30 July, 2006
சிறீலங்காப் படையினர் மனநோயாளிகளா?
ஸ்ரீ லங்காவின் படையில் கடமையாற்றுபவர்கள் மனநோயாளிகளா? கடந்த சித்தரை மாதம் யாழ்ப்பாணம் பலாலி வீதியில் சென்று கொண்டிருந்த யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரனிக் வாகணத்தைக் கலைத்துச் சென்று தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட முயன்ற படையினர் மூவரும் மன நோய் தாக்கத்திற்கு உட்பட்டு இருந்தார்களா என மன வையித்தியரிடம் காட்டி அறிக்கை சமர்ப்பிக்கும் படி யாழ் மாவட்ட நீதிமன்றம் பொலிசாருக்கு கட்டளையிட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கை குற்றமிழைத்த படையினரை காப்பாற்றவும் சட்டத்தை ஏமாற்றவும் எடுக்கப்படும் நடவடிக்கையென பலரும் அபிப்பிராயப்படுகின்றார்கள் இதுவே உண்மையாகும். இவர்கள் விடயத்திலேனும் சட்டம் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையும் அவசியமும் காணப்படுகின்றது.
மன நோயாளர்கள் மூவர் ஒரே இடத்தில் ஒன்றாக ஒரே நேரத்தில் ஒரு நோக்கத்தை நிறைவேற்ற எப்படி ஒன்று சேர்ந்திருக்க முடியும்?
இதிலும் பல ஆயிரக் கணக்கான வாகணங்கள் பிரயாணம் செய்யும் பலாலி வீதியில் பல நூற்றுக் கணக்கான இராணுவத்தினர் வீதிக்கடமையில் ஈடபட்டு இருக்கும் வேளையில் குறிப்பிட்ட மேலதிக நீதிபதியின் வாகணம் வரும் நேரத்தைக் கணக்கில் கொண்டு தாக்க முற்பட்டிருக்க முடியும்.
மனம் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு ஏனைய வாகணங்களை தவிர்த்து குறிப்பிட்ட நீதிபதியின் வாகணம் தம்மைக் கடந்து சென்ற பின்னர் வாகணத்தில் இருப்பவர்களை அடையாளம் கண்டு தாக்குவதற்கு வசதியாக ஆட்டோவில் கலைத்துச் சென்று தாக்க முற்பட்டிருக்க முடியும் ?
இன்று குறிப்பாக தமிழர்களை தேடி கொலை செய்யும் கடத்தும் தாக்கும் ஒவ்வோரு இராணுவமும் மன நோயாளிகள் என்றே ஸ்ரீலங்காவின் சட்டம் குறித்து நிற்கின்றது.
1985ம் ஆண்டளவில் அனுராதபுரத்தில் ஏற்பட்ட வன் செயலின் போது பாதுகாப்புத் தேடி இராணுவ முகாமில் இருந்த சுமார் 28 அரச உத்தியோகத்தர்கள் இருந்த போது மக்கள் இராணுவத்தினால் படை முகாமில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இதற்கு படைத்தரப்பும் அரசாங்கமும் கூறிய காரணம் குறிப்பிட்ட இராணுவம் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இத்தகைய நடவடிக்கையில் ஈடபட்டதாகக் கூறியதுடன் இராணுவமும் தண்டனையில் இருந்து தப்பி விடுதலை செய்யப்பட்டது.
இதே போன்ற 1987 ம் ஆண்டு இலங்கை இந்திய ஒபபந்தத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு விஐயம் மேற் கொண்ட இந்தியப் பிரதம மந்திரி ரஜீவ் காந்தி மீது கடற்படை அணிவகுப்பை பார்த்துக் கொண்டிருந்த வேளையில் கடற் படை வீரனினால் துப்பாக்கிப் பிடியினால் தாக்கப்பட்டார்.
அன்று குறிப்பிட்ட சம்பவம் தற்செயலாக ஏற்பட்டது எனவும் சூரிய ஓளியினால் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்து விழும் வேளையில் தவறுதலாக துப்பாக்கி தட்டியதாக தெரிவிக்கப்பட்டு குறிப்பிட்ட கடற்படைவீரன் 1990ம் ஆண்டு விடுதலையும் செய்யப்பட்டான.;
இன்று குறிப்பிட்ட கடற்படை வீரன் கடற்படையில் இருந்து ஓய்வூதியம் பெறுவதுடன் சிங்களப் பேரினவாதிகளிடத்தில் செல்வாக்குப் பெற்றவனாகவும் காணப்படுகின்றான். இந்த வகையில் கடந்த காலத்தில் இடம் பெற்ற சிங்கள உறுமய கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார்.
இவர் கடந்த வாரம் தான் நடத்திய ஊடகவியலாளர் மாநாடொன்றில் தான் இந்திய பிரதம மந்திரியை கொலை செய்யவேண்டும் என்ற நோக்கிலேயே தாக்கியதாகவும் அதில் இருந்து அவர் தப்பிவிட்டார் எனவும் தெரிவித்து இந்தியாவுக்கு சிங்களப் பேரினவாதத்தின் சார்பில் சவால் விட்டுள்ளதுடன் சர்வதேசத்தையும் முட்டாளாக்கியும் உள்ளார்.
இந்த வகையில் தற்போது யாழ் மாவட்டத்தில் படையினர் இராணுவப் புலனாய்வாளர்கள் ஒட்டுக்குழுக்கள் மேற்கொண்டு வரும் கொலைகள் ஆள் கடத்தல்கள் கொள்ளைகள் மற்றும் தாக்குதல்கள் என பல குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்தவும் சட்டத்தின் முன் நிறுத்தவும் வேண்டும் என்பதில் முழுமையான கவனம் எடுத்து நீதியை நிலை நாட்டுவதில் மனைப்பாக செயல்பட்டுக் கொண்டு வருகின்றார் இதனை சர்வதேச நீதியாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
இதனை ஏற்றுக் கொள்ளாத படையினரும் இராணுவப் புலனாய்வாளர்களின் நன்கு திட்டமிட்ட செயல்பாடே குறிப்பி;ட்ட நீதிபதியின் வாகணத்தை துரத்திச் சென்று தாக்கமுற்பட்ட செயலாகும் என்பதே உண்மையாகும்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட கொலை முயற்சி சம்பந்தமாக விவாதிக்க அறிவித்தல் கொடுக்கப்பட்டு இருந்தது இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் நீதித்துறையினர் குறிப்பிட்டது தமக்கு இத்தகைய சம்பவம் இடம் பெற்றது சம்பந்தமாக எதுவும் தெரியாது என்பதாகும்.
அரசாங்கமும் கூட இந்தப் படு கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்துள்ளதாகவே கருத வேண்டியுள்ளது உண்மையும் ஆகும்
குறிப்பிட்ட நீதிபதி தனது வாகனம் படையினரால் தாக்க நடவடிக்கையெடுக்கப்பட்டதாக பிரதம நீதியரசர் மற்றும் நீதி சேவைகள் ஆணைக் குழுவிற்க்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இத்தகைய சூழ் நிலையில் நீதித் துறை தமக்கு இது சம்பந்தமாக எதுவும் தெரியாது என கைவித்தமை எதனை எடுத்துக் காட்டுகின்றன என்றால் இந்த நடவடிக்கையில் படைத்தரப்பினருடன் அரசாங்கத்தினரும் இணைந்தே இந்த நடவடிக்கையை மேற் கொண்டார்கள் என்பதை இதற்கு கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களும் கூட சான்று பகிர்கின்றன.
இத்துடன் குறிப்பிட்ட இராணுவத்தினர் நீதிமன்றினால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டால் உரிய படைத் தலைமை தம்மை பாதுகாக்க தவறிவிட்டார்கள.; என்ற ஆத்திரத்தில் உண்மைகளை நீதிமன்றத்தின் முன்னர் தெரிவித்து தம்மைக் காட்டிக் கொடுத்து விடுவார்கள் என்ற பயத்தின் காரணமே இன்று இப் படையினர் மனப்பாதிப்புக்கு உட்பட்டவர்கள் என அறிக்கை சமர்பிக்க எடுக்கப்படும் நடவடிக்கையாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
கடந்த காலத்தில் செம்மணிப் புதை குழி விடயமும் இத்தகைய நிகழ்வு ஒன்றின் மூலம் தான் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரன் ஒருவனினால் வெளிக் கொண்டு வரப்பட்டது கடந்த கால அணுபவமே தற்போது குறிப்பிட்ட படையினர் விடயத்தில் மனநோயாளர் நாடகத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.
இதுவும் கூட ஒரு சர்வதேச விவகாரமாக உருப் பெறும் நிலையில் தான் காணப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த இராணவத்தினரை காப்பாற்றாது விட்டால் இவர்களும் தமக்கு அறிவுறுத்தியவர்கள் செயல்பட கட்டளையிட்டவர்கள் எனப் பலரையும் காட்டிக் கொடுத்த விடலாம் என்ற பயமே இன்று இவர்களை மன நோயாளர்கள் என்ற போர்வையில் விடுதலை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையாகும்.
நன்றி<பதிவு.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment