23 August, 2006

பயந்தது சிங்களம், யாழ்ராணுவத்தைமீட்க புதியதந்திரம்.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு அவசர செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். தாக்குதல்களை நிறுத்திவிட்டு பேச்சு மேசைக்கு தாம் தயார் என்றும் அதற்கு சாதகமான பதிலை அளித்து, கூடிய விரைவில் அமைதிப் பேச்சுக்களை நடத்த வருமாறு இச்செய்தியில் மகிந்த குறிப்பிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகளிள் இணைத்தலைமைகள் மாநாட்டில் கலந்துகொண்ட நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கரிடம் இந்த கோரிக்கையை மகிந்த விடுத்ததாகவும் நோர்வே அமைச்சரும் நோர்வேயின் சிறிலங்காவுக்கான முன்னாள் சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்மை தலைவர் பிரபாகரனுடன் தொடர்புகொண்டு மேற்படி செய்தியை தெரிவிக்குமாறும் அவர் பிறட்ஸ்கரிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரியவருகிறது. அமைதிப் பேச்சுக்களை ஆரம்பிக்கத் தயார் என்ற தமது தரப்பின் நிலைப்பாட்டை அரசுத்தலைவர் என்ற ரீதியில் தான் வெளியிட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்தும் தமது தரப்பிற்கு சம அந்தஸ்துள்ள அதன் தலைவர் பிரபாகரனிடமிருந்து இதற்கு பதில் வரவேண்டுமே தவிர அந்த அமைப்பின் ஏனைய தலைவர்களிடமிருந்து இதற்கு பதிலை எதிர்பார்க்கவில்லை என்றும் மகிந்த தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மகிந்தவின் இச்செய்தியை அமைச்சர் சொல்ஹெய்மிடம் தெரிவிப்பதற்காக திங்களன்றே தூதுவர் பிறட்ஸ்கர் நோர்வே விரைந்தார். நன்றி>புதினம்

1 comments:

Anonymous said...

யாழ்ப்பாணத்தில் முற்றுகைக்குட்படிருக்கும் ராணுவத்தை மீட்கும் முயற்சியாகவே நான் இதை பார்க்கிறேன். இதற்கு தமிழர்தரப்பு ஏமாந்துவிட கூடாது, இறுதியாக ஜெனிவாவில் அரசு ஒத்துக்கொண்ட விடயங்களை நிறைவேற்றினால்தான் இனி தமிழர்தரப்பு பேச்சுக்கு ஒத்துக்கொள்ளவேண்டும்.