19 August, 2006

சென்னை சிறிலங்காதூதரகம் முற்றுகை: 150 மாணவர்கள்கைது.

சென்னையில் உள்ள சிறிலங்கா துணை தூதரகத்தை முற்றுகையிட்ட அகில இந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த 150 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அகில இந்திய மாணவர் பெருமன்றத் தலைவர் லெனின் தலைமையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆழ்வார்பேட்டையில் உள்ள சிறிலங்கா தூதரகம் முன்பாக குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வளாகத்துக்குள் நுழைய முற்பட்ட போது அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் கூறியதாவது: முல்லைத்தீவு படுகொலையானது ஒரு அரச பயங்கரவாதச் செயல். மிகக் கொடூரமான அந்தப் படுகொலையைச் செய்ததோடு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு அதை நியாயப்படுத்தும் வகையில் பொய்ச்செய்திகளை சிறிலங்கா துணைத் தூதுவர் வெளியிட்டு வருவதை எப்படி சகிக்க முடியும்? ஆகவே எமது மாணவர் பெருமன்றம் சார்பாக இந்தப் போராட்டத்தை நடத்துகின்றோம் என்றனர். சிறிலங்காவில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுவதைக் கண்டித்தும், இனப்படுகொலையைத் தடுக்க இந்திய அரசு உடனே தலையிட வேண்டும் என்றும் பயங்கரவாதச் செயலை நியாயப்படுத்தும் சிறிலங்கா தூதரகங்களை மூட வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நன்றி>புதினம்.

1 comments:

Anonymous said...

ipothan ella thamilanum vilithuirukirargal ella thamilum onru seruvom.