02 August, 2006

கப்பலை காப்பாற்ற இந்தியா உதவக் கூடாது வை.கோ,பழ.நெடு.

சிறிலங்காவின் கடற்படைக் கப்பலை காப்பாற்றுவதற்கு இந்தியா உதவாக் கூடாது வை.கோ சர்வதேசக் கடற்பரப்பில் 800 இராணுவத்தினருடன் தத்தளித்துக் கொண்டிருக்கும் கப்பலை காப்பாற்ற இந்தியாவின் உதவியை சிறீலங்கா அரசு கோரியுள்ள நிலையில். இக் கப்பலைக் காப்பாற்ற இந்தியா உதவாக் கூடாது என மறுமலர்ச்சி திராவிடகழக தலைவர் வை.கோ இந்திய பிரதமர் மன்மேகன் சிங்கை கேட்டுள்ளார். இலங்கையில் தமிழர்கள் மீது ஆக்கிரமிப்பு போரை தொடுத்து அப்பாவி மக்களை கொன்று வரும் சிறீலங்கா படைகளிற்கு உதவாக் கூடாது என வை.கோபலசாமி கோரிக்கை விடுத்துள்ளார் நன்றி>பதிவு. சிங்கள இராணுவத்துக்கு உதவினால் தமிழ்நாட்டில் கடும் விளைவுகள் ஏற்படும்: பழ.நெடுமாறன் எச்சரிக்கை ஈழத் தமிழர்களை மனிதாபிமானமில்லாமல் கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்துக்கு உதவுகிற இழிசெயலை இந்தியா செய்தால் தமிழ்நாட்டில் கடும் விளைவுகள் ஏற்படும் என்று தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் எச்சரித்துள்ளார். அவுஸ்திரேலிய இன்பத் தமிழ் வானொலிக்கு இன்று புதன்கிழமை பழ.நெடுமாறன் அளித்த நேர்காணல்: திருகோணமலையில் வாழையடி வாழையாக வாழ்ந்து வந்த தமிழர்களைக் கொன்று குவித்த ஒரு இராணுவம்- அதுவும் அண்மையில் சில மாதங்களாக தொடர்ந்து இனவெறிப் படுகொலைகளை திருகோணமலை பகுதியில் செய்த சிங்கள இராணுவம், இன்றைக்கு விடுதலைப் புலிகளை எதிர்கொள்ள முடியாமல் தப்பி ஓடுவதற்கு, உயிர் பிழைப்பதற்கு இந்தியாவின் உதவியை நாடுகிறார்கள் என்ற செய்தி எங்களைப் போன்றவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. திருகோணமலை பகுதியிலும் பிற பகுதிகளிலும் சிங்கள இராணுவத்தினர் நடத்திய இன வெறியாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்தன. ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். போராட்டங்களை நடத்தினோம். இவ்வளவெல்லாம் செய்து கூட இந்திய அரசு அந்த நேரத்தில் அந்த பிரச்சனையில் கொஞ்சமும் தலையிடாமல் வேடிக்கை பார்த்தது. இப்போது சிங்கள இராணுவம் ஒரு ஆபத்தில் சிக்கிக் கொண்டது என்பதை அறிந்த உடன் அதற்கு உதவ வேண்டும் என்று சிங்கள அரசு கேட்கிறது. அப்படி கேட்பதற்கு அவர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இதே சிங்கள அரசு, சில நாட்களுக்கு முன்னால் இதே திருகோணமலையில் இந்திய எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமாக இருந்த எண்ணெய்க் குதங்களிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனத்தை வெளியேற்றி தன் வசப்படுத்திக் கொண்டது என்பது மறந்துவிட முடியாது. இந்தியாவுக்கு எதிராக இந்த செயல் புரிந்த சிங்கள அரசு அதே இந்தியாவிடம் உதவி கேட்கும்போது இந்திய அரசு உதவி செய்யக்கூடாது. அது உள்நாட்டுப் பிரச்சனை- அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று இந்திய அரசு ஒதுங்கியிருக்க வேண்டுமே தவிர அதிலே தலையிட்டு சிங்கள இராணுவத்துக்கு உதவி செய்வது என்பது இந்திய அரசு ஒரு சார்பாக நடந்து கொள்கிறது என்ற எண்ணத்தை இந்தியாவில் உள்ள தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுமைக்கும் உள்ள தமிழர்களிடம் ஏற்படுத்தி விடும். அது நல்லது அல்ல. எனவே அந்த மாதிரி ஒரு செயலை இந்திய அரசு செய்யாது என்று நாங்கள் நம்புகிறோம். அதை மீறி இந்திய அரசு செய்யுமானால் அதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இது தொடர்பாக இந்திய அரசுக்கான கோரிக்கை அறிக்கையை அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ள 80-க்கும் மேற்பட்ட அமைப்புகளும் அதுபோல நமது நண்பர் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம், வைகோ அவர்களின் ம.தி.மு.க., மருத்துவர் இராமதாஸ் அவர்களின் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற ஈழத் தமிழர் பிரச்சனையில் உண்மையான நாட்டம் கொண்டிருக்கிற அத்துணை இயக்கங்கள் மூலமாக இந்திய அரசின் மூலமாக இந்தக் கோரிக்கையை வலியுறுத்த திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. சிங்கள இராணுவத்துக்கு உதவக் கூடாது என்பதற்காக ஏற்கனவே பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டுள்ளன. மனிதாபிமான உதவி என்பது சிங்கள இராணுவத்தைப் பொறுத்தவரையில் அர்த்தமற்ற ஒரு சொல்லாகும். ஏனென்றால் சிங்கள இராணுவம் மனித நேயத்துக்கு எதிராக திட்டமிட்ட ஒரு இனப்படுகொலையில் ஈடுபட்டு வருகிற ஒரு இராணுவம். அதற்கு உதவி செய்வது என்பது மனிதாபிமான உதவியாகாது. அதற்கு மாறாக அவர்களின் இனப்படுகொலைக்கு துணை போகிற உதவியாகும். ஆகவே, அத்தகைய இழிசெயலை இந்தியா ஒருபோதும் இந்தியா செய்யாது என்று நம்புகிறோம். நன்றி>புதினம்.

1 comments:

said...

கண்டிப்பாக இலங்கைக்கு எந்த வகையிலும் இந்தயா உதவக்கூடாது ராஜீவ் காந்தியை தாக்கியவன் சரியாக தண்டிக்காத அந்த நாட்டிற்கு உதவக் கூடாது அந்த கடற்படையில் பணியாற்றியவன் தான் தலைவரை தாக்கியவன்.

அமெரிக்க அண்ணன் அவர்களை காப்பாற்ற தருணம் பார்த்துக்
கொண்டிருக்கிறான். அவன் காப்பாற்றவான் நமக்கென்ன.