04 July, 2006
இலங்கையின் இணைப்பாட்சித் தீர்வுக்கு இந்தியா முழுஆதரவு.
இலங்கையின் இணைப்பாட்சித் தீர்வுக்கு இந்தியா முழு ஆதரவு - சியாம் சரண்
தொடரும் வன்முறைச் சூழலுக்கு முடிவு கட்டி இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண சிறீலங்கா அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என இந்திய வலியுறுத்தியுள்ளது.
நேற்று சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து கலந்துரையாடிய இந்திய வெளியுறவுச் செயலர் சியாம் சரண் தொடருந்தும் வன்முறைகளால் ஈழத்தமிழர்கள் புலம் பெயர்வது தமிழ் அரசியல் மட்டங்களிலிருந்து மத்திய அரசுக்கு நெருக்கடிகள் ஏற்படுவதாக சுட்டுக்காட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச இன நெருக்கடிகளுக்கு அரசியல் தீர்வைக் காண அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் எனினும் விடுதலைப் புலிகளை பேச்சுவார்தையில் ஈடுபடுவதற்கு இந்தியாவும் வெளிநாடுகளும் காத்திரமான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் எனவும் வலியுறுதியுள்ளார்.
சந்திப்பின் நிறைவாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கினுடைய சிறப்புச் செய்தி ஒன்றை கையளித்த இந்திய வெளியுறவுச் செயலாளர் சியாம் சரண் இந்தியாவின் இணைப்பாட்சித் திட்டத்தை ஒத்த தீர்வை இலங்கை அரசு முன்மொழிந்தால் அதற்கு இந்திய அரசாங்கம் கொள்கை அளவிலான ஆதரவை வழங்கும் என உறுதியளித்திருக்கின்றார்.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Indian type Federal System is not a Genuine Federal System. In the Indian federal system all the powers are with the Centre.For Srilankan crises Indian system will not work and it is not suitable. We Eelam tamils wants to have Canadian Federal System.Canadian system will meet the aspirations of the Eelam Tamils.Indian System will not meet
the aspirations of the Eelam Tamils.Indian system will not give the Security Tamils needed and it will not change anything from the present position.
வணக்கம் karaivasan வரவுக்கு நன்றி,
மகிந்தா நேரடிப்பேச்சுக்கு புலிகளை அழைப்பது, சர்வதேசத்தை ஓரங்கட்ட மேற்கொள்ளப்படும் தந்திரம். இந்தியாவில் மத்திய அரசுக்கும் மானில அரசுகளுக்கும் பகமை இல்லை அங்கு அது சரிவரும், ஈழத்தில் சரிவராது என்பது உண்மைதான். கூடுதலான அதிகாரத்துடன் கூடிய சுய நிர்னய உரிமைதான் சரிவரும், ஆனால் அது தனது மானில அரசுகளில் பிரச்சினையை உருவாக்குமென்று இந்தியா சிந்திக்கக்கூடும். இந்தமுறையாவது சரியானதொரு தீர்வு பரிந்துரக்கப்படவேண்டும், அல்லாவிடில் இது தொடர்கதைதான். முடிவுதான் ஏது?
Post a Comment