05 June, 2006
தமிழர்களின் சுயாட்சிக்கு அமெரிக்கா ஆதரவு!
'விடுதலைப் புலிகளுக்கு எதிராக அமெரிக்கா தடை விதித்திருக் கின்ற போதிலும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு சுயாட்சி முறையின்கீழ் அவர்கள் வாழும் உரிமை களை பெறுவதற்கு அமெரிக்கா மதிப்பளிப்பதோடு நின்றுவிடாமல் அங்கீகாரத்தையும் வழங்கு கிறது" என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை ராஜாங்க அமைச்சர் ரிச்சார்ட் பௌச்சர் கொழும்பில் வைத்து வலியுறுத்திக் கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அமெரிக்கா வரலாற்றில் முதல் முறையாக இந்தத் தடவையே தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைப் பகிரங்கமாக வரவேற்றும், அங்கீகரித்தும் ரிச்சர்ட் பௌச்சர் மூலம் அமெரிக்க அரசு சொல்லவும் வைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சட்டபுூர்வமான இலட்சியத்தை நோக்கியதாகவே தமிழர் போராட்டம் இருக்கிறது. ஆனால், அதனை அடையப் புலிகள் கையாளும் ஆயுதப் போராட்ட வழியைத்தான் அமெரிக்கா எதிர்க்கிறது. வெறுக்கிறது. ஏற்புடைய ஜனநாயகப் போராட்ட வழிகள் பல இருக்கும் பொழுது எவராலும் ஏற்க முடியாத ஆயுதம் து}க்கும் வழியைப் புலிகள் கையாளுவதையே அமெ ரிக்கா வெறுக்கிறது; எதிர்க்கிறது என்றும் ரிச்சர்ட் பௌச்சர், குறிப்பிட்டிருக்கிறார். கொழும்பில் நடந்த பத்திரிகையாளர் மாநாடு ஒன்றிலும், பின்னர் ஜூன் முதலாம் திகதி நடந்த இலங்கை அமெரிக்க வர்த்தக 'சேம்பர்ஸ்" கூட்டத்தில் பேசும் போதும், தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கை மீது அமெரிக்காவின் நிலை என்ன என்பதைத் தெட்டத் தெளிவாக பௌச்சர் எடுத்து முன்வைத்திருக்கிறார். ' பரம்பரை பரம்பரையாகத் தாங்கள் வாழ்ந்து வரும் தாயக மண்ணில் தங்களைத் தாங்களே ஆளும் தங்களது தலைவிதியைத் தாங்களே நிர்ணயிக்கும் தங்களது வாழ்க்கை முறையைத் தாங்களே வகுத்துக் கொள்ளும் விருப்பங்கள் ஒரு இனத்தின் சட்டபுூர்வமான அபிலாஷை களே! இதனை அமெரிக்கா அங்கீகரித்தே வருகிறது"என்றும் அவர் சுட்டிக் காட்டிப் பேசினார். 'புலிகள் பயங்கரவாதத்தைக் கைவிட வேண்டும். அப்படி அவர்கள் கைவிட்டால், அவர்களு டன் பேசுவதற்குரிய வாய்ப்புகளை அமெரிக்கா, பின்னர் பரிசீலனைக்கு எடுக்க வழிகள் பிறக்கும். பயங்கரவாத்தை முறியடிப்பதற்கு முழு உலகமுமே இன்று ஒன்றுபட்டுத் திரண்டு வருகிறது என்பதை விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் விளங்கிக் கொள்ள வேண்டும். அந்தப் பயங்கரவாதம் ஆப்கானிஸ்தான் மலைகளிலிருந்து வந்தால் என்ன, வன்னியின் வயல் வெளிகளிலிருந்து வந்தால் என்ன அவற்றை முடியடிக்கவே உலகம் திரண்டு ஒன்றுபட்டு நிற்கிறது. இலங்கை அரசுக்கும் கடப்பாடு உண்டு தமது உரையின்போது அமெரிக்கத் துணை ராஜாங்க அமைச்சர் ரிச்சார்ட் பௌச் சர், இலங்கை அரசு செய்ய வேண்டியவற்றையும் எடுத்துக் கூற மறக்கவில்லை. சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யக் கூடிய முறையில் இலங்கை அரசும் நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜனநாயகத்தை வரித்துக் கொண்ட ஒரு அரசிடமிருந்து நாங்கள் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறோம். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். சிறுபான்மை இன மக்க ளின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். சகலரும் கட்டுப்பாடுகள் இல்லாத தெளிவான ஆட்சி நிலவ வேண்டும். சமாதானத்துக்கான து}ர நோக்கும் தெட்டத் தெளிவாகத் தெரிய வேண்டும். இத்தகைய லட்சணங்களையே நாம் ஜனநாயக அரசுகளிடமிருந்து எதிர்பார்த்து நிற்கிறோம். இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த மட்டில், அது இங்கு வாழுகின்ற சிறுபான்மை இன மக்கள் தங்கள் தலைவிதியைத் தாங்களே நிர்ணயிக்கும், தங்கள் வாழ்க்கை முறையைத் தாங்களே தீர்மானிக்கும் தங்களின் அபிலாஷைகளை இந்த அரசு இலங்கை என்ற ஒரே தேசியத்தின் கீழ் செய்து தரும் என்பதை வெளிக்காட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமது நேர்மையை அரசு வெளிக்காட்ட வேண்டும். அரசின் நேர்மைத் தன்மையை, விசுவாசத்தை வெளிக்காட்டுவதற்கு உதாரணம் ஒன்றையும் பௌச்சர் தெரிவித்திருக்கிறார். தமிழ்மொழியின் பாவனைக்குள்ள உரிமையை உறுதிப்படுத்தி, அதனை அரச மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் சம சந்தர்ப்பங்கள் வழங்குவதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அந்த உதாரணமாகும். அரசு மீது குற்றச்சாட்டு கடந்த பெப்ரவரியில் ஜெனிவாவில் நடந்த பேச்சின் போது இணங்கப்பட்டபடி, துணை ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைவதற்கு இலங்கை அரசு தவறி விட்டது என்ற குற்றச்சாட்டையும் ரிச்சார்ட் பௌச்சர் தமது உரையின் போது முன் வைத்திருக்கிறார். வன்செயல் பெருக்கத்திற்கான பாரிய பொறுப்பை விடுதலைப் புலிகளே சுமக்க வேண்டி யிருக்கிறது. யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏறக்குறைய முறிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட் டிருப்பதற்கும் புலிகளே ஓரளவுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்றும் அமெரிக்க துணை ராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார். புலிகளுக்கு எதிராக நாங்கள் இலங்கைக்கு ஆதரவு தருகிறோம். இந்த ஆதரவை, ராஜரீக ரீதியாக, பொருளாதார ரீதியாக, இராணுவ ரீதியாக வழங்குகிறோம். ஆனாலும், மறுபடியும் யுத்தம் மூளுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களின் இந்த உதவி, யுத்தத்துக்குப் போவதற்கு ஊக்கம் தருவதற்காக வழங்கப்படவில்லை. இலங்கையின் இனப்பிரச்சினை க்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வைக் காண முடியாது என்பது எமக்குத் தெரியும். மீண்டும் ஒரு முழு அளவிலான யுத்தம் மூளுமாயிருந்தால் இலங்கையின் பொருளாதாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும். முதலீடுகள் வராது. உல்லாசப் பயணிகள் வருகை நின்று விடும். கப்பல் சேவைக்கான காப்புறுதிக் கட்டணம் உயரும். அபிவிருத்திக்குப் பயன்படுத் தப்பட வேண்டிய நிதி யுத்தத்துக்கு முடக்கப்படும் என்றும் அவர் கூறினார். சாத்தியமானளவு மிக விரைவாக விடுதலைப் புலிகளும், அரசும் பேச்சுக்குப் போக வேண்டும் என்பதே எங்கள் எல்லோரது விருப்பம் என்றும் அவர் கூறத் தவறவில்லை.
நன்றி>sankathi.com
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
துப்பாக்கியை போட்டுவிட்டால் முழு சுகந்திரம் வழங்கிவிடுவார்கள் என்பதுபோல் உள்ளது...
இனத்தையே வேறறுத்துவிடுவார்கள் என்பதுதான் நிஜம்...
நல்ல அறிவிப்பு. ஆனால் இதைச் சொல்ல வேண்டியது சிறீலங் காவிடம். ஆயுதத்தைப் போடு கதைக்கிறம் என்று சொல்வதைக் கேட்டு ஏமாந்த பலஸ்தீனீயர் கதை கந்தல் தானே. ஆயுதம் யாருக்கும் எதிராக நீட்டப் பட்டிருக்கவில்லை. தற்பாதுகாப்புக்காகத் தான் வைத்திருக்கிறார்கள் என்பது உங் களுக்குத் தெரியாததல்ல. ஐரோப்பிய ஊனியன், யு.எஸ். எல்லாம் கொஞ்சம் இளகி வாற மாதிரி ஒரு பம்மாத்துக் காட்டுகிறார்கள். உந்தப் புலுடாவை விட்டு விட்டு, மகிந்தரை மடக்கிக் கொண்டு வந்தால் தான் ஏதும் உருப்படியாக நம்பலாம்.
உடனடித் தேவை:
1. படு கொலைகள் நிறுத்தம்
2. கொலையாளிகள் தண்டிக்கப் படல் வேண்டும். இது ஒருக்காலும் நடக்கவில்லை.
3. சுனாமி ஒப்பந்தம் அங்கீகாரி
4. பேச்சு வார்த்தையை இடைக்காலத் திட்டத்தில் ஆரம்பி
வணக்கம் செந்தழல் ரவி வரவுக்கு நன்றி,
உண்மைதான் ஆமைபுகுந்த வீடும் அமெரிக்க புகுந்த நாடும் உருப்பட்டது இல்லைதான், ஆனால் உலகின் இயங்கியல் வேறுவிதமாக அமைந்திருக்கிறதே, வல்லவன் வகுத்துதானே வாய்க்கால்.
வணக்கம் ஜெயபால் வரவுக்கு நன்றி, அமெரிக்காவின் இந்த அறிவிப்பு தமிழர்களிடம் எதையோ எதிபார்ப்பது போல் இருக்குதல்லவா?
சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
சில வேளை அந்த எதிர்பார்ப்பு திருகோணமலையாகவும் இருக்கலாம்.
ஈழபாரதி,
இது அமெரிக்கா எம்மீது கரிசனை கொண்டு விட்ட அறிக்கை அல்ல.
இது அமெரிக்காவின் தந்திரம். இதற்கு நீங்கள் ஏமாந்து விடக் கூடாது. புலிகளின் இராணுவ பலமும், இராஜதந்திர நகர்வுகளும் தான் அமெரிக்காவை இவ்வறிக்கைய விடுமளவுக்கு நிர்ப்பந்த்தித்தது. ரணில் மாதிரி ராஜபக்ஷவும் அமெரிக்காவின் திட்டத்தின் படி ஆடினால் , மறு வினாடியே இவ் அறிக்கைக்கு நேர்மாறான அறிக்கையை விடவும் அமெரிக்கா தயங்காது. நான் இது பற்றி விபரமாக சசியின் தளத்தில் சதுரங்கத்தில் தமிழீழம் எனும் பதிவில் பின்னூட்டமாக ஆதாரங்களுடன் எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வாசித்துப் பாருங்கள்.
நன்றி.
அன்புடன்
வெற்றி
வணக்கம் வெற்றி வருகைக்கு நன்றி,
எதிரிக்கு எதிரி நண்பன் இதை நாம் ஏன் சிந்திக்ககூடாது?
ஈழபாரதி,
//எதிரிக்கு எதிரி நண்பன் இதை நாம் ஏன் சிந்திக்ககூடாது? //
நல்ல யோசனைதான். ஆனால் இது எமது போராட்டத்தை நசுக்குவத்ற்காக போடப்பட்ட தந்திர வலை.இது உண்மையான நேசக்கரம் அல்ல.அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பல விடுதலைப் போராட்டங்களுக்கு ஊக்கமளித்து, அப்போராட்டங்கள் கடும் சோதனைகளை எதிர்நோக்கிய போது அமெரிக்கா அவர்களைக் கைவிட்ட வரலாறுகளையும் நான் படித்திருக்கிறேன். ஆக, எமது பலம், அதாவது புலிகளின் இராணுவ பலன் தான் பல விடயங்களை நிச்சயிக்கும் சத்தியாக விளங்குகிறது. அடுத்தது, நாம் இந்தியாவின் நலன்களைப் புறக்கணித்து அமெரிக்காவுடன் உறவு வைப்பது எமது போராட்டத்திற்கு எந்த வகையிலும் பயன் தராது. இதைப் புலிகளின் திட்டவகுப்பாளர்களும் நன்கு புரிந்து வைத்துள்ளனர் என்பதை புலிகளின் பல நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.மேலதிக தகவல்களுக்கு நீங்கள் சசியின் பதிவில் இட்ட பின்னூட்டத்திற்கு நான் அங்கு பதிலிட்ட பின்னூட்டத்தில் பாருங்கள்.
நன்றி.
அன்புடன்
வெற்றி
வெற்றி,
அந்தச் சசியின் வலிப்பூ முகவரியைத் தருவீர்களா?
ஈழபாரதி,
எதிரிக்கு எதிரி தற்காலிக நண்பனாகலாம். ஆனால் போலி நேசக்கரம் நீட்டுவது உண்மையானதல்ல. இது உண்மையாயின், ஐரோப்பிய யூனியன் மேல் அழுத்தம் கொடுத்து தடையொன்றைக் கொண்டு வந்திருக்கத் தேவையில்லை.
வெற்றி சொல்வது போல், இந்தியாவைப் பகைத்து அமெரிக்கவிடமிருந்து நாம் எதுவும் பெற்று விட முடியாது.
வெற்றி உங்கள் கருத்துக்கள் ஏற்புடையதாக இருப்பினும், உதாரணத்துக்கு இஸ்ரேலை பாருங்கள், சுற்றவர அரேபிய நாடுகள், அதுவும் எதிரிநாடுகள், அப்படி இருந்தும் திமிரோடு எழுந்து நிற்கிறது, இது எப்படி சாத்தியம் ஒரு சின்ன நாடு இவ்வளவு பெரிய நாடுகளையும் சமாளிக்கிறது, அமெரிக்கா என்ற ஆதரவும், புலம்பெயர்ந்திருக்கும் யூதமக்களின் ஆதரவும்தான். அதனுடன் எந்த நாடும் வாலாட்ட முடியுமா?
இது அமெரிக்காவின் தந்திரம் என தெரிந்தபோதும், ஜேவிபியுடன் இருக்குவரைதான் ராஜபக்சா சனாதிபதி, ஜேவிபியுடன் இருக்கும்வரை ஒருகாலமும், ரணிலைப்போல் அமெரிக்காவுடன் ராஜபக்சாவினால் சாயமுடியாது, சாய்ந்தால் அவர் சனாதிபதியாக தொடரமுடியாது, ஜேவிபி எப்போதும் இந்தியா, சீனாவைதான் சார்ந்திருக்கும்.விடுதலப்புலிகள் அமெரிக்காவுடன் நட்புபேன இது நல்ல சந்தர்ப்பம்.
அமெரிக்காவின் தந்திரமாக இது இருந்தபோதும் எமது தேவைகள் தீர்ந்தபின்தான் அமெரிக்காவின் தேவைகள் நிறைவேற்றப்படும்.
விடுதலைப்புலிகளின் போர் ஆற்றலின் மீது எனக்கு பூரண நம்பிக்கை உண்டு, முழுதமிழீழத்தையும் அவர்களால் மீட்கமுடியும், அதன் பின்? மாலைதீவு கேட்டமாதிரி எனது நாட்டை மீட்டு தருமாறு இந்தியாவிடமோ அல்லது அமெரிக்காவிடமோ, அல்லது யு என் ஓ விடமோகேட்கும் பட்சத்தில், ஒரு அன்னிய படை பெருமளவு எடுப்புடன் இறங்கும்போது, முழு கட்டுமானமே அழிக்கப்படும், உதாரனாம் அரசிடம் இருந்து தாலிபான்களினால் மீட்கப்பட்ட அப்பகானிஸ்தான், அமெரிக்காவிடம் ஒரு நட்பு ஒப்பந்தம் மேற்கொண்டால் களநிலமைகள் நிட்சயம் மாற்றி அமைக்கப்படும், இந்தியாவை நம்பி இருப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை ஏனெனில் எவர் எம்மை நெருங்கி வருகிறார்களோ அவர்களைத்தான் நாம் நெருங்கிபோகமுடியும், நடக்கும் செயல்கள்தான் வரலாற்றை எழுதுகிறது.
சுட்டி>http://thamizhsasi.blogspot.com/2006/06/1.html
உவங்கள் ஒண்டும் செய்யாமல் இருந்தாலே போதும்.
வணக்கம் கானாபிரபா வரவுக்கு நன்றி,
உவங்கள் ஒன்றும் செய்யாமல் இருந்தாம் நல்லதுதான் ஆனால் அவர்கள் ஏதாவது செய்து கொண்டுதான் இருப்பார்கள். அப்பதான் அவர்கள் பிழைக்கமுடியும், எல்லாம் பிழைப்புக்குத்தான், பிழைப்புக்கு அவர்கள் இந்த பாடு படும்போது நாம் ஏன் எமது மக்களின் உயிர்பிழைத்தலுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி பார்க்கக்கூடாது?
Post a Comment