17 July, 2006
இந்தியாவில் எழுத்து உரிமைக்கு தடை விதிக்கப்படுகிறது.
இந்தியாவில் எழுத்து உரிமைக்கு தடை விதிக்கப்படுகிறது, ஒரு ஜனநாயக நாட்டில் நடப்பதென்ன? இது எழுத்துரிமையை மதிக்கும் அனைவரையும் சீண்டிப்பார்கும் ஒரு நடவடிக்கை. சில வலைபூக்கள் பிரச்சினையானவை என்றால் அவற்றை தெரிந்தெடுத்து தடை செய்வதை விட்டு விட்டு, ஒட்டுமொத்தமாக அனைத்து புளக்கர்களையும் இழுத்துப்பூட்டுவது என்பது எந்த விதத்தில் நியாயம்? எழுத்துரிமையை மறுக்கும் இந்தியா உண்மையிலேயே இது ஜனநாயக நாடுதானா? அல்லது இதுதான் ஜனநாயகமா? ஆண்டுக்கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி சேர்த்து வைத்தவற்றை ஒரு நிமுடத்தில் இழப்பதென்பது எவ்வளவு பெரிய சோகம், மகரந்தம் என்னும் ஒரு வலைப்பதிவர் கூறுகிறார் இனி எனது எழுத்துக்களை என்னாலேயே பார்க்கமுடியாது என்று. இதற்கு என்னதான் தீர்வு.
பாதிக்கப்பட்டவர்களின் உரல்கள்
http://madippakkam.blogspot.com/2006/07/blogspot.html
http://icarus1972us.blogspot.com/2006/07/blogspotcom-ban-next-in-chennai.html
http://gragavan.blogspot.com/2006/07/blog-post_115314839163033283.html
http://icarus1972us.blogspot.com/2006/07/blog-post.html
மேலதிக விவரத்துக்கு தொடர்ந்து வரும்>http://www.eelabarathi.com
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஐய்யா!
கொஞ்சம் பொறுமையா இருங்க சாமி.
என்ன பிரச்சனை என்று இன்னும் சரியாக தெரியவில்லை. அதுகுள்ள ஏன் பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுறீங்க.
//எழுத்துரிமையை மறுக்கும் இந்தியா உண்மையிலேயே இது ஜனநாயக நாடுதானா? அல்லது இதுதான் ஜனநாயகமா?//
இந்தியா இன்னும் ஜனநாயக நாடு தான். அதில் இந்தியர்கள் ஆகிய எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
//ஆண்டுக்கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி சேர்த்து வைத்தவற்றை ஒரு நிமுடத்தில் இழப்பதென்பது//
யாருங்க இழ்ந்தா?
blogspot தான் பார்க்க முடியவில்லை என்று சொல்கின்றார்கள்.
blogger யில் எல்லா பதிவுகளும் இருக்கின்றது தான். அதை தேவைப்பட்டால் word press மாற்றிக் கொள்வோம்.
விசயம் என்னவென்று சரியாக தெரிவதற்கு முன்பு சகதி வாரி இரைக்க வேண்டாம்.
யாரை தடை செய்தார்கள்
சொதப்பலா?
இது 100% உண்மை. எல்லா பிளாகுகளும் தடை செய்யப்பட்டுள்ளது! http://www.ibnlive.com/news/censored-govt-signs-out-bloggers/15886-3.html இதில் விவரம் உள்ளது!!! பேச்சு சுதந்திரத்துக்கும் ஆப்பு வைக்கும் அரசு! திவிரவாதிகளை புடிக்க துப்பு இல்ல,
//*The Government alleges these blogsites were fuelling hatred and communalism.*//
வந்துட்டாங்க காழ்ப்பு உணர்ச்சியையும் சமுதாய நல்லினகத்தை காப்பாத்த!
சில மாதங்களுக்கு முன் பாக்கிஸ்தான் செய்தது.. அது ராணுவ ஆட்சி, இங்க என்ன வாழுது!!!
வணக்கம் நாகை சிவா, என்னர்,ஜெயசங்கர் வருகைக்கு நன்றி.
நாகை சிவா இது சகதி அல்ல வந்த செய்தி இந்தியாவில் பிளாக்கர்கள் தடை செய்யப்பட்டதாக, நல்லதொரு சனநாயக நாட்டில் எழுத்துரிமைக்கு தடை விதிக்க மாட்டார்கள்.
பிபிசியில் வந்த செய்தி இங்கே
http://eebarathi.blogspot.com/2006/07/blog-post_115335656931396017.html
நாட்போட்ட செய்தி இங்கே
http://www.eelabarathi.com/
இரண்டுக்கு என்ன பெரிய வேறுபாடு இருக்கிறது, நாம்சொன்னால் சகதி பிபிசி சொன்னால் செய்தியா?
ஜெய்சங்கர் சொன்னது போல் இந்தியாவில் ஒன்றும் ராணுவ ஆட்சி இல்லைதானே, எழுத்துரிமை பற்றி பேசலாம்தானே.
என்னர் தடை வந்ததே தெரியாதா உங்களுக்கு. இதோ சொதப்பல் அல்ல தொடுப்பு.
பிபிசியில் வந்த செய்தி இங்கே
http://eebarathi.blogspot.com/2006/07/blog-post_115335656931396017.html
Post a Comment