21 August, 2006

பாக்கிஸ்தானின் புதியதூதுவர் ஷெசாட் அஸ்லாம்சவுத்திரி.

பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ எனப்படும் புலனாய்வுத்துறையினர் இந்தியாவக்கு எதிரான தமது புலனாய்வு வேலைகளை, ஸ்ரீலங்காவில் மிகவும் ஆழமாக்கும் பணிகளில் முனைப்பாகச் செயல்படுகின்றனர். கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி பாக்கிஸ்தானின் முன்னாள் தூதுவர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் முயற்சியின் பின்னர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவரும் முன்னர் இராணுத்திலும் புலனாய்வுத்துறையிலும் தேர்ச்சி பெற்ற மற்றுமொரு அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னைய தூதுவர் பஷீர் வாலி மொகமட் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் ஒன்றை தெளிவாக தெரியப்படுத்துகின்றது. அதாவது, பஷீர் வாலி மொகமட்டினால் சீராக புடம்போட்டுள்ள புலனாய்வுக் களத்தினை வழிநடத்துவதற்கான முயற்சியின் ஒரு கட்டமே, இந்த ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி ஷெசாட் அஸ்லாம் சவுத்திரியின் நியமனம் என்பது சர்வதேச இராஜதந்திர நகர்வுகளை உற்றுநோக்குபவர்களுக்கு தெளிவாகப் புரிந்துள்ளது. ஸ்ரீலங்காவின் பாதுகாப்புப் படைகளில் தேர்ந்து எடுக்கப்பட்ட 200 சிறப்புப் படையினர் தற்போது பாக்கிஸதானில், அமெரிக்க போர் வல்லுநர்களின் மேற்பார்வையில் பயிற்சிகளை பெற்றுவருகின்றனர். இதேவேளை, இந்தியாவுக்கு எதிரான வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு தேவையான பயிற்சிகளை பெறும் நோக்கிலும், ஸ்ரீலங்கா வான்படையினருக்கு உதவுவதாக கூறிக்கொண்டு பத்து முதல் பதினைந்து வரையிலான பாக்கிஸ்தானின் வான் படையினர் தற்போது கொழும்பில் தங்கியுள்ளனர். அண்மையில் தமிழர் தலைநகரை அண்மித்த பகுதிகளிலும் மற்றும் இதயபூமியிலும் நடைபெற்ற விமானத் தாக்குதல்கள் இதற்கு சான்று பகிர்கின்றன. சிங்கள வான்படையின் விமான ஓட்டுநர்களால் மிகவும் துல்லியமாக இலய்குகளைத் தாக்கியழிக்கும் வல்லமை இல்லவே இல்லை என்பது கடந்த கால யுத்தங்களின் தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த வகையில், புதிதாக பதவியேற்றிருக்கும் தூதுவர் பற்றி தமிழர்களாகிய நாம் அறிந்து வைத்திருத்ததல் மிகவும் நல்லது. ஏனெனில், எமது பெரும்பான்மையான தமிழ்ச் சமூகத்தில் தோன்றிவரும்; குறைபாடுகளில் ஒன்று, உலக நாடுகள் குறித்த ஆழமான அறிவின்மையாகும். எந்த நாடு எமது விடுதலை குறித்து கரிசனை காட்டுகின்றது அல்லது காட்டுவது மாதிரியான தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது என்பதை இனம்காணுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. மேலும், தமிழ் ஊடகத்துறையினரும் செய்திகளை தேடிச் சென்று, ஆராய்ந்து அதன் சாதக பாதகங்களை அலசுவது இன்றைய காலங்களில் குறைந்து செல்வது மிகவும் ஒரு ஆபத்தான நிலையினை எமக்கு கோடிட்டுக் காட்டுகின்றது. புதிய தூதுவர், ஷெசாட் அஸ்லாம் சவுத்திரி பலோச்சிஸ்தானின் விடுதலை வீரர்களுக்கு எதிராக இடம்பெற்ற விமானத் தாக்குதல்களுக்கு பொறுப்பெடுத்தவர் என்பது இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்வது நல்லது. இவ்வாறான ஒரு அதிகாரியை பாக்கிஸ்தான கொழும்புத் தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளமை இந்தியாவிற்கு ஓர் எச்சரிக்கை வெளிப்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு பாக்கிஸ்தான் தனது படை வல்லுனர்களை கொடுத்து வருவதாக இந்தியா கருதி பாராமுகமகமாகச் செயல்படுமானால,; இது இந்தியாவின் அழிவிற்காக அமெரிக்க – பாக்கிஸ்தானிய புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு சதி வலைப்பின்னல் என்பது எதிர்காலத்தில் தெரியவரும். எனினும், இந்தத் தூதுவரின் நியமனம் தமிழர்களின் போராட்டத்தின் திசையை எந்த வகையிலும் மாற்றம் செய்யமாட்டாது. மாறாக, தமிழர் போராட்டம் புதியதொரு பரிமாணத்தை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தப்போகின்றது. சர்வதேச போர் வல்லுநர்களின் புத்தகங்களில் புதிய போர்க்கலை அத்தியாயத்தையும் பதியப்போகின்றது என்பதே உண்மை. நன்றி>புதினம்.

0 comments: