15 July, 2006
மட்டு. வாகனேரி படையினர்அத்துமீறி உள்நுழைவு.
மட்டு. வாகனேரி படையினர் அத்துமீறி உள்நுழைவு விடுதலைப்புலிகள் பதில் தாக்குதல்
விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர்
இன்று காலை மட்டக்களப்பு மாவட்டம் வாகனேரியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து படைநடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா படையினரை தமிழீழ விடுதலைப் புலிகள் பதில்தாக்குதல் நிகழ்த்திப் பின்வாங்கச் செய்துள்ளார்கள்.
அதைத்தொடந்து நடைபெறும் தேடுதல்களின்போது இதுவரை சிறிலங்காப் படையினரின் ஒன்பது உடல்களும் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். களத்திலிருந்து மேலதிக விபரங்கள் வரவிருக்கின்றன.
இந்நடவடிக்கையின்போது நான்கு போராளிகள் வீரச்சாவடைந்திருக்கிறார்கள்.
இத்தாக்குதலின்போது விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுத தளபாடங்களின் விபரம் வருமாறு:
ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி - 01
ரி-56 - 01 எல்.எம்.ஜி - 02
40மி.மீ எறிகுண்டு செலுத்தி - 01
ரி-56 ரக துப்பாக்கிகள் - 08
தொலைத்தொடர்பு சாதனம் - 01
தோள் பைகள் - 10
குண்டு துழையா மேலாடை - 07
நன்றி: மட்டு.ஈழநாதம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment