22 June, 2006

தமிழீழஅரசை புலிகள் இயங்குகின்றனர் - AP செய்தி நிறுவனம்.

சிந்தனையையும், யதார்த்தத்தையும் அடிப்படையாகக் கொண்ட தமிழீழ அரசை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கி வருவதாக AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் வன்னிப் பெருநிலப்பரப்பில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட செய்தியாளர் ஒருவரின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கும் AP செய்தி நிறுவனம், தென்னிலங்கையில் பயன்படுத்தப்படும் சிறீலங்காவின் வரைபடம், உண்மை நிலையை பிரதிபலிபக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. தமிழீழ நடைமுறை அரசு என்பது வெறும் கற்பனை என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள போதும், கள யதார்த்தம் வடக்குக் கிழக்கில் தமிழீழ தனியரசு இயங்குவதை உணர்த்தி நிற்பதாகவும், AP செய்தி நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. கிளிநொச்சியை தலைநகராகக் கொண்;டு, எல்லையில் குடிவரவு - குடியகல்வு - சுங்க நிர்வாகத்தையும், உள்ளே காவல்துறை, கல்விக் கட்டமைப்பு, வரியிறுப்பாளர்கள், விளையாட்டுத்துறை போன்ற அரசுக்கு உரித்தான சகல கட்டமைப்புக்களையும், விடுதலைப் புலிகள் கொண்டிருப்பதாகவும், AP செய்தி நிறுவனம் குறிப்பிட்டள்ளது. நன்றி>புதினம்.

3 comments:

Anonymous said...

நல்லதொரு பதிவு, ஆனால் இலங்கை அரசு ஆர் சொன்னாலும் இதை ஏற்றுக்கொள்ளாது. செவிடன் காதில் ஊதிய சங்கு. இறுதியில் சிங்களத்துக்கே சங்கூஊஊஊஊஊ.

Anonymous said...

that is true. Tamils make new Home very soon

said...

வணக்கம் அனானிகள் வரவுக்கு நன்றி,

நிட்சயம் எதிர்பார்த்து காத்திருப்போம்.