23 August, 2006

அருட்தந்தையை காணவில்லை.

யாழ் தீவகம் அல்லைப்பிட்டி பங்குத்தந்தை அருட்திரு ஜிம் பிறெளன் மற்றும் அவரது உதவியாளரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என முறையிடப்பட்டுள்ளது. அருட்திரு ஜிம் பிறெளன் அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாக ஒருவாரத்துக்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்த அருட்திரு ஜிம் பிறெளன் தனது உதவியாளருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டிக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது காணாமல் போய் உள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்கு அல்லைப்பிட்டி சென்றதற்கான பதிவும், பிற்பகல் 1.50 மணிக்கு அங்கிருந்து திரும்பியதற்காகன பதிவும் தம்மிடம் உள்ளதாக பண்ணைப்பாலம் பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அதன்பின் அவர் பற்றிய தகவல்கள் தொடர்புடையவர்களுக்கு கிடைக்கவில்லை. இராணுவத்தினருடன் தொடர்பு கொண்டபோதும் தமக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளனர். அவர்கள் காணாமல் போனமை பற்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் பங்குத்தந்தை ஜிம் பிரௌன். பங்குத்தந்தையுடன் சென்ற அவரது உதவியாளர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர் பென்சன் பிளஸ் (வயது 39). அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாக 2004 இல் நியமிக்கப்பட்ட அருட்திரு அந்தோனி அமலதாஸ் அல்லைப்பிட்டியில் 4 மாதக்குழந்தை, 4 வயதுச் சிறுவன் உட்பட 9 பேர் கொடூரமாக சிறிலங்கா கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வெளியுலகுக்கு கொண்டு வந்தவர். சிறிலங்கா இராணுவத்தினரின் அச்சுறுத்தலால் அவரால் அங்கு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. இதனால் அவர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு அவரது இடத்திற்கு அருட்திரு ஜிம் பிரௌன் நியமிக்கப்பட்டார். நன்றி>புதினம்.

0 comments: