02 June, 2006
எவர் தடுத்தாலும் தமிழீழம் அமைவதை தடுக்கமுடியாது.
ஐரோப்பிய ஒன்றியத் தடையால் புலிகள் இலக்கை தடுக்க முடியாது: இந்திய கட்டுரையாளர் எம்.ஆர்.நாரயணசுவாமி
ஐரோப்பிய ஒன்றியத் தடை மற்றும் இணைத் தலைமை நாடுகளினது எச்சரிக்கைகளால் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கை தடுக்க முடியாது என்று இந்திய கட்டுரையாளர் எம்.ஆர்.நாரயணசுவாமி கூறியுள்ளார்.
இனையத்தளம் ஒன்றில் வெளியான அவரது கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐரோப்பிய ஒன்றியத் தடையையும் இணைத் தலைமை நாடுகளினது எச்சரிக்கையாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக சிறிலங்கா மகிழ்வாகக் கொண்டாடலாம். ஆனால் இவர்கள் எவராலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது இலக்கான தமிழீழ அரசு என்பதை அடைவதை தடுகக் முடியாது.
வரலாற்று ரீதியாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எதுவித அழுத்தங்களுக்கும் இணங்காதவர்.
"எந்த ஒரு அந்நிய சக்தியும் எமது மக்களை ஆதிக்கம் செலுத்தவோ தலையிடவோ அனுமதிக்க மாட்டோம்" என்று பல ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரன் கூறியிருந்தார்.
இன்றைய சூழ்நிலையில் இந்தியா, நோர்வே, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இது பொருந்தும்.
இந்தியாவும் அமெரிக்காவும் விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக முத்திரை குத்தியபோதும் விடுதலைப் புலிகள் எதனையும் விட்டுக்கொடுக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையும் அப்படியானதே.
பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் பிரபாகரன் இருந்தபோது, இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதை இந்தியா நிறுத்திவிட்டால் என்ன செய்வீர்கள் எனக் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த பிரபாகரன், "இந்தியாவின் அனுதாபம் என்பது எங்களுக்கு தார்மீக ரீதியாக ஊக்கம் அளிக்கக்கூடியது. இந்தியா ஆதரவளிக்கவில்லை என்பதற்காக எமது விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்துவிடாது. இந்தியாவின் ஆதரவுடனோ அல்லது வேறு எந்த ஒரு அந்நிய சக்திகளினது ஆதரவுடனோ நாம் எமது விடுதலைப் போராட்டத்தை நாம் தொடங்கவில்லை. நாங்கள் சாகும்வரை போராடுவோம். நான் இறந்து போனால் மற்றொருவர் அப்பொறுப்பை ஏற்பார். எமது தலைமுறையில் எமது விடுதலையை வென்றெடுக்காது போனால் எமது அடுத்த தலைமுறையும் இதே போராட்டத்தைத் தொடரும்" என்றார்.
இவ்வாறு அந்த செய்தியில் எம்.ஆர். நாராயணசுவாமி குறிப்பிட்டுள்ளார்.
நன்றி>புதினம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
Post a Comment