01 August, 2006
டோரா மூழ்கடிப்பு: 800 கடற்படையினர் விரட்டியடிப்பு!
திருமலையில் டோரா மூழ்கடிப்பு: 8 கடற்படையினர் பலி! 800 கடற்படையினர் விரட்டியடிப்பு!
திருமலையின் கடற்படைத் தலைமையகம் மீது விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட அதேவேளை விடுதலைப் புலிகளின் கடற்படையினர் நடத்திய தாக்குதலில் டோரா அதிவேக பீரங்கிப் படகு முழ்கடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தாக்குதில் 8 கடற்படையினர் பலியாகியுள்ளனர்.
இன்று பிற்பகல் 2.25 மணியளவில் கடற்படைத் தளத்தை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளால் 36 எறிகணைகள் ஏவியுள்ளனர். புலிகளின் எறிகணைத் தாக்குதலில் இராணுவ தலையகத்தினுள் பெரும் புகை மண்டலம் எழுந்துவண்ணம் உள்ளது.
இதேவேளை திருமலை கடற்படைத் தளத்தை தரித்திருந்த துப்புக்காவி கடற்கலன்கள் மற்றும் கடற்கலன்கள் அருகிலும் எறிகணைகள் வெடித்து சிதறியுள்ளனர்.
விடுலைப் புலிகள் ஆட்லறித் தாக்குதல் நடத்தப்பட்ட வேளை 5 கடற்கலன்களில் திருமலை கடற்படைத் தளத்திற்கு விரைந்த விடுதலைப் புலிகளின் கடற்படையினர் அங்கு தரித்திருந்த கடற்படை அதிவேக டோரா படகை மூழ்கடித்ததோடு 800 பேரை ஏற்றிவந்த கடற்படையினரையும் சர்வதேச கடற்பரப்பு வரை விரட்டியுள்ளனர்.
இதேவேளை தென்னிலங்கையில் இருந்து 800 படைவீரர்களை ஏற்றிச் சென்ற துருப்புக்காவி இலக்கு வைத்து எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் மூர்க்கணமான எறிகணைத் தாக்குதலால் 800 பேரை ஏற்றிவந்த சிறீலங்கா கடற்கலம் சர்வசேத கடற்பரப்பு நோக்கி தப்பிச் சென்றுள்ளது.
இன்றைய தாக்குதலில் கடற்படையினர் 8 பேர் பலியாகியுள்ளனர். இதேநேரம் விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலை அடுத்து பிற்பகல் 3 மணியளவில் சிறீலங்கா விமானப் படையினரின் துருப்புக் காவி உலங்குவானூர்தி அவசர அவசரமாக தரையிறங்கிச் சென்றுள்ளது.
நன்றி>புதினம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
செய்திக்கு நன்றி தோழரே. இந்த யுத்தம் சிறுபான்மை தமிழ் மக்களின் பாதுகாப்பான, அனைத்து
உரிமைகளுடனான இருப்பை உறுதிப்படுத்தும் முடிவுகளோடு, கூடிய விரைவில் நிறைவு பெறவேண்டும்.
Post a Comment