03 August, 2006

படையினரின் எறிகணைத் தாக்குதலில் 10 முஸ்லிம்கள் பலி!

திருகோணமலை மூதூர் அரபுக்கல்லூரி தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்களை இலக்கு வைத்து சிறீலங்காப் படையினர் ஆட்டிலறி தாக்குதலை நடத்தியதில் 10 தமிழ் பேசும் முஸ்லிங்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 100 மேற்பட்ட பொதுமக்கள் காயடைந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை மதியம் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருலையில் விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக பெருமளவு தமிழ் முஸ்லிம் மக்கள் அரபுக் கல்லூரியிலும் பள்ளிவாசலிலும் தஞ்சம் புகுந்திருந்தனர். இவ்விரு இடத்திலும் 10 ஆயிரம் தமிழ் முஸ்லிம் மக்கள் தஞ்சமடைதிருந்தாக திருமலைச் செய்திகள் தெரிவிக்கின்றன. நன்றி>புதினம் இரண்டாவது இணைப்பு. சிறிலங்காப் படைகளின் எறிகணை வீச்சுக்கு மேலும் 12 முஸ்லிம்கள் பலி சிறிலங்கா அரச படைகள் தொடர்ச்சியாக மூதூர் பிரதேசத்தின் மீது மேற்கொண்டு வரும் எறிகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகி மேலும் 12 முஸ்லிம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தோப்பூர் அல் நுரையா முஸ்லிம் பாடசாலையை நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஆட்டிலெறித் தாக்குதலிலேயே அப்பாடசாலையில் தஞ்சமடைந்திருந்த 12 முஸ்லிம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். சிறிலங்காப் படைகளின் இன்றைய தாக்குதல்களில் மொத்தமாக 22 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, மூதூர் காவல் நிலையத்துக்குள் அகப்பட்டிருந்த அகப்பட்டிருந்த காவல்துறையினர் அங்கிருந்து தப்பி திருமலை சென்றுள்ளதாகவும், அவ்வாறு சென்றவர்களில் 16 பேர் காயமடைந்தவர்கள் இருந்ததாகவும் அவர்களில் 6 பேர் கொழும்புக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவியவருகிறது. நன்றி>புதினம்

2 comments:

Anonymous said...

பிபிசி செய்தியோடு முரன்பாடாக உள்ளதே
ஓ அதுதான் புலி செய்தியா

Anonymous said...

வீரகேசரி இப்படி கூறுகிறதே
http://www.virakesari.lk/vira/html/head_view.asp?key=1599