04 July, 2006

ராஜீவ்காந்தி பிரபாகரனுக்கிடையில் இரகசிய ஒப்பந்தம்?

தினபூமி பொய் சொல்கிறதா?? -ஈழபாரதி- பாலசிங்கத்தின் சுயசரிதையிலிருந்து திடுக்கிடும் தகவல் தினபூமி நாளேடு தெரிவிப்பு இலங்கையில் தமிழ் மக்கள் வாழு­ம் பகுதிகளில் விடுதலைப்புலிகளின் அரசு அமையவும் விடுதலை புலி­களின் நிதித்தேவைகளுக்காக மாதாந்தம் 50 லட்சம் ரூபா வழங்குவதெனவும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டிருந்ததாக தமிழகத்திலிருந்து வெளிவரும் நாளேடான "தினபூமி' செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவலை விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளதாக சி.என்.என்., ஐ.பி.என். தொலைக்காட்சி அலைவரிசை நேற்று முன்தினம் இரவு செய்தி வெளியிட்டுள்ளதாகவும் "தினபூமி' நாளேட்டில் சுட்டிக்காட்டப்­பட்டுள்ளது. ராஜீவ்காந்தி விடுதலைப் புலிகளின் விடயத்தில் நாளு­க்கு நாள் புதிய புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ராஜீவ்காந்தியை கொன்றதே நாங்கள் தான் என விடுதலைப் புலிகள் அமைப்பு சில தின­ங்களுக்கு முன்பு பகிரங்கமாக தெரிவித்தது. இக்கொலை­யை மன்னித்து இந்தியா தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று புலிகள் இயக்கம் விரும்புவதாக புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். பாலசிங்கத்தின் இந்த பேட்டி மிகுந்­த சர்ச்சையைத் ஏற்படுத்தியதையடுத்து விடுதலைப் புலிகளை மன்னிக்கமா­ட்டோம் அவர்களுக்கு ஆதரவும் அளிக்க மாட்டோம் என்று மத்திய அரசு உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து திடீரென ராஜீவ்காந்தியை தாங்கள் கொல்லவில்லையென்று புலிகள் மறுத்தனர். பாலசிங்கத்தின் பேட்டி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக புலிகள் விளக்கமளித்தனர். நடந்த சம்பவத்திற்கு அவர் வருத்தம்தான் தெரிவித்தாரே தவிர பொறுப்பேற்கவில்லை என புலிகளின் செய்­தி தொடர்பாளர் விளக்கமளித்தார். இந்நிலையிலேயே ராஜீவ்காந்திக்கும் பிரபாகரனுக்கும் இடையே இரகசிய உடன்பாடு ஒன்று எட்டப்பட்டிருந்ததாக சி.என்.என்., ஐ.பி.என். தொலை­க்காட்சி செய்தி வெளியிட்டுள்ளதாகவும் பாலசிங்கத்தின் சுயசரிதையிலிருந்து அந்த தகவல்கள் தங்களுக்கு கிடைத்ததாகவும் அந்த சேனல் மேலும் விளக்கமளித்துள்ளதாக "தினபூமி' நாளேட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒப்பந்தத்தின்படி இலங்கையில் தமிழர் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் அரசாங்கம் அமைய ராஜீவ்காந்தி புலிகளுக்கு உறுதியளித்திருந்தார். இதற்காக இலங்கை அரசுடன் பேசி அனுமதி பெற்றிருந்தார். விடுதலைப் புலிகளின் அரசாங்கத்தில் இலங்கை அரசின் தலையீடு இருக்கவே இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் புலிகளின் நிதிக்காக ராஜீவ்காந்தி மாதா மாதம் ரூ. 50 லட்சம் வழங்கியதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது. 80 களின் இறுதியில் இலங்கையில் வடமராட்சி பகுதியில் சிங்கள இராணுவம் தொடர்ந்து குண்டு வீசி தாக்கிய போது அதற்கு எதிர்­ப்பு தெரிவித்த அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ்­காந்தி இலங்கை தமிழர்களுக்கு விமானம் மூலம் உணவு பொருட்களையும் நிவாரணப்பொருட்களையும் வழங்க உத்தரவிட்டார். உணவு பொட்டலங்களை போடுவதற்காக இந்திய விமானங்கள் இலங்கைக்குள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்­ந்து தமிழர் பிரச்சினையை தீர்க்க ராஜீவ்காந்தி முன்வந்தார். அப்போது புலிகளின் தலைவர் பிரபாகரனை டில்லிக்கு அழைத்து பேச்சு நடத்தினார். தமிழர் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் அரசு அமைய அவர் ஏற்பாடு செய்ததாக பாலசிங்கத்தின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எத்தனையோ அரசியல் கொலைகளை புலிகள் செய்­திருந்தாலும், ராஜீவ்காந்தி படுகொலை புலிகள் தலையெழுத்தையே மாற்றிவிட்டதாக பாலசிங்கம் மிகவும் வேதனையுடன் தமது சுயசரிøதயில் மனம் விட்டு எழுதியிருப்பதாக மேற்படி தொலைக்காட்சி அலைவரிசை தெரிவித்துள்ளது. பாலசிங்கத்தின் இந்த பகீர் தகவல்கள் இந்தியாவில் புதிய புயலை கிளப்பும் என தெரிவிக்கப்படுகிறது. நன்றி>லங்காசிறீ

