26 July, 2006
தமிழீழத்தில் கடற்படை, விமானத் தளங்கள் அமெரிக்கா திட்டம்.
தமிழீழத்தில் கடற்படை தளம் மற்றும் விமானத் தளத்தை அமைக்க அமெரிக்கா திட்டம் - கரேன் பாக்கர்.
தமிழீழ மக்களை பாதுகாப்பதற்கான சட்டபூர்வமான உரிமையினை, தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருப்பதாக, அமெரிக்காவின் முன்னணி சட்டவாளர் கரன் பார்க்கர் தெரிவித்துள்ளார்.
லண்டனில் கறுப்பு ஜுலையின் நினைவு சுமந்த எழுச்சிப் பேரணியில் சிறப்புரையாற்றிய அமெரிக்க சட்டவாளர் கரன் பார்க்கர், தேசிய இனம் என்ற வகையில், தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தமிழீழ தனியரசை நிறுவும் உரிமையை, தமிழீழ மக்கள் கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழீழ மக்களின் நலன்களில் அக்கறை கொள்ளாத போதும், தமிழீழ நிலப்பிரதேசங்களை அமெரிக்க அரசாங்கம் குறிவைப்பதாக குற்றம் சுமத்தியிருக்கும் சட்டவாளர் கரன் பார்க்கர், இது குறித்து தமிழ் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக தென்தமிழீழத்தில் கடற்படை தளம் ஒன்றையும், வடதமிழீழம் பலாலியில், விமானப் படைத்தளம் ஒன்றையும் உருவாக்கிப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவும், சட்டவாளர் கரன் பார்க்கர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோதுவதற்கு திராணியற்ற சிறீலங்கா அரச படைகள், அப்பாவித் தமிழ் மக்களை படுகொலை செய்து வருவதாக குறிப்பிட்டிருக்கும் சட்டவாளர் கரன் பார்க்கர், இவ்வாண்டு மிகவும் துயரம் நிறைந்த வருடமாக விளங்குகின்ற போதும், சில வேளைகளில் தமிழீழ தனியரசு உருவாகுவதற்கு இவ்வாண்டு வழிகோலலாம் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நன்றி>பதிவு
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
Oh my god plese save our tamil Eelam and tamil people
Post a Comment