிடித்து சென்றுள்ளார்கள். கடத்தப்பட்வர்களில் மாணவர்களும் அடங்குவதா தெரிவிக்கப்டுகின்றது. இதுதொடர்பாக ஏறாவூர் காவல் துறையினர் மற்றம் வாழைச்சேனை காவல் துறையினரிடம் முறையிட்டுள்ளார்கள. அத்துடன் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடமும் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி>புதினம்.

தமிழர் பிரதேசங்கள்மீது குண்டு வீச்சு.

முல்லைத்தீவில் திடீர் விமானக் குண்டுவீச்சு: 5 பேர் படுகாயம் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து இன்று வியாழக்கிழமை குண்டுத் தாக்குதலை நடத்தின. இரு கிபீர் விமானங்கள் இன்று முற்பகல் 11.45 மணிக்கு முல்லைத்தீவு வான்பரப்பில் நுழைந்து செல்வபுரம் வட்டுவாகல் மக்கள் குடியிருப்புகளை இலக்குவைத்து இரு குண்டுகளை வீசின. இதில் மக்கள் 5 பேர் காயமடைந்தனர். குடியிருப்புகள் சேதமாகின. மேலும் கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன. தொடர்ந்து முற்பகல் 11.57 மணிக்கு இரண்டாவது முறையாக கிபீர் விமானங்கள் குண்டுகளை வீசின. நன்றி-புதினம் இதேவேளை திருகோணமலை முதூர்பிரதேசங்களிலும் தமிழர் குடியிருப்புகள் மீது பாரிய எறிகனை வீச்சுக்கள் நடை பெறுவதாக அறிய முடிகிறது. சம்பூர், மூதூர் பிரதேங்களை இலக்குவைத்து பல்குழல்எறிகணைகள், மற்றும் ஆட்லறிகள் ஏவப்படுகின்றன சேதவிபரம் தெரியவில்லை.

14 June, 2006

கண்காணிப்புக் குழு குற்றச்சாட்டு.

யதார்த்த நிலைமைக்கு புறம்பானவற்றைத்தான் மகிந்த சர்வதேச சமூகத்திடம் தெரிவிக்கிறார்: இலங்கையின் வடக்கு - கிழக்கில் உள்ள யதார்த்த நிலைமைக்குப் புறம்பானவற்றைத்தான் ஊடகங்களிலும் சர்வதேச சமூகத்திடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்து வருவதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளார். போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் தமது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்தால் இந்தத் தீவில் நாங்கள் தொடர்ந்து இயங்குவோம். இல்லையெனில் இயங்க மாட்டோம். போர் நிறுத்த கண்காணிப்புக் குழு இல்லாத நிலையில் யுத்த நிறுத்த ஒப்பந்தமும் இல்லாமல் போகும். சிறிலங்கா அரசாங்கமும் அரச படையினரும் இணைந்து செயற்பட வேண்டும். அரசாங்கத்தின் ஆணைகளுக்கு அரச படையினர் கீழ்படிந்து செயற்பட வேண்டிய காலம் இது. அண்மையில் உண்மைகளின் அடிப்படையிலான அறிக்கை கண்காணிப்புக் குழுவினரால் வெளியிடப்பட்டது. அதில் சில விடயங்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். பொதுமக்கள் பகுதியில் நடைபெறும் படுகொலைகள் குறித்த அரசாங்கத்தின் விசாரணைகள் பாரபட்சமாக உள்ளன. வடக்கு - கிழக்கில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது மற்றும் குழந்தைகளினது எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வாழ்கின்றனர். முறையான விசாரணைகளை அரசாங்கம் நடத்தினால்தான் கொடூரப் படுகொலைகளை நிறுத்த முடியும். அரசாங்கம் இந்தப் படுகொலைகள் தொடர்பில் கண்ணை மூடிக்கொண்டு உள்ளது. எந்த ஒரு சம்பவங்களிலும் விசாரணைகள் கூட தொடங்கப்படவில்லை. அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில்தான் இத்தகைய படுகொலைகள் நடைபெறுகின்றன. இதற்கான பொறுப்பு சிறிலங்கா காவல்துறையினரிடம் உள்ளபோதும் படுகொலைகள் தொடர்பான தரவுகளை கண்காணிப்புக் குழுவுக்கு அனுப்புவதில்லை. நிறைய வழக்குகளை நிலுவையில் வைத்துக் கொண்டு தரவுகளை அளிப்பதில் முடக்கத்தை சிறிலங்கா காவல்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வழக்குகள் அனைத்தும் விசாரணைக்குள்ளாக்கப்பட வேண்டியவை. அனைத்து வசதிகளும் மனித வளங்களும் உள்ள நிலையில் எதுவித காரணமும் கூற முடியாது. இந்தப் படுகொலைகள் தொடர்பான சர்வதேச சமூகத்தின் விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் தீர்வு காணப்படும். அப்பாவி குழந்தைகள் நாளாந்தம் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பதை சர்வதேச சமூகம் மறுக்கவில்லை. சில வாரங்களுக்கு முன்பாக வட பகுதியில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பாக சிறிலங்கா காவல்துறை மா அதிபரினது முடிவை கண்காணிப்புக் குழு எதிர்பார்த்து உள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கு குறித்து ஊடகங்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் மகிந்த ராஜபக்ச தெரிவித்து வரும் கருத்துகளுக்கும் யதார்த்த கள நிலைமைகளுக்கும் முரண் உள்ளது கடற்கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் கண்காணிப்புக் குழுவினர் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து உறுதியான உத்திரவாதம் அளிக்கப்படாத வரையில் சிறிலங்கா கடற்படையினரின் கலங்களில் பயணிக்க மாட்டோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் பகுதிகளில் தற்போது கண்காணிப்புக் குழுவில் இரு நாட்டுப் பிரதிநிதிகளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நோர்வே மற்றும் ஐஸ்லாந்து பிரதிநிதிகளே உள்ளனர். நோர்வேத் தரப்பில் தங்களது பிரதிநிதிகளை அதிகரிப்பதாக இல்லை என்று தெரிவித்துவிட்டனர் என்றார் ஹென்றிக்சன். நன்றி> புதினம்.

13 June, 2006

ஜுன் 16-இல் ஈழத் தமிழர்களுக்கான ஆர்ப்பாட்டம் தமிழகத்தில்.

நெடுமாறன், இராமதாசு, வைகோ, கொளத்தூர் மணி, திருமாவளவன் பங்கேற்பு தமிழ்நாடு முழுவதும் எதிர்வரும் ஜுன் 16ஆம் நாளன்று ஈழத் தமிழர்களுக்கான ஆர்ப்பாட்டத்தை தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு நடத்த உள்ளது. இது தொடர்பாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை: சிங்கள முப்படைகளின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு ஆளாகி ஆயிரக் கணக்கான தமிழர்கள் தப்பிப் பிழைத்து இந்தியாவில் அகதி களாகக் குவியத் தொடங்கியுள்ளனர். மேலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகித் தப்பி வர வழியில்லாமல் தவிக்கின்றனர். இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக மக்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்பவேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டுள்ளது. இதை வலியுறுத்தும் வகையில் வரும் வெள்ளிக்கிழமை (16-ந்தேதி) மாலை 4 மணிக்கு சென்னையிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் அனைத்துக் கட்சிகள், அனைத்து தமிழர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 1. இலங்கைத் தமிழர் பகுதியில் உண்மை நிலவரங்களைக் கண்டறியவும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆறுதல் கூற வும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக்கட்சிக் குழு ஒன் றினை உடனடியாக அனுப்ப வேண்டும். 2. இந்தியப் பிரதமரை சிங்களத் தலைவர்கள் அடிக்கடி சந்தித்துப் பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஈழத்தமிழர் பிரதிநிதிகள் சந்தித்துப் பேச அனுமதிக்கப்படவில்லை. இலங்கை நாடாளுமன்றத் தமிழ் உறுப்பினர்களின் குழு பிரதமரைச் சந்தித்துப் பேச அனுமதிக்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறு வனர் மரு.இராமதாசு, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் வே.ஆனைமுத்து, விடுதலை சிறுத்தைகள் பொதுச் செய லாளர் தொல்.திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் சேதுராமன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழக ஒடுக் கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் பொழிலன், பா.ம.க. தலைவர் கோ.க.மணி, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் சௌந்தரராசன் மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மதுரையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க பொருளாளர் மாணிக் கம், தமிழ் தமிழர் இயக்கத் தலைவர் தியாகு மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள் கிறார்கள். சேலத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.மணி, தமிழ்த் தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் இளமுருகனார் கலந்து கொள் கிறார்கள். தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் சி.முருகேசன் பங்கேற்கிறார்கள். கோவையில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ராமகிருட்டிணன், தமிழர் தேசிய இயக்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் காந்தி கலந்து கொள்கிறார்கள். சிவகங்கையில் உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் மெல்கியோர், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் பரந்தாமன் கலந்து கொள்கிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி>லங்காசிறி

தமிழர் கொலைகளின் பின்நின்று செயல்படுபவர்.

ராஜபச்சவின் சகோதரர்களின் உத்தரவில் வடக்கு கிழக்கில் தமிழர் படுகொலை - TCHR அதிபர் மகிந்த ராஜபச்சவின் சகோதரர்களின் உத்தரவிலேயே வடக்கு கிழக்கில் தமிழர் மீதான படுகொலைகள் நடைபெறுவதாக பிரான்சை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் மனிதர் உரிமைகள் மையம் தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கில் நடைபெறும் அப்பாவி மக்கள் மீதான படுகொலைகள் யாவும் தமிழ் மக்களை பீதி கொள்ளும் நோக்கில் அதிபர் மகிந்த ராஜபக்சாவினாலும், பாதுகாப்பு அமைச்சின் செயலாரான ராஜபக்சாவின் சகோதரன் கொத்பாய ராஜபக்சாவினதும் உத்தரவிலுமேயே தமிழர் கொலைகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளது. இப்படுகொலைகளை மேற்கொள்ளும் துணை ஆயுதக்குழுக்களுக்கு சன்மானப்பட்டியல் ஒன்று தாயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு படுகொலைகளுக்கும் சன்மானம் வழங்கப்படுவதாகவும் தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட இவ் சன்மானப்பட்டியலில், கைக்குண்டுத் தாக்குதல் செய்வோருக்கு 15.000 ரூபாவும், கிளைமோர் தாக்குதல் செய்வோருக்கு 20.000 ரூபாவும், விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாக முன்னின்று உழைப்போரை கொலை செய்வோருக்கு 100.000 ரூபாவும் சன்மானமாக வழங்கப்படுவதுடன், அரச படைகள் மன்னிப்புடன், தாம் விரும்பியவர்களை வடக்கு கிழக்கில் கொலை செய்யவும், பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தவும் ராஜபக்சா சகோதரார்களினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தற்போதைய சிறிலங்காவின் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரிகளாகவும், சிறிலங்காவில் பாதுகாப்பு முடிவுகளை மேற்கொள்பவர்களாகவும் சிறிலங்காவின் தென் பகுதியை சேர்ந்த ராஜபக்சா சகோதரார்ளும், அவர்களது முன்னாள் பாடசாலை தோழர்களும், நண்பர்களும், உறவினர்களுமே உள்ளார்களென்றும் தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. நன்றி>பதிவு.

சிறுவர் படுகொலையை சர்வதேசம் கண்டிக்காதது ஏன்?