5 comments:

said...

வணக்கம் கொண்டோடி, வரவுக்கு நன்றி, ஒரு தாரியும் விழங்காதபடியால்தான் முதலில் கேள்விகேட்டிருந்தேன், உங்கள் குழப்பத்துக்கு அதுதான் காரணம், தற்போது திருத்தியுள்ளேன்.
இப்ப ஏதாவது விழங்குதா?

said...

எனது கேள்வி என்னவென்றால், பாலசிங்கம் நாங்கள்தான் செய்தொம் என்று ஒப்புக்கொண்டாரா?
ராஜீவ்காந்திக்கும் பிரபாகரனுக்குமிடையில் உண்மையில் அப்படி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதா?
பாலசிங்கத்தின் சுயசரிதத்தில் அப்படி உண்மையில் குறிக்கப்பட்டுள்ளதா?
அப்படி உண்மையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் பிரபாகரன் டெல்லியில் இருந்து வந்திறங்கியதும், ஏன் சுதுமலையில் மக்களைக்கூட்டி சுதுமலை பிரகடணம் மேற்கொளப்பட்டது? என்பவைதான்.

said...

"அப்படியில்லாமல் சும்மா கருத்துச் சொல்லிக்கொண்டு இருப்பது சிறுபிள்ளைத்தனம்."

ஏன் நீங்கள் இப்படி சிந்திக்க கூடாது, ஒரு முதுர்ச்சிபெற்ற அமைப்பு இந்த நேரத்தில் இந்தவிடயத்தை பேச வந்ததற்கான காரணம் என்னவாக இருக்கும், சென்றமுறை யாழ்ப்பாணத்தை முற்றுகை இட இருந்த சமயம் இந்தியா நிறுதச்சொன்னதால் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது, மீண்டும் இப்படியானதொரு நிலமை வரக்கூடாது என்பதற்காகவும் அதை மறுக்கும் பட்சத்தில் அவர்களது தலையீட்டை தவிர்த்து கொள்வதற்க்காகவும், தற்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கான ஆதரவு எழுச்சியை மேன்மை படுத்துவதற்க்காகவும் மேற்கொள்ளப்பட சமரச முயற்சியாக ஏன் கருதக்கூடாது?

Anonymous said...

Everywhere the Politicians are untrustworthy.When Rajiv came to politics he was a Baby in politics.Except Indira's son there was no other qualification for him to became Prime Minister.With out knowing real problems of the Eelam tamils he intervened in SriLankan crises.To win the acclaim and save India's image he would have done or promised anything at that time to win the support from the Tigers.Under these circumtances what Bala wrote in his book are truth and facts.

said...

வண்க்கம் karaivasan வரவுக்கு நன்றி,
உண்மைதான் ராஜீவ் அரசியலுக்கு குழந்தைதான். இந்திராவின்மீதிருந்த நம்பிக்கையில் அவரையும் நம்பினோம், ஈழம்பற்றிய புரியாமைதான் பிரச்சினைகளுக்கு காரணம். சரியான புரிந்துனர்வு இருந்திருந்தால் பல இழப்புக்களை தவிர்த்திருக்கலாம்.