05 August, 2006

புலிகள் பழைய நிலைகளுக்கு திரும்பினர்.

தேர்ந்தெடுத்த இலக்குகளை தாக்கியழித்த புலிகள் பழைய நிலைகளுக்கு திரும்பினர். திருமலையில் கடந்த 26 நாள் தொடக்கம் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் நோக்கி சிறீலங்காப் படையினர் விமானத்தாக்குதல், எறிகணைத் தாக்குதலை கண்மூடித்தனமாக நடத்தினர். இதனையடுத்து மாவிலாறு அணைக்கட்டை சிறீலங்கா படையினர் கைப்பற்றும் நோக்குடன் முன்னெடுத்த படைநகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு விடுதலைப் புலிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை அழி்க்க அதாவது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள பின்தளமாக இருந்த படைமுகாம்கள் தாக்கியழிக்கும் படைநகர்வை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் மூதூர் பிரதேசத்திலும், சேருநுவரப் பிரதேசத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை தாக்கியழித்த விடுதலைப் புலிகள் தமது மட்டுப்படுத்தப்பட்ட படைநகர்வை நிறைவு செய்துகொண்டு புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையிலான வரையறுக்கப்பட்ட பழைய நிலைகளுக்கு நேற்றிரவு திரும்பியுள்ளனர். தற்பொழுது ஏற்பட்டு மனிதாபிமான அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகள் தாக்கியழிக்கப் பட்டதையடுத்தும் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் முற்றுமுழுதாக நிறுத்தி பழைய நிலைகளுக்குத் திரும்பியுள்ளனர். இப்படை நடவடிக்கையில் சிறீலங்கா அரச படையினர் தரப்பில் 100 மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் தரப்பில் 30 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. விடுதலைப் புலிகள் பழை நிலைகளுக்குச் சென்றபின்னர் அவ்விடத்திற்கு சென்ற சிறீலங்காப் படையினர் உயிரிழந்திருந்த படையினரின் சடலங்களை அடக்கும் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியற்துறைப் பேராளி புரட்சி எம்மிடம் தெரிவித்துள்ளார். நன்றி>புதினம்

5 comments:

Anonymous said...

what happend to LTTE.? they play with lifes?. SL Army defeated them?
people lost confidence in LTTE?

said...

வணக்கம் அனானி வரவுக்கு நன்றி,
இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்தான், சிங்கள அரசு கூறியது போல மனிதாபிமான ரீதியாக தண்ணியை திறந்தி விடுவதற்காக மேற்கொள்ளப்பட் ராணுவ நடவடிக்கை மாதிரி, இவ் ராணுவ நடவடிக்கையை நிறுத்தவும், இந்த ராணுவ நடவடிக்கைக்கு பின்சூட்டு வலுவை கொடுத்துதவியதன் மூலமாக அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுப்பதற்கான மனிதாபிமான மட்டுப்படுதப்பட்ட தாகுதல்தான், பின் நின்று ராணுவ நடவடிக்கைக்கு உதவிய தளங்களை அழித்து முடித்தன் மூலம் இம்மனிதாபிமான மட்டுப்படுத்தப்பட்டதாக்குதல் நிறைவு பெற்றது, மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தந்ததை புலிகள் இன்னமும் மதிப்பதால் பழைய நிலைக்கு மீண்டிருக்கிறார்கள், இதன்மூலம் புலிகள் புரிந்துனர்வு ஒப்பந்ததை மதிப்பதையும், நாலு வருடத்தின் முன்னர் பலமான நிலையிலேயே பேச்சுக்கு வந்தார்கள் என்பதையும், இன்னமும் பலமான நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதையும், பேச்சை குழப்பி ராணுவநடவடிக்கைமீது இலங்கை நம்பிக்கை வைத்தால் விழைவுகள் எப்படி இருக்கும் என்பதையும். சிங்கள அரசுக்கு உணர்த்தி நிற்கிறது. பேச்சுவார்த்தையில் தமிழருக்கு நியாயமான நீதியும், உரிமையும் வழங்காவிடில், வடக்கு கிழக்கில் இருந்து ராணுவம் சுத்தமாக துடைத்தெறியப்படும் என்பதையும் சுட்டி நிற்கும் மட்டுப்படுத்தப்பட்ட படை நகர்வு இது.

said...

// "புலிகள் பழைய நிலைகளுக்கு திரும்பினர்." //

வந்தார்கள்.வென்றார்கள்.சென்றார்கள்.

Anonymous said...

you can say so many reason.

Now LTTE paid lot of Lifes to water.
Now LTTE destroyed 17 SL Camps.
Do not you think that SL Army rebuild Camps again?

waite. Mr Prabaharan will read same
pallavi in Maveerar day. you can listen same words again again in maveerar nal.

only god can save tamils.

said...

426 பேர் இறப்பதற்கு ஒரு காரணமாகிவிட்டதே இலங்கை ராணுவம் முழு வீச்சில் இறங்கும் என அறிவிப்பு வந்த பின் தானே படை பின் வாங்கியது.
பொதுமக்கள் விடையத்தில் புலி அப்படி நடந்திருக்கக் கூடாது.

//வந்தார்கள்.வென்றார்கள்.சென்றார்கள்.//
ராடஜா!
எதை வென்றார்கள்