03 August, 2006

திருமலையில் அனைவருக்கும் உதவிகள் வழங்கப்படும்.

தென்தமிழீழத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் உட்பட அனைவருக்குமான உதவிகளை வழங்குவது விடுதலைப் புலிகளின் கடமை என விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களும் தமிழீழ மக்களே என்றும் அவர்களைப் பாதுகாக்கின்ற கடமையிலிருந்த ஒருபோதும் விடுதலைப் புலிகள் தவறமாட்டார்கள் என்றும் இளந்திரையன் தெரிவித்துள்ளார். மனிதநேயத்தின் அடிப்படையில் இடம்பெயர்ந்தோருக்கான உதவிகளை வழங்குவதற்காக திருமலையில் எழிலன் தலைமையில் உள்நாட்டு வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்களுடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட 40 படையினரின் சடங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக சிறீலங்கா அரசாங்கத்திடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்த இளந்திரையன் மூதூர் பகுதியையும் 17 இராணுவ முகாம்களையும் விடுதலைப் புலிகள் தாக்கியழித்ததால் மூதூர் பிரதேசத்திற்கு எறிகணை தாக்குதல்களுக்குள் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இளந்திரையன் மேலும் குறிப்பிட்டுள்ளார். நன்றி>புதினம்.

0 comments: