27 August, 2006
விடுதலைப் புலிகளின் உத்திகள்: இக்பால் அத்தாஸ்
யாழ். சமரில் தமிழீழ விடுதலைப் புலிகள் கையாண்டு வரும் சில உத்திகள் தொடர்பில் சிறிலங்கா புலனாய்வு அமைப்பும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் விடைதேடி வருவதாக இராணுவம் தொடர்பான ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ். சமரில் தமிழீழ விடுதலைப் புலிகள் கையாண்டு வரும் சில உத்திகள் தொடர்பில் சிறிலங்கா புலனாய்வு அமைப்பும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் விடைதேடி வருவதாக இராணுவம் தொடர்பான ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
"சண்டே ரைம்ஸ்" வார இதழில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான இக்பால் அத்தாசின் கட்டுரையில் இது குறித்து இடம்பெற்றுள்ளவை:
கொழும்பில் உள்ள புலனாய்வு அமைப்புக்கள் மட்டுமின்றி சர்வதேச புலனாய்வு அமைப்புக்களின் மத்தியிலும் பல விடை தெரியாத கேள்விகள் உள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது சில வளங்களை இந்த சமரில் பயன்படுத்தவில்லை? என்பதுதான் அந்த கேள்வி. அது தொடர்பிலான சில விடயங்கள் இன்னமும் தெளிவுபடுத்தப்படாமலேயே உள்ளன.
- இரணைமடு நீர்த்தேக்கம் அருகே 1.4 கிலோ மீற்றர் நீளமுள்ள விமானத் தளத்தை விடுதலைப் புலிகள் அமைத்திருப்பதாக கூறியிருக்கிறோம். தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 5 இலகு ரக விமானங்கள் இருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு அமைப்பு ஒன்று உறுதி செய்து சிறிலங்கா அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. வான்வழி தற்கொலைத் தாக்குதலுக்கு இந்த விமானங்களை பயன்படுத்தக் கூடும் என்ற அச்சமும் உள்ளது. ஆனால் விடுதலைப் புலிகள் அதனை பாவிக்கவில்லை.
- தரையிலிருந்து வானில் சென்று தாக்குதல் நடத்தும் ரஸ்ய தயாரிப்பான எஸ்.ஏ.7 என்ற ஏவுகணை விடுதலைப் புலிகளிடம் உள்ளது. மூன்றாம் ஈழப் போரில் சிறிலங்கா விமானப் படையின் பயணிகள் விமானத்தை 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாக்கியபோது இது பயன்படுத்தப்பட்டது. இந்த ரக ஏவுகணைளின் பயன்பாட்டுக்காலம் குறைவானதுதன். அப்படியான நிலையில் அண்மையில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தனி என்பவர் விடுதலைப் புலிகளிடம் இத்தகைய ஏவுகணைகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
- தங்களது விமானத் தளத்தைப் பாதுகாப்பதற்கான விமானப் படை பாதுகாப்பு சாதனங்களை விடுதலைப் புலிகள் வைத்திருப்பதாக கடந்த ஆண்டு எழுதியிருந்தோம். இரணைமடு விமானத் தளத்துக்கு மேலாக 3 விதமான உலங்குவானூர்திகள் ஏவுகணைகளுடன் பறந்த நிலையில் இது தெரிவிக்கப்பட்டது. எஸ்.ஏ.7 தரையிலிருந்து வானை நோக்கித் தாக்குதல் ஏவுகணையானது விரைந்து சென்று தாக்காது என்பதால் அமெரிக்காவில் எஸ்.ஏ.18 ரக ஏவுகணைகளை வாங்க முயற்சித்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் விமானத் தளத்தில் பயன்படுத்தப்படும் பல தளபாடங்கள் குறித்தும் அமெரிக்க புலனாய்வு அமைப்பினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியான நிலையில் விடுதலைப் புலிகள் ஏன் விமான தளத்தை பயன்படுத்தவில்லை?
- விடுதலைப் புலிகளின் பலமாக உள்ள கடற்புலிகள் தற்போதைய சமரில் பெருந்தொகையில் பயன்படுத்தப்படவில்லை. சிறிலங்கா விமானப் படையின் தாக்குதல் காரணமாகவா? அல்லது திட்டமிட்ட வகையில் நகர்த்தப்பட்டுள்ளனரா?
- ஓகஸ்ட் 11 ஆம் நாள் முதல் ஓகஸ்ட் 18 ஆம் நாள் வரை 14 சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மற்றும் 141 சிறிலங்கா இராணுவத்தினர் யாழ். குடாநாட்டில் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் 2 அதிகாரிகள் மற்றும் 21 இராணுவத்தினர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் 43 அதிகாரிகள் மற்றும் 685 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவிலாறு அணைக்கட்டு சமரில் 12 அதிகாரிகளும் 28 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
யூலை 26 ஆம் நாள் முதல் நேற்று சனிக்கிழமை வரை மொத்தம் 278 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இராணுவத்தைச் சேர்ந்த 246 பேர்- கடற்படையில் 9- விமானப் படையில் 2- காவல்துறையில் 14- ஊர்காவல் படையில் 7. யாழ். சமரில் 800 போராளிகள் இறந்தனர் என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுயாதீனமாக விசாரித்தமையில் இந்த எண்ணிக்கை சாத்தியமற்றது என்று இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வணக்கம் தங்கள் வரவுக்கு வணக்கம்.
நான் அறிந்தவரைக்கும் Sunday times என்பதே சரியாகும், அதைத்தான் அவர்கள் தமிழில் "சண்டே ரைம்ஸ்" என்று எழுதி இருக்கிறார்கள். இலங்கை முழுதும் இப்படித்தான் பாவிக்கிறார்கள்.
"டப்பா" என்னும் சொல் இலங்கையில் வழக்கத்தில் இல்லை இந்தியாவில்தான் இருக்கிறது, "டப்பாவை" பெரும்பாபலும் ஆங்கிலத்தில் "ரின்" என்றும் தமிழில் "பேனி" என்றுதான் அழைப்பார்கள். இந்தியாவில் இருந்து வந்தபடியால் "டப்பாவை" "டப்பா" என்றுதான் சொல்வார்கள் ஆனால் புழக்கத்தில் இல்லை.
இந்தியாவில் sun tv யை "சன் டிவி/டீவி" என்பார்கள், இலங்கையில் "சன் ரிவி/ரீவி" என்றுதான் அழைப்பது வழக்கம்.
வணக்கத்துக்கு.
tamil என்பதை ஆங்கிலத்தில் டமில்
என்பீர்களா?அல்லது ரமில் என்பீர்களா?
நீங்கள் சொல்வதை பார்த்தால் டமில்
எண்டல்லவா சொல்லவேண்டும்.
time என்பதை ரைம் என்பீர்களா அல்லது டைம் என்பீர்களா?
t.v என்பதை ரி.வி என்று சொல்லாமல்
டீவி என்கிறீர்களே அப்போது d.v
என்பதை எப்படி சொல்வீர்கள்?
tea என்பது எங்களூரில் ரீ ஆனால்
நீங்கள் டீ என்பீர்கள்
அப்போது போடி என்றால் எப்படி
சொல்வீர்கள்.
D= ட,டி
T= ர,ரி
Post a Comment