17 August, 2006

கொழும்பில் மொட்டைகளின் சண்டை.

கொழும்பில் இன்று நடந்த அமைதிப் பேரணியில் பௌத்த பிக்குகள் பாரிய கலவரத்தில் ஈடுபட்டனர். தேசிய போருக்கான எதிர்ப்பு முன்னணியினர் இன்று வியாழக்கிழமை மாலை விகாரமாதேவி பூங்கா அருகே அமைதிப் பேரணி நடத்தினர். அப்போது அந்த இடத்துக்கு பதாகைகளுடன் வந்த தேசிய பிக்கு முன்னணியினர், கிளிநொச்சிக்குப் போய் அமைதி குறித்து பிரசங்கம் நிகழ்த்துமாறு தேசியப் போருக்கு எதிரான முன்னணியினரிடம் வாதிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து போருக்கான முன்னணியினரின் மேடையில் ஏறிய பிக்கு முன்னணியினர் முழக்கங்களை எழுப்பினர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அப்போது மேடையில் இருந்தனர். போருக்கு எதிரான முன்னணியினருக்கும் பிக்கு முன்னணியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பிக்குகளின் அங்கிகள் பறந்து கீழே விழுந்தன. மேடையிலிருந்து பிக்கு முன்னணியினர் பலவந்தமாக தள்ளிவிடப்பட்டனர். "அவர்கள் போருக்குப் போக வேண்டும் என்று வலியுறுத்துகிறனர். நாங்கள் போருக்கு அப்பால் உள்ள சந்தர்ப்பம் குறித்து பேசுகிறோம். அவர்கள் பாரிய யுத்தத்தை விரும்புகிறார்கள். நாங்கள் சில நிமிடங்களில் தீர்க்க வேண்டும் என்று நினைக்கிறோம்" என்றார் தேசிய போருக்கு எதிரான முன்னணியைச் சேர்ந்த பௌத்த பிக்கு மதம்பவெ அஸ்ஸகி. அதன் பின்னர் பேரணி அமைதியாக நடைபெற்றது. ஜாதிக ஹெல உறுமயவின் பிக்குகள் பிரிவாக தேசிய பிக்கு முன்னணி செயற்பட்டு வருகிறது. படங்கள்: அசோசியட்டற் பிறஸ் நன்றி>புதினம்.

3 comments:

Anonymous said...

இவர்கள் புத்த பிட்சுகளா? அல்லது புச்சா பயல்களா?

said...

"Some more moderate Buddhist monks, protesting for peace, were already on the stage when punches were thrown. Soon, monks' robes and fists were flying, although no one was badly hurt, witnesses said."
http://www.news.com.au/dailytelegraph/story/0,22049,20167538-5001028,00.html


முற்றும் துறந்த துறவி:
காவி உடையுடுத்தி அரசியல் கழகம் அமைத்து, அரசியல் பதவி வகித்து, ஆர்ப்பாட்டத்தில் தன் காவி உடையையும் துறந்து மகா துறவியாகிறார்.

Anonymous said...

அவங்கள் கைகளால் சண்டைபிடிக்கிறாங்கள் நீங்கள் மண்டையில் அல்லவா போடுகிறீர்கள்