17 July, 2006

ஈழம் என்றால் புலிகள்; புலிகள் என்றால் ஈழம் -திருமாவளவன்

ஈழம் என்றால் புலிகள்; புலிகள் என்றால் ஈழம் என்பதே எமது நிலைப்பாடு. இவ்வாறு தெரிவித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன். சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ""பொடா'' எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். திருமாவளவன் தமது உரையில் மேலும் தெரிவித்ததாவது: இந்தியாவில் தொடர்ச்சியாக தொடர் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தியாவின் நாடாளுமன்றம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவின் இதயப் பகுதியான மும்பையில் தொடர் வண்டிகளிலே குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் உளவுத்துறையால் இக் குண்டுவெடிப்பை தடுக்க முடியவில்லை. சொந்த நாட்டுக்குரிய பாதுகாப்பைச் செய்ய முடியாத இந்தியா, சிங்கள தேசத்துக்குப் போய் ராடர் கருவிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் சிங்களவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். முதலில் தனது நாட்டின் பாதுகாப்பிலே இந்தியா கவனம் செலுத்தட்டும். "பொடா" சட்டம் கண்டு அஞ்சுகிறவர்கள் அல்ல நாம். பொடா சட்டத்திலே கைது நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்ட காலத்திலேயே புலித் தேசத்துக்குப் போய் வந்தவன் நான். தேர்தல் அரசியல் மாறுபாடுகளைக் கடந்து தமிழ்த் தேசிய பிரச்சனையில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் - என்றார். நன்றி>பதிவு

3 comments:

Anonymous said...

அது சரி இவருக்குன்னு சில பொருப்புகளை தலித் மக்கள் கொடுத்திருக்காங்க, அதைப் பத்தி முதல்ல யோசிக்கட்டும்.

Anonymous said...

//அது சரி இவருக்குன்னு சில பொருப்புகளை தலித் மக்கள் கொடுத்திருக்காங்க, அதைப் பத்தி முதல்ல யோசிக்கட்டும்.//
தமிழ் விடுதலை என்றால் தலித் விடுதலை; தலித் விடுதலை என்றால் தமிழ் விடுதலை.

said...

வணக்கம் அனானிகள் வருகைக்கு நன்றி,
எவன் ஒருவன் தனது சமுதாயத்தை பற்றி சரியாக சிந்திக்கிறானோ அவனே தன் நாட்டை பற்றியும் சரியாக சிந்திப்பான்