16 August, 2006

பாகிஸ்தானிடம் 2 கப்பல் ஆயுதங்களை வாங்கியது சிறிலங்கா.

சிறிலங்காவுக்கு கனரக இராணுவ உதவிகளை செய்ய இந்தியா நிராகரித்தமையால் பாகிஸ்தானிடமிருந்து 2 கப்பல் ஆயுதங்களை சிறிலங்கா வாங்கியுள்ளது. இந்த ஆயுதக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு கடந்த 14 ஆம் நாளன்று வந்தடைந்துள்ளன. முன்னதாக தனது ஆயுதக் கொள்வனவுப் பட்டியலை பாகிஸ்தானிடம் சிறிலங்கா அளித்தாக செய்திகள் வெளியாகின. இந்தியாவிலிருந்து வெளியாகும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் இதை அம்பலப்படுத்தியிருந்தது. கடந்த ஏப்ரலில் பாகிஸ்தான் சென்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இராணுவக் கொள்வனவு தொடர்பாக குறிப்பாக விமானப் படைக்கான கொள்வனவு குறித்து விவாதித்தார். இதற்கான நீண்ட பட்டியலையும் அவர் கையளித்தார். விமானப் படைக்காக செய்திமதிப் படங்கள் மற்றும் இரண்டு ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட நீண்ட ஆயுதக் கொள்வனவுப் பட்டியல் ஒன்றையும் பாகிஸ்தானிடம் மகிந்த ராஜபக்ச கையளித்திருந்தார். கடந்த மாதம் மார்ச் முதலாம் நாளன்று சிறிலங்காவுக்கான பாகிஸ்தானிய தூதுவர் பசீர் வாலி மொகமெட்டுக்கு சிறிலங்கா முப்படைகளின் தளபதியாக இருந்த தயா சந்தகிரி கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் ரி-55 ரக டாங்கிகள் மற்றும் சி-130 ஹேர்குலஸ் விமானம் ஆகியவற்றை உடனடியாக ஆய்வு செய்ய ஒரு தொழில்நுட்பக் குழுவை சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்க அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த தளபாடங்களினது உதிரிப்பாகங்கள் சிறிலங்காவுக்குத் தேவையானதாக இருந்தது. முன்னதாக பெப்ரவரி மாதத்தில் 100 மி.மீ ரி-55 ரக டாங்கியை சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் இலவசமாகக் கொடுத்ததாக சில செய்திகள் தெரிவித்தன. பாகிஸ்தானிடம் சிறிலங்காவால் கையளிக்கப்பட்டிருந்த ஆயுதக் கொள்வனவு பட்டியல்: விமானப் படை: 2 ஆளில்லா விமானங்கள். கிபிர் விமானங்களுக்கான வான் எரிகுண்டுத் தொகுதிகள 20 லேசர் வழிகாட்டிக் குண்டுகள 30 ஆழ ஊடுருவிக் குண்டுகள 500, 80 மில்லிமீற்றர் ரொக்கட் எறிகணைகள் எரிகுண்டுடன இராணுவம்: 10 பக்தார் சிகென் ரக ராங்கி எதிர்ப்பு, வழிகாட்டி ஏவுகண 1000 வானொலித் தொடர்புச் சாதனங்கள். கடற்படை: 5000 மோட்டார் குண்டுகள 250 இரவு நேர காட்டித் தொகுதி ஆகியவை அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து சிறிலங்காவுக்கு 250 மில்லியன் டொலர் இராணுவத் தளபாடங்களை பாகிஸ்தான் வழங்க உள்ளது என்று மீண்டும் இந்திய ஆங்கில நாளேடு ஒன்று கடந்த யூன் மாதம் தெரிவித்திருந்தது. அந்த நாளேட்டின் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: கடந்த காலங்களில் இந்தியாவிடம் சிறிலங்கா இராணுவ உதவியை கோரியிருந்தது. ஆனால் தமிழர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் என்று இந்தியா அஞ்சியது. அண்மையில் லண்டனிலிருந்து வெளியான இதழ் ஒன்றில் பாகிஸ்தானிடமிருந்து 60 மில்லியன் டொலர் அளவிற்கான இராணுவ உதவியை பெற சிறிலங்கா பேச்சுக்கள் நடத்தியிருப்பதாக தெரிவித்திருந்தது. 40 டாங்கிகள் உள்ளிட்ட அதிகளவிலான தளபாடங்களை பாகிஸ்தானிடம் சிறிலங்கா கோரியுள்ளது. இதற்காக 250 மில்லியன் டொலர் கடன் வழங்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பது இந்தியாவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத சில கேள்விகளை எழுப்பியுள்ளது. வெளிப்படையாக பாகிஸ்தானிடமிருந்து 20 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவத் தளபாடங்களே சிறிலங்கா வாங்குவதாக கூறப்படுகிறது. ஆனால் லண்டன் இதழின் செய்தியில் சிறிலங்கா விமானப் படைக்கு மட்டும் 38.1 மில்லியன் டொலர் மதிப்பிலான தளபாடங்கள் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊகச் செய்திகளை அவ்வப்போது சிறிலங்கா அரசாங்கமும் பாகிஸ்தானிய அரசாங்கமும் மறுத்து வந்த போதும் கடந்த ஓகஸ்ட் 14 ஆம் நாளன்று 2 கப்பல் தொகுதி ஆயுதங்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இதனை கொழும்பிலிருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேட்டில் கொழும்பு குண்டுவெடிப்பில் சிக்கியதாகக் கூறப்படும் சிறிலங்காவுக்கான தூதுவர் பசீர் வாலி மொகமெட் குறித்து பிரபல சிங்கள அரசியல் கட்டுரையாளர் சம்பிக்க லியனாராச்சி எழுதுகையில், பாகிஸ்தானிலிருந்து 2 கப்பல் தொகுதி ஆயுதங்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் பசீர் வாலி மொகமெட் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு உறுதி செய்துள்ளார். நன்றி>புதினம்.

0 comments: