19 July, 2006

கொலைகார டக்ளஸ் தேவானந்தாவை அனுமதிக்கக் கூடாது: வைகோ.

தமிழ்நாட்டில் தேடப்படுகிற குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தாவை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மறுமலர்ச்சி பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். மன்மோகன் சிங்கை இன்று புதன்கிழமை காலை புதுடில்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைகோ சந்தித்தார். சுமார் 25 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்து பிரதமரிடம் வைகோ விரிவாக எடுத்துச் சொன்னார். மன்மோகனிடம் அவர் அளித்த கோரிக்கை மனுவில், சிறிலங்கை விமானப்படைக்கு இந்தியா ரேடார்களை வழங்கி இருப்பதை சுட்டிக்காட்டி அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அப்பாவித் தமிழர்கள் மீது தொடர்ந்து இராணுவத் தாக்குதல் நடத்திவரும் சிறிலங்காவுக்கு இந்தியா எந்தவித இராணுவ உதவியையும் செய்யக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். சிறிலங்காவுக்கு இராணுவ உதவியையோ இராணுவ தளவாட விற்பனையையோ செய்வதில்லை என்று 1999ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை இந்திய அரசு உறுதியாகவும் உண்மையாகவும் செயல்படுத்த வேண்டும் என்று அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். நளினி - முருகன் தம்பதியினரின் மகள் அரித்ரா தமிழகத்திற்கு வந்து கல்வி பயில விசா வழங்கவேண்டும் என்று பிரதமரிடம் நேரில் பேசிய போது வைகோ கேட்டுக் கொண்டார். சிறிலங்காவின் அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தா சென்னை சூளைமேடு கொலை வழக்கில் தேடப்படுகிற நபர். அவர் இந்தியாவுக்கு வந்து இந்தியப் பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து அறிக்கைகள் வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்குரியது என்று மன்மோகனிடம் சுட்டிக்காட்டிய வைகோ, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்க அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். கொலையாளி டக்ள்ஸ் தேவானாந்தா குறித்து சென்னையிலிருந்து பழ. நெடுமாறன் வெளியிட்டு வரும் தென் செய்தி இதழில் இடம்பெற்றுள்ள செய்தி விவரம்: தமிழ்நாட்டுத் தமிழர் ஒருவரை படுகொலை செய்த குற்றவாளியும், ஆட்களைக் கடத்தி மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டுக்கு ஆளானவரும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவருமான சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்து 15-04-06 நாளிட்ட தென்செய்தியில் விரிவானச் செய்தி வெளி யிட்டிருந்தது. இவர் மீதுள்ள வழக்குகள் இன்னமும் தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. தேடப்படும் குற்றவாளியாக இவர் சென்னை நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அடிக்கடி இவர் தமிழ்நாட்டுக்கு வந்து செய்தியாளர் கூட்டங்களில் பேசுவதும் அரசியல் தலைவர்களைச் சந்திப்பதும் போன்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி இவரைப் பொறுத்தவரையில் சட்டம் செத்துவிட்டதா? ஏன் இவர் இன்னும் கைது செய்யப்படவில்லை? தமிழகக் காவல்துறை தூங்குகிறதா? என்பது போன்ற கேள்விகளைக் எழுப்பியிருந்தோம். . 13-07-06 அன்று தினமணியில் டக்ளஸ் தேவானந்தாவின் சிறப்புப் பேட்டி வெளியிடப்பட்டுள்ளது. புதுடில்லியில் வெளியுறவுத் துறைச் செயலாளர் சியாம் சரண் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் உள்ளிட்ட பல அதிகாரிகளையும் தலைவர்களையும் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துப் பேசினார். தினமணிக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில், "இலங்கையின் தற்போதைய சூழ்நிலை அங்குள்ள தமிழர்களின் நிலைக் குறித்து இந்திய அதிகாரிகள் மற்றும் தலைவர்களிடம் எடுத்துரைத்தேன். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடைமுறைச் சாத்தியமான மூன்று அம்சத் திட்டங்களை இந்திய அரசிடம் அளித்துள்ளேன். சிறிலங்கா அரசின் சார்பில் நான் அளித்தத் திட்டம் குறித்து தீவிரமாக ஆலோசிப்பதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.' மேலே கண்டச் செய்தி ஒரு உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. தேடப்படும் குற்றவாளியாக சென்னை செசன்சு நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா 1986 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 20 ஆண்டுகாலமாக கைது செய்யப்படவில்லை. அவரைத் தேடும் முயற்சியிலும் தமிழகக் காவல்துறை ஈடுபடவில்லை. அப்படியானால் இந்த நாட்டுச் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவராக அவர் விளங்குகிறார் என்பது அம்பலமாகியுள்ளது. தமிழ்நாட்டுக் காவல்துறை அவரை கைது செய்ய முடியாதபடி டில்லி தடுக்கிறது என்பதும் தெரிகிறது. தேடப்படும் கொலைக் குற்றவாளி ஒருவர் பகிரங்கமாக டில்லிக்கு வந்து பிரதமரின் ஆலோசகர் மற்றும் வெளியுறவுத்துறைச் செயலாளர் உட்பட உயரதிகாரிகளை சந்திக்கக்கூடிய நிலைமையில் இருக்கிறார் என்று சொன்னால் இதைவிடக் கேலிக் கூத்து எதுவும் இல்லை. தமிழ்நாட்டுத் தமிழன் படுகொலையானாலும் கவலையில்லை. டக்ளஸ் தேவானந்தாவைப் பாதுகாக்க வேண்டும் என்று டில்லி நினைக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களைத் தொடர்ந்து சிறிலங்கா கடற்படை சுட்டுத் தள்ளியபோதும் பதில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், குறைந்தபட்சம் சிறிலங்கா கடற்படைக்கு எச்சரிக்கை கூடவிடுக்காமல் டில்லி மௌனம் சாதிக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் டில்லியின் உண்மை உருவத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று தென்செய்தி இதழின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி>புதினம்.

11 comments:

Anonymous said...

பாரதியாரே நீங்க ரொம்பத்தான் காமடி பண்றிங்க....!

said...

டக்ளஸ் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியா? சரி, இருக்கட்டும். ஆனால் பிரபாகரனுக்கும் மற்றவர்களுக்கும் இதைவிட தீவிரமாக இந்த வாதத்தை பயன்படுத்த முடியுமே!?

said...

வணக்கம் அனானி, றோசாவசந் வருகக்கு நன்றி,
அனானி, உலகமே ஒரு நாடகமேடை அதில் நாம் எல்லாம் நடிகர்கள், நாடகமென்றால் காமடி இருந்தால்தானே நல்லா இருக்கும். அதை கூட பிளாக்கர் (சொந்த/புனை)பெயரில் வந்து சொல்ல யோசிக்கும் நீர் மாபெரும் நடிகர்:-))

றோசாவசந் இந்தியாவில் தேடப்படும் ஒருநபர் இந்திய சட்டத்திற்கு அமைய பிடியானை பிறப்பிக்கப்பட்ட ஒருவர், இந்தியாவுக்கு வந்து அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி அறிக்கைகள் வெளியிடமுடியும் அளவிற்கு இருக்கிறார் என்றால் இந்தி சட்டங்கள் எந்தளவுக்கு செல்லாக்காசாக்கப்பட்டிருக்கிறது என்பதைதான் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார். நான் அறிந்து பிரபாகரன் பிடி ஆணை பிறப்பிக்கபட்ட பின்னர் இந்தியாவுக்கு வந்ததாக நான் அறியவில்லை:-))

said...

ஒரு தீபாவளி நாளன்று நடந்த சூளை மேட்டுச் சம்பவத்தில் டக்ளஸ் நேரடியாகச் சம்பந்தப்பட்டவரென்றும் அங்குச் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி டக்ளசால் தேவானந்தாவால் சுடப்பட்டவர் என்பதும் றோசாவுக்குத் தெரியாமலிருந்திருக்க நியாயமில்லையென்றே நினைக்கிறேன்.

இப்போது பிரபாகரனோ பொட்டம்மானோ இந்தியா வந்தால் டக்ளசுக்கு வழங்கப்படும் மரியாதையும் பாதுகாப்பும் வழங்கப்படுமா? இம்மூவருமே இந்தியச் சட்டத்தின்படி கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவர்கள்.
ஆனால் டக்ளஸ் தாராளமாக இந்தியாவுக்கு வந்து போகிறார். மாதக்கணக்கில் ஓய்வெடுக்கிறார்.
இந்தியாவின் நிலைப்பாடு எங்களுக்குத் தெரியும்.
அதன் முகமூடிகளைக் கிழிக்கும் ஒரு சிறுவேலைதான் வை.கோ சொல்லியது.
வை.கோவின் கூற்றில் என்ன பிழை இருக்கிறது?

ஈழபாரதி,
பதிவிட்டதுக்கு நன்றி.
பலநேரங்களில் தேவைற்றவிதத்தில் அங்கிங்குப் படியெடுத்துப் போடுகிறீர்கள், எழுதுகிறீர்கள் (இந்திய வலைப்பதிவுத் தடைபற்றிய "நீலிக்கண்ணீர்"ப் பதிவு சரியான எடுத்துக்காட்டு) என்று நினைத்தாலும், டக்ளஸ் தேவானந்தா கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் என்பதே தெரியாது என்று சொல்லும் றோசா வசந் போன்றவர்களுக்காகவாவது இப்படியான பதிவுகள் தேவையென்று இப்போது தோன்றுகிறது.

said...

வணக்கம் வன்னியன் வருகைக்கு நன்றி,

"இந்திய வலைப்பதிவுத் தடைபற்றிய "நீலிக்கண்ணீர்"ப் பதிவு சரியான எடுத்துக்காட்டு"

உங்கள் பார்வையில் அப்படிதெரிகிறது அது உங்கள் கருத்து சுதந்திரம், ஆனால் அதை கூட நாகைசிவா சேறு வீசல் என்றார், என்னர் சொதப்பல் என்றார், நகைசிபிதான் புரிந்து கொண்டார், அது அது அவர்கள் பார்வை, அது அவர்களது கருத்துச்சுதந்திரம், என்னை பொறுத்தவரை எம்மோடு வலைகளில், எழுதுபவர்கள்,பதிப்பவர்கள் அனைவரும் நன்பர்கள்தான், நண்பர்களது எழுத்து சுதந்திரம் மறுக்கப்படும்போது அதற்கு ஆதரவாக பதிபோடுவது எனது கடமையாக கருதுகிறேன். அதானாலேயே போட்டேன். எதிரிக்கும் எழுத்துச்சுதந்திரம், கருத்துச்சுதந்திரம் அனுமதிக்கப்ப்டவேண்டும் இதுவே எமது துனிபு.

Anonymous said...

புரியல்லீண்ணா நீங்க சொல்கிற சொதந்திரம் எல்லாம் நம்ம ஈழத்துல
உண்டுகளா...? அதுவும் குறிப்பா வன்னியில இங்க சொல்றத அங்கிட்டும்
கொஞ்சூண்டு சொல்லுறது

said...

வணக்கம் ஈழபாரதி,

உங்கள் கருத்துச் சுதந்திர எண்ணத்திற்கு எனது வாழ்த்துகள். இந்த கருத்துச் சுதந்திரம் வன்னியிலும் இருக்க வேண்டும் என்று உங்கள் எழுத்தில் நீங்கள் வலியுறத்த வேண்டும். அப்போதுதான் உங்களின் கருத்துச் சுதந்திரத்தில் நேர்மையிருக்கும். வன்னியனின் பின்னூடம் நல்ல காமயாக இருந்தது. பிரபாகரனுக்கும் பொட்டம்மானும் இந்தியாவில் இராஜமரியாதை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்.

முதல் நம்ம முதுகில இருக்கிற ஊத்தைய நோண்டுங்க.. அப்புறம் இந்தியாவைப் பற்றிப்பார்ப்பம்.

said...

வணக்கம் ஈழபாரதி,

உங்கள் கருத்துச் சுதந்திர எண்ணத்திற்கு எனது வாழ்த்துகள். இந்த கருத்துச் சுதந்திரம் வன்னியிலும் இருக்க வேண்டும் என்று உங்கள் எழுத்தில் நீங்கள் வலியுறத்த வேண்டும். அப்போதுதான் உங்களின் கருத்துச் சுதந்திரத்தில் நேர்மையிருக்கும். வன்னியனின் பின்னூடம் நல்ல காமயாக இருந்தது. பிரபாகரனுக்கும் பொட்டம்மானும் இந்தியாவில் இராஜமரியாதை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்.

முதல் நம்ம முதுகில இருக்கிற ஊத்தைய நோண்டுங்க.. அப்புறம் இந்தியாவைப் பற்றிப்பார்ப்பம்.

said...

நாசமறுப்பான்,
நீங்கள் எழுதவந்தது "காமடி" என்று புரிந்துகொள்கிறேன்.

நான் அவர்கள் இருவருக்கும் இராஜமரியாதை கொடுக்கச் சொல்லி எங்கே சொன்னேன்? ஒன்றில் எனது எழுத்தில் அல்லது உங்கள் தமிழ்ப்புரிதலில் பிழையிருக்கிறது.
என்வரையில் தெளிவாகத்தானே எழுதியிருக்கிறேன்.

டக்ளசுக்கு கொடுக்கப்படும் மரியாதை உங்களுக்குத் தெரியும்தானே?

அதெப்படி டக்ளசுக்கு மட்டும் அந்த மரியாதை கொடுக்கப்படுகிறது? மாதக்கணக்கில் இந்தியாவில் பதுங்கிக்கொள்கிறார். பேட்டி கொடுக்கிறார். அரச மட்டத்தில் சந்திப்புக்களை நடத்துகிறார்.
டக்ளசும் இந்தியச் சட்டத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுத் தேடப்படும் நபரல்லவா?
இதே மரியாதையை பிரபாகரனுக்கும் பொட்டுவுக்கும் கொடுக்க முடியுமா இந்தியாவால்?

இதைச்சொன்னால் "எங்கயோ தேள் கொட்ட எங்கயோ நெறி கட்டின கதையாக" நக்கல் பதில் வருகிறது.

றோசாவுக்குத்தான் வை.கோவின் பேச்சு விளங்காமல் காமாலைப் பார்வையோடு பதில் சொல்கிறாரென்றால் உங்கள் பதிலை என்னவென்பது?
இதெல்லாம் ஈழபாரதியும் வன்னியனும் தாங்கிக்கொண்டிருக்கும் அரசியற்பார்வை மீதான காழ்ப்புணர்ச்சியென்று புரிந்துகொள்வதைத் தவிர எனக்கு இந்த இடத்தில் வேறு விளக்கம் தெரியவில்லை.

//முதல் நம்ம முதுகில இருக்கிற ஊத்தைய நோண்டுங்க.. அப்புறம் இந்தியாவைப் பற்றிப்பார்ப்பம். //
இதைத்தான் நானும் ஈழபாரதிக்குச் சொன்னேன்.
சரி. ஆனால் அகிம்சை, காந்தியம், கருத்துச் சுதந்திரமென்று தங்களை உதாரணம் காட்டி வலையில் ஈழத்தவனுக்குப் பாடமெடுக்கும் ஜனநாயகவாதிகள் வாயைப் பொத்துவது நன்று. நாங்களும் இந்தவிசயத்தில் (கருத்துச் சுதந்திர விசயத்தில்) வாயைப் பொத்திக்கொண்டிருப்பது நன்று.

said...

ஐயா வன்னியன்,
ஈழபாரதியினதும் உங்களதும் அரசியல் மீதான காழ்ப்புணர்வு அல்ல. ஈழபாரதி தன் அரசியலுக்கு முரணா கருத்தை சொல்லியிருப்பதில் தான் முரண் என்றேன்.
அவரின் அரசியலுக்கு கருத்துச்சுதந்திரமும், மாற்றுக்கருத்தும் அலர்ச்சியனா விடையம் அல்லவா!

said...

//ஐயா வன்னியன்,
ஈழபாரதியினதும் உங்களதும் அரசியல் மீதான காழ்ப்புணர்வு அல்ல. ஈழபாரதி தன் அரசியலுக்கு முரணா கருத்தை சொல்லியிருப்பதில் தான் முரண் என்றேன்.
அவரின் அரசியலுக்கு கருத்துச்சுதந்திரமும், மாற்றுக்கருத்தும் அலர்ச்சியனா விடையம் அல்லவா! //

ஆம். அலர்ச்சியானதுதான். என் கருத்தும் ஈழபாரதி இதை எழுதியிருக்க வேண்டாமென்பதே.
நான் உங்களை விளித்து எழுதிய பின்னூட்டம், 'அவர்கள் இருவருக்கும் இந்தியா ராஜமரியாதை கொடுக்கவேண்டுமென்று வன்னியன் சொல்வதாக' நான் சொல்லாத ஒன்றைச் சொல்லி நீங்கள் நக்கலாக இட்ட பின்னூட்டம் தொடர்பானது.
அப்பிடியாக விளங்கிக் கொள்வதைத்தான் அரசியல்மீதான காழ்ப்புணர்ச்சியென்றேன். இதில் ஈழபாரதியின் பதிவோ பின்னூட்டமோ எவ்விதத்திலும் சம்பந்தபடவில்லை.