03 August, 2006

30 ஆயிரம் மக்களும் வெளியேறப்போவதாக எச்சரித்துள்ளனர்.

மூதூரில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலினாலேயே பொது மக்கள் பலர் பலியாகி பலர் படுகாயமடைந்துள்ளதாக முஸ்லீம் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மூதூர் உலமாக்கள் சபைப் பிரதிநிதிகளும், பொது மக்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு முறைப்பாடு தெரிவித்துள்ளனர். கல்லாறு இராணுவ முகாமிலிருந்து மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலினாலேயே முஸ்லீம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளதையடுத்து இன்று இரவு அவசரமாக கூடிய ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மத்திய குழு, இது குறித்து ஆராய்ந்துள்ளது.இதனையடுத்து எடுக்கப்பட்ட முடிவில்,ஸ்ரீ லங்கா இராணுவத்தினர் இன்று இரவுக்குள் தமது எறிகணைத் தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் மூதூரில் உள்ள 30 ஆயிரம் பொது மக்களும் நாளை காலை அங்கிருந்து வெளியேறி கந்தாளாயில் தஞ்சமடையப் போவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் ஆலோசகர் பசீல் ராஜபக்சவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.எனினும் இது குறித்த முக்கியமான முடிவு நாளை காலை வெளியாகாலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இணைப்பு : newstamilnet.com Thursday, 03 Aug 2006 USA

0 comments: