20 August, 2006

இலங்கைப்பிரச்சினைக்கு இந்தியாவின் தீர்வு.

தமிழர் பிரச்சினைக்கு சர்க்காரியா கமிஷன் அடிப்படையில் தீர்வு: கமிஷன் அறிக்கையின் நகலை இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியா உதவ வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இலங்கை அரசும் இந்தியாவை இது தொடர்பாக வற்புறுத்தி வந்தது. இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா இப்போது புதிய யோசனையை தெரிவித்து இருக்கிறது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் இடையே நல்லறவு, அதிகாரம் பற்றி ஆராய சர்க்காரியா தலைமையில் முன்பு கமி ஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் அறிக்கையில் கூறப்பட்ட சிபாரிசுகளை அடிப்படையாக கொண்டு இலங்கை தமிழர் பிரச்சி னைகளுக்கும் தீர்வு காணலாம் என்று இந்தியா யோசனை தெரிவித்து இருக்கிறது. அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வசதியாகவும், நிர்வாக முறை தொடர்பாக வும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் நகலை இலங் கைக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவில் கடைபிடிக் கப்படும் நிர்வாக முறையை பின்பற்றலாம் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. தேசிய அரசியல் சட்டத்தை மாற்றி அமைக்க உதவி செய்ய அரசியல் சட்ட நிபுணர்களை அனுப்பி வைக்க தயாராக இருந்ததாகவும் இந்தியா தெரி வித்து உள்ளது. இணைப்பு : newstamilnet.com Sunday, 20 Aug 2006 USA

1 comments:

Anonymous said...

சட்டி சுட்டதும் கை விட்டதும் மறந்து விட்டதா?