12 June, 2006

சிறிலங்காவில் 40 ஆயிரம் சிறார் பாலியல் தொழிலாளர்கள்.

சிறிலங்காவில் 40 ஆயிரம் சிறார் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக யுனிசெஃப் மற்றும் சர்வதேச தொழிலாளர் நிறுவன அறிக்கைகளைச் சுட்டிக்காட்டி சிறிலங்காவின் தேசிய சிறார் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளதாக கொழும்பின் ஆங்கில நாளேடான டெய்லி மிர்ரர் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: 5 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான சிறிலங்கா சிறார்களை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஒருபால் உறவுக்காக பயன்படுத்துகின்றனர். அதேபோல் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலான கிராமப்புற சிறிலங்கா சிறார்களை குற்றச் செயல்களைப் புரிகின்ற குழுவினர் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர் என்றும் யுனிசெஃப் மற்றும் சர்வதேச தொழிலாளர் நிறுவன புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. சிறார் பாலியல் தொழிலில் உலகின் சொர்க்கமாக சிறிலங்கா விளங்குகிறது. சிறிலங்காவில் 2 ஆயிரம் சிறார் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக அரசாங்கம் கணக்கிட்டுள்ளது. ஆனால் பல்வேறு அமைப்புகள் இந்த எண்ணிக்கை 40 ஆயிரம் என்று தெரிவிக்கின்றன. இந்த சிறார்களில் 80 வீதமானோர் ஆண்கள். இவர்களில் சுற்றுலா மையங்களில் வெளிநாட்டுப் பயணிகளின் ஒருபால் உறவுக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். 35 ஆயிரம் சிறார்கள் சிறு தொழிற்சாலைகளிலும் கடைகளிலும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. நன்ரி>புதினம்.

6 comments:

Anonymous said...

இவர்கள்தான் தமிழ்சிறுவர்களை காப்பாற்றுவதற்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

said...

///35 ஆயிரம் சிறார்கள் சிறு தொழிற்சாலைகளிலும் கடைகளிலும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது ///

பாரதி அண்ணா...எண்ணிக்கை சற்று மிகைப்படுத்துவது போல் உள்ளது...மேலும் உங்க பதிவிலேயே இப்படி இருக்கிறதே...

said...

"5 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான சிறிலங்கா சிறார்களை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஒருபால் உறவுக்காக பயன்படுத்துகின்றனர். அதேபோல் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலான கிராமப்புற சிறிலங்கா சிறார்களை குற்றச் செயல்களைப் புரிகின்ற குழுவினர் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர்"

"35 ஆயிரம் சிறார்கள் சிறு தொழிற்சாலைகளிலும் கடைகளிலும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்"

30 ம் 10ம் 40துதானே, அதாவது ஓரின,ஈரின பாலியலில் ஈடுபடுபவரின் மொத்தம், 35ஆயிரம் குழந்தை தொழிலாளர். இப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது,

அதாவது பாலியல் தொழிலில் 40000 சிறுவர்ரும், கடைகளிலும், சிறு தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் சிறுவர்தொகை 35000 என்றுதான் டெய்லிமிரர் கூறுகிறது.

said...

உங்கள் விளக்கத்துக்கு நன்றி...

said...

புரிந்துணர்வுக்கு நன்றி ரவி.

said...

உந்த அரசாங்கமும் உடந்தையாய் இருக்கக்கூடும், அவைக்கு வருமானம் தானே தேவை