28 August, 2006

எம்.ஜி.ஆர். சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பங்காற்றிய தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனுக்கு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவச்சிலைகளை சிங்கள இராணுவத்தினர் தார்பூசி அடித்து சேதப்படுத்தியுள்ளனர். தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க பெரும் பங்காற்றிய எம்.ஜி.ஆருக்கு மதிப்பளிக்கும் வகையில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மக்களால் அவருக்கு உருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டது. இந்தச் சிலை கடந்த ஆண்டு இந்திய சிற்பக்கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. யாழில் ஊரடங்குச் சட்டத்தினை கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சிங்கள இராணுவத்தினர் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வல்வெட்டித்துறையில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினர் வீதி திருத்தத்துக்கு வைக்கப்பட்டிருந்த தாரை எம்.ஜி.ஆர். உருவச்சிலையின் மீது பூசி சேதப்படுத்தியுள்ளனர். சிங்கள இராணுவத்தினர் இந்நடவடிக்கையினை போது அவர்களுக்கு உதவியாக துணை இராணுவக் குழுவினரும் உடனிருந்து செயற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேபோல் குருநகரில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையும் இராணுவத்தினரால் அடித்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். நெல்லியடியில் அமைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் கரும்புலியாக தன் இன்னுயிரை அர்ப்பணித்த கப்டன் மில்லரின் திருவுருவச் சிலையையும் அண்மையில் சிங்கள இராணுவத்தினர் அடித்து உடைத்து சேதப்படுத்தியிருந்தனர். மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களும் சிங்கள இராணுவத்தினால் சேதப்படுத்தப்பட்டிருந்தன. நன்றி>புதினம்.

10 comments:

Anonymous said...

புரட்ட்சி தலவர் மேலேயே கை வச்சிட்டாங்களா?

Anonymous said...

//தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பங்காற்றிய தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனுக்கு //

இதென்ன கூத்து?

Anonymous said...

செய்தித்தளங்கள் தவறாக எழுதினால் அதைப் படியெடுத்துப் போடும்போது நீங்களாவது பிழைகளைத் திருத்தலாம்.
"நொருக்கப்பட்டது".

said...

//இதென்ன கூத்து?//

உங்க இடிஞ்சது விடிஞ்சது தெரியாமல் கனபேர் கிடக்கினம் போல கிடக்கு. ;-)

Anonymous said...

//உங்க இடிஞ்சது விடிஞ்சது தெரியாமல் கனபேர் கிடக்கினம் போல கிடக்கு. ;-) //

உங்கள் பெயர் தெனாலியா?

said...

At 4:25 AM, Anonymous said...
செய்தித்தளங்கள் தவறாக எழுதினால் அதைப் படியெடுத்துப் போடும்போது நீங்களாவது பிழைகளைத் திருத்தலாம்.
"நொருக்கப்பட்டது".

செய்தியின் வன்மைக்காகவே அப்படியே விடப்பட்டது.
நொறுக்கப்படுதலில் உள்ள வன்மை நொருக்கப்படுதலில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவர்கள் எதற்காக அப்படி போட்டார்கள் என்று தெரியவில்லை.
அதிமுக எம்மை எவ்வளவு எதிர்த்தாலும் எம்ஜியாரின் மீது அன்புள்ளமக்கள்தான் ஈழத்தமிழர்.
செய்திகேட்டு தாங்கமுடியவில்லை.

Anonymous said...

அதிமுகவை ஆரம்பித்த எம்.ஜி.ஆரையே அந்தக் கட்சி இப்போது குப்பைக் கூடைக்குள் தான் வைத்திருக்கிறது. சிங்களவர்களுக்கு எங்கிருந்து தெரியப் போகிறது எம்.ஜி.ஆரைப் பற்றி.

said...

அங்க! நக்கிர நாய்குச் செக்கென்ன?சிவலிங்கமென்ன? தான் நிலை,,?முன்பு யாழில் சிலையுடைத்த போது இளங்கோ அடிகள் ;சிலை தப்பியதாம்(தலை மொட்டை),காரணம் அது ஆரோ ஆம்த்துரு (புத்த பிக்கு) சிலையென நினைச்சு விட்டதாம்.எனப் பறஞ்சவை!
யோகன் பாரிஸ்

Anonymous said...

தமிழைப் பிழையாக எழுதிவிட்டு வன்மை கின்மை எண்டு சளாப்பிறது சரியில்லை. தமிழ்தான் நொருங்குது.

Anonymous said...

//டாக்டர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலை //
திருவுருவம்? LOL!
அனைத்து சிலைகளும் இடிக்கப்படுவதற்காவே கட்டப்படுகின்றன. உணர்ச்சி வசப்பட வேண்டாம்!