சிறிலங்கா படைகளினால் 24 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டது, தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மௌனமாக இருப்­ப­தாக தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றம் சாட்­டியுள்ளனர். சிறுவர்களை படையில் சேர்ப்பதாக இச்சர்­வதேச உரிமை அமைப்புக்கள், விடுதலைப்­புலி­கள் மீது தொடர்ச்சியாக குற்றம் சாட்டி­வந்­த­ன.ஆனால் இன்றைய நிலையில், இலங்கை இனப்பிரச்சினையால் அண்மைக்காலமாக சிறு­வர்கள் கொலை செய்யப்படுவதைக் கண்­டிப்பதற்கு இச்சர்வதேச அமைப்புக்கள் தவ­றிவிட்டன என, விடுதலைப்புலிகள் குற்­றம் சுமத்தியுள்ளனர். சிறுவர்களின் நலன்களில் அக்கறை செலுத்­து­­வ­தாகக் கூறிக்கொள்ளும் இச்சர்வதேச உரிமை நிறுவனங்கள், தற்போது நடை­பெறும் சிறுவர்களின் ஒவ்வொரு படு­கொலை­யின் பின்னரும் தமது கண்டனத்தை வலியுறுத்திக் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தொடர்ந்தும் மௌன­மாகவே இருக்கின்றனர். அண்மைய நாட்களில் படுகொலை செய்­யப்­பட்ட 24 சிறுவர்களின் பெயர்க­ளை­யும் புலி­கள் பட்டியல் படுத்தியுள்ளனர். இதில் அண்­மையில் மன்னார், வங்காலையில் கொடூ­ரமாக படுகொலை செய்யப்பட்டு தூக்கி­லிடப்பட்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்களும் அடங்குகின்றனர். கடந்த மாதமும் யுனிசெவ் அமைப்பு விடு­தலைப்புலிகள் சிறுவரை படையில் சேர்ப்­பதாக குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்­பிடத்­தக்கது. நன்றி>புதினம்.

12 June, 2006

சிறிலங்காவில் 40 ஆயிரம் சிறார் பாலியல் தொழிலாளர்கள்.

சிறிலங்காவில் 40 ஆயிரம் சிறார் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக யுனிசெஃப் மற்றும் சர்வதேச தொழிலாளர் நிறுவன அறிக்கைகளைச் சுட்டிக்காட்டி சிறிலங்காவின் தேசிய சிறார் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளதாக கொழும்பின் ஆங்கில நாளேடான டெய்லி மிர்ரர் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: 5 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான சிறிலங்கா சிறார்களை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஒருபால் உறவுக்காக பயன்படுத்துகின்றனர். அதேபோல் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலான கிராமப்புற சிறிலங்கா சிறார்களை குற்றச் செயல்களைப் புரிகின்ற குழுவினர் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர் என்றும் யுனிசெஃப் மற்றும் சர்வதேச தொழிலாளர் நிறுவன புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. சிறார் பாலியல் தொழிலில் உலகின் சொர்க்கமாக சிறிலங்கா விளங்குகிறது. சிறிலங்காவில் 2 ஆயிரம் சிறார் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக அரசாங்கம் கணக்கிட்டுள்ளது. ஆனால் பல்வேறு அமைப்புகள் இந்த எண்ணிக்கை 40 ஆயிரம் என்று தெரிவிக்கின்றன. இந்த சிறார்களில் 80 வீதமானோர் ஆண்கள். இவர்களில் சுற்றுலா மையங்களில் வெளிநாட்டுப் பயணிகளின் ஒருபால் உறவுக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். 35 ஆயிரம் சிறார்கள் சிறு தொழிற்சாலைகளிலும் கடைகளிலும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. நன்ரி>புதினம்.

10 June, 2006

ஈழத்தமிழர் குறித்து தமிழகத்தமிழர் கருத்து.

ஈழத் தமிழர் குறித்த தமிழகத் தமிழரின் இன்றைய நிலை என்ன?: தினமணி நாளேட்டில் வெளியான கடிதங்களின் தொகுப்பு தமிழீழத் தமிழர் பிரச்சனை, ஐரோப்பிய ஒன்றியத் தடை, அகதிகள் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டு தமிழர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளேட்டில் பொதுமக்களின் கடிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் தொகுப்பு: இந்திராவின் அணுகுமுறை "புலம் பெயர்ந்த தமிழர்கள்" தலையங்கம் (31.05.06) படித்தேன். இலங்கைத் தமிழர்கள்பால் சிங்களப் பேரினவாத அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டபோது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எடுத்த நிலைப்பாடு தொடர்ந்திருக்குமேயானால் இலங்கைத் தமிழர் சிக்கல் எப்போதோ தீர்வு கண்டிருக்கும். பாகிஸ்தானுக்கு எதிரான கிழக்கு வங்க மக்களின் எழுச்சிக்கு இந்திரா கண்ட தீர்வு இதற்கு முன்னுதாரணம் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ராஜீவின் மரணம் என்ற ஒரே காரணத்தைச் சுட்டிக்காட்டி நம் தார்மீகக் கடமையை நிறைவேற்றாமல் கையைக் கட்டிக் கொண்டிருப்பதும் இதில் மேலை நாடுகளைத் தாராளமாக தலையிட அனுமதித்து பார்வையாளர்கள் நிலையில் இருந்து கொண்டு இருப்பதும், உலகின் மிகப் பெரிய சனநாயக நாடாகிய நமக்கு ஏற்புடையதன்று. சோம. நடராசன், கரூர். நீதியின் பக்கம் நிற்போம் "விடுதலைப் புலிகள் அமைப்புக்குத் தடை விதித்தது ஐரோப்பியக் கூட்டமைப்பு" எனும் செய்தி (31.05.06) படித்தேன். ஈராக்கின் மீது அநியாயமாகப் போர் தொடுத்து, லட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்து, அமெரிக்க மக்கள் உள்ளிட்ட உலக மக்களால் "ஆக்கிரமிப்பாளன்'' என வன்மையாகக் கண்டனம் செய்யப்படும் அமெரிக்க ஏகாதிபத்திய ஆட்சியாளர்களும், இலங்கைத் தமிழர்களின் நியாயமான சுயாட்சிக் கோரிக்கைக்கு எவ்விதத்திலும் இணங்காத சிங்களப் பேரினவாதப் போர் வெறி ஆட்சியாளர்களும் இணைந்து மேற்கொண்ட செயலே இது என்பது தெளிவு. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான, கௌரவமான அமைதித் தீர்வு காண ஊறுசெய்யும் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் மேற்கொண்டுள்ள தடைகளை இந்திய அரசும் தமிழக அரசும் புறக்கணிக்க வேண்டும்; நீதியின் பக்கம் நாம் நிற்க வேண்டும். தி.க.சி., நெல்லை 6. நியாயமான கோரிக்கை ஈழத் தமிழர் பிரச்சினைகள், துன்ப - துயரங்களைப் பற்றி உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக, தக்கச் சான்றுகளுடன் - தீர்வுகளுடன் மறவன்புலவு க.சச்சிதானந்தன் எழுதி வருவதற்கு மேலும் ஒரு சான்று - அவர் எழுதிய "அகதிகளுக்குப் பாதுகாப்பு ஓடை'' (01.06.06) எனும் கட்டுரை. பேசாலை மீனவர்கள் பற்றிய குறிப்புகள் அரிய தகவலாகும். இலங்கைத் தமிழ் அகதிகள் பாதுகாப்பிற்கு இந்திய எல்லைக்குள் "பாதுகாப்பு ஓடை" அமைக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை மிக நியாயமானது வரவேற்கின்றேன். அவருடைய இந்தத் தனிநபர் கோரிக்கை - தமிழர்களின் கோரிக்கையாக, தமிழ்நாடு அரசின் கோரிக்கையாக இந்திய அரசிடம் வலியுறுத்தப்பட வேண்டியதாகும். பெ.சு. மணி, சென்னை 33. இலங்கைக்கு உதவக் கூடாது தன் சொந்த மண்ணைவிட்டு உயிர்பிழைக்க தமிழகம் வந்து சேரும் ஈழத் தமிழர்களை மனிதநேயத்தோடு அரவணைப்பதும் அவர்களைக் கொண்டு வந்து சேர்க்கும் படகுகளைத் திருப்பி அனுப்புவதும் மிகவும் அவசியமானது. இதுவரை சிங்கள அரசுகள் ஒப்புக்கொண்ட "உடன்பாட்டை" மதித்ததே இல்லை என்பதுதான் வரலாறு. ஆகவே இலங்கை அரசுக்குத் துணை போகக் கூடாது என தமிழக சட்டமன்றத் தீர்மானம் மூலம் இந்திய அரசுக்கு உணர்த்துவது அவசியம். மா.கோ. தேவராசன், சிதம்பரம். காக்கும் படை நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களைக் கற்பழித்துக் கொன்று ஒரே குழியில் போட்டுப் புதைத்த இராணுவத்தையோ, யாழ். நூலகத்திலுள்ள புத்தகப் பொக்கிசங்களைத் தீயிட்டு அழித்த வக்கிர புத்திக்காரர்களைப் பற்றியோ, சிறைக்குள் நிராதவராக இருந்த குட்டிமணியையும் அவருடன் சேர்ந்த துடிப்புள்ள இளைஞர்களையும் கண்களைப் பிடுங்கி துடிக்கத் துடிக்கக் கொலை செய்த பாவிகளையோ நாம் மறந்து விடுகிறோம். ஆனால் "தமிழ் அகதிகளை" மிகச் சாதாரணமாக எண்ணி, போனால் போகிறதென்று ஆட்டு மந்தை போல தங்குவதற்கு இடமளிக்கிறோம்! என்ன கொடுமை! நாம் தந்த அன்பளிப்பு கச்சதீவு. அதை நாமே கேட்டுப் பெற வேண்டும் அல்லது பறித்துக் கொண்டு அதில் நமது இராணுவத்தை - தமிழ் அகதிகளை, மீனவர்களைக் காக்கும் படையாக நிறுத்த வேண்டும்! இரா. கல்யானசுந்தரம், அனுப்பானடி நாதியற்ற தமிழர்கள்! "புலம் பெயரும் தமிழர்கள்" - தலையங்கம் (31.05.06) கண்டேன். கிழக்குப் பாகிஸ்தானில் நிகழ்ந்ததை "இனப் படுகொலை' என அறிவித்து உலக நாடுகளுக்கெல்லாம் பறையறைந்த கையோடு இந்திய இராணுவத்தை அனுப்பி வங்காளதேசம் உருவாக முழுமூச்சாக ஈடுபட்டார் இந்திரா காந்தி. சிங்களக் காடையர்களால் இலங்கைத் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக வெட்டிக் கொல்லப்பட்டபோது "இனப் படுகொலை" என்று கூற டில்லியில் யாருக்கும் மனம் வரவில்லை. நேரு - கொத்தலவாலா, சாஸ்திரி - சிரிமாவோ காலத்திலிருந்தே இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையை அணுகிய போதெல்லாம் பேரிழப்புக்குள்ளாவோர் தமிழர்களே என்பதை மறந்துவிட முடியாது. யாசீர் அராபத்துக்குத் தூதரகம் அமைக்க அனுமதியும், ஐ.நா. சபையில் அங்கம் வகிக்க உரிமையும் பெற்றுத் தர முன்வந்த இந்திய அரசு, இலங்கைத் தமிழர்களின் இன உணர்வை மதிக்கத் தவறிவிட்டது. ஈழப் போராளிகள் தங்கள் இன விடுதலைக்காகப் போராடுவோர் என்ற அடிப்படை உண்மையைப் புறக்கணித்துவிட்டுச் சிங்கள அரசுடன் சமரசம் செய்து கொள்ளக் கச்சதீவைக் காணிக்கையாக அளித்த இழிவு, தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையைப் பறித்து அன்றாடம் உயிரையும் பறித்துக் கொண்டிருக்கிறது. மைய அரசைப் பொறுத்த அளவில் ஈழத் தமிழரும் தமிழ்நாட்டுத் தமிழரும் ஒரே இனம் என்று கருத வேண்டிய தேவையின்றி, இங்கே குறட்டைச் சத்தம் பலமாகக் கேட்க ஈழத்தில் துப்பாக்கியும் பீரங்கிகளும் முழங்குகின்றன. வங்கதேச அகதிகள் இந்தியாவில் குவிந்தபோது அவர்களின் மறுவாழ்வுக்கென "அகதிகள் நிவாரண நிதி" என்னும் பெயரில் ஒவ்வோர் அஞ்சல் அட்டை, அஞ்சல் உறையில் ஐந்து காசு சிறப்புத் தபால் தலை ஒட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அகதிகளில் இன வேறுபாடு பார்க்கும் மைய அரசு, ஈழத் தமிழர்கள் திடீரென ஆயுதமேந்திய போராளிகளாக மாறிவிடவில்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அறவழிப் போராட்டங்களை நடத்தியும் பயனற்றுப் போன நிலையில், ஈழத் தமிழினம் பூண்டற்றுப் போகாமல் தடுக்க ஆயுதமேந்திய போரே இறுதிவழி என்னும் தவிர்க்க இயலாத முடிவுக்கு வர நேர்ந்தது என்று தினமணி நாளேட்டில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். நன்றி>புதினம்.

08 June, 2006

ஒஸ்லோ மாநாட்டின் சிறீலங்காவின் சதிமுயற்சி படுதோல்வி.

நோர்வேத் தலைநகர் ஒஸ்லோ தலைநகரில் இன்று ஆரம்பமாகி நாளை மாலை வரை நடைபெறும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை பேச்சுவார்த்தையாக மாற்றுவதற்கு சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட சதிமுயற்சி படுதோல்வியில் முடிவடைந்துள்ளது. தமிழர் தாயகத்தில் கொலை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டு சமாதான முன்னெடுப்புக்களுக்கான புறச்சூழலை இல்லாதொழி்த்த சிறீலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்தினை திசை திருப்பும் நோக்கோடு இருதரப்பிற்குமான பேச்சு வார்த்தையாக சித்தரிப்பதற்கான நலினத்தனமான முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தது. அத்துடன் ஒஸ்லோ கூட்டத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளையும் சிறீலங்கா அரசாங்கத்தையும் நேருக்கு நேர் சந்திக்க வைத்து கடந்த கால பேச்சுக்களைப் போன்று பேச்சுக்கான தொடக்க நிகழ்வு ஒன்றை முன்னெடுக்க இராஜதந்திரிகள் சிலர் முயற்சி செய்துள்ளனர். முடங்கிக் கிடக்கும் பேச்சுவார்த்தையை பின்வாயிலாக ஆரம்பித்து சமாதானம் தொடர்பான போலியான நம்பிக்கையைப் தோற்றுவிப்பதற்கு சிறீலங்கா அரசாங்கமும் சில இராஜதந்திரிகளும் மேற்கொண்ட திரைமறைவு முயற்சி விடுதலைப் புலிகளின் சாதுரியமான இராஜதந்திர நகர்வால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும நடைபெறும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் நோர்வே அனுசரணையாளர்களையும் கண்காணிப்பாளர்களையும் தனித்தனியாகச் சந்திக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் சிறீலங்கா அரசாங்கத் தூதுக்குழுவினரை சந்திப்பதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்துள்ள சூழலில் நடுநிலைமைத் தகமையை இழந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான சுவீடன், டென்மார்க், பின்லாந்து ஆகியவை தொடர்ந்தும் கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிப்பது பொருத்தமாக இருக்காது என விடுதலைப் புலிகள் கருதுகின்றனர். இதுகுறித்த தலைமைப்பீடத்தின் தீர்க்கமான முடிவுகளை ஒஸ்லோ கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவினர் கலந்துகொண்டுள்ளனர். ஒஸ்லோ கூட்டம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் தமிழினத்தை அழித்தொழிப்பதில் கங்கணம் கட்டியவாறு அப்பாவித் தமிழர்களை கொன்றொழிப்பதில் ஈடுபடும் சிறீலங்கா அரசாங்கத்தோடு எதுவும் பேசுவதற்கு இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். நன்றி>பதிவு.

07 June, 2006

அல்லைப்பிட்டி மக்களை டக்கிளஸ் மிரட்டினார்.

ஈபிடிபி ஆயுதாரி டக்கிளஸ் தேவானந்தா யாழ் விரைவு. ஈபிடிபி ஆயுததாரி டக்கிளஸ் தேவானந்தா இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் சென்றுள்ளார். சிறீலங்காப் பாதுகாப்பு படையினரின் பலத்த பாதுகாப்புடன் சென்ற இவர் ஈபிடிபிஇன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளார். முன்னதாக அல்லப்பிட்டி மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்குச் சென்ற ஆயுததாரியான டக்கிளஸ் தேவானந்தா ஈபிடிபி உறுப்பினர்களைச் சந்தித்த பின்னர் அங்குள்ள சிறீலங்காப் படையினரைச் சந்தித்த ஈபிடிபி ஆயுததாரிகளுக்கு கூடிய பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுள்ளார். இதனை அடுத்து யாழ் குருநகர், நாவாந்துறை ஆகியவற்றுக்கு சென்ற ஒட்டுக்குழு ஆயுதாரி டக்கிளஸ் தேவானந்தா அல்லப்பிட்டியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களை அல்லப்பிட்டிக்குத் திரும்புமாறு மிரட்டியுள்ளார். நன்றி>புதினம்

06 June, 2006

அல்லைப்பிட்டி வழக்கில் மற்றுமொருவர் இன்று சாட்சியம்.

இலங்கையின் வடக்கில் யாழ் தீவகப்பிரதேசமாகிய அல்லைப்பிட்டியில் அண்மையில் குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது சாட்சியமளித்த சாட்சி ஒருவர், தமது வீட்டின் மாடிப்பகுதிக்கு பெட்ரோமக்ஸ் விளக்கை கையில் கொண்டு வந்த கடற்படையினர் தன் கண்முன்னால் தனது கணவனையும், தம்பியையும் சுட்டுக்கொன்றதாகத் தெரிவித்துள்ளார். ரொபின்சன் வயலட் என்ற 28 வயதுடைய இப்பெண்ணின் தங்கை, கணவன், அவர்களின் பிள்ளைகள் இருவர் ஆகியோர் அந்த வீட்டின் கீழ் தளத்தில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இதன்போது சாட்சியின் தந்தை காயமடைந்ததாகவும், வீட்டிற்கு வெளியில் வைத்து தமது உறவினர் ஒருவரும், தனது தந்தையுடன் கடற்றொழில் செய்யும் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது கணவனையும், தம்பியையும் சுட்டுக்கொன்றவர்களை அடையாளம் காட்ட முடியும் என்றும் அந்தச் சாட்சி இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே உத்தரவிட்டபடி இந்த வழக்கு தொடர்பான அடையாள அணிவகுப்புக்கு புலனாய்வு பொலிசார் ஒழுங்கு செய்யாமைக்கும், புலனாய்வு தொடர்பான அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் தவறியமைக்கும் ஊர்காவற்துறை நீதிபதி ஜெயராமன் புலனாய்வு பொலிசார் மீது அதிருப்தியைத் தெரிவித்ததுடன், நீண்டகால இடைவெளியில் அடுத்த தவணைக்கான விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார். எதிர்வரும் 20 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு ஒழுங்கு செய்வதுடன், இந்தக் கொலைகள் தொடர்பான புலனாய்வு பொலிசாரின் அறிக்கையை அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் புலனாய்வு பொலிசாருக்கு நீதிபதி உத்தரவிடடுள்ளார். இணைப்பு : newstamilnet.com