25 August, 2006

அனுராதபுரத்தில் இரகசிமாக எரியும் சடலங்கள்.

யாழ். சமரில் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரின் சடலங்களை இரகசியமாக எரித்து வருவதாக சிறிலங்கா அரசாங்கம் மீது ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றில் வடக்கு-கிழக்கு பிரச்சனை குறித்து கடந்த புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல பேசியதாவது: அனுராதபுரம் விஜயபுர மயானத்தில் பெரும் எண்ணிக்கையிலான சிறிலங்கா இராணுவத்தினரின் சடலங்கள் இரகசியமாக எரிக்கப்பட்டு வருகின்றன. சமரில் கொல்லப்பட்ட படையினர் குறித்த விவரங்களை அவர்களது குடும்பத்தினருக்கு அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும். அச்சத்தின் காரணமாக கொல்லப்பட்டோரின் சடலங்களை குடும்பத்தாரிடம் அரசாங்கம் ஒப்படைக்காமல் உள்ளது. இனப்பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என்பது தெரியவில்லை. மூன்று மாதங்களுக்குள் தென்னிலங்கையின் ஒருமித்த கருத்தை உருவாக்குவேன் என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஆனால் துரதிர்ஸ்டவசமாக அவர் இன்னமும் ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சிக்கிறார் என்றார் அவர். நன்றி>புதினம்

0 comments: