16 August, 2006

அகவை-பால் வேறுபாடின்றி கொல்வோம்!!!

தமிழீழ விடுதலைப் புலிகளாக கருதப்படுவோரை, அகவை - பால் வேறுபாடின்றி கொல்லப் போவதாக சிங்களப் பயங்கரவாத அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளமை, அனைத்துலக மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ரொய்டர் செய்திச் சேவைக்கு செவ்வி வழங்கிய சிறீலங்கா பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, எதிரிகளைக் கொல்லும் போது, அகவை - பால் வேறுபாடுகளை படையினர் பார்க்க முடியாது|| என தெரிவித்திருந்தார். சிறீலங்கா அரசாங்கத்தின் இந்த அறிவித்தல், அனைத்துலக மட்டத்தில் ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக, பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் (The Independent) "த இன்டிப்பென்டென்ற்" நாளேடு தெரிவித்துள்ளது. நன்றி>பதிவு.

0 comments: