06 July, 2006
ஊடறு இணையத்தளம் தமிழ்பெண்களுக்கு செய்த ஊறு.
நடவாத ஒன்றை நடந்ததாக கற்பனை செய்து எழுதி பணம்சம்பாதிப்பது ஒருவகை,அதில் இது எந்தவகை?
ஊடறு இணையத்தளம் தமிழ்பெண்களுக்கு செய்த ஊறு. இப்போது என்ன செய்யப்போகிறது இந்த இணையத்தளம்?
-ஈழபாரதி-
சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்திய பெண் "கர்ப்பிணி" அல்ல: சந்திரா பெர்னாண்டோ
சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்திய தற்கொலைப் பெண் கர்ப்பிணி அல்ல என்று காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
காவல்துறை தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் சந்திரா பெர்னாண்டோ கூறியதாவது:
கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலைத் தாக்குதலுக்கான திட்டம் ரம்புக்கனை பகுதியில் திட்டமிடப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அனுராதரபும் குருணாகல் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை மஞ்சுளாதேவி என தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ரம்புக்கனை பகுதிக்கு அப்பெண் வந்துள்ளார்.
தற்கொலைப் பெண் ரம்புக்கனை, வெலிவேரிய பகுதிகளில் தங்கவைக்க வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயணம் செய்ய முச்சக்கர வாகனம் ஒன்றும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
அப்பெண்ணுக்கு உதவியதாக ரம்புக்கனவைச் சேர்ந்த ஒரு தம்பதியர் மற்றும் ஒரு ஆண் ஆகிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட அடையாள அட்டையின் அடிப்படையில் தற்கொலைப் பெண் மஞ்சுளாதேவி (வயது 32) என்று தெரியவந்தது.
தற்கொலைப் பெண்ணின் உடற்பாகங்களைச் சோதனைக்குட்படுத்தியபோது அவர் கர்ப்பிணி இல்லை என்பது தெரியவந்துள்ளது என்றார் சந்திரா பெர்னாண்டோ.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment